வெள்ளி, 30 ஜனவரி, 2026

2026 தேர்தல்... பேரம் பேசிக் கல்லா கட்டும் பொறுக்கிகளுக்குப் புத்தி புகட்டுவோம்!

“எங்கள் கட்சி வரும் தேர்தலில்[2026> தமிழ்நாடு சட்டமன்றம்] எந்தக் கூட்டணியில் இணைகிறது என்பதை அடுத்தச் சில நாட்களில் தெரிவிப்போம்.”

“ஆட்சியில் பங்களிக்கும் கூட்டணியில் மட்டுமே எங்கள் கட்சி இடம்பெறும்.”

“பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது. தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.”

“நாங்கள் இணையும் அணியே வெற்றிக் கூட்டணியாக அமையும்; ஆட்சியைக் கைப்பற்றும்.”

மேற்கண்டவை போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு, கோடிகளில் புரளும்  கேடி அரசியல் தலைவர்களுடன், பேரம் பேசி முடித்த... பேசிக்கொண்டிருக்கும் சுயநல அரசியல் கட்சித் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

பட்டியல்?

தேவையில்லை. அவர்கள் உங்களால் நன்கு அறியப்பட்டவர்கள்தான்.

கட்சியின் கொள்கைகளைப் பட்டியலிட்டு, மக்களுக்குச் செய்யவுள்ள பணிகள் குறித்த திட்டங்கள் இந்தக் கழிசடைகளிடம் இல்லை. 

வைப்புத் தொகையைக்கூடப் பெற இயலாத வகையில் இந்த நாசகாரக் கும்பல்களுக்கு வரும் தேர்தலில்[2026] பாடம் கற்பிப்போம்.

இங்கே[காணொலி] கடவுளைத் தேடலாம்!!!

வியாழன், 29 ஜனவரி, 2026

“முருகன்[கடவுள்] எங்கிருந்தாலும் வரவும்”


முருகா, 
உலகெங்கும் உள்ள துயருற்றவர்களின் துன்பம் களைவதையே தினசரிக் கடமையாகக் கொண்டிருப்பவன் நீ.

கோரிக்கை வைக்கிறார்களோ அல்லவோ, தீராத துன்பங்களின் தாக்குதலுக்கு உள்ளானோரின் வலி போக்க எங்கெல்லாமோ அலைந்து திரிந்துகொண்டிருப்பவன் நீ.

நிராதரவானவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தவறாத உனக்கு ஓய்வு என்பதே இல்லை. 

ஓய்வின்றி உலகம் சுற்றிக்கொண்டிருக்கும் உன்னுடைய பரிவான பார்வைக்காகத்தான் மேற்கண்ட நகல் படத்தைப் பதிவு செய்திருக்கிறோம்.

மறைந்த நடிகர் விஜயகாந்தின்[சினிமாவில் கேப்டனாக நடித்து, தமிழ்நாட்டுக் கூமுட்டைகளால் ராணுவக் கேப்டனாகவே மதித்துப் போற்றப்பட்டவர்] இல்வாழ்க்கைத் துணைவியான பிரேமலதா[‘தேமுதிக’வின் தலைவி] உன்னுடைய தீவிரப் பக்தை என்பதைத் தமிழ் மக்கள் அறிவார்கள்.

நீயும் அறிந்திருப்பாய்.

2026இல் இடம்பெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அவகாசம் குறைவாகவே உள்ள நிலையில், அம்மையார் உன்னிடம் ஒரு வேண்டுகோளை[படத்தில் கண்டவாறு] முன்வைத்திருக்கிறார். அது.....

“முருகன் அருளால் மகத்தான கூட்டணி['தேமுதிக’வுக்கு] அமையும்” என்பதே அது.

அம்மையார்[கூட்டணி] தேர்தலில் மகத்தான வெற்றி கண்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவது தமிழர்களுக்கு ஏராள நன்மை பயக்கும் என்பதால்.....

“முருகா, நீ உலகின் எங்கோ ஒரு பகுதியில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாலும், புறப்பட்டுத் தமிழ்நாட்டுக்கு வந்து, ‘தேமுதிக’வின் தலைவி பிரேமலதா அம்மையாருக்கு ஏற்றதொரு கூட்டணி அமைத்துத் தருமாறு உன் திருவடி தொழுது வேண்டுகிறோம்.

வளர்க தேமுதிக! வெல்க தலைவி பிரேமலதா!!

புதன், 28 ஜனவரி, 2026

இதயத்தை நொறுக்கும் ஓர் இரும்புப் பெண்மணியின் கதை[உண்மை நிகழ்வு]!

கள்ளக் காதலனுடனான ‘கலக்கல்’ அந்தரங்க உறவுக்குக் கணவன் இடையூறாக இருந்தால்,  மனைவியும் க.காமுகனும் இணைந்து அவனைத் தீர்த்துக்கட்டிவிட்டு[உதவி> தூக்க மாத்திரை, விஷம், தலையணை இத்தியாதி] அவர்கள் சரச சல்லாபத்தைத் தொடர்வது[காவல்துறையிடம் சிக்கிக்கொள்ளாதவரை] வழக்கமாகிப்போன நிகழ்வு.

கீழ்வருவதும் அவற்றில் ஒன்று.

//20 தூக்க மாத்திரைகளைப் பொடியாக்கி, பிரியாணியில் கலந்து  கணவனுக்கு[பெயர் நீக்கப்பட்டது]க் கொடுத்தாள் மனைவி. இதனைச் சாப்பிட்ட அவன் ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்ததும், இரவு 11.30 மணிக்குக் காதலனை  வீட்டுக்கு வரவழைத்தாள் அவள். கணவன் மார்பில் ‘க.கா’ அமர்ந்துகொள்ள, அவள் தலையணை எடுத்துக் கணவனின் முகத்தில் அழுத்திப் பிடித்து மூச்சு விடமுடியாமல் செய்தாள்.....

அவன் இறந்துவிட்டான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ‘க.கா’ அங்கிருந்து சென்றுவிட்டார்[சடலத்தை அப்புறப்படுத்தவோ இடம் தேடிப் புதைக்கவோ இல்லை; விடிந்த பிறகு மாரடைப்பால் இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தாரிடம் சொல்வது அவளின் திட்டம்].....

//நேரத்தைப் போக்குவதற்காக விடிய விடிய அவள் செல்போனில் படம் பார்த்தாள்.....// -என்றிப்படி நிகழ்ச்சி முற்றுப்பெற்றிருந்தால்கூட, அது இயல்பான ஒன்றாக இருந்திருக்கும். இதற்கு மாறாக, ‘செல்போனில் ஆபாசப் படம் பார்த்தாள்’ என்று முடிகிறது அந்நிகழ்ச்சி.

கணவனைக் குரூரமாகக் கொலை செய்து, அவனின் பிணம் அருகிலிருக்க, செல்பேசியில் படம் பார்ப்பதற்கே அளப்பரிய மன உறுதி வேண்டும். நம் ‘அவள்’ ஆபாசப் படம் பார்த்தவாறிருந்தாள் என்பது கற்பனைக்கெட்டாத அதிசயமாகவும் குரூரச் செயலாகவும் உள்ளது. இத்தனை இழிவான காமுகியா இவர் என்று கேட்கத் தோன்றுகிறது.

கருணைக் கடவுளா இப்படியான கொடூரக் கல்நெஞ்சம் உள்ள பெண்களைப் படைக்கிறார் என்ற கேள்வி எழுகிறது என்றாலும், செல்போனில் ‘அவள்’ அசிங்கப் படம் பார்த்ததாள்’ என்பதாகச் செய்தி வெளியானது எப்படி என்னும் கேள்வியும் உடன் எழுகிறது.

விடை அறிய இயலாத கேள்விகள் ஒருபுறம் இருக்க, ஒன்றுக்கும் மேற்பட்ட ஊடகங்கள், ‘அவள் ஆபாசப் படம் பார்த்தாள்’ என்று செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

                                 ==========================

*https://www.apcnewstamil.com/news/crime-news/husbands-dead-body-in-bed-psycho-wife-who-watched-pornographic-videos-every-morning/193260

*https://www.facebook.com/photo.php?fbid=755502977607104&set=a.285998801224193&type=3

*https://www.seithisolai.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3/?utm=thiral

செவ்வாய், 27 ஜனவரி, 2026

‘புரட்சி’ போதும்; ‘தமிழர்’ வேண்டாம் எடப்பாடியாரே!


 
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் வருங்கால முதல்வருமான[?] எடப்பாடியாருக்கு வணக்கம்.

உம்முடைய ஆயுட்காலம்வரை, நீர் நிரந்தர முதல்வராக நீடிக்கவும் நம் வாழ்த்துகள்.

நீர் விரும்பினால், மோடியை வீழ்த்திவிட்டு இந்திய நாட்டின் பிரதமராகவும் ஆகலாம்.

இந்த நாட்டின் சர்வாதிகாரியாக ஆவது உம் விருப்பம் எனின், அவ்வாறு ஆகவும் நம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

இந்நிலையில், எடப்பாடியார் என்று அழைக்கப்படும் உம்முடைய தாள் பணிந்து நாம் வைக்கும் வேண்டுகோள் ஒன்று உண்டு. அது.....

மேற்கண்ட படங்களில் உள்ளது போல்,  ‘புரட்சித் தமிழர்’ என்று நீரே அடைமொழி சூட்டிக்கொள்வதை நிறுத்துவீர் எடப்பாடியாரே.

‘புரட்சி’ சேர்த்து, ‘புரட்சித் தலைவன்’[எம்ஜியார் புரட்சித் தலைவர்] என்று சொல்லிக்கொள்ளும்; ‘தமிழர்’ வேண்டாம்.

தமிழன் யார் என்பதே உமக்குத் தெரியாது. தரணியாண்ட தமிழர்களின் வரலாற்றையும் நீர் அறிந்திருக்கவில்லை.

கம்ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொல்லி, உலகறிய அவமானப்பட்ட உமக்கு, ‘தமிழன்’ என்று சொல்லிக்கொள்வதற்கான தகுதி கொஞ்சமும் இல்லை.

முன்னாள் முதல்வரான ஒரு பெண்மணிக்குப் பணிப்பெண்ணாக இருந்த ஒருவரின் காலை, தரையில் தவழ்ந்துபோய்த் தொட்டுக் கும்பிட்டீரே, அப்போதே தமிழன் என்று பெருமிதப்படுவதற்கான அருகதையை முற்றிலுமாய் இழந்துவிட்டீர்.

இது பலரறிய நீர் செய்த இழி செயல். திரை மறைவில், ஆதிக்க வெறி பிடித்த இன்னும் எவனெவன் காலிலெல்லாமோ விழுந்திருப்பீர் என்று மக்கள் உம்மைச் சந்தேகப்படுகிறார்கள்.

எனவே.....

‘தமிழன்’ என்று சொல்லிக்கொள்வதற்கான 00001% தகுதிகூட உமக்கு இல்லை என்பதால், இனியும் உம்முடைய பெயருக்கு முன்னால் ‘புரட்சித் தமிழர்’ என்று அடைமொழி சேர்த்துத் தமிழினத்தை இழிவுபடுத்தாதீர்.

படுத்தினால்.....

அதற்கான தண்டனையை 2026 தேர்தலில் தமிழர்கள் வழங்குவார்கள்! 

திங்கள், 26 ஜனவரி, 2026

திருப்பரங்குன்றம்... பிரச்சினைக்குத் தீர்வு வழங்கிய நீதிபதி சுவாமிநாதன்!

 திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுதல் தொடர்பாக, வழக்குகள் விசாரணைகள் எல்லாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடம்பெறுவதற்கு முன்னதாகவே, இந்தத் தீபம் ஏற்றுதலைச் நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் செய்திருந்தால், பக்தர்கள், ஊர் மக்கள், தமிழ்நாடு அரசு அதிகாரிகள்[சங்கிகள் விதிவிலக்கு] என்று எவரும் வீணான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்க வாய்ப்பே இல்லை.

இருப்பினும், இப்போதைய இவரின் இந்தப் புனிதமான போற்றுதற்குரிய செயல் தமிழ் மக்களுக்குப் பேருவகை அளிப்பதாக உள்ளது.

திருப்பரங்குன்றத்திலுள்ள இஸ்லாமியரின் தர்காவுக்கு அருகிலுள்ள தூண் என்றில்லை, உச்சிப்பிள்ளயார் கோயிலுக்கு அருகிலுள்ள தூண் மட்டுமல்ல, உலகின் எந்தவொரு மூலையிலுள்ள மலையிலோ, மண் மேட்டிலோ தூண் நட்டு, தீபம் ஏற்றினாலும் முருகப்பெருமான் ஏற்றுக் கருணை புரிவார் என்பதை நீதிபதியின் இந்தச் செயல் உணர்த்துகிறது.

நீதிபதி சுவாமிநாதன் அவர்களுக்கு ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

நன்றி நீதிபதி அவர்களே.

                                          =========================

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

மோடி எங்கே? எங்கே மோடி? எங்கே... எங்கே... எங்கே?!

பெண்களின் நகை மோகம்... ‘நறுக்’ வைத்த உத்தரகாண்ட் கிராமம்!

//திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் பெண்​கள், தங்​கத்​தில் கம்​மல், மூக்​குத்​தி, தாலி[திருமணம் ஆனவர்கள்] ஆகிய​வற்றை மட்​டும் அணி​ய​லாம்; ஆரம், நெக்​லஸ் போன்ற விலை உயர்ந்த தங்க நகைகளைப் போட்​டுக்கொண்டு பெண்கள் தங்​கள் பணக்​காரத்​தனத்தை காட்​டு​வது கூடாது.

காரணம், தங்​கத்​தின் விலை நாளும் அதி​கரிப்பதோடு, ஏழைகளும் இந்த ஆடம்பரத்துக்கு அடிமைகளாகிக் கடனாளிகளாக ஆகிறார்கள்.

திரு​மணம் என்​பது புனித​மான நிகழ்ச்​சி. அதைத் தங்களின் பணக்​காரத்​தனத்தைக் காட்​டும் மேடை​யாக மாற்​றக் கூடாது. சமூகத்​தில் சமத்​து​வம் நிலவுவது அவசியம்//

உத்​த​ராகண்ட் மாநிலம், ‘ஜான்​சர் பவார்’ பகு​தி​யில் உள்​ள 'கந்​தார் 'கிராமத்துப் பெரியவர்கள் கூடி, மேற்கண்ட முடிவுகளை அறிவித்திருக்கிறார்கள்.

அவர்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுகிறவர்களுக்குரூ.50,000 அபராதம் விதிக்​கப்​படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

அவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.

இங்கெல்லாமும் இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், நம் பெண்கள் வரவேற்பார்களா, போர்க்கொடி தூக்குவார்களா?

https://www.hindutamil.in/news/india/1381083-women-banned-from-wearing-gold-jewellery-at-weddings-in-uttarakhand-village.html?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCb3pQLMJCpqgMwobnZBA&utm_content=rundown#google_vignette


சனி, 24 ஜனவரி, 2026

“நானும் தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள்”... எடப்பாடி! எப்படி வளர்த்தார்? இப்படி...

நாங்கள்[எடப்பாடி&தினகரன்] ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள். எனக்கும் தினகரனுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. எப்போது இணைந்தோமோ அப்போதே அது போய்விட்டது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெவித்துள்ளார்[ஊடகச் செய்தி***]

இன்னும் கொஞ்சம் சொல்ல நினைத்ததையும்[கீழ்க்காண்பது] அவர் சொல்லியிருக்கலாம்.

ஜெயலலிதா வளர்த்ததால்தான், அண்ணன் தம்பிகளாக நாங்கள் காலமெல்லாம் ஒருவர் மீது ஒருவர் பாச மழை பொழிந்து வளர்ந்தோம்.

ஒன்றாகத்தான் ஊர் சுற்றுவோம்; ஒன்றாக ஒரே தட்டில்தான் சாப்பிடுவோம்; ஒரே கட்டிலில்தான் இறுகக் கட்டிப்பிடித்துப் படுத்துத் தூங்குவோம்; ஒன்றாகத்தான் கழிப்பறை(கக்கூஸ்)யில் ‘ஆயி’ போவோம்.

தெய்வத் தாயை[ஜெயலிலிதா]ப் பார்க்கும்போதெல்லாம், ஒன்றாகவே குப்புறக் கவிழ்ந்து விழுந்து, அன்னையின் பாதக் கமலம் தொழுது ஆசீர்வாதம் பெறுவோம்.

பதவி ஆசையும் பண ஆசையும் எடப்பாடியை எப்படியெல்லாமோ பேசத்தூண்டுது! ஹி... ஹி... ஹி!!!

======================

***https://www.toptamilnews.com/thamizhagam/admk-edappadi-palanisamy-press-meet/cid18153682.htm


மோடி பிரதமரா ‘நாலாந்தர’ அரசியல்வாதியா?!?!?

//தொடர்ந்து பேசிய மோடி, “தமிழ்நாட்டில் எங்கெங்கும் ஊழல் என்பது குழந்தைக்கும்[!?!?!]கூடத் தெரியும்[தெருவில் திரியும் சொறி நாய்கள், பன்றிகள், எருமைகள் போன்றவற்றிற்கும் தெரியும் என்று பேசியிருக்கலாம்> ஆறறிவுள்ள ஒரு மனிதனின் பேச்சா இது?]. திமுக ஒரு CMC கவர்ன்மென்ட். திமுக அரசை மக்கள் குற்றம், மாபியா, ஊழல் அரசு என்று கூறுகின்றனர்” என்றார்//***

[படம்> உதவி: இணையம்]
மோடி ஏதோ ஒரு மலைக் கிராமத்தில் வசிக்கும் படிப்பறிவில்லாத ஆதிவாசியல்ல; ஏக இந்தியாவை ஆளும் ஏகப்பட்ட அதிகாரம் படைத்த பிரதமர்.

தமிழ் நாடெங்கும் ஊழல் பரவிக்கிடப்பதும், குற்றங்கள் பெருகியிருப்பதும், போதை மாத்திரை விற்பனைத் தொழில் அதிகரித்திருப்பதும்[CMC] உண்மை என்றால், தமிழ்நாட்டை ஆளும் ‘தி.மு.க.’ அரசை இவர் கலைத்திருக்கலாமே?

அதைச் செய்யவிடாமல் இந்த அவதாரியை[“நான் கடவுளின் அவதாரம்” என்று புளுகிய குற்றத்தை நாட்டு மக்கள் கண்டுகொள்ளாதது உலக அதிசயங்களில் ஒன்று]த் தடுத்தது யார்? யாரெல்லாம்? எது? எதுவெல்லாம்?

கலைத்த பிறகு நடைபெறும் தேர்தலில் 0005% ஓட்டுகூடப் பெற இயலாது[தனித்து நின்றால்] என்பதை இவர் சந்தேகமறப் புரிந்துகொண்டிருப்பதுதான் காரணம்.

மனம்போனபடியேல்லாம் தி.மு.க. அரசு[ஆட்சியில் நிறைகளுடன் குறைகளும் உள்ளன> இவர் குறைகளை மட்டும் பெரிதுபடுத்தியிருக்கிறார்] மீது குற்றங்கள் சுமத்தி[இதற்கென்றே ஆளுநன் என்னும் பெயரில் அனுப்பப்பட்டிருக்கிறார் ஓர் அடாவடிப் பேர்வழி] அதற்கு மக்களிடமுள்ள கணிசமான செல்வாக்கைக் குறைத்த பிறகு தேர்தலைச் சந்திப்பது இவரின் திட்டம்.

மேலும், போதைப் பொருள் வணிகம் தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறுவதல்ல; நாடெங்கும் அங்கிங்கெனாதபடி பரவிக்கிடப்பது. அதைத் தடுப்பதில் மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல மத்திய அரசுக்கும் பங்குண்டு.

மத்திய அரசு எனப்படும் ஒன்றிய அரசின் முதலாளி மோடிதான். தன் கடமையைச் செய்யத் தவறும் இவரும் தண்டனைக்குரியவர்தான். இவர் தண்டிக்கப்படுவது எப்போது?

அது எப்போதேனும் நடக்கலாம்; நடக்காமலும் தடுக்கப்படலாம்.

ஆனாலும், பிரதமர் பதவி என்பது பெரிதும் மதிக்கப்படுதற்குரியது.

அந்த மதிப்புக்குப் பங்கம் நேராமல் காப்பது இவருக்குரிய கடமைகளில் ஒன்று.

இதை மறவாமலிருப்பது இந்த நாட்டுக்கு மட்டுமல்ல மோடிக்கும் நல்லது.

* * * * *

***https://www.puthiyathalaimurai.com/tamilnadu/pm-modi-criticizes-dmk-as-a-cmc-government

வெள்ளி, 23 ஜனவரி, 2026

தமிழா தூங்காதே! கோடிகளுக்கு விலைபோகும் கெடுமதியாளர்கள் ஜாக்கிரதை!!

தமிழ்நாட்டின் மிகப் பல கட்சிக்காரர்களுக்குக் கொள்கை, லட்சியம் எல்லாம் இல்லை; கோடிகளுக்கு[நன்கொடையாகப் பெற்ற கறுப்புப் பணம்***] அதிபதிகளான ஆட்சியாளர்களிடம் ‘பேரம்’[கூட்டணியில் இணைய] பேசிக் கோடிகளை அள்ளுவதுதான் இவர்களின் நோக்கம்.

இந்த நோக்கத்துடன் இயங்கும் கட்சித் தலைவர்களில் முதலிடம் வகிப்பவர், எடப்பாடியார் எனப்படும் பழனிசாமியார். இவர் ‘பாஜக’வின் பழைய நிரந்தரக் கூட்டாளி. முன்பே பேசிமுடித்த பேரத்தின்படி, சுணக்கமில்லாமல் கோடிகளைப் பெற்றுக்கொள்ளும் கில்லாடி இவர்.

தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப, இணைவதும் பிரிவதும் மீண்டும் இணைவதுமாக உள்ள கூட்டாளிகளில் ‘அமமுக’ தினகரன் ஒருவர். ஏதேதோ காரணங்களால் ‘பிகு பண்ணிக்கொண்டிருந்தவர், அண்மையில் ‘பேரம்[கோடிகளில்]’ படிந்ததால் அவர்களிடம் சரணடைந்துவிட்டார்.

ஓபிஎஸ், பிரேமலதா[காசு கொடுத்துக் கூட்டம் சேர்ப்பதில் வல்லவர்], சசிகலா, ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் என்று தொண்டர்கள் இல்லாமல் தண்டத்துக்குக் கட்சி நடத்துபவர்களும் விரைவில் பேரம் முடிந்து அவர்களுடன் இணைய இருக்கிறார்கள்(அன்பு மணி ஏற்கனவே அடிமை மணி ஆகிவிட்டவர்). 

விசில் சின்னம் வழங்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், கோடி கோடிக்கு அதிபதியான கூத்தாடியும், ஆதிக்கச் சக்திகளுடன் மறைமுக ஒப்பந்தம் மூலம் தேர்தலில் போட்டியிட[‘திமுக’ கூட்டணியைத் தோற்கடிப்பதே இவர்கள் அனைவரின் லட்சியம்] வாய்ப்புள்ளது.

ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால், தமிழர்களின் தன்மான உணர்வை வேரறுக்க ‘அவர்கள்’ வகுத்துள்ள வியூகம் மிக வலிமையானது என்றே சொல்லலாம்.

தமிழர்கள் தீவிரமாகச் சிந்தித்துச் செயல்பட மறந்து தூங்கிக்கொண்டிருந்தால், தங்களின் சுயமரியாதையையும் தன்மானத்தையும் இழந்து, ஆதிக்க வெறியர்களுக்கு அடிமையாவது தவிர்க்கவே இயலாதது.

அதனால்தான் எச்சரிக்கிறோம்.....

தமிழா தூங்காதே! தேர்தல் நேரத்தில் குறட்டைவிட்டுத் தூங்கிவிடாதே!!

                                     ========================

***பா.ஜ.க விற்கு ஒரே ஆண்டில் 4340 கோடி அளவுக்கு நன்கொடை கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு முந்தைய ஆண்டையவிட 171 சதவீதம் நன்கொடை கிடைத்திருக்கிறது> https://www.vikatan.com/government-and-politics/bjp-received-rs-4340-crore-as-donations-in-a-single-year-congress-donation-increased-by-171.

வியாழன், 22 ஜனவரி, 2026

ஸ்ரீமதி நீதிபதியா, பகுத்தறிவாளர்களின் பரம எதிரியா?!

 

மைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை[அதர்மம்] விமர்சித்தது தொடர்பான ஒரு வழக்கில்[அதை விவரிப்பது இங்குத் தேவையற்றது], சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி*** வழங்கியுள்ள தீர்ப்பின் சில அம்சங்கள் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

+++//அமைச்சரின்[உதயநிதி] பேச்சு 80 சதவீத இந்துக்களுக்கு எதிரானது> நீதி[துறை] அதிகாரி[நீதிபதி]//

எந்தவொரு புள்ளிவிவரத்தையும் ஆதாரமாகக்கொண்டு இந்தச் சதவீதக் கணக்கை நீதி(துறை) அதிகாரி[நீதி‘பதி’ அல்ல]முன்வைக்கவில்லை. இது அவரின் விருப்பம் சார்ந்தது.

நடுநிலையாளர் குழு அமைத்துக் கணக்கெடுத்தால், இந்துக்கள் பலரும் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டிருப்பது அறியப்படக்கூடும். அவர்கள் பெரும்பாலும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற மட்டுமே கடவுளை வழிபடுபவர்கள்.  இதை நீதி(துறை) அதிகாரி அறிந்திருக்கவில்லை.

அவர் தன் தீர்ப்பில், “சனாதனியான மனுதாரர்..... சனாதன தர்மத்தைப் பாதுகாத்துள்ளார்” என்று குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

நம் கேள்வி: சாதி மதம் போன்ற தற்சார்பு நிலைகளிலிருந்து விடுபட்டுத் தீர்ப்பு வழங்குவதைக் கடமையாகக் கொள்ள வேண்டிய இந்த நீதி(துறை)  அதிகாரி, சனாதனப் பாதுகாப்பில் இத்தனை அக்கறை காட்டியிருப்பது ஏன்?

காரணத்தை அவர் மட்டுமே அறிவார்.

உதயநிதி கருத்துச் சொன்னது, சனாதனம் என்னும் பெயரில் அளவு கடந்த மூடநம்பிக்கைகளை மக்கள் மீது[இந்து மதத்தின் பெயரால்] திணிக்கும் கூட்டத்தாரைத்தானே[சனாதனவாதிகள்] தவிர, அனைத்து இந்து மதம் சார்ந்தவர்களையும் அல்ல என்பதையும் அறிந்துணரத் தவறிவிட்டார் அவர்.

எனவே,

நீதி வழங்கும் நீதிமன்ற அதிகாரிகளிடம் நாம் வேண்டிக்கொள்வது, சட்டப் புத்தகங்களை நீங்கள் ஆழ்ந்து படிப்பது போலவே, சிந்திக்கத் தூண்டுகிற அறிஞர்களின் நூல்களையும் படித்துத் தெளிதல் வேண்டும் என்பதுதான்.

தொடர்புடையதொரு செய்தி:

'Judge' என்னும் சொல்லை, ‘நீதிபதி’ என்று மொழியாக்கம் செய்வது தவறு, அவர்கள் நீதியின் தலைவர்[பதி]கள் அல்ல என்பதால். அவர்களை நீதி அதிகாரி என்று அழைக்கலாம், அமலாக்கத்துறை அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரி என்பன போல.

                                  *   *   *   *   *
***நீதி அதிகாரி[நீதிபதி> Judge) என்பவர் சட்டப்படி நீதியை வழங்கும் அதிகாரம் பெற்ற, நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து, சான்றுகளை ஆராய்ந்து தீர்ப்புகளை வழங்கும் ஒரு பொது அதிகாரி[The word "judge" has multiple meanings, referring to a legal official in a court] ஆவார்.

                                          ===========================

புதன், 21 ஜனவரி, 2026

பக்திமான்களுக்கான ஒரு ‘பத்தரைமாற்று’க் குட்டிக் கதை!

சாலையைக் கடந்துகொண்டிருந்த ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது அந்த வாகனம்.

ரத்தக் காயங்களுடன் கிடந்த அவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அவனுடைய அடையாள அட்டையிலிருந்த தொ.பே. எண்ணுக்குத் தகவல் தந்தான் கூலித் தொழிலாளி தங்கராசு.

விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர், மருத்துவரைப் பார்த்துவிட்டு, தங்கராசுவை அணுகினார்கள்.

“பத்து நிமிசம் தாமதம் ஆகியிருந்தா உங்க பிள்ளையைக் காப்பாத்தியிருக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னார். ஆண்டவனாப் பார்த்து உங்களை அனுப்பியிருக்கார்.  ரொம்ப நன்றிங்க” என்று சொல்லித் தங்கராசுவின் இரு கைகளையும் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார் சிறுவனின் தந்தை.

நீங்க வேண்டிக்காமலே அவராகப் பார்த்து உங்களுக்கு உதவி செய்ய என்னை அனுப்பியிருக்கார். ஆனா, என் ஏழு வயசுக் குழந்தை காணாம போயி ரெண்டு வருசம் ஆச்சு. நான் தப்புச் செஞ்சிருந்தா அதுக்கான தண்டனையை எனக்குக் கொடுத்துட்டு, என் ஏதுமறியாப் புள்ளையை மீட்டுத் தந்துடுன்னு அவரை வேண்டிக்காத நாளே இல்ல. இன்னிக்கிவரை அவர் கருணை காட்டல.” -தங்கராசுவின் கண்களில் மடை திறந்தாற்போல் கண்ணீர்.

ஆறுதல் சொல்லும் வகையறியாமல் மனம் கலங்கினார் சிறுவனின் தந்தை.

செவ்வாய், 20 ஜனவரி, 2026

“இது கட்டங்கடைசி வாய்ப்பு! ‘தி.மு.க.’ காலிகள் ஆட்சியைக் கலைச்சிடுங்க பிரதமரே!”

நவீன அரசியல் சாணக்கியர் அமித்ஷுவைத் தளபதியாகக்கொண்ட பிரதமர் மோடி அவர்களே,

ஆளுநராம் ஆர்.என்.ரவி[ஆட்சியாளர்களுக்குத் தொடர்ந்து குடைச்சல் கொடுப்பதற்கென்றே உம்மால் அனுப்பப்பட்டவர்] தி.மு.க. அரசால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டால், அதைக் கலைத்துவிடுவது முன்கூட்டியே நீர் தீட்டியுள்ள திட்டம்.

கடந்த ஆண்டுகளில், சட்டமன்றம் தொடங்கும்போதெல்லாம் உம்முடைய அறிவுறுத்தலின்படி, ஏடாகூடமாக எதையேனும் உளறிக்கொட்டிவிட்டு மன்றத்திலிருந்து ரவியார் வெளியேறுவார். தி.மு.க.வினர் அவரைச் சற்றேனும் அவமதிக்கும் வகையில் விமர்சனம் செய்வார்கள். 

அந்த அவமதிப்பு அத்தனைக் கனமானதாக இருந்ததில்லை என்பதாலோ என்னவோ, தி.மு.க. ஆட்சியைக் கலைப்பதை நீர் தவிர்த்துவந்தீர்.

இன்று[20.01.2026] நடந்த சட்டமன்றக் கூட்டத்திலும், ரவியானவர் அவமதிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன[குறிப்பாக, 'பாஜக’ ஆதரவு ஊடகங்கள்> வரிவிடாமல் படித்திருப்பீர் என்பது எம் நம்பிக்கை].

ரவி அவமானப்படுத்தப்பட்டதைக்[கனமானதாக இல்லாமல் லேசானதாக இருப்பினும்] காரணம் காட்டி, உடனடியாகக் கலைப்பு[தி.மு.க. ஆட்சி] வேலையைச் செய்துமுடிப்பீர் என்று நம்புகிறோம்.

2026 தேர்தல்வரை தி.மு.க. ஆட்சி நீடித்தால், தில்லுமுல்லுகள் பல செய்து, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அவர்கள் கைப்பற்றுவார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம்.

கில்லாடி ரவியின் முழுமையான ஆளுகையின் கீழ் தமிழ்நாடு இருந்தால்தான், கூட்டணிக் கட்சிகளின்[கொத்தடிமைகள்] துணையுடன் அதிதீவிரப் பிரச்சாரம் செய்து, தேர்தலில் வெற்றிக் கனியைப் பறிப்பது சாத்தியமாகும் என்றும் உம்மை எச்சரிக்கிறோம்.

வெல்க நீவிர்! தமிழ்நாட்டில் மலர்க ‘பாஜக’ ஆட்சி!!

திங்கள், 19 ஜனவரி, 2026

ஆன்மா இல்லை என்றால் கடவுளின் கதி?!

செத்தொழிந்த பிறகு, ஆன்மா என்றோ ஆவி, பூதம், பேய், பிசாசு என்றோ ஏதோ ஒரு வடிவில் மரணம் இல்லாப் பெரு வாழ்வு வாழ்வதுதான் மனிதராய்ப் பிறந்தவர்களின் ஆசை.

மேற்கண்டவற்றில், ‘ஆன்மா’ மீதான நம்பிக்கை மனித மனங்களில் அழுத்தமாகப் பதிந்ததுவிட்டது.

மரணித்த பிறகு, அந்த ஆன்மா வெறுமனே அண்டவெளியில் திரிந்துகொண்டிருப்பதை அவர்கள் விரும்பாததால், பரலோகம்[ஏதோ ஓர் உலகம்], தேவலோகம், சொர்க்கம் எல்லாம் இருப்பதாகவும், புண்ணியம் செய்தால் அங்கெல்லாம் சென்று[ஆன்மாவாக] காலவரையறை இல்லாமல் களித்திருக்கலாம் என்றும் ஆசைப்பட்டார்கள்.

புண்ணியத்திற்கு எதிரான பாவமும் நினைவுக்கு வரவே, பாவம் செய்தவர்கள் நரகம் சேர்ந்து பெரும் துயரத்தில் மூழ்கிக் கிடப்பார்கள் என்று முடிவு செய்தார்கள்.

பாவமோ புண்ணியமோ, நரகமோ சொர்க்கமோ, ஆன்மா இடம் மாறி மாறித் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தாலும், தங்களுக்கெறு ஓர் ஆன்மா தேவை என்பது மனிதர்களின் விருப்பம். அதன் மூலம் இறந்த பிறகும் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது அவர்களின் அழிவில்லாத ஆசையாக உள்ளது.

என்றேனும் ஒரு நாள்.....

ஆன்மாவோ, சாகும்போது உடம்புக்குள்ளிருந்து வெளியேறுகிற எதுவுமோ இல்லை என்று அறிவியல் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டால்....

கடவுள் என்றொருவர்[ஆன்மாவைச் சொர்க்கத்திற்கு நரகத்திற்கும் அனுப்புபவர்] இருந்தாலும்[அவர் மீதான நம்பிக்கை சிதையவும் வாய்ப்புள்ளது], மற்ற உயிரினங்களுக்கு உள்ளது போல், இன்பத் துன்பங்களுடனான அற்ப ஆயுளை மட்டும் தந்ததற்காக[ஆன்மா, பாவம், புண்ணியம் என்று கதையளந்து பிழைப்பு நடத்தும் ‘சத்துக்குரு’ ஜக்கி போன்றோர் பாடு திண்டாட்டம்] மனிதர்கள் அவரை நிந்திப்பார்கள்.

கோயில் கட்டுதல், விழா எடுத்தல், கொண்டாடுதல் என்று கோடிக்கணக்கில் மனித மண்டூகங்கள் செய்யும் செலவு மிச்சமாகும்! 

ஹி... ஹி... ஹி!!!

ஞாயிறு, 18 ஜனவரி, 2026

வைகுண்டத்திலா, கைலாயத்திலா எங்கே தேடலாம் அவதாரம் மோடியை?

//Dhaka: In Bangladesh’s Gazipur district, a Hindu man was beaten to death after he tried to protect a teenage worker from an attack, police told local media//

Bangladesh: Hindu Shop Owner Beaten To Death While Protecting Teen Worker-இது அண்மை நிகழ்வு.

இதற்கு முன்பான இஸ்லாமியரின் தாக்குதல்களில், 116 இந்துக்கள்[+பிற சிறுபான்மையினர்> குறைந்த எண்ணிக்கையில்] கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அவதாரம் மோடி எங்கே போனார்? ராமச்சந்திர மூர்த்தியைத் தேடி வைகுண்டத்திற்கா, சிவபெருமானைச் சந்திக்கக் கைலாயத்திற்கா?

அவரைக் கண்டுபிடித்துத் தகவல் சொல்வாரா ‘சத்துக்குரு’ ஜக்கிப் பகவான்?

https://www.msn.com/en-in/money/news/hindu-man-killed-with-shovel-while-trying-to-save-employee-in-bangladesh/ar-AA1UpAzm?ocid=BingHp01&pc=BG00&cvid=c6a2d9fcb9684a309e39d3bba853b49a&ei=

சனி, 17 ஜனவரி, 2026

பக்தர்களே, ஆஞ்சநேயரை[நாமக்கல்] அடிமுட்டாள் ஆக்காதீர்கள்!!!

ஆஞ்சநேயரின் ஆயுட்காலப் பரிசுத்தப் பக்தர்களே,
ஆண்டாண்டுதோறும் விசேட நாட்களில், பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயச் சாமி[நாமக்கல்]க்கு, வெண்ணெய்க் காப்பு, திருமஞ்சனக் காப்பு(மஞ்சள், பால், தயிர், சந்தனம்) என்றிவற்றால் குளிப்பாட்டி, விதம் விதமாய் அலங்கரித்து, அபிஷேக ஆரதனைகள் நிகழ்த்தி வழிபடுகிறீர்கள். மகிழ்ச்சி.

வெறும் தகரக் கவசம், பித்தளைக் கவசம், செம்புக் கவசம் எல்லாம் அணிவிக்காமல், முலாம் பூசிய தங்கக் கவசத்தை அவருக்கு அணிவித்து, தீபாராதனை காட்டி[அர்ச்சகர்கள் மூலம்]ஆனந்தப் பரவசத்துடன் நீங்கள் பிரார்த்திப்பது கண்கொள்ளாக் காட்சி; காண்போரின் இரு கண்களிலும் மாலை மாலையாய் ஆனந்தக் கண்ணீர் வழிய வைப்பதும்கூட.

ஆனால், நீங்கள் மாமூலாகச் செய்கிற ஒரு பெரிய தவற்றை உணரத் தவறிவிட்டீர்கள். அத்தவறு உங்கள் மீது ஆஞ்சநேயக் கடவுள் கடும் சினம்கொள்ளத் தூண்டும் என்பதை அடியோடு மறந்துவிட்டீர்கள்.

தங்க முலாம் பூசிய கவசத்தை அவருக்கு அணிவித்துவிட்டு, தங்கக் கவசம் அணிவித்து வழிபட்டதாக ஊடகங்களுக்குச் செய்தி அளிப்பதுதான் அந்தத் தவறு.

இனியேனும் அந்தத் தவற்றைச் செய்யாதீர்கள். 

‘தங்க முலாம் பூசிய கவசம் அணிவிக்கப்பட்டது’ என்றே செய்தி வெளியிடுங்கள். அதைச் செய்தால், உங்களின் நேர்மையையும் அளப்பரிய பக்தியையும் மெச்சி,  உங்களுக்கு[எங்களைப் போன்ற தெய்வ நிந்தனை செய்யும் பாவிகளுக்கும்தான்] அனுமார் சாமி அருள்மழை பொழிவார் என்பது உறுதி.

நலம் தரும் நாமக்கல் ஆஞ்சநேயரின் திருவடி போற்றி!

வெள்ளி, 16 ஜனவரி, 2026

ஆட்டு மூளை மனிதர்களுக்கும் தேவை ‘காப்புக்கட்டு’!!!

தை மாத அறுவடை முடிந்து விளைபொருள்கள் வீட்டுக்கு வந்துசேர்ந்த பிறகு கொண்டாடப்படுகிறது பொங்கல் பண்டிகை. அந்த விளைபொருட்கள்தான் ஓர் ஆண்டுக்கான உணவாகவும், அடுத்த விளைச்சலுக்கான விதையாகவும் இருக்கின்றன. அவை கெட்டுப்போகாமல் இருப்பதற்குத்தான் வீடுகளுக்குக் காப்புக் கட்டுவதாகச் சொல்கிறார்கள்.

இதற்கு வேப்பிலை, சங்கராந்திப் பூடு, ஆவாரம் பூக்கொத்து ஆகியவற்றின் தொகுப்பு வீடுகளின் முகப்பில் காட்சிக்கு[காவலுக்கு?] வைக்கப்படுகின்றன.

”நம்மவர்களால்[தமிழர்கள்] பாரம்பரியமாக இது செய்யப்படுவதால் இதைப் புத்திசாலித்தனமான செயல் என்று ஏற்க இயலாது. மேற்கண்ட மூன்று பொருட்களுக்கும் பண்டம் கெட்டுப்போகாமலிருப்பதற்கும் தொடர்பு ஏதுமில்லை. தமிழர்கள் தூக்கிச் சுமக்கும் மூடநம்பிக்கை[திணிக்கப்பட்டது> மகர சங்கராந்தி என்னும் பெயரில் கொண்டாடப்படும் போகிப் பண்டிகை]களில் இதுவும் ஒன்று” என்கிறார் என் நெருங்கிய நண்பர் ஒருவர்.

மேலும், காப்புக்கட்டு அன்று[14.01.2026], மேற்கண்ட முப்பொருள்களின் தொகுப்பைத் தன் கழுத்தில் தொங்கவிட்டுத் தெருத்தெருவாகச் சுற்றிவந்தார்.

இதை வேடிக்கை பார்த்து, கமுக்கமாகப் பலர் சிரிக்க, நெருங்கிவந்து விசாரித்தவர்களிடம், “வீட்டிலுள்ள அறுவடை செய்யப்பட்ட உணவுப் பொருள் கெட்டுப்போகாமலிருக்க வீடுகளில் கட்டுற மாதிரி, சில நாட்களேனும் என் மனசு கெடாமலிருக்கக் ‘காப்புக்கட்டு’ கட்டியிருக்கேன். இது முட்டாள்தனம்னா, வீடு, மிதிவண்டி, பைக், கார் போன்ற வாகனங்களுக்கும் கட்டுவது இதைவிடவும் பல மடங்கு முட்டாள்தனமானது. தைப் பொங்கல் கொண்டாடுவதில் புத்திசாலித்தனம் இருக்கிறது. தமிழனை முட்டாள் ஆக்குவதற்காகவே நம் இனத் துரோகிகள் வலிந்து திணித்தது இந்த வழக்கம்” என்று ஒரு குட்டிச் சொற்பொழிவு நிகழ்த்தி அவர்களைத் திகைக்க வைத்தார்.

இன்றுதான் அவரின் கழுத்தில் ‘காப்புக்கட்டு’ தொங்கிக்கொண்டிருப்பதைக் கவனிக்க நேர்ந்தது. படம் எடுத்து[படத்தில் முகம் தெரியக்கூடாது என்பது அவர் விதித்த கட்டுப்பாடு] வெளியிட்டிருக்கிறேன்.

                                                ====================

கடைந்தெடுத்த கயவர்கள் பரப்பிய கட்டுக்கதை:

//போகிப் பண்டிகை, மார்கழி மாதத்தின் கடைசித் தினத்தில் [பழையன கழிந்து புதியன புகும் நாளான அன்று] நமது முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவதாகச் சாஸ்திரம்[எந்தச் சாஸ்திரம் சொல்லுதுன்னு எவனாவது கேட்டிருக்கிறானா?] சொல்கிறது. 

அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து, தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும்.

பொங்கலிடுவதற்கு முன்னர் "காப்புக்கட்டுதல்" என்ற பெயரில் வீட்டின் வாசலில்  வேப்பிலை, பீளைப்பூ, ஆவாரம்பூ கொத்துகளைச் சொருகி, சுற்றியுள்ள ஆன்மாக்களை வீட்டருகே வரச் செய்வார்கள்//

                                          =================

இதற்கு எதற்கு ஒரு பண்டிகை?!

//போகி என்ற சொல் சமஸ்கிருதத்தின் போக அல்லது போக்ய என்ற சொல்லிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் பொருள் – அனுபவம், செல்வம், வளம் என்பதாகும். மேலும், பழைய துன்பங்கள், சோம்பல், துக்கங்கள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்து> பழைய பொருட்களை எரிப்பதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?], புதிய நம்பிக்கைகளுடன் வாழ்க்கையைத் தொடங்கும் நாளாகவும்[மற்ற நாட்களில் இந்த நம்பிக்கைகள் தேவையில்லையா?] போகி கருதப்படுகிறது//

வியாழன், 15 ஜனவரி, 2026

தாங்காது மோடி மகானே, இந்தப் பூமி தாங்கவே தாங்காது!!!

“பொய் பேசினாலும் பொருந்தப் பேசு” எனபது வழக்கு மொழி. 

“மனம்போனபடியெல்லாம் புளுகிப் பிறரை மனம் நோகச் செய்யாதே” என்பது இதன் மூலம் நாம் பெறும் அறிவுரை; வாழ்க்கைக்கான நெறிமுறையும்கூட.

இது சாமானிய மக்களுக்கு மட்டுமே ஆனது; நாட்டை ஆளும் பெரிய தலைவர்களுக்குப் பொருந்தாது என்று சொல்லத் தோன்றுகிறது.

சொல்ல வைப்பது.....

கீழ்க்காணும் நாளிதழ்ச் செய்திகள்[நகல் பதிவு].

மேற்கண்டவாறு, எக்காலத்தும் நிலைகொண்டிருப்பதான[கீதையில் சொல்லப்பட்டது போல்] சோம்நாத் கோயில்[சூரியனையும் சந்திரனையும் போல் அழியாதிருப்பது] முழுமுதல் கடவுளான சிவபெருமானால் கட்டப்பட்டது என்பதால்[புராணங்கள் சொல்லியிருக்கின்றன] எக்காலத்தும் அழியாது என்று அருளுரை வழங்கியிருக்கிறார் ‘அவதாரம்’ மோடி.

சாமானிய அறிவிலி மாந்தர்களில் அடியேனும் ஒருவன் என்ற வகையில், மோடிப் பெருமகனாரிடம், அவரின் திருத்தாள் பணிந்து முன்வைக்கும் வேண்டுகோள்.....

“அருட்பெருந்திரு பிரதமர் அவர்களே, ஒட்டுமொத்தப் பிரபஞ்சம் எப்படியோ,  நீங்கள் சொல்லும் பொய்களைப் பல்லுயிர் வாழும் இந்தப் பூமி தாங்காது; இது துகள் துகளாய் வெடித்துச் சிதறுவது 100% உறுதி என்பதால் இனியும் இம்மாதிரியான பொய்மொழிகளை மக்களிடையே பரப்பாதிருப்பீர் ஐயனே!”

புதன், 14 ஜனவரி, 2026

உடலுறுப்பை முடமாக்குவது தண்டனைக்குரிய குற்றம். ஆறறிவை முடமாக்குவது?

ஒருவன் மீது மற்றொருவன் தாக்குதல் நடத்தி, அவனின் உடலுறுப்பை முடமாக்குவது குற்றம். குற்றத்திற்கு அரசியல் சட்டப்படி தண்டனை வழங்குவது நடைமுறையில் உள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டு எதுவும் தேவையில்லை.

உடலுறுப்பைச் சிதைப்பது போலவே, மூடநம்பிக்கைகளைத் திணித்துச் சிந்திக்கப் பயன்படும் அறிவைச்  செயலற்றதாக்கும் அட்டூழியமும் இவ்வுலகில்  காலங்காலமாக நடைபெறுகிறது.

இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் தரலாம்.

இப்போதைக்கு ஓர் அண்மை நிகழ்வு மட்டும்[காணொலி காண்க].


உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் மார்ச் 3, 2026 தேதியன்று மூடப்படுகிறது.

இது எத்தனைப் பெரிய அயோக்கியத்தனம் என்பது கொஞ்சம் சிந்தித்தாலே புரியும்.

ஏழுமலையான் என்னும் கடவுளைக் கற்பித்து, வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறும் என்று பொய்யான பரப்புரைகள் செய்து, அவரைக் கோடீஸ்வரக் கடவுள் ஆக்கிய சூழ்ச்சிக்காரர்களிடம் நாம் கேட்பது.....

அண்டசராசரத்தையும் அதிலுள்ள அத்தனைக் கோள்களையும் நட்சத்திரங்களையும் படைத்து இயக்குபவர் கடவுள்[இப்போதைக்கு ஏழுமலையானாகவே இருக்கட்டும்].

அவற்றுள் சந்திரனும் ஒன்று[சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி சந்திரனை அடையாமல் பூமி தடுப்பதால், பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுந்து, சந்திரனை இருட்டடிப்பு செய்யும் ஒரு வானியல் நிகழ்வாகும்.மேலும், பூமியின் வளிமண்டலத்தால் சிவப்பு நிற ஒளிக்கதிர்கள் சந்திரனை அடைவதால் சந்திரன் சிவப்பாகத் தோன்றும்].

இது நிகழ்வதும்[சந்திர கிரகணம்] ஏழுமலையானின் ஆணைப்படிதான்.

சந்திரனைப் படைத்தவனும் அவனே. சந்திர கிரகணம் நிகழக் காரணமானவனும் அவனே.

அந்த அவனை, கிரகணம் நிகழும் பௌர்ணமி நாளில் பக்தர்கள் தரிசிக்கக் கூடாது என்று கோயிலை[திருப்பதி] இழுத்து மூடுவது முட்டாள்தனத்தின் உச்சம் அல்லவா? பக்தன் பாதிக்கப்படுவதை அல்லது, தண்டிக்கப்படுவதை ஏழுமலையான் வேடிக்கை பார்ப்பாரா?

இம்மாதிரியான நடைமுறைகளை உருவாக்கி, அவற்றை மக்கள் மீது திணித்தவர்கள்/திணிப்பவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்கள்.

திணிப்பவர்கள் மட்டுமல்ல, திணிப்புக்குப் பக்கப் பலமாக இருப்பவர்களும் தண்டனைக்குரியவர்கள்தான்.

தண்டனை வழங்கும் அதிகாரம் படைத்தவர்கள் மக்கள். அவர்களில் மிகப் பெரும்பாலோர் மூடர்களாக இருப்பதையே விரும்புபவர்கள். எனவே, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது இப்போதைக்கு இல்லை.

போதிய ஆதரவாளர்களுடன், ஒரு பகுத்தறிவாளன் சர்வாதிகாரி ஆகி இந்த நாட்டை ஆண்டால் மட்டுமே அது சாத்தியம் ஆகும்.