வெள்ளி, 20 டிசம்பர், 2024

சொர்க்கம் பொய்! நரகம் மெய்!!

‘புண்ணியம் செய்தவன் சொர்க்கம் சேர்ந்து சுகித்திருப்பான். பாவம் செய்தவன் நரகம் புகுந்து துன்பத்தில் உழல்வான்’ என்பார்கள்.

சொர்க்கம் சுகபோகம் உய்த்தற்குரிய இடம் என்பதால், அது குறித்து அறிவதைவிடவும் நரகம் பற்றி அறிவதில்தான் நம்மவர்க்கு நாட்டம் அதிகம்.

அசையவிடாமல் கைகால்களைக் கட்டிப்போட்டுக் கூர் தீட்டிய ரம்பத்தால் கழுத்தை அறுப்பது. உடல் உறுப்புகளை[‘குஞ்சி’ உட்பட> எங்கெல்லாமோ தேடியும் ஒரு சிறு புகைப்படம்கூடக் கிடைக்கவில்லை! ஹி... ஹி... ஹி!!!] இடைவெளி கொடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி எடுப்பது. கொப்பறையில் கொதிக்கும் எண்ணையில் முக்கி முக்கி எடுப்பது. நிற்க வைத்து மேலிருந்து கிழாகவோ கீழிருந்து மேலாகவோ தோலை உரிப்பது; மிக உயரமான இடத்திலிருந்து தீக்குழியில் தள்ளுவது[நெருப்புக்குள் விழுவதற்குள் 90% உயிர் போய்விடும்] என்றிப்படிப் பாவம் செய்தவர்கள் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்படும் இடம் நரகம் என்றார்கள் நம் முன்னோர்கள்.

உண்மையில் இப்படியானதொரு வாழிடம்[நரகம்] இந்த அண்டவெளியில் இருக்கிறதா?

வேறெங்கும் இருந்திட வாய்ப்பில்லை எனினும் நாம் வாழுகிற இந்தப் பூமியே நரகம்தான் என்று உறுதிபடச் சொல்லலாம்.

இதற்கு ஆதாரமாக ஏராளமான நிகழ்வுகளைப் பட்டியலிடலாம்.

கொஞ்சம் நிகழ்வுகள் மட்டும்:

1.//தகாத உறவால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக்

கழுத்தறுத்துக்கொலை செய்த மனைவியைப் போலீசார் கைது செய்தனர்.[மாலைமலர்]//


2.//குற்றம் சாட்டப்பட்ட ஷங்கர் தயாள் குப்தா ஜூலை 30 அன்று, பணத்திற்காகச் சண்டையிட்டதால் அவரது மனைவி நீதுவின் கழுத்தை அறுத்தார். குற்றத்தை மறைக்க, அவர் ஒரு உலோக ரம்பம் மற்றும் மின்சார ரம்பம் ஆகியவற்றை வாங்கி, மீதமுள்ள உடல் பாகங்களைத் துண்டாக்கினார்[https://www.etvbharat.com/


3.விரைகளை நசுக்குதல், ஆண்குறிகளை நறுக்குதல், கைகால்

முடக்குதல், போன்ற தண்டனைகள் கடந்த காலங்களில் தரப்பட்டன.https://www.theguardian.com/uk-news/article/2024


4.சென்னைப் புறநகர் பகுதியில் சனிக்கிழமை இரவு பெண் மென்பொறியாளரை கை, கால்களைக் கட்டிப்போட்டு உயிருடன் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cpv616422xxo


5.தவறு செய்தவரைப் பிடித்து நையப் புடைத்து, உப்புத் தடவப்பட்ட புதிதாக உரித்த ஆட்டுத் தோலை அவன்மேல் சுற்றிக்கட்டி ஊர்ப் பொது இடத்தில் உள்ள கல்தூணில் வெயிலில் துணியை காயவைப்பது போல கட்டிவிடுவார்களாம்.


இரண்டொரு நாட்கள் வெயிலில் காய்ந்து, காற்றில் உலர்ந்த பின்னர், அவன் மேல் சுற்றப்பட்ட ஆட்டுத் தோல் அவன் முதுகில் இறுகியிருக்கும். அந்த ஆட்டுத் தோலைப் பிய்த்து எடுக்கும்பொழுது அந்தக் குற்றவாளியின் தோலும் பிய்ந்துகொண்டு வரும். இரத்தம் சொட்டச் சொட்ட வலியில் உயிர் பிரியும். சில நேரங்களில் குற்றவாளியின் முதுகெலும்பும் பிய்ந்துகொண்டு வருமாம். இப்படியான கற்பனைக்கு எட்டாத கொடூரத் தண்டனையைத் தமிழக மன்னர்கள் நிறைவேற்றியுள்ளனர்.


ஆக, மேற்கண்டவை போன்ற படு பயங்கரமான தண்டனைகள், குற்றம் பல புரிந்த பாவிகளுக்கு[சில நேரங்களில் அப்பாவிகளுக்கும் அப்பிராணிகளுக்கும் உத்தமர்களுக்கும்கூட] வழங்கப்படுவது தொடரும் என்பதால், இந்தப் பாவப் பூமியை நிரந்தர நரகம் என்று தயங்காமல் சொல்லலாம்!


நரகம் உண்மை... சரி. சொர்க்கம்?


ஊஹூம்!

 

வியாழன், 19 டிசம்பர், 2024

படுத்தும் கடவுளும் பாடாய்ப் படுத்தும் ஆன்மாவும்!!!

னிதன் மரணிக்கும்போது அவன் உடம்பிலிருந்து ஆன்மா வெளியேறுவது உண்மையா?

உண்மைதான் என்றால் உடம்புக்குள் எப்போது எப்படி அது புகுந்தது என்னும் கேள்விகளுக்கு இன்றளவும் விடை இல்லை.

ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டைக்குள் நுழையும்போதே[கருவுறுதல்] ஆன்மாவும் நுழைந்ததாகக் கொண்டால், அது புகுந்த நாளிலிருந்து செத்துச் சுடுகாடு போகும்வரை உடம்புக்குள் என்ன செய்துகொண்டிருந்தது?

நம்மை இயக்குவது, சிந்திக்கத் தூண்டுவது போன்ற அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூளையே காரணமாக இருக்கும்போது ஆன்மாவுக்கு இங்கு என்ன வேலை?

மூளையின் செயல்களை அது தன்னுள் பதிவு செய்து பாதுகாக்கிறது என்றால், உறங்கும்போது, அல்லது மூளை செயலிழக்கும்போது[சில நேரங்களில்], கடந்த கால நிகழ்வுகள் நினைவுக்கு வருதல் வேண்டும்; வருவதில்லை.

அடுத்த நம் ஐயம்.....

எதனுடனும் ஒட்டாமல் தனித்திருக்கும் ஆன்மா சிந்திக்குமா?

ஊஹூம்... உறுதிப்படுத்தினாரில்லை.

சிந்திப்பதோ செயல்படுவதோ இல்லாமல் வெறுமனே உடம்புக்குள்  இருந்துகொண்டிருக்கும்[எந்த இடத்தில்?] அது, இறப்பு நேர்ந்து உடல் மண்ணில் கலக்கும்போதோ எரிக்கப்படும்போதோ வெளியேறுகிறது என்கிறார்கள்.

ஆவியாகவா? புகை போலவா?

புகை வடிவில் ஒழுங்கற்ற புகைப்படக் காட்சிகளைக் காட்டி இதுதான் ஆன்மா என்று ஏமாற்றுவோர் உண்டு.  

ஆன்மா நீரில் கரையாது; நெருப்பில் அழியாது; ஐம்புலன்களால் அறியவும் முடியாது என்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

இதெல்லாம் முடியாது என்றால், அவர்களில் எவரும் தம் ஆறாவது அறிவால் அறிந்துணர்ந்து பிறருக்கு உணர்த்தியது எப்படி?

இவர்கள் மந்திரவாதிகளோ?!

மரணத்திற்குப் பிறகு மீண்டும் இன்னொரு உடம்புக்குள் ஆன்மா புகும்[மறுபிறப்பு] என்றும் சொல்கிறார்கள்.

புகும்வரை அது எங்கெல்லாமோ இலக்கின்றி அலைந்து திரிகிறது என்றும் கதைக்கிறார்கள்.

திரிவது நாட்கணக்கிலா, ஆண்டுக்கணக்கிலா, யுகக்கணக்கிலா?

திரியவிடுபவர் கடவுளா?

திரிவது தண்டனையா, பிறவிகளுக்கிடையேயான ஓய்வுக் காலமா?

எதற்கும் சரியான பதில் இல்லை.

அனுமானத்தின் மூலம் ஆன்மாவின் இருப்பு அறியப்பட்டதாம்.

எப்படி அனுமானித்தார்கள்?

தொலைவில் புகை வெளியேறுவது தெரிந்தால் அங்கே நெருப்பு எரிகிறது[கண்ணுக்குத் தெரியவில்லை என்றாலும்] என்று நம்புகிறோம். இது அனுமானம்.

இதைப் போன்றதொரு எடுத்துக்காட்டைச் சொல்லி ஆன்மாவை அனுமானிப்பது சாத்தியப்பட்டதில்லை.

ஆன்மா கடவுளின் ஒரு கூறு என்றும் பொய் பரப்புகிறார்கள்.

கடவுளே எப்படியிருக்கிக்கிறார், எப்படித் தோன்றினார் என்பதெல்லாம் உறுதி செய்யப்படாத நிலையில் ஆன்மா இருப்பதாகச் சொல்லித் திரிவது அறிவீனத்தின் உச்சம் ஆகும்.

ஆன்மா இருப்பதாகச் சொல்வதும், அதை நம்புவதும் ஏராள மூடநம்பிக்கைகளின் பிறப்பிடமாக உள்ளது.

ஆகவே, அறிவியல் ரீதியாகக் கடவுளும் ஆன்மாவும் நிரூபிக்கப்படும்வரை, மனநிறைவு தரும் வகையில் வாழ்ந்து முடிக்க முயல்வதே புத்திசாலித்தனம் ஆகும்.              

புதன், 18 டிசம்பர், 2024

“அமித்ஷாஜி, சொர்க்கத்தில் உங்களுக்கு ஓரிடம் உறுதி! உடனே புறப்படுங்க ஜீ!!”

//நேற்று மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்தக் காலத்தில் அம்பேத்கர் என்று கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு மாறாக, பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்தார்[புதிய தலைமுறை]//

இஸ்லாமியர்கள் ஒரு நாளில் ஐந்து தடவைகள்தான் ‘அல்லா’வின் பெயர் சொல்லி வழிபாடு நிகழ்த்துகிறார்கள். நம் ‘ஆன்மிகப் பேரொளி’ அமித்ஷாஜியோ ஒரு நாளில் ஒரு முறை அல்ல, ஒன்பது முறை பகவான் ராமச்சந்திர மூர்த்தியின் பெயர் சொல்லி மனம் நெகிழ்ந்து நெக்குருகுகிறார்[செவிவழிச் செய்தி].

பகவானை மக்கள் மறந்துவிடாமலிருக்க, தலைவர் மோடியுடன் இணைந்து நகர்ப்புறம் மட்டுமல்லாமல் பட்டிதொட்டியெல்லாம் தமக்கான சுகபோகங்களைத் துறந்து பரப்புரை செய்கிறார் அமித்ஷு.

இவரின் ஆன்மிகப் பணியைப் பெரிதும் மதித்துத் தனக்கு மிக அருகிலேயே சொர்க்கத்தில் இவருக்காக ஓரிடத்தைப் பகவான் முன்பதிவு[Reserve] செய்திருக்கிறார்.

பகவானால் அனுப்பப்பட்ட மோடிஜி வேறு பக்திமான் எவருக்கேனும்[அமித்ஜியைக் காட்டிலும் அவரால் அதிகம் நேசிக்கப்படுபவர்] அமித்ஷுவுக்கான இடத்தை
[பகவானுக்கு மிக ஆருகில்] ஒதுக்கும்படிப் பரிந்துரை செய்தால், அந்த இடம் அவரிடமிருந்து பறிபோகும். 

ஆகவே, “எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குத் தாமதம் செய்யாமல் சொர்க்கம் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” என்று அருட்பெருஞ்செல்வர் அமித்ஷாஜியை வேண்டுகிறோம்!

                                     *   *   *   *   *

https://www.puthiyathalaimurai.com/india/tvk-leader-vijay-condemns-amit-shahs-comment-on-ambedkar?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjDSxJULMJOpqwMwz4K3Aw&utm_content=rundown


ஜக்கி[வாசுதேவன்] சாமானியர் அல்ல; சாதனையாளர்!!![நடுநிலை ஆய்வு]

ழுதுவதற்குக் கணிசமான அளவில் கருப்பொருள்கள் இருப்பில் இருக்கும் நிலையில், விருப்பமே இல்லாமல் இப்பதிவை நான் எழுதக் காரணம், குற்றங்கள் சாட்டப்பட்டவராய் வெளிநாட்டுக்கு ஓடிப்போய்த் திரும்பி வந்த நிலையில், தன்னைப் பரம யோக்கியராகவும், மக்கள் பணி செய்பவராகவும் நம்ப வைத்திட ஜக்கி யூடியூபில் அடுத்தடுத்துக் காணொலிகள் வெளியிட்டுவருவதுதான்.

மக்களின் மூடத்தனத்தை மூலதனமாக்கி, கோடிக்கணக்கில் சம்பாதித்து, விதம் விதமாய் பைக்குகள், கார்கள், ஏராள வசதிகளுடனான யோகா மையம், அவ்வப்போது கூத்து, கும்மாளம் என்று சொகுசாக வாழும் ஜக்கியின் வளர்ச்சிக்கு அவரிடம் உள்ள தனித் திறமைகள் பெரிதும் உதவிகரமாக உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

அவற்றிற்கான ஒரு பட்டியல்:

முன்னோடிகள்:
முதலீட்டுக்குப் போதிய பண வசதி இல்லாத நிலையில், வணிகம் செய்தோ, வேறு தொழில் செய்தோ பெரிய பணக்காரன் ஆக முடியாது என்பதைப் புரிந்துகொண்ட ஜக்கி, சாமியார் வேடம் தரித்து மிகக் குறைந்த அவகாசத்தில் கோடிகளைச் சேர்த்த  ஓஷோ, புட்டபர்த்தி சாய்பாபா, பாபா ராம்தேவ் போன்றவர்களைத் தன் முன்னோடிகளாக வரித்தது.

கை கொடுத்த கவர்ச்சி:
*கண்களையும், சிற்பங்களுக்கு உள்ளது போன்ற எடுப்பான மூக்கையும் நெற்றியையும் தவிர, முழு முகத்தையும் மறைக்கும் அழகானதும் அடர்த்தியானதுமான தாடி. 

*கொஞ்சம் நெய் தடவி உருவிவிட்டால் எத்தனை மணி நேரமானாலும் உருக்குலையாத திரட்சியான நீண்ட தடித்த மீசை.  

*வழுக்கையை மறைத்து வயதைக் குறைத்துக் காட்டும் தலைப்பாகை. 

*அந்தக் காலத்து ராஜாக்களை நினைவுபடுத்தும் நீண்ட அங்கி. 

*தோளில் துவண்டு மார்பில் தவழ்ந்து பாதம் தொட்டுப் புரளும் நீண்ட துப்பட்டா.

*மன்னர்களோ அனைத்தையும் துறந்ததாகச் சொல்லிக்கொள்ளும் சாமியார்களோ அணிந்திராத விதம் விதமான அழகு மணிகள் கோத்த மாலை.

மக்களின் மூடத்தனங்களை மூலதனம் ஆக்கல்:
மக்கள் அறிவியல் வளர்ச்சியால் நவநாகரிகர்களாக வாழுகிறார்களே தவிர, அவர்களின் மண்டையில் இருப்பது அந்தக் காலக் காட்டுமிராண்டி மூளையே என்பதைப் புரிந்துகொண்ட அதி புத்திசாலித்தனம்.

தொழில்:
மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘யோகா பயிற்சி’யை இளம் வயதிலேயே ஒரு பயிற்சியாளரிடம் கற்றுக்கொண்டு, அதையே தன் தொழிலுக்கு மூலதனம் ஆக்கியது.

இடத் தேர்வு:
வருமானம் ஈட்ட முடியாது என்பதால் ஏழை எளிய வறிய மக்கள் வாழும் ஊர்களைத் தவிர்த்து, தேவைக்கும் மேற்பட்ட வருமானமும் வசதியான வாழ்க்கையும் அமையப்பெற்ற மக்கள் வாழுகிற கோவையைத் தேர்வு செய்தது.

தொழில் ரகசியம்:
லிங்கபைரவி கோயில், சூரிய குண்டம், சந்திர குண்டம், ஆதியோகி சிலை எல்லாம் உருவாக்கி அங்கெல்லாம் சென்று கண்மூடித் தியானம் செய்தால் துன்பங்கள் அகலும் என்று மக்களை நம்ப வைத்தது[யூடியூப் காணொலி ஒன்றில், அம்மையார் ஒருவர் ‘ஜக்கியே[சத்குரு] தன் வயிற்றில் பிள்ளையாகப் பிறந்திருப்பதாகக் கூறுகிறார்> “ஐயோ, இந்த ஆள் எந்த அளவுக்கு நம் பெண்களை மடச்சிகளாக ஆக்கியிருக்கிறார்!” என்று வாய்விட்டு அலறத் தோன்றுகிறது].

அசாத்தியத் துணிச்சல்:
தான் எள்ளி நகையாடப்படுவதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், சத்குரு[பரம்பொருளின் குரு] என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட அசாத்தியத் துணிச்சல்.

மக்களின் பலவீனங்களைப் படித்தல்:
மக்களின் பலவீனங்களைப் புரிந்துகொண்டு, சிவராத்திரியில் பிரபல நடிகைகளை வரவழைத்து, ஆண்டுதோறும் விடிய விடியக் கூத்து நடத்திக் கும்மாளம் அடித்துத் தன்னை உலகப் பிரபலம் ஆக்கிக்கொண்ட தந்திரப் புத்தி. 

நடித்தல்:
பொதுமக்களிடம் உரையாற்றுகையில், பார்வையை உயர்த்தி அந்தரத்தில் எதையோ தேடுதல், நெஞ்சில் கை வைத்து பக்தியில் திளைத்தல், தன்னைத்தானே மெச்சும் வகையில் குலுங்கிக் குலுங்கி நகைத்தல், எதிராளி எதிரியாக இருந்தால் நெற்றிக் கண்ணைத் திறப்பதுபோல் சினந்து நோக்குதல் என்றிப்படியான அங்கச் சேட்டைகள் மூலம் கூடியிருப்போரைக் கவரும் நடிப்பாற்றல்.

நவீன தொழிநுட்பம் பயன்படுத்தல்:
பரவசத்தில் ஆழ்ந்திருப்பதுபோல் முகத்தில் பாவனைகள் காட்டி அவற்றைக் காணொலி ஆக்கி, தன் அடிப்பொடிகளின் மூலம்[மையத்தில் 4000 பேருக்குக் குறையாமல் யோகா தவிர வேறு வேலை இல்லாமல்[?!] தங்கியுள்ளனர் என்பது செய்தி]யூடியூப் போன்ற தளங்களில் இணைப்பது.

உலக அளவில் ஆகச் சிறந்த ஆன்மிகவாதி என்று புகழ் பெற்று, அதை நிலைநிறுத்த, மேற்கண்டவற்றோடு ஜக்கி கையாளும் தந்திர உத்திகள் இன்னும் எவையெவையோ என்பதை கடவுளின் குருவான அவர் மட்டுமே அறிவார்!

திங்கள், 16 டிசம்பர், 2024

பணம் இழந்து நிலைகுலைந்து தவித்த பெண்! உதவிய உயர்ந்த மனிதர்!!

ங்கு இடம்பெற்றுள்ள காணொலி நிகழ்வில், செலவுக்கு வைத்திருந்த பணத்தை இழந்து, பெற்ற மகளுடன் ஊர் திரும்பும் வழியறியாமல் தவித்த ஒரு பெண்ணுக்கு, தேவையான பணத்தைக் கொடுத்து உதவிய நல்லுள்ளம் கொண்ட மனிதரை மிகவும் மதிக்கிறோம்; மகிழ்கிறோம். அதே வேளையில், ‘அவரிடத்தில் நான் இருந்திருந்தால்.....’ என்றொரு கேள்வி என்னுள் எழுந்தபோது அதற்கு உறுதியானதொரு பதில் இல்லை என்பது உண்மை.

இந்த நல்ல மனிதரைப் போற்றும் பல நல்ல உள்ளங்களின் பாராட்டுரைகளையும் இணைத்திருக்கிறேன். 
தம்பி, நீங்க அந்த சகோதரிக்கு செய்த உதவிக்கு மிக்க நன்றி கடவுள் உங்களையும்,உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
19
இப்படி நல்லமனிதர்கள் இருப்பது சந்தோசமாக உள்ளது
17
நல்ல உள்ளம் கொண்ட ஒரு மனிதர் வாழும் வளரவும் வாழ்த்துக்கள்
13
நன்றி பிரதர் நீங்க தான் தெய்வம் முகத்த காட்டி இருந்த நாங்க இன்னும் சந்தோசமா இருந்து இருக்கும் ❤❤❤
3
வாழ்க மனிதா உன் முகத்தைக் கூட காட்டாமல் செய்த உதவிக்கு கடவுள் உங்களுக்கு நிறைய பணத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
2
அவர்களுக்கு உதவியே உங்களுக்கு நன்றி
4
நன்றி சாமி 🙏🙏🙏
4
அந்த மனசுதான் கடவுள்
5
நீலா இருங்க தம்பி. ஆண்டவர் உங்களுக்கு பல மடங்கு பலன் தருவார்.
4
சில நல்லவர்களும் இருக்கிறார் கள்
3
அன்பரே வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏
2
Kodanakodi nandri bro 🙏🏻
Valga valamudan
2
My blessings son you're very good heart' be happy and healthy Amma Kali Karu Mari Manjula 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கர்த்தர் உன்னோடு இருப்பார் ஆசிர்வாதம் எப்போதும் உனக்கு உண்டு செல்லம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
3
Atha enum nadu makal nala erukom...nala manethar😢😢😢😢😢😢🎉❤
Romba romba thanks bro 🙏 🙌 ❤
👏👏👏God bless him and family's for helping 🎉
❤❤❤🫂🫂 சூப்பர் பிரதர்
இனிவரும் காலங்களில் இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் பார்ப்பது கஷ்டம் ???
In 2005, During Pongal , while travelling to my grandparents house , someone snatched my mother’s purse . We took the bus and while taking ticket, we found that purse was missing . Bus has already crossed around 20kms from bus stand and there is no way to get back to home by walk (with luggage) . Myself and my mother were helpless. Bus stopped and conductor was rude to throw us outside the bus on middle of road . We told they we will get down at next stop. But conductor was so rude . Then one unknown man helped us with money to get bus tickets . It’s been around 20yrs now . But I never forget that man in my life and always thank him by my heart for his help.
Super brother keep it up
God bless you brother
வாழ்த்துக்கள் தம்பி
ஐயா இப்படி நல் இதயம் இருக்கிறவங்க மழை பெய்கிறது
Rajini kamalukutherinja avelavethan😂😂😂
நனறிசாமி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நூறு வருடம் நல்லா வாழ வாழ்த்துக்கள் டா தம்பி 🙏🙏🙏
😂chinna Mutgaleedu... Video varumaanam...