//தொடர்ந்து பேசிய மோடி, “தமிழ்நாட்டில் எங்கெங்கும் ஊழல் என்பது குழந்தைக்கும்[!?!?!]கூடத் தெரியும்[தெருவில் திரியும் சொறி நாய்கள், பன்றிகள், எருமைகள் போன்றவற்றிற்கும் தெரியும் என்று பேசியிருக்கலாம்> ஆறறிவுள்ள ஒரு மனிதனின் பேச்சா இது?]. திமுக ஒரு CMC கவர்ன்மென்ட். திமுக அரசை மக்கள் குற்றம், மாபியா, ஊழல் அரசு என்று கூறுகின்றனர்” என்றார்//***
தமிழ் நாடெங்கும் ஊழல் பரவிக்கிடப்பதும், குற்றங்கள் பெருகியிருப்பதும், போதை மாத்திரை விற்பனைத் தொழில் அதிகரித்திருப்பதும்[CMC] உண்மை என்றால், தமிழ்நாட்டை ஆளும் ‘தி.மு.க.’ அரசை இவர் கலைத்திருக்கலாமே?
அதைச் செய்யவிடாமல் இந்த அவதாரியை[“நான் கடவுளின் அவதாரம்” என்று புளுகிய குற்றத்தை நாட்டு மக்கள் கண்டுகொள்ளாதது உலக அதிசயங்களில் ஒன்று]த் தடுத்தது யார்? யாரெல்லாம்? எது? எதுவெல்லாம்?
கலைத்த பிறகு நடைபெறும் தேர்தலில் 0005% ஓட்டுகூடப் பெற இயலாது[தனித்து நின்றால்] என்பதை இவர் சந்தேகமறப் புரிந்துகொண்டிருப்பதுதான் காரணம்.
மனம்போனபடியேல்லாம் தி.மு.க. அரசு[ஆட்சியில் நிறைகளுடன் குறைகளும் உள்ளன> இவர் குறைகளை மட்டும் பெரிதுபடுத்தியிருக்கிறார்] மீது குற்றங்கள் சுமத்தி[இதற்கென்றே ஆளுநன் என்னும் பெயரில் அனுப்பப்பட்டிருக்கிறார் ஓர் அடாவடிப் பேர்வழி] அதற்கு மக்களிடமுள்ள கணிசமான செல்வாக்கைக் குறைத்த பிறகு தேர்தலைச் சந்திப்பது இவரின் திட்டம்.
மேலும், போதைப் பொருள் வணிகம் தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறுவதல்ல; நாடெங்கும் அங்கிங்கெனாதபடி பரவிக்கிடப்பது. அதைத் தடுப்பதில் மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல மத்திய அரசுக்கும் பங்குண்டு.
மத்திய அரசு எனப்படும் ஒன்றிய அரசின் முதலாளி மோடிதான். தன் கடமையைச் செய்யத் தவறும் இவரும் தண்டனைக்குரியவர்தான். இவர் தண்டிக்கப்படுவது எப்போது?
அது எப்போதேனும் நடக்கலாம்; நடக்காமலும் தடுக்கப்படலாம்.
ஆனாலும், பிரதமர் பதவி என்பது பெரிதும் மதிக்கப்படுதற்குரியது.
அந்த மதிப்புக்குப் பங்கம் நேராமல் காப்பது இவருக்குரிய கடமைகளில் ஒன்று.
இதை மறவாமலிருப்பது இந்த நாட்டுக்கு மட்டுமல்ல மோடிக்கும் நல்லது.
* * * * *
***https://www.puthiyathalaimurai.com/tamilnadu/pm-modi-criticizes-dmk-as-a-cmc-government
