வியாழன், 1 ஜனவரி, 2026

அதிக நேரம் தூங்குறீங்களா? ஐயோ வேண்டாங்க!

குறைவான தூக்கம் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதும், இதய நோய்கள், மனச்சோர்வு, குறைவான நோயெதிர்ப்புச் சக்தி போன்றவற்றுக்கான அபாயத்தை அதிகரிக்கும் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. அதிக நேரம் தூங்குவதற்கும் இதுவே பொருந்தும்.

ஆய்வுகள் மற்றும் உலகளாவிய தூக்கத் தரவுகளின்படி, இரவில் தொடர்ந்து ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்குவது நல்லதல்ல.

குறைந்த நேரம் தூங்குவதைவிடவும் இது ஆபத்தானது. நீரிழிவு நோய்க்கும், சில தீராத நோய்களுக்கும் இது காரணமாக அமையக்கூடும். 

அதிக நேரம் தூங்குவது தீவிரமான மன நலப் பாதிப்புகளையும் உண்டுபண்ணும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

எனவே, தூக்க விசயத்தில் அலட்சியம் கூடாது; கூடவே கூடாது.

                                    *   *   *   *   *

https://www.msn.com/en-in/health/health-news/why-is-sleeping-more-than-7-hours-a-day-detrimental-for-your-health/ar-AA1JYWFw?ocid=msedgdhp&pc=NMTS&cvid=6953e7fcb93a4274a92607a4ed47f0f1&ei=22

பொல்லாத புத்தாண்டு வருத்தங்கள்![தத்துவப் பகிர்வு!! ஹி... ஹி... ஹி!!!]

‘நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்                                                                   வாளது உணர்வார்ப் பெறின்’  

//நாள் என்பது ஓர் ‘அளவுகோல்’தான் எனினும், அது[வாழும் ஆயுட்கால அளவைக் குறைப்பதால்] நம் உயிரைப் பறிக்கும் வாள் ஆகும்// என்பது மேற்கண்ட திருக்குறளுக்கான சுருக்கமான விளக்கம்.

ஆகவே, ஒரு நாள் என்பது நம்மால் வெறுக்கத்தக்கது ஆகும்.

ஆண்டின் தொடக்கம்[புத்தாண்டு] என்பதும் இதைப் போன்றதுதான். அதாவது, இது நம் வாழ்நாளில் ஓர் ஆண்டைக் குறைக்கிறது; பறிக்கிறது என்றும் சொல்லலாம்.

உண்மை இதுவாக இருக்க, ‘புத்தாண்டு வாழ்த்து’த் தெரிவிப்பதை மக்கள் வழக்கமாக்கியுள்ளார்களே, இது ‘அறிவுடைமை’ ஆகுமா?