அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 1 மார்ச், 2023

'ஆயுர்வேதக் கல்வியில் ஜோதிடம்’... மூடநம்பிக்கை வளர்ப்பில் இந்தியா ‘நம்பர் 1’!!!

ஜோதிடம் அறிவியல் சார்ந்ததா அல்லவா என்னும் விவாதம் நீண்ட நெடுங்காலமாக நடைபெறுகிறது. இன்றளவில் அது தொடர்கிறது. எனினும், கோள்களின் இருப்பும் இயக்கமும் மனித வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதற்கு அறிவியல் அடிப்படையிலான ஆதாரங்கள் எவையும் இன்றளவும் முன்வைக்கப்படவில்லை.

இயற்கைச் சீற்றங்களால் நிகழுந்துள்ள எத்தனையோ பேரழிவுகள், மனிதர்களைத் தாக்கும் எதிர்பாராத புதிய புதிய நோய்கள் பற்றிய முன்னறிவிப்புகளை ஜோதிடர்கள் கணித்துச் சொன்னதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனி மனிதர் வாழ்விலும் ஜோதிடர்களின் கணிப்புகள் பெரும்பாலும் பொய்த்துவிடுகின்றன.

மக்கள் ஜோதிடர்களை அணுகித் தம் எதிர்காலம் குறித்து அறிவது தொடர் நிகழ்வாக இருப்பினும், ஜோதிடத்தை முழுதும் நம்பத்தக்க ஒரு கலையாக ஏற்று, கல்வி நிலையங்களில் ஒரு பாடமாகக் கற்பிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

தனியாரால் நிர்வகிக்கப்படும் சில நிறுவனங்களில் ஜோதிடம் கற்பிப்பதும் அரிதான நிகழ்வாக இருக்கும் நிலையில், மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் இதற்கான வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில்.....

இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசியக் கவுன்சில்(NCISM) இந்த ஆண்டு இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை(BAMS)த் திட்டத்தில் ஜோதிடத்தை விருப்பப் பாடமாக அறிமுகப்படுத்தியுள்ளது.[https://timesofindia.indiatimes.com/education/news/ncism-introduces-medical-astrology-for-better-diagnosis-in-ayurveda-treatment/articleshow/98226677.cms]

அறிஞர்களிடையே இதற்குக் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

மக்களிடையே மூடநம்பிக்கைகளை விதைத்து ஆட்சியைக் கைப்பற்றிய ‘பாஜக’, மேலும் அவர்களை மூடர்களாக்குவதற்கான திட்டமிட்ட சதியே இது என்பது அவர்கள் கருத்து.

ஜோதிடம் கற்பிப்பது அனுமதிக்கப்பட்டால், எதிர்காலத்தில், செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், ஆவி, பூதம், பேய், பிசாசு போன்றவை பற்றிக் கற்பிப்பதும் கல்வி நிலையங்களில் பரவலாக்கப்படலாம் என்கிறார்கள்.

இந்தியா, வளரும் நாடுகளில் முன்னிலை வகிப்பதாகச் சொல்லப்படுகிறது. 

மூடநம்பிக்கை வளர்ப்பிலும் இது முன்னிலை பெற்றுள்ளது என்று இனி தயங்காமல் சொல்லலாம்!

====================================================================================================

தொடர்புடைய இடுகைகள்:

https://kadavulinkadavul.blogspot.com/2016/11/blog-post_24.html [ஜோதிடம்... கொஞ்சம் புரிதல்! கொஞ்சம் ஆராய்ச்சி!!

https://kadavulinkadavul.blogspot.com/2016/11/blog-post_15.html [நம்பாதீர், நம்பாதீர்!... ஜோதிடத்தை நம்பாதீர்!!

https://kadavulinkadavul.blogspot.com/2021/06/blog-post_30.html [நாடி ஜோதிடம் கேடிகளின் புகலிடமா?]

https://kadavulinkadavul.blogspot.com/2020/04/blog-post_22.html [தாஜ்மகால் இடியும்! பாகிஸ்தான் மூன்றாக உடையும்!!...

https://kadavulinkadavul.blogspot.com/2017/10/blog-post_16.html [ஜோதிடம் பற்றி நாடகத் தந்தை சம்பந்த முதலியார்...]

https://kadavulinkadavul.blogspot.com/2017/09/blog-post_84.html [டுபாக்கூர் வாஸ்துவும் டூப்லிகேட் கடவுளும்...]

https://kadavulinkadavul.blogspot.com/2019/03/blog-post_25.html [‘கிலி’ ஜோதிடம்!]

https://kadavulinkadavul.blogspot.com/2019/07/blog-post_27.html [பட்டும் திருந்தாத கர்னாட அமைச்சர்!]

https://kadavulinkadavul.blogspot.com/2015/10/blog-post_9.html [நவக்கிரகக் கடவுள்களின் அவதாரக் கதைகள்!]

https://kadavulinkadavul.blogspot.com/2015/09/100.html [ஜோதிடம் பொய்...பொய்...பொய்யே!