கட்டிகள் வளர்ந்து சுற்றியுள்ள சாதாரணத் திசுக்கள், அல்லது இரத்தம், அல்லது நிணநீர் அமைப்புகள் வழியாக உடலின் மற்றப் பகுதிகளுக்குப் பரவுகிறது. உடல் உறுப்புகள் பலவற்றையும் பாதிக்கிறது. https://www.worldcancerday.org/what-cancer.
ரத்தத்தில் உருவாகும் புற்றுநோய் ‘ரத்தப் புற்றுநோய்’ எனப்படும்.
பிற புற்றுநோய்கள்:
*மூளைப் புற்றுநோய்
*கழுத்துப் புற்றுநோய்
*நுரையீரல் புற்றுநோய்
*கணையப் புற்றுநோய்
*தோல் புற்றுநோய்[skin cancer]
*எலும்புப் புற்றுநோய்
*கருப்பைப் புற்றுநோய்[எண்டோமெட்ரியல் புற்றுநோய்]
*பெண்ணுறுப்புப் புற்றுநோய்
*ஆண்குறிப் புற்றுநோய்
*விதைப்பை[prostate gland]ப் புற்றுநோய்
*குத[மலத்துவாரம்]ப் புற்றுநோய்
இவையன்றி வேறு பலவும் இருக்கக்கூடும்.
ஆக,
மனித உடம்பில் புற்றுநோய் பரவாத இடமே இல்லை எனலாம்.
“கடவுள் அணுவிலும் இருக்கிறார்; துரும்பிலும் இருக்கிறார்; அண்டவெளியிலுள்ள அத்தனைப் பொருள்களிலும் உலகங்களில் உள்ள உயிர்களிலும் இரண்டறக் கலந்திருக்கிறார் என்பார்கள் ஆன்மிகவாதிகள்.
ஒட்டுமொத்த மனித உடம்பிலும் இந்த நாசகாரப் புற்றுநோய் பரவிக் கிடப்பதால் இதை வெறுமனே புற்றுநோய் என்று சொல்லாமல், ‘புற்றுநோய்க் கடவுள்’[அவர் அழிப்பு வேலையையும் செய்கிறார் என்பது அறியத்தக்கது] என்று அழைக்கத் தோன்றுகிறது!
'அம்மை’ நோயை ‘மாரியம்மன்’ ஆக்கி வழிபட்டது... வழிபடுவது போல், புற்று நோயைப் ‘புற்றுநோய் அம்மன்’ ஆக்கி நம்மவர் வழிபடும் நாளும் வரக்கூடும்!
ஹி... ஹி... ஹி!!!