ஞாயிறு, 22 டிசம்பர், 2024

கடவுள்கள் இங்கே! கோயில்கள் எங்கே? எங்கே? எங்கே?[+யூடியூப் காணொலி]

‘பாரத்’இல் கடவுள்களே மனிதர்களாக அவதரிப்பதுண்டு. அதனால்தான் இது புண்ணியப் பாரதம்.


அண்மைக் காலத்தில் இங்கு அவதரித்த இரு கடவுள்களில் ஒருவர் மோடி[கடவுளால் அனுப்பப்பட்ட கடவுள்]; மற்றொருவர் ஜக்கி வாசுதேவ்[கடவுள்களின் குருவான கடவுள்].


இங்கே, கண்களால் காண இயலாத  கடவுள்களுக்குத்தான்[சிலைகள்] கோயில்கள்[எண்ணிலடங்காதவை] உள்ளன.


நம் கண்ணெதிரே காட்சியளித்து அருள்பாலிக்கிற இந்தத் தெய்வங்களுக்கும், இவர்கள் தங்களின் நிரந்தர இருப்பிடமான ‘பரலோகம்’ திரும்புவதற்குள் கோயில்கள் நிர்மாணிக்கப்படுதல் வேண்டும்.


அதற்கான உடனடி நடவடிக்கையில் ஈடுபடுவது இவர்களால் இரட்சிக்கப்படும் அனைத்து மக்களின் கடமை ஆகும்!