தமிழகத்தின் பாவூர்ச்சத்திரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சி முடிந்து, திமுக தொண்டர்கள் அங்கிருந்து வெளியேறும்போது, அவ்வழியே காரில் வந்த பாஜக ஆதரவாளர்கள் கூட்டத்தை நோக்கி "பாரத் மாதா கி ஜெய்" என்று முழக்கமிட்டதோடு, செருப்பைத் தூக்கிக் காட்டியிருக்கிறார்கள் //the BJP supporters were inebriated[குடிபோதை] and showed them their footwear// [https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/jul/04/slogan-row-dmk-men-attack-bjp-supporters-in-tenkasi-2591199.html.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தாக்கிய கும்பலிடமிருந்து குண்டர்களை மீட்டுப் பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தனர் என்பது ‘டைம்ஸ் நவ்’ செய்தி[டைம்ஸ் நவ், காலம் 15:30[03.07.2023]
இந்த நிகழ்வு பற்றிய செய்தி தினத்தந்தி[பாஜக சார்பு], நியூ இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றிலும் வெளியாகியுள்ளது.
நடுவண் ஆட்சி தங்களுடையது என்னும் திமிரில் தலைகால் புரியாமல் கொட்டமடித்து அட்டூழிகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள் ‘பாஜக’ ரவுடிகள்.
இந்த ரவுடித்தனம் ‘தி.மு.க.’காரர்களிடம் எடுபடுமா என்ன? அவர்கள் ரவுடிகளுக்கு ரவுடிகள் ஆயிற்றே.
செருப்பைக் காட்டியவர்கள், “பாரத் மாதா கி[கீ?] ஜெய்” என்று கூச்சலிடாமல், “இந்தியத் தாய் வாழ்க” என்று முழக்கமிட்டிருந்தால், தங்களின் தமிழ்ப் பற்றை வெளிக்காட்டியதற்காகத் ‘தி.மு.க’வினர் அவர்களை மன்னித்து, ‘செருப்படி பூஜை’ நடத்தாமல் நன்றி சொல்லி வழியனுப்பியிருப்பார்களோ என்னவோ!
இனியேனும், தமிழ்நாட்டில் ஊர்வலம், உல்லாச வலம் எல்லாம் வரும்போது, தாங்கள் செய்யும் அடாவடித்தனங்களிலிருந்து தப்புவதற்காக, “தமிழ் வாழ்க!” என்று மறக்காமல் முழக்கம் எழுப்பிட வேண்டும் என்பது நாம் அவர்களுக்கு வழங்கும் அறிவுரை ஆகும்!
//the BJP supporters were inebriated and showed them their footwear //[https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/jul/04/slogan-row-dmk-men-attack-bjp-supporters-in-tenkasi-2591199.html