ஆண்களைவிடவும், பெற்றோர் மீதான பாசம் பெண்களுக்கு அதிகம்[முதுமைப் பருவத்தில் மகன்களால் புறக்கணிக்கப்படும் நிலையில் பெற்றோர்களில் பலரும் மகள்களால் ஆதரிக்கப்படுவது கருத்தில் கொள்ளத்தக்கது].
பெண்களுக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மன வலிமையும் மிகுதி.
ஆனால் இன்றோ.....
பள்ளிப் படிப்பு முடிந்து மேற்படிப்பிற்காக வெளியூர்க் கல்வி நிலைய விடுதிகளில் தங்குவதும், வேலை கிடைத்து வெளியூர்களிலேயே பணியாற்றுவதும் ஆன சூழலில், பெற்றோரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு முழுச் சுதந்திரத்துடன் செயல்படும் நிலை உருவாகிறது.
இந்நிலையில்தான், விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுடன் பழகுதல்[நிறுவனங்களிலும் தங்கும் விடுதிகளிலும்], மனக் கட்டுப்பாட்டைச் சிதைக்கும் இணையவழிப் பதிவுகளை வாசித்தல், கெட்டக் கனவுகளில் மிதக்கத் தூண்டும் காணொலிகளுக்கு அடிமையாதல் போன்றவற்றால் எளிதில் உணர்ச்சிவசப்படாத மன வலிமையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறார்கள்[விதிவிலக்கானவர்களும் உள்ளனர்] பெண்கள்.
காதல் என்னும் பெயரில் காம[ம்] வசப்படுதல், அதைத் தூண்டும் கலையறிந்த இளைஞர்களால் காதலிக்கப்படுதல், காதலித்தல் எல்லாம் நிகழ்கின்றன.
புனிதம் ஆக்கப்பட்டுவிட்ட இந்தப் பொல்லாத காதல் பெற்றோரின் கட்டுப்பாட்டை மீறத் தூண்டுகிறது.
காதலனையே மணந்து வாழும் ஆசையை வெறியாக மாற்றுகிறது.
அந்தக் காதல் வெறிதான் முன்பெல்லாம் இம்மாதிரிப் பெண்களை[பெற்றோர் சம்மதிக்காதபோது]த் தற்கொலை புரியத் தூண்டியது; இப்போதெல்லாம் பெற்றோரை எதிர்த்துப் போராடச் செய்கிறது.
இதைத் தாங்கிக்கொள்ளும் மன வலிமை இல்லாத பெற்றோர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
உலகம் பொல்லாதது என்பார்கள். பொல்லாங்கு புரியத் தூண்டும் கெட்ட உணர்வுகளில் முதலிடம் பிடிப்பது காதல்[காமம்] எனலாம்!
* * * * *
***இந்தப் பதிவிற்கும் கீழ்க்காணும் நகல் படங்களுடன் தொடர்புடைய அண்மை நிகழ்வுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
***இதனுடன் தொடர்பில்லாத வாசிக்கத்தக்க ஒரு பதிவு: