கள்ளக் காதலனுடனான ‘கலக்கல்’ அந்தரங்க உறவுக்குக் கணவன் இடையூறாக இருந்தால், மனைவியும் க.காமுகனும் இணைந்து அவனைத் தீர்த்துக்கட்டிவிட்டு[உதவி> தூக்க மாத்திரை, விஷம், தலையணை இத்தியாதி] அவர்கள் சரச சல்லாபத்தைத் தொடர்வது[காவல்துறையிடம் சிக்கிக்கொள்ளாதவரை] வழக்கமாகிப்போன நிகழ்வு.
கீழ்வருவதும் அவற்றில் ஒன்று.
//20 தூக்க மாத்திரைகளைப் பொடியாக்கி, பிரியாணியில் கலந்து கணவனுக்கு[பெயர் நீக்கப்பட்டது]க் கொடுத்தாள் மனைவி. இதனைச் சாப்பிட்ட அவன் ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்ததும், இரவு 11.30 மணிக்குக் காதலனை வீட்டுக்கு வரவழைத்தாள் அவள். கணவன் மார்பில் ‘க.கா’ அமர்ந்துகொள்ள, அவள் தலையணை எடுத்துக் கணவனின் முகத்தில் அழுத்திப் பிடித்து மூச்சு விடமுடியாமல் செய்தாள்.....
அவன் இறந்துவிட்டான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ‘க.கா’ அங்கிருந்து சென்றுவிட்டார்[சடலத்தை அப்புறப்படுத்தவோ இடம் தேடிப் புதைக்கவோ இல்லை; விடிந்த பிறகு மாரடைப்பால் இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தாரிடம் சொல்வது அவளின் திட்டம்].....
//நேரத்தைப் போக்குவதற்காக விடிய விடிய அவள் செல்போனில் படம் பார்த்தாள்.....// -என்றிப்படி நிகழ்ச்சி முற்றுப்பெற்றிருந்தால்கூட, அது இயல்பான ஒன்றாக இருந்திருக்கும். இதற்கு மாறாக, ‘செல்போனில் ஆபாசப் படம் பார்த்தாள்’ என்று முடிகிறது அந்நிகழ்ச்சி.
கணவனைக் குரூரமாகக் கொலை செய்து, அவனின் பிணம் அருகிலிருக்க, செல்பேசியில் படம் பார்ப்பதற்கே அளப்பரிய மன உறுதி வேண்டும். நம் ‘அவள்’ ஆபாசப் படம் பார்த்தவாறிருந்தாள் என்பது கற்பனைக்கெட்டாத அதிசயமாகவும் குரூரச் செயலாகவும் உள்ளது. இத்தனை இழிவான காமுகியா இவர் என்று கேட்கத் தோன்றுகிறது.
கருணைக் கடவுளா இப்படியான கொடூரக் கல்நெஞ்சம் உள்ள பெண்களைப் படைக்கிறார் என்ற கேள்வி எழுகிறது என்றாலும், செல்போனில் ‘அவள்’ அசிங்கப் படம் பார்த்ததாள்’ என்பதாகச் செய்தி வெளியானது எப்படி என்னும் கேள்வியும் உடன் எழுகிறது.
விடை அறிய இயலாத கேள்விகள் ஒருபுறம் இருக்க, ஒன்றுக்கும் மேற்பட்ட ஊடகங்கள், ‘அவள் ஆபாசப் படம் பார்த்தாள்’ என்று செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
==========================
*https://www.facebook.com/photo.php?fbid=755502977607104&set=a.285998801224193&type=3
.jpg)