புதன், 20 ஜூன், 2018

உச்சந்தலையிலிருந்து ஒரு திரவம்...! உடல் முழுதும் பரவசம்!!

#சின்ன வயதிலிருந்தே ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை எனக்கு இருந்தது. அதே சமயம்.....

'கடவுள் இருக்கிறாரா, இல்லையா?' என்னும் கேள்வியும் ஓட ஓட என்னை விரட்டியது. அதன் விளைவாக.....

அரவிந்தர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்றோரின் கடவுள் கொள்கைகளை ஆழ்ந்து கற்றேன். கடவுளைக் காண்பதற்குப் போராடினேன். பலன் கிட்டவில்லை.

கல்லூரியில் படித்த காலத்தில் 'தியானம்' குறித்து அறிய நேர்ந்தது. தீவிர தியானப் பயிற்சியில் ஈடுபடலானேன். அதன் மூலம் புதிய சில அனுபவங்களைப் பெற்றேன்.

ஒரு நாள், கடினமான தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது, கண்ணுக்குள் பளீர் வெளிச்சம். அதில் மிதந்தேன். உச்சந்தலையிலிருந்து ஒரு திரவம் சுரந்து உடம்பெங்கும் பரவுவது போல் இருந்தது. உடம்பு முழுக்கப் பரவச உணர்வு பரவியது.

இப்படியே சில மாதங்கள் கடந்தன. ஒரு கட்டத்தில், அருகிலிருக்கும் எதைத் தொட்டாலும் கடவுளைத் தொடுவது போலவே தோன்றும். எல்லாமே எனக்குக் கடவுளாகத் தெரிந்தன. ஆனால், அதற்கப்புறம், அடுத்தடுத்துக் குழப்பங்களை ஏற்படுத்தும் கேள்விகள் என்னுள் முளைக்க ஆரம்பித்துவிட்டன.

விடுதிக்குச் சென்று சாப்பிடும்போது சாப்பாடும் எனக்குக் கடவுளாகத் தெரிந்தது. கூடவே, கீழ்க்காண்பவை போன்ற   கேள்விகளும் எழுந்தன. 

'சாப்பாடும் கடவுள். நானும் கடவுள். கடவுள் தன்னைத்தானே சாப்பிடுவது எவ்வகையில் சரி, அல்லது சாத்தியம்? நானும் கடவுள்; விக்கிரகமும் கடவுள். கடவுள் கடவுளைத் தொழுவது தேவைதானா?

இவ்வாறான கேள்விகளால் மனம் நாளும் குழம்பியது. பித்துப் பிடித்தவன் போல் ஆனேன். உடம்புக்கு முடியாமல் போனது.

எங்கள் வீட்டிலோ,  என்னை 'மோகினி' அடித்துவிட்டதாக நினைத்தார்கள்; கவலைப்பட்டார்கள்.

இந்நிலையில், தாகூரைப் படிக்க நேர்ந்தது. எனக்கிருந்த குழப்பமும் நீங்கியதுபோல் உணர்ந்தேன்.

தாகூர் சொல்கிறார்: ''இயற்கை மட்டுமே உண்மை. கடவுள் என்று ஒருவர் இல்லை.''

அதன் பின்னர், ''கடவுள் உண்டா?'' என்று யாரேனும் கேட்டால், ''இல்லை. கடவுள் என்பது மக்களுக்குப் போதையூட்டும் ஓர் அழகான கருத்தாக்கம்'' என்றே பதில் சொன்னேன்[தி இந்து, 20.06.2018].#

மேலே விவரிக்கப்பட்ட நிகழ்வு.....

இந்தியாவுக்கேற்ற பொதுவுடைமை இயக்கத்தை உருவாக்கும் சிந்தனைப் பயணத்தை மேற்கொண்டவர்களில் மிக முக்கியமான ஒரு புள்ளியாகக் கருதப்படும் கோவை ஞானியின் வாழ்க்கையில் நிகழ்ந்ததாகும்.
வயது 80ஐக் கடந்துவிட்ட இவர், 50களில் கடுமையான நீரிழிவு  நோய் காரணமாகக் கண்பார்வையை இழந்துவிட்டவர். ஆனாலும், திடமனதுக்காரரான இவர், வாசிப்பையோ, எழுதுவதையோ பேசுவதையோ நிறுத்திவிடாதவர். இன்றளவும், காலை 11 மணி தொடங்கி, மாலை 08 மணிவரை மீனாட்சி என்பவர் வாசிக்க, இவர் கேட்கிறார்; எழும் சிந்தனைகளுக்கு அவர் மூலம் எழுத்து வடிவம் தருகிறார்; பல நல்ல நூல்களின் ஆசிரியர்[பள்ளி ஆசிரியராக இருந்தவர்].

ஞானி அவர்களுக்கும் 'தமிழ் இந்து'வுக்கும் நம் நன்றிகள்.
------------------------------------------------------------------------------------------------------------------











6 கருத்துகள்:

  1. சிந்திக்க வைத்த அலசல்தான்.

    பதிலளிநீக்கு
  2. இவர்தான் உண்மையான ஞானி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த உண்மை நம்மில் பலருக்குத் தெரியாது.

      நன்றி மேகலா.

      நீக்கு
  3. ஞானிகள் எல்லோருமே நல்ல சிந்தனையாளர்கள்தானே?:) இல்லாவிட்டால் ஞானி எனும் பட்டம் எப்பூடிக் குடுப்பினம் ஜொள்ளுங்கோ?:)
    இப்படிக்கு:-
    ஞானி அதிரா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'ஞானி'[கோவை] என்பது அவருக்குப் புனைபெயர்;பொருத்தமான பெயரும்கூட. அதிராவுக்கு 'ஞானி' பட்டப்பெயர்.பதிவர் உலகம்[ஏக மனதாக] வழங்கியது.

      வாழ்க ஞானி அதிரா

      நீக்கு