இப்படியொரு கேள்வியைக் கேட்டு இதற்கான பதிலையும் தந்திருக்கிறது ‘இந்து தமிழ்’த் தளம்.
ஏற்கனவே பல்வேறு ஊர்களிலிருந்தும் திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்டுவந்த பக்தர்கள்[‘பாஜக’ மத வெறியர்களால் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொள்ள] காவல்துறையினரின் தடுப்பு நடவடிக்கைகளால் பல்வேறு இடங்களிலும் தனித்தனி குழுக்களாகச் செய்வதறியாது திகைத்தபடி காத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தை மாலையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததால் அதற்குள் ஏதாவது நடக்காதா என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது. நீதிமன்றம் அனுமதி வழங்கிய தகவல் கிடைத்த மறுநிமிடமே பழங்காநத்தம் நோக்கி வரத்தொடங்கினர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் அவர்களும், அண்டை அயல் ஊர்களில் காத்திருந்தவர்களும், உள்ளூர்ப் பொதுமக்களும்[ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுள்ள பெண்களும் ஆண்களும்] தன்னெழுச்சியாகக் குவிந்தனர். இதனால் ஒரு மணி நேரத்தில் பல்லா யிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடிய அதிசயம் நிகழ்ந்தது.
‘பல்லாயிரக்கணக்கானோர்’ என்னும் வார்த்தைக்கு அடைமொழி ஒன்றைச் சேர்க்கத் தவறிவிட்டது ‘இந்து தமிழ்’.
அது.....
‘அப்பாவிப் பக்தர்கள்’
இவர்கள், திருப்பரங்குன்றத்தில், சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்தவம் போன்ற மத வழிபாட்டுத் தலங்கள்[சமணர்கள் தங்கியிருந்ததற்கான அடையாளச் சின்னங்கள் உட்பட] பற்றியும், மிகப் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்ட வழிபாட்டு உரிமைகள் பற்றியும் கொஞ்சமும் அறிந்திடாத... அறிவதில் அக்கறையும் இல்லாத அப்பாவிகள்; சுயநலவாதிகளின் வெறிப் பேச்சுக்கு மிக எளிதாக இரையாகிவிட்ட பேதைகள்![திருப்பரங்குன்றம் சைவம், வைணவம், சமணம், இஸ்லாம், கிறிஸ்தவம் என பல சமயத் தலங்கள் அருகருகே அமைந்த சமய நல்லிணக்கத் தலம்> கூகுள் தேடல்]
இப்போதைக்கு இவர்கள் திருந்தப்போவதில்லை! நாசகாரக் கும்பல் இவர்களைத் திருந்தவும் அனுமதிக்காது!!
* * * * *