அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

கொரோனா மனிதர்கள்!!!


ரியானா நூஹ் நகரில் மத ஊர்வலத்தின்போது முதலில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பதட்டமான சூழ்நிலையைச் சீரமைக்க உள்ளூர்வாசிகள் உதவ வேண்டும் என்றும் காவல்துறை கோரியிருக்கிறது[அங்கே கலவரச் சூழல் நிலவுவதால் விரிவான செய்தி ஊடகங்களில் வெளியாகவில்லை].

கொரோனாத் தொற்று உயிர்ப்பலி வாங்கிய காலத்தில், இஸ்லாமியர்கள், மசூதிகளிலோ, பொது இடங்களிலோ தொழுகை நடத்தாமல், தத்தம் வீடுகளிலேயே அதைச் செய்தது போல இப்போதும் வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என்று காவல்துறை இஸ்லாம் மதகுருமார்களிடம் வேண்டுகோள் விடுத்தது. 

வேண்டுகோளை ஏற்று மதகுருமார்களும் இஸ்லாம் மக்களை அவரவர் விடுகளிலேயே தொழுகை நடத்துமாறு வேண்டியுள்ளார்கள்.

கலவரத்தால் நிகழும் உயிர்ப்பலி குறித்தும், மதம் சார்ந்தவர்களுக்கு[சாராதவர்கள் உட்பட] ஏற்படும் இழப்புகள் குறித்தும் இப்போதைக்கு முழுமையாக அறிந்துகொள்ள இயலாத அளவுக்கு அங்கே கலவரச் சூழல் நிலவுகிறது. அது அளப்பரிய வருத்தத்தை தருகிற ஒன்றாகும். அதனினும் அதிக அளவில் வருத்தம் தருவதாக உள்ளது மனிதர்கள் கொடூரக் கொரோனாக் கிருமியாக மாறிவிட்ட கொடூரம்.

மனிதர்கள் மனிதர்களாக[மனிதாபிமானிகளாக] மட்டுமே வாழும் மகோன்னதமான ஒரு காலம் எப்போது மலரும்?

விடை தெரியாத கேள்வி இது!

                               *   *   *   *   *

https://www.hindustantimes.com/india-news/nuh-violence-live-updates-haryana-communal-violence-latest-news-bajrang-dal-monu-manesar-reason-for-nuh-violence-101691021341946.html