ஒரே நாளில் கொல்லக்கூடிய மிகவும் ஆபத்தான 10 நோய்கள்:
சதை உண்ணும் நோய்:
சதை உண்ணும் நோய் என்று அழைக்கப்படும், 'நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ்' என்பது உடலின் மென்மையான திசுக்களைப் பாதிக்கும் ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். இது பொதுவாகத் திறந்த காயங்கள் அல்லது சிறிய வெட்டுக்கள் மூலம் உடலில் நுழைகிறது.
மிகவும் பொதுவான அறிகுறி தோலின் ‘நெக்ரோசிஸ்’ ஆகும்(மேல்தோல் கருப்பு மற்றும் ஊதா நிறமாக மாறுவது). இதன் பாதிப்பை, காய்ச்சல், குளிர், தோல் சிவத்தில் மூலம் அறியலாம்.
சில நேரங்களில், பாதிக்கப்பட்ட உறுப்பை வெட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.
மக்களில், தோராயமாக 30% முதல் 40% பேர் நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
புபோனிக் பிளேக்:
புபோனிக் பிளேக் வரலாற்றில் இடம்பெற்ற மிகக் கொடிய நோய்களில் ஒன்றாகும். 14ஆம் நூற்றாண்டில், இது 50 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றது.
ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இது இப்போதும் காணப்படுகின்றன.
யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாசிலஸ் என்ற ஒரு விலங்கினம் கடித்தால் இந்த நோய் ஏற்படுகிறது. மிகவும் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், வாந்தி, மயக்கம் மற்றும் வீங்கிய நிணநீர் முனைகள்.
புபோனிக் பிளேக் 30% முதல் 60% வழக்குகளில் ஆபத்தானது.
எபோலா:
எபோலா வைரஸ் ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் அசுத்தமான விலங்குகளிடமிருந்து(சிம்பன்சிகள், கொரில்லாக்கள், விண்மீன்கள் போன்றவை) ரத்தத்தின் மூலம் பரவுகிறது. இது ஒரு தொற்று நோய்.
21 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான அடைகாக்கும் காலத்திற்குப் பிறகு, முதல் அறிகுறிகள் தோன்றும். காய்ச்சல், தசை வலி, தலைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சொறி, உட்புற&வெளிப்புற இரத்தப்போக்கு போன்ற தீவிர அறிகுறிகளைக் கொண்டது இது. சில நேரங்களில் அறிகுறிகளின் தொடக்கத்திற்கும் இறப்புக்குமான இடையில் வெறும் 24 மணிநேரம் இருத்தல்கூடும்.
நோய்வாய்ப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 25% முதல் 90% வரை.
காலரா:
காலரா என்பது ‘விப்ரியோ காலரா’ எனப்படும் பாக்டீரியாவால் உருவாவது. அசுத்தமான உணவு, குடிநீர் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் குடல் நோய் இது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த நோயால் ஒவ்வொரு ஆண்டும் 21,000 முதல் 143,000 பேர் இறந்திருக்கின்றனர்.
12 மணிநேரம் முதல் ஐந்து நாட்கள் வரை அடைகாக்கும் காலத்திற்குப் பிறகு, நோய் கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது. முறையான சிகிச்சை இல்லாவிட்டால், சிறிது நேரத்திலேயே மரணத்தை ஏற்படுத்துகிறது.
இப்போதும், இதன் மூலம் இறப்புகள் அரிதாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
மூளைக்காய்ச்சல்:
மூளைக்காய்ச்சல் என்பது வைரஸ் அல்லது பாக்டீரியாவால் ஏற்படும் மூளைத் தொற்று ஆகும். இந்த நோய் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. பெரியவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
மூளைக்காய்ச்சலின் அறிகுறிகள் காய்ச்சலைப் போலவே இருக்கும்: தலைவலி, காய்ச்சல், கடினமான கழுத்து வலி போன்றவை அறிகுறிகள். இதிலிருந்து உயிர் பிழைத்தவர்களில் 10% முதல் 15% பேர் வாழ்நாள் முழுவதும் கடுமையான நரம்பியல் பாதிப்பால் அவதிப்படுகின்றனர்.
ஃபுல்மினன்ட் ஹெபடைடிஸ்:
இது பொதுவாக ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி ஆகியவற்றால் ஏற்படுகிறது, எனவே, தவறாமல் பரிசோதனை செய்வது முக்கியம்.
காரணம் எதுவாக இருந்தாலும், கடுமையான சோர்வு, வயிற்று வலி, மஞ்சள் காமாலை நோய்ப் பாதிப்பு போன்றவை இதன் அறிகுறிகள்.
ஃபுல்மினன்ட் ஹெபடைடிஸ் 40% ஆபத்தானது. இது கல்லீரல் செல்களைத் தாக்கி அழிக்கிறது. கல்லீரல்தான் உடலிலுள்ள நச்சுகளை நீக்குகிறது. கல்லீரல் தாக்கப்பட்டால் அது விரைவான மரணத்திற்கு வழிவகுக்கிறது.
மெதிசிலின்-எதிர்ப்பு ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் (MRSA):
மெதிசிலின்-எதிர்ப்பு ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் என்பது பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எதிர்க்கும் ஒரு பாக்டீரியா ஆகும். பாக்டீரியாவைச் சுமக்கும் ஒருவருடன் நேரடி தொடர்பு மூலம் இது பரவுகிறது.
சீழ் நிறைந்த சிவந்த நிறத்திலான வீக்கங்கள் இதன் அறிகுறி. தொட்டால் சூடு தெரியும்; தோலில் வலி இருக்கும்.
இந்நோய்க்கான பாக்டீரியா நுரையீரல், சிறுநீர்ப் பாதை போன்ற உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. இந்த நோய் காய்ச்சல், குளிர், குழப்பமான மன நிலை, தசை வலி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. 10% முதல் 30% நோயாளிகள் அறிகுறிகள் தோன்றிய சிறிது நேரத்திலேயே இறந்துவிடுகிறார்கள்.
சாகஸ் நோய்:
சாகஸ் நோய் ‘டிரிபனோசோமா குரூசி’ ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது, WHOஇன்படி, தென் அமெரிக்காவில் ஆறு முதல் ஏழு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாகஸ் நோய் இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. முதல் கட்டத்தின் போது இது இரண்டு மாதங்கள் நீடிக்கும், நோயாளிக்கு எந்தவித அறிகுறியும் தெரியாது.
நோயாளியின் இரத்த ஓட்டத்தில் நுழைந்த பிறகு, ஒட்டுண்ணிகள் இதயம் மற்றும் செரிமானத் தசைகளுக்குப் பரவுகின்றன. நோயாளி இதயச் செயலிழப்பு அல்லது அரித்மியா போன்ற செரிமானப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார். இது இரண்டாம் கட்டம்.
சிகிச்சையளிக்கப்படாவிட்டால் நோய் திடீர் மரணத்தை ஏற்படுத்தும். சரியான நேரத்திலான சிகிச்சையால் பெரும்பாலும் உயிர்பிழைக்க வாய்ப்புள்ளது.
இறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது: 5% க்கும் குறைவானது.
என்டோவைரஸ் டி 68:
இது சுவாசக் குழாயைத் தாக்கும் ஒரு வைரஸ் ஆகும்; எச்சில் & இருமல் மூலம் பரவுகிறது. குழந்தைகளும், இளம் பருவத்தினரும், ஆஸ்துமா உள்ளவர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், இருமல், தும்மல், தசை வலிபோன்றவை இதன் அறிகுறிகள். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், ’என்டோவைரஸ் டி 68’ சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தி உடனடி மரணத்திற்கு வழிவகுக்கும்.
ஒரு ஆய்வின்படி, வைரஸால் பாதிக்கப்பட்ட 10 பேரில் ஒருவர் உயிரை இழக்க நேரிடும்[ஒரே நாளில்].
கடுமையான கணைய அழற்சி:
கடுமையான கணைய அழற்சி என்பது கணையத்தின் வீக்கம் ஆகும். சில சந்தர்ப்பங்களில், அழற்சியானது நெக்ரோசிஸாக உருவாகிறது. இதுவும் உடனடி மரணத்தை விளைவிக்கும்.
நோயின் முதல் அறிகுறிகளாவன செரிமான பிரச்சனைகள் மற்றும் முதுகில் பரவும் கடுமையான வயிற்று வலி ஆகியவை. இந்த அறிகுறிகள் பெரும்பாலும் உணவு உண்ட பிறகு தோன்றும். காய்ச்சல், வியர்வை சுவாசிப்பதில் சிரமம், குமட்டல், வாந்தி ஆகியவை அறிகுறிகள்.
கடுமையான கணைய அழற்சியின் இறப்பு விகிதம் 5% முதல் 30%வரை உள்ளதது.
+++++++++++++++++++
https://www.msn.com/en-in/health/medical/10-diseases-that-can-kill-you-in-less-than-a-single-day/ss-AA1cFzqY?ocid=msedgdhp&pc=U531&cvid=68c6c0b17d784dcfa33ccdeb20a848b4&ei=45#image=5