பிறப்பெடுத்ததன் விளைவாகப் பிற உயிர்களை வதைத்துச் சிதைத்து உணவாக்கி உயிர் வாழ்கிறோம்.
ஆசைப்பட்டபடியெல்லாம் வாழ்ந்து முடிப்பதற்குள், வகை வகையான கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத பிற உயிரினங்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, அவற்றிற்கு உணவும் ஆகி அழிந்துபோகிறோம்.
பிறப்புக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட காலத்தில் ஆணும் பெண்ணுமாய்ச் சதையோடு சதை தேய்த்து உறுப்பினுள் உறுப்பு சேர்த்துப் புணர்ந்து சந்ததிகளை உருவாக்குகிறோம். இதன் காரணமாக நாம் எதிர்கொள்ளும் போராட்டங்களும் படும் துன்பங்களும் எண்ணிலடங்காதவை.
ஆழ்ந்து சிந்தித்தால்.....
மிக மிக மிக இழிந்ததொரு உயிரினமாக நாம் இருந்துகொண்டிருப்பது புரியும்.
கடவுள் எனப்படுபவர் கருணை வடிவானவர் என்று பரப்புரை செய்பவர்களிடமும், அதை நம்பி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் நிகழ்த்தி வழிபடுகிறவர்களிடமும் நாம் முன்வைக்கும் கேள்வி.....
கணக்கில் அடங்காத வகை வகையான பொருள்களையும் உயிர்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சம் எப்போதும் இருந்துகொண்டே இருப்பதா, படைக்கப்பட்டதா? நேர்ந்தது எதுவாயினும் அது சாத்தியமானது எப்படி? உயிர்களின் தோற்றம் ஏன்? அவற்றிடையேயான போராட்டங்கள் ஏன்? என்றெல்லாம் கேளுங்கள். கேட்போம்.
விடை கிடைக்கிறதோ கேட்டுக்கொண்டே இருப்போம். நம் சந்ததிகளும் கேட்கட்டும். விடை கிடைக்கும்போது கிடைக்கட்டும்.
===========================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக