சனி, 3 ஆகஸ்ட், 2024

வயநாடு பேரழிவும் மோடியின் தீராத கவலையும்!!!

யநாட்டில் இயற்கைச் சீற்றத்தால் 350க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகியுள்ளன. இடிபாடுகளுக்கிடையே சிக்கி உருக்குலைந்து மரணத்தைத் தழுவியோர் தேடிக் கண்டறியப்பட்டால் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகக்கூடும்.

கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் ஹெலிகாப்டர் மூலம் பேய் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டிருக்கிறார். ராகுல் தன் சகோதரியுடன் அங்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னதோடு, வீடிழந்தோருக்குக் காங்கிரஸ் கட்சி மூலம் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

நடிகர்கள் பலரும் நிதியுதவி செய்துவரும் நிலையில், ஒரு நடிகர்[மோகன்லால்]கூட சீரழிவுக்கு உள்ளான இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்திருக்கிறார்.

மோடி?

இந்தியாவின் பிரதமரான இவர், இந்த நாட்டை ஆளுவதற்கான ஏராள அதிகாரங்களைப் பெற்றவர். மதம், இனம், மொழி என்று பாரபட்சம் காட்டாமல் அனைவரின் நலம் பேணுவதில் முக்கியப் பொறுப்பு வகிப்பவர்.

வயநாட்டில் இயற்கை கோரத் தாண்டவம் ஆடி நான்கு நாட்களுக்கு மேல் ஆகியும், இவர் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடாமல்[‘நடுவணரசு உதவும்’ என்ற அறிவிப்பு மட்டும் வெளியாகியுள்ளது] புறக்கணித்திருப்பது, கடந்த தேர்தலில் தன் கட்சிக்கு வாக்களிக்காத மாநில மக்களைப் பழிவாங்குகிறார் என்னும் குற்றச்சாட்டுக்கு வலிமை சேர்ப்பதாக உள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்பே வெளியான காணொலிகளில்[கீழே இடம்பெற்றுள்ளன] ‘மோடி ஒரு சில நாட்களில் வயநாடு செல்லவுள்ளார்’ என்று தகவல் வெளியாகியுள்ளது.

அந்தச் ‘சில நாட்கள்’ கழிந்தும்கூட, வயநாடு பயணம் மேற்கொள்ளாமல் மோடி அமைதி காக்கிறாரே, ஏன்? [இதைவிடவும் வேறு மிக மிக முக்கியக் கடமைகள் உள்ளனவோ?!]

அயோத்தியில் கோடி கோடியாய்ச் செலவு செய்து கட்டிய ‘பால ராமர் கோயில்’ கூரை, மழை பெய்தால் ஒழுகுவது பற்றியக் கவலையில் மூழ்கிக் கிடக்கிறாரோ?!