ஒரு பொறம்போகு நிலத்தை ஆக்கிரமிச்சி, ஒரு துக்கிளியூண்டு கீத்துக்கொட்டாயி போட்டு, அதில் ஒரு சாமி சிலையை வெச்சி, கையில் ஒரு வெங்கலமணியும் தீபாராதனைத் தட்டுமா தொழிலை ஆரம்பிக்கீறாங்க வேலைவெட்டி இல்லாதவனுக.
ஆரம்பத்தில் எட்ட நின்னு வேடிக்கை பார்த்துட்டுப் போற பொதுமக்கள் ‘எதுக்கும் கும்பிட்டு வைப்போம்’னு கும்பிட ஆரம்பிக்கிறாங்க.
கையில் காசு உள்ளவன் ரெண்டு பேரு நின்னு கும்பிட்டு உண்டியலில் போட்டுட்டுப் போனா, அதைப் பார்த்துட்டு மத்தவனும் போடுறான்.
”இந்தச் சாமியை வேண்டிகிட்டா இருக்கிற தோசம் எல்லாம் கழிஞ்சிடுது; நினைக்கிற காரியம் கைகூடுது”ன்னு நாலு முட்டாளுங்க சொல்லிவைக்க, சாரி சாரியா மக்கள் வந்து கும்பிட ஆரம்பிச்சுடுறாங்க.
சின்னஞ்சிறு உண்டியல் மாயமாகிப் பெரியதொரு ராட்சத உண்டியல் அந்த இடத்தை ஆக்கிறமிக்குது.
கீத்துக் கொட்டகை இருந்த இடத்தில் பிரமாண்ட அடுக்குமாடிக் கோயில்! அக்கம்பக்கத்தில் இருக்கிற பொது நிலமும் கோயிலுக்குச் சேர்க்கப்படுது.
நாட்கள் செல்லச் செல்ல கோயில் சொத்து கோடிக்கணக்கில் பெருகுது. கோயிலுக்கு என்பதைவிட கோயிலை உருவாக்கிய சாமியாருக்கு என்று சொல்வதே பொருத்தமா இருக்கும். ஆக.....
மக்களின் பலவீனங்களை அத்துபடியாய்த் தெரிந்துகொண்டு சாமியார் வேடம் போட்டவனெல்லாம் கோடிகோடியாய்ச் சொத்துச் சேகரித்தான் என்பது வரலாறு. இந்த வரலாறெல்லாம் நம்மில் மிகப் பலருக்கும் தெரியுமோ தெரியாதோ, அதைச் சுருக்கமாகவோ சற்றே விரிவாக மீள்பதிவு செய்வது என் நோக்கமல்ல.
இரண்டு பிரபல சாமியார்களின்...அல்ல, பூசாரிகளின் வாழ்த்துச் செய்திகளை நாளிதழ்கள் அவர்களின் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளன.
இந்தப் படத்தில் உள்ளவரும் அம்மாதான்.
முன்பெல்லாம் சாமியார் வேடம் போட்டவர்கள் தங்களை, ‘அவதாரம்’, ‘பகவான்’, ’நடமாடும் தெய்வம்’, கலியுகக் கடவுள்’ என்றெல்லாம் அழைத்துக்கொண்டார்கள்.
இவர்கள் ‘அம்மா’ என்று அழைத்துக்கொள்கிறார்கள்.
இவர்கள் அம்மா என்று சொல்வது மனிதர்களை ஈன்றெடுக்கும் மனித இனத்து அம்மாக்களை அல்ல; ஆனானப்பட்ட முழுமுதல் கடவுளின் துணைவியான ‘சக்தி’யை!
அந்தச் சக்தியை வழிபட நினைப்பவர்கள் தங்களை வழிபட்டால் போதும் என்று இவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள்.
இது நம்மில் எத்தனை பேருக்குப் புரியும்?!
=======================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக