அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 1 ஜூலை, 2023

தீண்டாமை வன்கொடுமைச் சட்டமும் தில்லைத் தீட்சிதன்களும்!!!

சிதம்பரம் நடராசன் கோயில் பிரச்சினை யாவரும் அறிந்ததே.

வழிபாட்டுக்காகக் கனக சபையில் ஏறிய அதிகாரிகளுக்கும் தீட்சிதன்களுக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளுவில் பெண் போலீஸ்காரியின் கை பட்டு[கை மட்டும்தான். ஹி... ஹி... ஹி!!!] தீட்சிதனின்[தீட்சித‘ன்’... நம்மவர் கை பட்டாலே தீட்டு என்பவனுக்கு மரியாதை தேவையில்லை] பூணூல் அறுந்துவிட்டதாம்.

கை பட்டதால் தீட்டுப்பட்டுவிட்ட பூணூலையும் ஆடைகளையும் களைந்துவிட்டு[அதே இடத்திலா? ஹி... ஹி... ஹி!!!], வேறு ஆடைகளும் பூணூலும் அணிந்து தன் தொழிலைத் தொடர்ந்தானாம்.

ஒரு பெண்ணின் கை பட்டால் தீட்டுப்படும் என்றால், அந்தக் கைக்குச் சொந்தக்காரி மீது பட்ட காற்று தீட்சிதன்  மீதும் பட்டிருக்குமே? 

காற்றுப்பட்டதால் தீட்டுப்பட்ட தீட்சிதன் நடராசனிடம் கோரிக்கை வைத்து, அவனின் அருளால் தீட்டுப்பட்ட உடம்பிலிருந்து விடுபட்டுப் புத்தம் புதியதொரு உடம்பைப் பெற்றிருக்கலாம். ஏன் செய்யவில்லை?

அதைச் செய்யாவிட்டாலும், வேற்றுக் கிரகங்களுக்குப் பயணம் செய்வர்களைப் போல், காற்றுப் படாத வகையில் ‘கவச உடை’ உடுக்கலாம்.

தீட்சிதன் மீது படும் ‘தீட்டுக் காற்று’ தில்லை நடராசன் மீதும் படும் என்பதால் அவனுக்கும் கவச உடுப்பு அணிவிக்கலாம்.

தங்களுக்குப் பின்னால் மறைந்திருந்து பாதுகாப்பு அளிக்கும் உச்சப்பட்ச அதிகார வர்க்கத்திடம் சொல்லி ஏற்பாடு செய்யலாம். செய்வார்களா?

இப்படியான கேள்வி மட்டுமல்ல, தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் குறித்ததொரு சந்தேகமும் நமக்கு உள்ளது.

இந்த நாட்டில், எந்தவொரு மூலையில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டாலும், தீண்டாமைக் குற்றத்தைச் செய்வன்  கடும் தண்டனைக்கு உள்ளாவான் என்கிறது சட்டம். இது வணங்கி வரவேற்பதற்குரிய சட்டம்தான்.

நாடெங்கிலும் சட்டத்தை மீறுகிறவன் தண்டனைக்கும் உள்ளாகிறான்.

இந்தச் சட்டம் சிதம்பரம் நடராசன் கோயிலுக்கு மட்டும் செல்லுபடி ஆகாதது ஏன்?

ஒரு தீட்சிதன் ஒரு பெண்ணின் கை பட்டதால் தீட்டுப்பட்டுவிட்டதாகச் சொல்லியிருக்கிறான். அதற்கு ஆதாரமாக, அவன் சொன்னதும் செய்ததும் ஊடகங்கள் பலவற்றிலும் செய்தியாக வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையிலும் அவன் மீது இந்தச் சட்டம் பாயாதது ஏன்? அவன் கைது செய்யப்படாதது ஏன்?

இவன்களைப் பாதுகாப்பது உச்ச அதிகாரம் பெற்றவர்கள் மட்டுமல்லாமல் கருணைக் கடவுளான தில்லை நடராசனுமா?

“ஆம்” என்றால் அவர்களும் அந்தக் கடவுளும் நமக்குத் தேவையா?

பக்தர்கள் சிந்திப்பார்களா?

                              *   *   *   *   *

***சிந்திக்கத் தெரிந்தால், சில நூறு[?] தீட்சிதன்கள் பல கோடி மக்களை மூடர்களாக ஆக்கி, மக்களால் கட்டிமுடிக்கப்பட்ட[இவன்கள் ஒரு துரும்பைக்கூடத் தொட்டு அசைத்தது இல்லை] கோயிலைத்  தங்களின் உடைமை ஆக்கிக்கொண்டிருப்பது  நிகழ்ந்திருக்குமா? நிகழ்ந்துகொண்டிருக்குமா?!

[படங்கள்: தினகரன், 01.07.2023]

மிக முக்கியக் குறிப்பு; தீட்சிதன்கள் மட்டுமல்லாமல், தீட்சிதி[ஹி... ஹி... ஹி!!!]களும் தீண்டத்தகாதவர்களுடன் சமர்புரியக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்!!!