சனி, 3 ஆகஸ்ட், 2024

என்னய்யா இது ‘ஹர்ரு கர்ரு டிர்ரு’? புரிகிற மொழியில் சொல்லுவாரா அமித்ஷா!

வரும் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை மூவர்ணக்கொடியை நீங்கள் உங்கள் வீடுகளில் ஏற்றி, மூவர்ணக்கொடியுடன் செல்ஃபி எடுங்க”ன்னு உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லியிருக்கார்.

நாம்: “எடுத்துடுவோம்.”

அவர் அதோடு முடிக்கல. அதனை https://hargartiranga.com என்ற இணைய தளத்தில் பதிவேற்றுங்கள்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாம்: பதிவேற்றிடலாம். ஆனால்.....

அவரிடம் நாம் முன்வைக்கும் விண்ணப்பம்.

“அமித்ஷா அவர்களே, HarGharTirangaன்னு உங்க ஆட்களுக்கு மட்டும் புரிகிற மாதிரி ஏதோ சொல்லுறீங்க. முதலில் இதைத் தூக்கிக் கடாசிட்டு, என்ன சொல்ல நினைக்கிறீங்களோ[நீங்களும் உங்கள் முன்னோடி மோடியும்] அதை இந்தியாவிலுள்ள பெரும்பான்மைக் குடிமக்களுக்குப் புரிகிற மொழியில்[ஆங்கிலம் அல்லது மாநில மொழி] சொல்லுங்க.

எல்லோருக்கும் புரிஞ்சா ஒரு வாரம்[9ஆம் தேதி >15ஆம் தேதி] என்ன, நிரந்தரமாகவே வீடுகளில் தேசியக் கொடியை ஏத்திடுவோம்.

எம்மைப் போன்றோரின் இந்தக் கோரிக்கையை ஏற்பீர்களா அமித்ஷாஜி?

* * * * *

https://www.hindutamil.in/news/india/1289778-i-appeal-to-all-citizens-to-hoist-our-tiranga-at-your-homes-amit-shah.html