2026இல் நடைபெறவுள்ள த.நா.சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களுக்கு மேல் உள்ளன.
ஆம், 15 மாதங்களுக்கு மேல்; சுமார் ஒன்றேகால் ஆண்டுகள்.
மக்களுக்கு எப்படியெல்லாம் தொண்டு செய்யலாம் என்பது குறித்துச் சிந்தித்து, திட்டங்கள் வகுத்து, அவற்றைச் செயல்படுத்தி மக்களின் வாக்குகளை அள்ளும் முயற்சியில் ஈடுபடாத ‘த.வெ.க.’காரர்களும் ‘அ.தி.மு.க.’வினரும்[தி.மு.க. உள்ளிட்ட மற்றக் கட்சிக்காரர்களும், வடக்கன்களின் அடிமைகளும்தான்] தொகுதிகளைப்[2026 தேர்தல்] பங்கு பிரிப்பதில் தீவிரம் காட்டுகிறார்கள் என்பது செய்தி [https://tamil.asianetnews.com/].
“அடப்பாவிகளா, இருக்கிற கோடானுகோடிச் சொத்து போதாதென்று, ஆட்சியைக் கைப்பற்றிக் கூட்டுக் கொள்ளையடிக்கவும், உண்டு கொழுத்துச் சல்லாபிக்கவுமா கட்சி ஆரம்பித்தீர்கள்? கட்சி நடத்துகிறீர்கள்? மனசாட்சியே இல்லாத மனிதர்களா நீங்கள்?"
இப்படிக் கேட்பதால் எல்லாம் நீங்கள் திருந்தப்போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும்.
தெரிந்திருந்தும் கேள்வி கேட்பதற்குக் கட்டுப்படுத்த இயலாத மனக் குமுறலே காரணம் ஆகும்
* * * * *
ஆதாரச் செய்தி:
//தமிழக வெற்றிக்கழகத்திற்கு 80 தொகுதிகளை அக்கட்சி கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 80 தொகுதிகளை அதிமுக விட்டுக்கொடுத்தால் மீதமுள்ள 154 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி போட்டியிடும் நிலை உருவாகும். மேலும் சிறிய, சிறிய கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மீதமுள்ள தொகுதிகளில்தான் அதிமுக போட்டியிட வேண்டிய நிலை உள்ளது.
இதனால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மைக்குத் தேவையான 117 இடங்களை அ.தி.மு.க. பெற முடியமா என்ற குழப்பம் அக்கட்சிக்குள் எழுந்துள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பது வரும் நாட்களில் தெரியவரும் என்று கூறப்படுகிறது//