//இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு இரண்டு சர்வதேசக் கௌரவங்களைப் பெற்றார். இந்திரா காந்தியும் இதேபோல் இரண்டு விருதுகளைப் பெற்றார். டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் இரண்டு சர்வதேசக் கௌரவங்களைப் பெற்றார்[ராஜீவ் காந்தி எதையும் பெறவில்லை].
முன்னாள் பிரதமர்கள் பெற்ற விருதுகளின் எண்ணிக்கை மிக மிக மிகக் குறைவாக இருக்கும் நிலையில்.....
பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையை அங்கீகரிக்கும் விதமாக, 2016 & 2025க்கு இடையில் வெளிநாடுகளில் இருந்து 28 மிக உயர்ந்த மாநில[?] விருதுகள்[இவற்றில் கேட்டு வாங்கியவை எத்தனை?!] வழங்கப்பட்டுள்ளன// என்பது செய்தி.
மோடிக்கு அளப்பரிய இந்த விருதுகளைப் பெற்றுத்தந்தது இவருடைய தொலைநோக்குத் தலைமையாம்!
உங்களுக்குப் புரிகிறதோ அல்லவோ, எங்கள் குலசாமி சாட்சியாக எனக்குப் புரியலீங்க.
எதற்கு இந்த ஒப்பீடு?
இரண்டிரண்டு விருதுகளைப் பெற்ற நேரு, இந்திரா அம்மையார், மன்மோகன் சிங் ஆகியோரைவிடவும் 28 பெற்ற மோடி அறிஞரா? அதீத ஆளுமைத் திறன் வாய்ந்தவரா? உயர் பண்பாளரா?
“ஆம்” என்பார்கள் மோடியின் அல்லக்கைகள்.
நீங்கள்?
* * * * *