‘யோகா’ என்பது உடல், மனம்[இது குறித்தான ஆய்வுரை பிறிதொரு நாளில் வெளியாகும்] என்னும் இரண்டையும் பக்குவப்படுத்தி இவற்றின் நலம் பேணுவதற்கான ஒரு பயிற்சி மட்டுமே.
உடலை அணு அணுவாய் ஆராய்ந்து, மனத்துடன் இணைத்து அதை மேம்படுத்துவதற்கு நம் சித்தர்கள் உருவாக்கிய ஒரு கலையாகும் இது.
சங்கிகள் இந்த நுட்பமான கலையை ஆன்மிகத்தின் ஒரு கூறு ஆக்கிவிட்டார்கள்.
ஆன்மா என்ற ஒன்றின் இருப்பு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில், தொடர்ந்து ஆன்மிகத்தை உயர்த்திப் பேசிப் பேசி மக்களின் ஆறறிவு வளர்ச்சியைத் தடுக்கிறார்கள் இவர்கள்.
இந்தக் கும்பலுக்குத் தலைமை தாங்குபவர்களே மோடி, அமித்ஷா வகையறாக்கள்.
இவர்களால், ஆளுநர் என்னும் பெயரில் நியமிக்கப்பட்ட அடாவடி ஆன்மிகப் புளுகர்தான் ஆர்.என்.ரவி.
இந்த ஆன்மிக மேதை, “யோகாவை நமக்கு வழங்கியவர் ஆதியோகியான சிவபெருமான்” என்று உளறியிருக்கிறார்.
இவருக்கும் யோகா கலைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.
இந்தக் கற்பனைக் கடவுளைத்தான் ஆதி யோகா மாஸ்டர் என்று பேசியிருக்கிறார் இந்த ஆன்மிகப் புருடா மாஸ்டர்.
தரம் தாழ்ந்ததாகத் தமிழினத்தை ஆக்குவதற்கென்றே கங்கணம் கட்டுவித்து அனுப்பப்பட்டவர் இவர்.
தங்களின் அறிவையும் உரிமைகளையும் காத்துக்கொள்வதற்காகத் தமிழர்கள் மிகக் கடுமையாகப் போராட வேண்டிய காலக்கட்டம் இதுவாகும்.