புதன், 5 ஜூலை, 2023

தமிழை வாழவிடுங்கள் ‘சத்குரு’ஜி!!!

‘குரு’ என்னும் சொல் இலக்கிய வழக்காகவும், பேச்சு வழக்காகவும் இருப்பதைப் பலரும் அறிவர்.

‘குர்’ - என்ற ஒலி மூலத்திலிருந்து உருவான சொல் குரவன். குரவன் / குரு - என்பன ஆசிரியரைக் குறிக்கும் அழகான தமிழ்ச்சொற்கள்(குறவன் என்பது வேறு)...’கோரா’

குரு என்னும் சொல் தலைமை, மேன்மை, சிறப்பு, ஒளி என்னும் பல பொருள்களைத் தரும்.

இந்த ஈரெழுத்துச் சொல்லை[குரு], கு+ரு என்று பிரித்து தமிழறிந்த எவரும் பொருள் சொன்னதில்லை.

சொல்ல முன்றாலும் அம்முயற்சி தோல்வியில்தான் முடியும். எப்படி?

கு+ரு... ‘கு’ என்பது ஓரெழுத்து ஒரு மொழியாக ஒலி, நிறம், பூமி, குற்றம், சிறுமை ஆகிய பொருள்களைத் தரும்[https://ta.wiktionary.org/s/nxd]+[https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/oru-eluthu-oru-mozhi/]

'கு' என்னும் உகர உயிர்மெய்க்குறில் எழுத்து ஓரெழுத்து ஒருமொழியாகப் பயின்றிருக்கிறது. கு என்றால் பூமி, இகழ்ச்சி, இன்மை, நீக்கம், நிறம், சிறுமை, தடை போன்ற பல பொருள்கள் காணப்படுகின்றன. [https://www.nakkheeran.in/360-news/thodargal/poet-magudeswaran-writes-soller-uzhavu-part-26


‘ரு’ என்பது ‘ஓரெழுத்து ஒரு மொழி’யல்ல[உயிர்மெய் மட்டுமே]. அது எப்பொருளையும் குறிப்பதில்லை[’ரு’... No definitions found for this word. Help us improve the dictionary by adding one[agarathi.com dictionary]

ஆக,

‘குரு’ என்னும் சொல்லை, கு+ரு என்று பிரித்துப் பொருள் காணும் முயற்சி இந்நாள்வரை  மேற்கொள்ளப்படவில்லை என்பது அறியத்தக்கது.

இச்சொல் குறித்த ஆய்வு நிலை இதுவாக இருக்க, ஜக்கி என்னும் பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டு ‘சத்குரு’ என்றே அழைக்கப்படுகிற வாசுதேவ், இச்சொல்லை, கு+ரு என்று பிரித்துப் பொருள் விளக்கம் தந்திருக்கிறார்.

அவர் தந்த விளக்கம்[குரு பூர்ணிமாவை முன்னிட்டு அருளிய ஆசியுரையில்]:

 "'கு' என்றால் இருள், 'ரு' என்றால் அகற்றுபவர். உங்கள் இருளை அகற்றுபவரே குருவானவர்." - சத்குரு https://isha.sadhguru.org/in/ta/guru-purnima

ஜக்கி அவர்களே.

‘ரு’வுக்கு நீங்கள் தந்திருக்கும் பொருள் தான்தோன்றித்தனமானது; எந்தவொரு அகராதியிலும் இடம்பெறாதது.

நீங்கள் சொல்லியிருப்பது போல், ‘கு’வுக்கும் ‘இருள்’ என்பது நேரடியான பொருள் அல்ல; குற்றம் சிறுமை போன்றவற்றிற்குக் காரணமாய்[இருள்>அறியாமை] இருப்பது அது என்று சொல்லி, சுற்றி வளைத்து ‘கு’விற்கு இருள் என்று விளக்கம் தரலாம்.

ஆங்கிலத்தில் தத்துவம் பேசும் நீங்கள், அவ்வப்போது கொ[ச்சை]ஞ்சு தமிழிலும் ஆன்மிக நெறி பரப்பி அயராது மக்கள் பணி ஆற்றுகிறீர்களே, அது போதுமய்யா..

இனியும் சொல்லாராய்ச்சி எல்லாம் வேண்டாம். தமிழை வாழவிடுங்கள் சத்குருஜி!