ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

'கும்பாபிஷேகம்’... கல்லுக்குள் கடவுள்! மனித மண்டைக்குள் களிமண்!!

கும்பாபிஷேகம் என்னும் பெயரில், ஆலயங்களில் நிறுவப்பட்ட விக்கிரகங்கள்[கல் & உலோகச் சிலைகள்] மீதும், கோயில் கோபுரக் கலசங்கள் மீதும் புனித நீர் தெளித்து மந்திரங்கள் ஓதி அவற்றில் இறைச் சக்தியை ஏற்றுகிறார்களாம்.

இது மிகப் பல ஆண்டுகளாக இங்கு நிகழ்த்தப்படும் ஏமாற்று வேலை.

சுத்த நீர், அசுத்த நீர் இருப்பது உண்மை. நீரில் புனிதம் கலந்திருப்பதாகச் சொல்வது அப்பட்டமான பொய்; அயோக்கியத்தனத்தின் உச்சம்.

புனித நீர் தெளிப்பதோடு மந்திரங்கள் வேறு ஓதுகிறார்கள்.

மனிதர்கள் தங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் தம்முள் பகிர்ந்துகொள்ள மொழிகளை உருவாக்கினார்கள். மொழிகள் வெறும் கருவிகள் மட்டுமே.

இதற்குச் சமஸ்கிருதம் உட்பட எந்தவொரு மொழியும் [தமிழும்தான்]விதிவிலக்கல்ல.

இதைத் தேவ பாஷை[கடவுள் அசரீரியாகச் சொன்னதாம்] என்றும், அதில் மந்திரச் சக்தி உள்ளது என்றும் சொல்லிச் சொல்லி மக்களை நம்ப வைத்ததோடு, கோயில் கட்டி, உள்ளே சிலை வைத்துக் கோபுரத்தின் மீது புனித நீர் தெளித்து மந்திரம் சொன்னால், சிலை கடவுளாக மாறும் என்றும் பொய்யுரைத்துத் தங்களின் தரத்தை மேம்படுத்திக்கொண்டது ஒரு கூட்டம்.

மன்னர்களின் ஆட்சிக்காலம் முதல் மக்கள் ஆட்சி நடைபெறும் இந்தக் காலம்வரை அவர்களின் அக்கிரமச் செயல் நீடிக்கிறது.

அவர்களின் ஓதுதலில் மந்திரச் சக்தி ஏதுமில்லை; தந்திரப் புத்திக்காரர்கள் அவர்கள்.

இதைப் புரிந்துகொள்ளும் அறிவு நம் மக்களுக்கு இல்லை. கும்பாபிஷேகம் என்றால் ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள்; கண்டு களித்துக் கண் கலங்குகிறார்கள்.

மந்திரம் சொல்லப்போனவர்களில் ஒருவர் மரணத்தைத் தழுவும் பரிதாபம் இப்போது நிகழ்ந்திருக்கிறது[காணொலியின் முகவரி கீழே> கீழே உள்ள கேட்ஜெட்டில்[கொடுக்கை] காணொலிப் பதிவு உள்ளது].

மந்திரம் ஓதுபவரின் உயிரைக் காப்பாற்றாத இந்த வேத மந்திரம்தான் கற்சிலைகளுக்குள்ளும் உலோகச் சிலைகளுக்குள்ளும் இறைச் சக்தியைத் திணிக்கிறதாம்!

இப்படிச் சொல்லிச் சொல்லிச் சொல்லிச் சொல்லிச் சொல்லித்தான் மக்களின் மண்டைகளில் மூடநம்பிக்கையைத் திணி திணி திணி திணி திணி என்று திணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

பாவம் நம் மக்கள்!

https://youtu.be/JxHYYWMGwLQ

                       *   *   *   *   *

https://www.kuttramkuttrame.com/2025/02/08/tragedy-at-temple-consecration-one-person-killed-after-crane-collapses/#google_vignette