திங்கள், 31 மார்ச், 2025

மியான்மர்... தொழுகையின்போது 700 இஸ்லாமியர் மரணம்! அல்லா[ஹ்] இரக்கம் இல்லாதவரா?

 

பிற மதத்தவரைக் காட்டிலும் இஸ்லாமியரின் கடவுள்[அல்லாஹ்] நம்பிக்கை அழுத்தமானது; உலகின் அனைத்து [நல்ல]நிகழ்வுகளுக்கும் அவனே காரணம் என்று நம்புகிறவர்கள்[எல்லாப் புகழும் இறைவனுக்கே]; தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். 

இத்தகையவர்களில், “தம்மை மறந்து அவனே நினைவாக வழிபாடு நிகழ்த்திய 700 பேரைக் கொடூரமான இயற்கைப் பேரழிவிலிருந்து அல்லாஹ் காப்பாற்றத் தவறியது ஏன்?” என்னும் கேள்வி தவிர்க்க இயலாததாக உள்ளது.

நம் பதில்:

அண்ட வெளியில் இடம்பெற்றுள்ள பொருள்கள், உயிர்கள் போன்றவை தோன்றிப் பல மாற்றங்களுக்கு உள்ளாகி அழிவதும், மீண்டும் மீண்டும் இது நிகழ்வதும், ஏன், எப்படி, எதன் பொருட்டு என்பன போன்ற கேள்விகளுக்கு இன்றளவும் விடை கண்டறியப்படவில்லை என்பதும் 100% உண்மை.

எதுவும் புரியாத நிலையில், “புரியவில்லை” என்பதை ஏற்க மறுத்துத் தம் பாதுகாப்புக்காகக் ‘கடவுள்’ என்றொருவரைக் கற்பித்து வழிபட்டார்கள்; வழிபடுகிறார்கள் மக்கள்.

கற்பிக்கப்பட்ட கடவுள்களில் ஒருவரே அல்லாஹ் என்பது நம் எண்ணம்; அவரை நம்புவதும் நம்பாததும் இஸ்லாமியருக்கான உரிமை.

உயிரின அழிவுக்கு வறுமை, நோய், ஆதிக்கப் போட்டி போன்றவற்றுடன் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களும் காரணமாக உள்ளன.

எனவே, தொழுகையின்போது 700 இஸ்லாமியர் ஒரே நேரத்தில் மரணத்தைத் தழுவியது இயற்கையாக நிகழும் பேரழிவுகளில் ஒன்றுதானே தவிர, அல்லாஹ் போன்ற இல்லாத எந்தவொரு கடவுளையும் சம்பந்தப்படுத்துவது அர்த்தமற்றது என்று உறுதிபடச் சொல்லலாம்.

                                        *   *   *   *   *

பின்னூட்டமாக இடம்பெற்றவற்றுள் 16 கருத்துரைகளை  மட்டும் பதிவு செய்திருக்கிறேன்[பிழைகள் திருத்தப்படவில்லை].

@mohandasssasisekar8431

1 மணிநேரம் முன்

எந்த கோவிலுக்கு தேவாலயங்கள் மசூதிகள் எங்கு சென்றாலும் எந்த கடவுளும் காப்பாற்ற போவதில்லை நடப்பது நடந்தே தீரும் இதில் இந்த மத கடவுள் தான் உண்மை இந்த கடவுள் தான் பெரிது எனும் சன்டை இல்லாமல் இருக்கும் வரை மனிதர்களை மதித்து மனிதர்களாக வாழ்வோம்

@Pstroll8895

1 மணிநேரம் முன் (திருத்தப்பட்டது)

கடவுள்,மதம் இரன்டுமே மனிதனால் உருவாக்கப்பட்டது இயற்கை மட்டுமே நமது கடவுள் ❤ அதை அழிக்காமல் இருப்பதே நல்லது ❤

@Rajesh-zd6xy

1 மணிநேரம் முன்

எந்த கடவுளாலும் எந்த இறைவனாலும் இயற்கைக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டு

@mercyprakash7081

1 மணிநேரம் முன் (திருத்தப்பட்டது)

எல்லாம வல்ல இறைவன் எவனுமே காப்பாற்ற வில்லை போல ?!?!?! நான் இங்கு பேசுவது அனைத்து மதத்தையும் சேர்த்து தான். மதங்களை தூக்கி எரிந்து விட்டு இயற்கையை போற்றி பாதுகாத்திடுவோம்.... அது தான் உண்மையான கடவுள் !!!

@gurumoorthy3688

1 மணிநேரம் முன்

இயற்கையுடன் போட்டி போட்டால் மனிதனால் வெற்றி பெற முடியாது முடிந்த வரை நாம் இயற்கை போற்றி பாதுகாக்க வேண்டும்

@endtha

3 மணிநேரம் முன்

இயற்கையின் சக்தியால் எந்த கடவும் கிடையாது

@subramanik9664

2 மணிநேரம் முன்

Kadavul ?

@kanyar7415

51 நிமிடங்களுக்கு முன்

Allah didn't save them?! 

Jesus and other Gods didn't save their devotees as well?

@krishnamoorthydt3752

1 மணிநேரம் முன்

தொழுகை நிகழ்வுகள் நடக்கும்போது  இதுபோன்ற விபத்துகள் எங்காவது நடந்ததுண்டா. 

இயற்க்கை சொல்லும் செய்தி என்ன?

@guganesana8625

2 மணிநேரம் முன்

Enga ponar alla

@clingam3

2 மணிநேரம் முன்

மியான்மரில்  தாய்லாந்து  முசுலிம் துரோகத்தால் என்று குறி கதறிய கூட்டம் எப்போது காரணம் என்ன இயற்கை முன் கடவுள் ஒரு கற்பனையே


@karthik9965

2 மணிநேரம் முன்

இப்போ சொல்லுங்க டா  கடவுள் இருக்கிறார் என்று😅

@cpushparaj2548

2 மணிநேரம் முன்

No god don't repeat

@Priya-pr9mb

2 மணிநேரம் முன்

Appo Sami ilaya😢

@prashanthc8135

2 மணிநேரம் முன்

allah um ila jesus um ila sivanum ila.....neyeh kadavul un nalla ullameh kadavul.....manitham valarpom manitham kaapom

@dr.paramasivamshanmugam581

3 மணிநேரம் முன்

Any God can not save  any one,

ஞாயிறு, 30 மார்ச், 2025

கடவுளால் அனுப்பப்பட்ட மோடியை அந்தக் கடவுளாலும் திருத்த இயலாது!!!

#மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இதன் கீழ், மனிதநேய உதவிக்காகச் சிறப்பு மருத்துவக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்[ராணுவ அதிகாரி ஜெக்னீத் கில் தலைமையிலான 118 பேர் கொண்ட சத்ருஜீத் பிரிகேட் குழுவினர், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளுடன் மியான்மர் கிளம்பிச் சென்றனர். பேரிடர் பாதித்த பகுதிகளில் மேம்பட்ட மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை வழங்க இக்குழு தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது#[ஊடகச் செய்தி]

பாராட்டத்தக்க இந்த நல்ல செயலுக்கு  'ஆபரேஷன் பிரம்மா' என்று பெயரிடப்பட்டுள்ளதாம். புராணங்கள் புளுகிவைத்த 100% கற்பனைக் கதை மாந்தனான[கதாபாத்திரம்] பிரம்மாவின் பெயர் எதற்கு?

ஆப்ரேசன் இந்தியா’ என்று பெயர் சூட்டியிருந்தால் போதாதா?

10000[?]க்கும் மேற்பட்ட உயிரிழப்புடன் ஏராளமானோர் காயமடைந்து, அளப்பரிய வேதனையில் சிக்கித் தவிக்கும் மக்களின்[பெரும்பாலோர் புத்த மதத்தவர்] மனங்களில் இந்து மதத் திணிப்பா?

கடவுளால் அனுப்பப்பட்ட மோடி மீண்டும் கடவுளின் திருவடி சேரும்வரை திருந்தமாட்டார்!

அந்தக் கடவுளாலும் இவரைத் திருத்த இயலாது!!

                                          *   *   *   *   *

https://www.dinamalar.com/news/india-tamil-news/india-launches-operation-brahma-to-help-myanmar/3891336

பேடிகளே, அரசியல் பேச ‘அவன்’ இங்கே வரட்டும். நீங்க ஏண்டா ஓடுறீங்க?!

சில நாட்கள் முன்பு ‘அவன்’ கூப்பிட்டான்னு உங்களில் ஐந்தாறு பேர், வேறு எதுக்கோ ‘அங்கே’ போவதாகப் பொய் சொல்லிட்டு, மூன்று நான்கு கார்களில் மாற்றி மாற்றிப் பயணம் பண்ணித்  திருட்டுத்தனமா அந்த ஆளைச் சந்திச்சீங்க.

அவன் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டுத் தமிழ்நாடு திரும்புனீங்க.

உங்களைப் பார்த்து இந்த நாடே சிரிச்சுது.

உங்களோடு பிணங்கிகிட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போய்ட்டிருக்கிற அந்த ஐயனும் அழைக்கப்பட்டு, ‘உலோக மனிதன்’ என்று உங்களால் வர்ணிக்கப்படுகிற அவனைச் சந்திச்சி ரகசியப் ‘பேச்சுவார்த்தை’ நடத்தினார்.

உங்களில் எவனுக்குமே தமிழன் என்பதில் பெருமிதமோ, எவனுக்கும் அடிபணியாத தன்மானமோ இல்லையா?

நீங்களெல்லாம் பதவியில் இருந்தபோது குறுக்கு வழியில் கோடி கோடியாகச் சம்பாதித்த பணத்தை, அமலாக்கத் துறை மூலம் குறி வெச்சுத்தான் அவன் உங்களை மிரட்டி அடிபணிய வைக்க முயல்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும்; தமிழ் மக்களும் அறிவார்கள்.

சம்பாதிச்சதை இழக்காமலிருக்க, ஊழல் குற்றச் சட்டத்தில் உள்ள ஓட்டை உடைசல்கள் மூலம் எப்படியும் தப்பிக்கலாம் என்பதை இன்னுமா தெரிஞ்சிக்காம அந்த ‘அவன்’ ஆட்டுவிக்கிறபடியெல்லாம் ஆடுறீங்க?

போறதெல்லாம் போகட்டும், மிச்சமுள்ளதை வைத்துப் பிழைத்துக்கொள்ள முடியும் என்பதை நீங்கள் மறந்தது ஏன்?

பதவி ஆசையைத் துறக்க முடியலேன்னா, உங்களுக்குள்ளே உள்ள வேற்றுமைகளை மறந்து, ஒருங்கிணைந்து திட்டங்கள் தீட்டி, உங்களை மதிப்பவர்களுடன் கூட்டணி அமைத்து 2026இல் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்யுங்க.

வெற்றியோ தோல்வியோ முடிவு எதுவாயினும் அதை ஏற்பதற்கு மனதைப் பக்குவப்படுத்துங்க.

எவ்வகையிலும், நம்மை அடிமைகளாக்கி ஆளத்துடிக்கும் அந்த ஆதிக்க வெறியன்[கள்] செய்யும் சூழ்ச்சிகளுக்குப் பலியாகிவிடாதீர்கள் என்பது நாம் உங்களிடம் வைக்கும் கோரிக்கை!

வெள்ளி, 28 மார்ச், 2025

‘தவெக’ தலைவர் விஜய் பெண்களுக்கு 100% பாதுகாப்புத் தருவராமே! அதெப்படீங்க?!

“தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதுகாப்பு 100% உறுதி செய்யப்படும் என்றார் விஜய்.[https://www.thentamil.com/news/tvk-general-body-meeting-tamizhaga-vetri-kazhagam-leader-vijay-full-speech#google_vignette].

இப்படியொரு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவனுக்காகத்தான் நம் தாய்க்குலம் காத்துக்கொண்டிருந்தது.

அதெப்படீங்க 100% பாதுகாப்புத் தர முடியும்? நாட்டிலுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும்[90 வயசுக் கிழவிகள் உட்பட. ஹி... ஹி... ஹி!!!] ஒரு காவலரை நியமிப்பாரா ‘தவெக’ தலைவர் என்று கேட்காதீர்கள்.

இப்போது லட்சக்கணக்கில் இவருக்கு ரசிகர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

2026இல் இவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆனதும்[“100% ஆவேன்” என்கிறார்] ரசிகர்கள் மட்டுமல்ல, இந்த உத்தமப் புத்திரனின் 100% ஊழலற்ற நேர்மையான ஆட்சி கண்டு மனம் பூரித்து, தமிழ்நாட்டிலுள்ள 100% ஆண்களுமே[அனைத்துக் கட்சித் தொண்டர்கள் உட்பட] இவரின் 100% தன்னலமற்ற தொண்டர்களாக மாறுவதோடு, இவருடைய உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் ஒவ்வோர் ஆண் தொண்டரும் குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்கு 24 மணி நேரமும் காவல் புரிவார் என்பது 100% உறுதி.

எனவே, 'தவெக'வின் தன்னிகரற்றத் தலைவர், “பெண்களுக்கு 100% பாதுகாப்புத் தரப்படும் என்றது 100% சாத்தியமே!

வியாழன், 27 மார்ச், 2025

சுடச் சுடச் சுடச் சுடச் சூடானதொரு உடலுறவு அசிங்கக் கதை!!!

முக்காடும் கழுத்தில் மாலையுமாக அவள் அவனின் நெற்றியில் பொட்டு வைக்கும்போது, திறந்த வாய் மூடாமல், முகத்தில் கவலை ததும்பக் காட்சியளிக்கும் அந்தப் பிஞ்சு அவளின் மகள் என்பதை அறியும்போது நம் நெஞ்சு செந்தழலாய்க் கொதிக்கிறது.

ஆம், 

ஏற்கனவே திருமணம் ஆன அவளின் மகள்தான்[அவளுக்கு இன்னொரு குழந்தையும் உண்டு] அந்தச் சிறுமி.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகும் உடலுறவு இச்சை சற்றும் தணியாதால், அதைத் தணிக்க ஒரு கள்ளக் காமுகனுடன் உடலுறவு கொள்கிறாள் அவள். தகாத உறவு நீடிக்கிறது.

கணவனுக்கு இந்த அசிங்கம் தெரிந்தபோது அவளைக் கண்டிக்கிறான். அந்தக் காமுகியோ திருந்தவில்லை.

திருந்தாத பெண்டாட்டியைத் தீர்த்துக்கட்டுகிற ஆண்களே அதிகம் உள்ள நிலையில், அவளின் கள்ளக் காமுகனுக்கே அவளை மணம் முடிக்கிறான் அந்த உத்தமன்; பெற்ற இரு செல்வங்களைத் தானே வளர்க்க முடிவெடுக்கிறான்.

காமம் வலிமையானதுதான். அதை அடக்கி ஆளத் தவறுவோர் என்ணிக்கை அதிகரிக்கிறது. வெகு விரைவில் மனித இனம் சீரழிந்து சிதைந்து அழியும் என்பது உறுதி!

                                   *   *   *   *   *

***தலைப்பில் நேர்ந்த பிழை[சுடான] ஏறத்தாழ 3 மணி நேரம் கழித்தே திருத்தம்[சூடான] செய்யப்பட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.

                                   *   *   *   *   * 

#2 குழந்தைகளைப் பெற்றும் காதலனை மறக்க முடியாததால் மனைவியைக் காதலனுக்குத் திருமணம் செய்து வைத்தார் ஒரு கணவர்![தினத்தந்தி மார்ச் 27, 4:11 pm]https://www.dailythanthi.com/news/india/up-man-gets-wife-married-to-her-lover-ill-take-care-of-our-children-1149971?utm_source=izooto&utm_medium=on_site_interactions&utm_campaign=Exit_Intent_Recommendations#

உதயகுமாரு, அமித்ஷாவைத் தெரியும்! யாருங்க அந்த வல்லபாய்ப் படேல்?

//இந்தியாவில் இரும்பு மனிதர் வல்லபாய்ப் பட்டேலின் மறு உருவமாக அமித்ஷா இருப்பதாக[காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைப் பறித்ததில் மோடியின் பங்கு என்ன? அவரென்ன களிமண் மனிதரா?]ப் புகழாரம் சூட்டினார் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார்//[tamil.news18.com]

உதயகுமாரு,

அமித்ஷா ‘இந்தி’யர். ‘இந்தி’யர் அல்லாத இந்தியர் மீது இந்தியையும் இந்துத்துவாவையும் திணிப்பதோடு, அனைத்து இந்தியர் மீதும் ‘மூடநம்பிக்கைகளைத் திணியோ திணி என்று திணிப்பவர் என்பதும், இதன் மூலம் தேர்தலில், ‘இந்தி’யரின் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் அள்ளியெடுத்து அமைச்சரானவர் என்பதும்,    இந்தியையும் மூடநம்பிக்கைகளையும் திணிப்பதைத் தவிர ஒரு தலைவருக்குத் தேவையான எந்தவொரு தகுதியும் இல்லாதவர் என்பதும் நமக்குத் தெரியும்.

இவரை இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய்ப் படேலுடன் ஒப்பிட்டிருக்கிறீர்களே, யாருங்க அந்த வல்லபாய்ப் படேல்?

அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க உதயகுமாரு[சொன்னால்தானே அவருடன் இவரை ஒப்பிட்டது சரியா என்பதை நாங்கள் புரிந்துகொள்ள முடியும்?].

https://tamil.news18.com/national/tamil-live-breaking-news-weather-updates-tn-assembly-and-latest-updates-on-march-27-nw-rkr-1766467.html

புதன், 26 மார்ச், 2025

ஆதிக்க வெறியரிடம் மீண்டும் அடிபணிந்த 'அதிமுக' அடிவருடிகள்!!!

உலக அளவில், பல்வேறு இனங்களுக்கிடையேயான போர்களில்,  அனைத்து இனங்களுமே வெற்றியுடன் தோல்விகளையும் சந்தித்துள்ளன[இது இயல்பான ஒன்று] என்பது வரலாறு.

இதற்குத் தமிழினமும் விதிவிலக்கல்ல.

இரண்டாயிரம் ஆண்டுக்காலத் தமிழர்களின் வரலாற்றை ஆராய்ந்தால், பிற இனத்தவருடன் போரிட்டு வென்றிருக்கிறார்கள்; தோற்றதும் உண்டு.

தோல்விக்கான காரணங்கள் பல. 

அவற்றுள் குறிப்பிடத்தக்கது, தமிழினத் துரோகிகள் நம் இனத்தை மாற்றாரிடம் காட்டிக்கொடுத்தது.

துரோகத்திற்கு எட்டப்பனை எடுத்துக்காட்டாக்குவது வழக்கத்தில் உள்ளது.

எட்டப்பனைப் போலவே சிலர் நம் இனத்தில் இருந்திருக்கக்கூடும் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.

எனினும், காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் எண்ணிக்கை சிறிதளவே என்பதால் அது நம்மைப் பெருமளவில் கவலைக்குள்ளாக்குவதில்லை.

ஆனால் இன்றோ.....

அந்த அவர்களின் எண்ணிக்கை மிக மிக மிகப் பலவாக அதிகரித்திருப்பது நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது; பெரிதும் வேதனைப்பட வைத்திருக்கிறது.

அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.....

‘அதிமுக’ என்னும் பெயரில் இயங்கும் மிகப் பெரிய கூட்டத்தார். இவர்கள் தமிழர் என்னும் பெயரில் பாஜக சங்கிகளிடம் ஏற்கனவே விலைபோனவர்கள்[தம்மிடமுள்ள கோடிகளைக் காப்பாற்றவும், அவர்களிடமிருந்து கோடிகளைப் பெறவும்]; இப்போதும் விலை பேசப்பட்டிருக்கிறார்கள்[https://www.bbc.com/tamil/articles/cwyjrdv7rjmo].

இவர்களைத் தவிர, தங்களைத் தமிழர்கள் என்று சொல்லவதற்கே வெட்கப்படுகிற ஒரு கூட்டமும் இங்கு உள்ளது. அது தமிழ்நாடு ‘பாஜக’ கட்சி. அதில் குறிப்பைடத்தக்கவர்கள்:

ஆட்டுக்கார அண்ணாமலை, எச்சி ராஜா, தமிழிசை, வானதி சீனிவாசன் போன்றவர்கள்.

தமிழக வரலாற்றிலேயே, மிக ஆபத்தானவர்களும், அளப்பரிய அதிகாரம் படைத்தவர்களும், பண பலம் பெற்றவர்களும், ஆதிக்க வெறி கொண்டவர்களுமான எதிரிகளுடன் தமிழர்கள் போராடுவது... போராடிக்கொண்டிருப்பது இப்போதுதான்.

தமிழின உணர்வாளர்கள் அதீத விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நெருக்கடியான காலக்கட்டம் இதுவாகும்.

செவ்வாய், 25 மார்ச், 2025

உறக்கத்தில் மூச்சுத் திணறல்[OSA] ஜாக்கிரதை!!!

றக்கத்தின்போது சுவாசப் பாதையில் உருவாகும் தடை காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதே மூச்சுத்திணறல் [OSA> Obstructive sleep apnea] எனப்படும்.

தடை ஏற்படுவதற்கான காரணம்.....

தூக்கத்தின்போது தொண்டையின் பின்புறத்தில் உள்ள மென்மையான தசைகள் தளர்ந்து, சரிவடைந்து சுவாசப் பாதையின் அளவைக் குறைப்பது அல்லது சுருக்குவது.

இதனால் உள்ளே செல்லும் காற்றின் அளவு குறையும்; தடைப்படுதலும் உண்டு; குறட்டை விடுதலும் நிகழும்.

உடல் பருமன், சிறிய தாடை, டான்சில்ஸ்[அடிநாச் சுரப்பிகள் அல்லது அடிநாச் சதை என்பது மனித உடலின் மிகப்பெரிய நிணநீர்ச் சுரப்பியாகும். ஆங்கிலத்தில் இதனை டான்சில் (Tonsil) என அழைப்பர். அடிநாச் சதை தொண்டையில் உணவுக்குழலுக்கு இருபுறமும் அமைந்துள்ளன. இவை முட்டை வடிவில் உள்ளன. பெரிய கழுத்து போன்ற குறைபாடுகள் உள்ளவர்கள் இந்தக் கோளாறால் பாதிக்கப்படலாம்.

இதனால் இரவு நேர உறக்கம் பாதிக்கப்படுவதால் காலையில் கடுமையான தலைவலி தோன்றும்; மன உளைச்சலுக்கும் இது வழிவகுக்கும்.

இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களுக்கும் இது காரணமாகிறது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

சிகிச்சை:

அறுவைச் சிகிச்சை மூலம் மருத்துவர்கள் தளர்ந்த தசைக் கோளாறைச் சரிசெய்கிறார்கள் என்பதோடு இதற்கான கருவிகளும்[உபகரணங்கள்] பயன்பாட்டில் உள்ளன என்பதால் பெரிதும் அஞ்சத் தேவையில்லை.

குறிப்பு:

இது தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறல் பற்றிய இடுகை. பொதுவான மூச்சுத் திணறலுக்கு ஆஸ்துமா, நிமோனியா, இதயச் செயலிழப்பு போன்ற வேறு காரணங்களும் உள்ளன என்பது அறியத்தக்கது.

                                   *   *   *   *   *

https://www.google.com/search?q=OSA

திங்கள், 24 மார்ச், 2025

அப்பாவிப் பக்தர்களும் update செய்யப்படும் கடவுள்களும்!!!

காலங்காலமாய், கடவுள்களின் பெயரால் நம்பவே இயலாத கற்பனைக் கதைகளைப் பரப்பி மக்களின் சிந்திக்கும் அறிவைச் சிதைத்தது போதாதென்று, இன்றைய அறிவியல் யுகத்திலும் அதே நாசகாரச் செயலில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் இந்துமதவாதிகள். இவர்களுக்கு உறுதுணையாய் இருப்பவை நம் ஊடகங்கள்.


ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்ட விஷ்ணு பகவான் பற்றிய விந்தையான கதைகளைப் புதுப்பித்திருக்கிறது https://www.msn.com6 Indian Cities Where Lord Vishnu's Presence Is Still Felt - MSN -இது 2025இல் வெளியானது. வாசியுங்கள். எப்படியெல்லாம் மூளையை மழுங்கடிக்கிறார்கள் என்பது புரியும்[அடைப்புக் குறிகளுக்குள் நம் விமர்சனம்].


1.பத்ரிநாத்: 

இமயமலையில் அமைந்துள்ள பத்ரிநாத், இந்தியாவின் மிகவும் புனிதமான யாத்திரைத் தலங்களில் ஒன்றாகும். கடுமையான மலை வானிலையின் கீழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விஷ்ணு இங்கு தியானம் செய்ததாக நம்பப்படுகிறது[கடவுளாயிற்றே, எதற்காக, எவரை நினைத்துத் தியானம்?].


குளிரில் இருந்து அவரைப் பாதுகாக்க[ஆனானப்பட்ட கடவுளுக்கே குளிருமா?!], லட்சுமி தேவி ஒரு பத்ரி மரமாக மாறியதாகக் கூறப்படுகிறது, இதனால் அந்த ஊருக்கு அந்தப் பெயர் வந்தது.


கோயிலில் வைக்கப்பட்டுள்ள விஷ்ணுவின் கருங்கல் சிலை, சுயமாக வெளிப்பட்டதாக நம்பப்படுகிறது[இந்த மாதிரிக் கதைகள் கணக்கிலடங்காதவை]. 


2.துவாரகா:


குஜராத்தின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள துவாரகா, பகவான் கிருஷ்ணரின் ராஜ்ஜியமாக இருந்ததாக நம்பப்படுகிறது.[ஒட்டுமொத்தப் பிரபஞ்சமே அவர் காலடியில் கிடக்கும்போது ஒரு துக்கிளியூண்டு ராச்சியம் எதற்கு?].


ஒரு நாளைக்கு ஐந்து முறை மாற்றப்படும் கோயிலின் கொடி, எப்போதும் காற்றின் எதிர்த் திசையில் பறக்கிறது[புளுகுவதற்கு வரம்பே இல்லையா?].


3.பூரி:


ஒடிசாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள பூரி, ஜகந்நாதர் கோயிலின் தாயகமாகும். இந்தக் கோயில் கொடி காற்றின் எதிர் திசையில் மர்மமாகப் பறக்கிறதாம்[அதே கதை].


4.ராமேஸ்வரம்:


கோயில் வளாகத்திற்குள் உள்ள 22 புனிதக் கிணறுகளில் நீராடுவது உடலையும் ஆன்மாவையும் சுத்திகரிக்கிறதாம்[இது உண்மை என்றால் மனிதர்கள் அத்தனைப் பேருமே யோக்கியராக ஆகியிருப்பார்கள்].


5.ஹரித்வார்:


உத்தரகண்டில் கங்கையின் கரையில் அமைந்துள்ள ஹரித்வார், கங்கை நதி சொர்க்கத்திலிருந்து[அதைப் பார்த்தவன் எவனும் இல்லை] பூமிக்கு இறங்கிய இடம் என்று நம்பப்படுகிறது.


புனித மலைத்தொடர், ஹர் கி பௌரி, விஷ்ணுவின் கால்தடத்தைத் தாங்கியதாகக் கூறப்படுகிறது[விஷ்ணு எங்கும் உட்காரவோ நீட்டிப் படுக்கவோ இல்லையா?],


6.மதுரா:


உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள மதுரா, விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது[பிறந்தவர் எனின் சாகவும் வேண்டுமே! செத்தாரா?!. கிருஷ்ணர் பிறந்ததாக நம்பப்படும் இடத்திலேயே கிருஷ்ண ஜென்மபூமிக் கோயில் அமைந்துள்ளது.


ஞாயிறு, 23 மார்ச், 2025

‘அது’ எவருக்கும் விடை தெரியாத கேள்வி! சும்மா கேட்டுவைப்போம்!!

பிறந்து வாழும் மனிதர்கள் எல்லோருமே சுயநலவாதிகள்தான். அதாவது, தம் நலம் குறித்தே அதிகம் சிந்திப்பவர்கள்.

தன்னலம் குறித்தே அதிகம் சிந்திக்கிற சுயநலவாதிகளில்[ஏற்றத்தாழ்வுகள் உண்டு] அடியேனைப் போன்ற அனைத்துச் சாமானியர்களும் அடக்கம்.

காலப்போக்கில் கேள்வியறிவு, நூலறிவு, அனுபவ அறிவு, சுய சிந்தனை அறிவு ஆகியவற்றின் மூலம் பொதுநலவாதிகளாக மாறுகிறார்கள் இவர்களில் சிலர். அதாவது, தம் நலம் குறித்துக் குறைவாகவும் பிறர் நலம் குறித்து மிகுதியாகவும் சிந்திப்பவர்கள் இவர்கள். 

இந்த இவர்களில் தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள், பொது நலம் நாடுவோர், சமூகச் சீர்திருத்தவாதிகள் போன்றோர் அடங்குவர்.

ஒரு சந்தேகம்......

மேற்கண்ட இரு பிரிவுகளில் கடவுளை எதில் சேர்க்கலாம்?

தான் படைத்து ஆளுகிற அனைத்து உலகங்கள் பற்றியும், அவற்றில் வாழும் உயிரினங்கள்[மனிதர் உட்பட] பற்றியும் சிந்திப்பவர்; சிந்தித்துக்கொண்டிருப்பவர் என்பதில் சந்தேகம் இல்லை, சிந்தித்தால்தானே அவற்றைச் சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்பதால்.

எனவே, கடவுளும் ஒரு பொதுநலவாதியே.

அந்தப் பொதுநலவாதி எப்போதேனும், அல்லது அவ்வப்போதேனும் தன்னைப் பற்றியும்[தன் தோற்றம், ஆற்றல், செயல்படும் முறைகள், எதிர்காலம் பற்றியெல்லாம்] சிந்திப்பவராக, அதாவது சுயநலவாதியாக இருப்பதுண்டா?

மிகவும் சிக்கலான கேள்வி!

கடவுள்களின் குருவான ஜக்கி வாசுதேவரிடமோ, கடவுளால் அனுப்பப்பட்ட நரேந்திர மோடியாரிடமோ கேட்டால் விடை கிடைக்குமா?!

சனி, 22 மார்ச், 2025

அமைதிக்குச் சமாதி கட்டுபவர்கள் சங்கிகள் மட்டுமல்ல, ‘அப்துல்லா’க்களும்தான்!!!

ற்று உயரமான கட்டுமானத்தை உண்டாக்கி அதன்மேல், சதுரவடிவமான, அலங்காரத்தோடு கூடிய சிறிய தொட்டிகளைக் கட்டி, அதில் புனிதமானதாகக் கருதும் துளசிச் செடியை நட்டு வளர்த்து, நாள்தோறும் பூசை செய்வது இந்துக்களில் கணிசமானவர்களிடம் உள்ள பரம்பரை வழக்கம் ஆகும்.

துளசி தாவர இனங்களில் ஒன்று. அதற்குப் புனிதத்தன்மையை ஏற்றுவது[தூண்டுதல் ‘விஷ்ணு’க் கடவுள் தொடர்பான புராணக் கதை] தேவையற்றது எனினும், இந்தவொரு வழக்கத்தை இழிவுபடுத்த எவருக்கும் உரிமை இல்லை.

கேரளாவில் இஸ்லாமியன் ஒருவன் இதைச் செய்திருக்கிறான் என்பதுதான் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் நிகழ்வு.

அவன் அப்படி என்ன செய்தான்? 

#துளசித்தாரா[துளசிமாடம்] இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒரு புனிதமான இடம். மேற்கண்ட அப்துல் ஹக்கீம் தனது அந்தரங்க உறுப்புகளிலிருந்து முடிகளைப் பறித்து, 'துளசித்தாரா'வில் வைப்பதை வீடியோவில் காணலாம். இது நிச்சயமாக இந்து மதத்தவரின் உணர்வுகளைப் புண்படுத்தும். அப்துல் ஹக்கீம் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது. அவர் குருவாயூர் கோயில் வளாகத்தில் உள்ள ஒரு ஹோட்டலின் உரிமையாளர் என்று அறியப்படுகிறது.....

இந்த நிகழ்ச்சியைக் காணொலியாக்கியவரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது. குற்றவாளி சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருக்கிறான்.....

தொடுக்கப்பட்ட வழக்கொன்றின் அடிப்படையில், அப்துல் ஹக்கீம் என்னும் அந்த ஆணவக்காரனைக் கைது செய்யும்படிக் காவல்துறைக்கு ஆணை பிறப்பித்திருக்கிறது உயர் நீதிமன்றம்#

இவனைப் போன்ற இன்னும் நான்கைந்து ஹக்கீம்கள் இருந்தால் போதும், மதக் கலவரம் தூண்டப்பட்டு, பற்றி எரியும் பிணங்களின் தேசமாகக் கேரளா மாறும் என்பது உறுதி.

இஸ்லாம் மக்கள் இவன் தங்களின் மதத்தவன் அல்ல என்று அறிவித்து விலக்கி வைப்பது நல்லது. அரசு உடனடியாக இவனைக் கைது செய்து கடும் தண்டனைக்கு உள்ளாக்குவது கேரளாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

* * * * *

https://tamil.indianexpress.com/india/kerala-high-court-orders-action-against-man-accused-of-insulting-sacred-tulsi-plant-8875285

வெள்ளி, 21 மார்ச், 2025

உள்துறை அமைச்சருக்கு[அமித்ஷா]ப் பொது அறிவு பூஜ்யம்!!!

இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஒரு நண்பன். அது பிற இந்திய மொழிகளை வலிமையாக்குகிறது என்று அமித்ஷா உரையாற்றினார்[இந்து தமிழ்].

இப்படியொரு பொய்யை அவ்வப்போது அழுத்தம் திருத்தமாகச்சொல்லிக்கொண்டிருக்கிறார் இவர். திரும்பத் திரும்பச் சொல்வதால் பொய் ‘மெய்’ ஆகிவிடாது.

இதையே கொஞ்சம் மாற்றி, “ஆங்கிலம் அனைத்து உலக மொழிகளுக்கும் நண்பன். அது அவற்றை வலிமையாக்குகிறது” என்று சொன்னால் அது அனைவரும் ஏற்கத்தக்கக் கலப்படம் இல்லாத உண்மையாக இருக்கும்.

காரணம்.....

ஆங்கிலத்திடமிருந்துதான் பல மொழிகளும் அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான அம்சங்களைப் பெற்றன; பெறுகின்றன.

அமித்ஷாவின் கிளிப்பிள்ளைப் பேச்சு அவருக்குப் பொது அறிவு இல்லை என்பதைக் காட்டுகிறது; தரமில்லாத ஒரு மொழியை[இந்தி] பிற இனத்தவர் மீது திணிக்கும் மொழி வெறியின் அடையாளம் என்றும் சொல்லலாம்.

இவர் தன்னைத் திருத்திக்கொள்வது இந்திய ஒருமைப்பாடு உடைந்து சிதறாமலிருக்க உதவும் என்பதை அவர் உணர்தல் வேண்டும்.

* * * * *

https://www.hindutamil.in/news/india/1355172-people-are-using-language-issue-to-cover-corruption-home-minister-amit-shah-2.html


“பெண்ணின் மார்பைப் ‘பிடிப்பது’ குற்றமல்ல”... நீதிபதி! இவன் அநீதிபதி!!!

{கீழே இடம்பெற்றிருப்பது[நகல் பதிவில்] ஒரு குற்ற வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பு குறித்த நாளிதழ்ச் செய்தி}

“பெண்ணின் மார்பைப் பிடிப்பது, பைஜாமாவைக் கிழிப்பது போன்றவை பலாத்கார[கற்பழிப்பு] முயற்சி அல்ல” என்று ஒரு தர்ம தேவன் புரட்சிகரமானதொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார். 

பெண்ணின் மார்பைப் பிடிப்பது குற்றமில்லை என்றால், அதை அமுக்குவதும், வருடுவதும், தடவுவதும்,  வாயால் கவ்வுவதும், சுவைப்பதும்தான் குற்றம் என்கிறாரா?

அவளின் பைஜாமாவைக் கிழிப்பது குற்றச் செயல் அல்ல என்றால், அதை அவிழ்த்தெடுத்து அம்மணம் ஆக்குவதுதான்[சிறுமி கூச்சல் போட்டதால் அதைச் செய்ய இயலவில்லை. இது பற்றிச் சிந்திக்கும் அறிவு ஒரு நீதிபதிக்கு இல்லாமல்போனது என்பது பேராச்சரியம்] அதர்மம் என்கிறாரா இந்தக் கலியுக அநீதி தேவன்?

மேற்கண்ட வகையிலான அயோக்கியத்தனங்கள் சமுதாயத்தில் அவ்வப்போது நடப்பவைதான். ஆனால், இந்தவொரு தீர்ப்பு மிக மிக மிக அரிதானதும் அவலமானதுமான ஒன்று.

தீர்ப்பு வழங்கிய நபர் உண்மையிலேயே சட்டக் கல்வி பயின்றவர்தானா என்னும் சந்தேகம் எழுகிறது[இன்னும் பல சந்தேகங்களும் உள்ளன. நீதிமன்ற விவகாரம் என்பதால் அவை தவிர்க்கப்படுகின்றன].

ஆக, குற்றவாளிகளுக்குத் துணைபோனதால் இவரும் குற்றவாளிதான்.

பல்வேறு வகையிலான குற்றங்கள் புரிவோரைத் தண்டிக்கச் சட்டத்தில் இடமுள்ளது. இவரைப் போன்றவர்களைத் தண்டிக்கச் சட்டத்தில் விதி ஏதும் இல்லையா?

இது குறித்துச் சிந்தித்துச் செயல்படுவது இவருக்கும் மேலான அதிகாரம் படைத்த[உச்ச நீதிமன்றம்] நீதிபதிகளின் கடமை ஆகும்.
                                        *   *   *   *   *

இறைவனை ஏமாற்றலாம்! இயற்கையிடம் பருப்பு வேகாது!!

ஆணோ பெண்ணோ, ஏழையோ பணக்காரனோ, அறிஞனோ அறிவிலியோ, அப்பாவியோ அவதாரமோ எவராயினும் மனிதர்களாகிய அவர்களிடம்[பிற உயிரிகளிடமும்தான்]  கடுகளவும் பாரபட்சம் காட்டுவதில்லை இயற்கை.

ஒருவன் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கலாம். ஆனாலும், குறையக் குறைய வாய்க்கு ருசியாய்த் தின்றுகொண்டே இருந்தால் அற்ப ஆயுளில் அவன் கதையை அது முடித்துவிடும்.

மகான், அவதாரம் என்றும் சொல்லித் திரிகிற ஆசாமிகளை நமக்குத் தெரியும். அடிக்கடி விரதம் நோன்பு எல்லாம் இருப்பதாக அலட்டிக்கொள்வார்கள். அதுவே வாரக்கணக்கில் மாதக்கணக்கில் என்றால் இயற்கை அனுமதிக்காது; பரலோகம் அனுப்பிவிடும்.

“நான் கடவுள்களுக்கெல்லாம் குரு” என்று சொல்லி ஊரை ஏமாற்றலாம்; உலகையும் நம்ப வைக்கலாம். மூளையில் ரத்தக் கசிவோ, மூச்சுக் குழலில் கட்டியோ வந்தால் மருத்துவரைத் தேடிப்போய்ச் சிகிச்சை பெறுதல் வேண்டும். மறுத்தால் எமலோகப் பயணம்தான்.

“நான் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவன்” என்று பீற்றிக்கொள்வர்கள் இங்கே உண்டு. அவர்களை அனுப்பியவர் கடவுளோ சாத்தானோ எதுவாகவோ இருந்து தொலைக்கட்டும். இயற்கையாகவோ செயற்கையாகவோ பக்தி செலுத்தவும் ஓர் எல்லை உண்டு. கடமைகளைப் புறக்கணித்து, கண்ட கண்ட கோயில்களுக்குப் போய், குனிந்து குனிந்து கும்பிடுவதும், தரையில் விழுந்து விழுந்து புரளுவதுமாக இருந்தால் இயற்கை அவர்களைப் ‘பைத்தியம்’ ஆக்கிவிடும்.

ஆடிப்பாடி குதூகளிப்பதோ, ஓடியாடிக் கும்மாளம் போடுவதோ, உடலுறவுச் சுகத்தில் மூழ்க்கிக் கிடப்பதோ எதுவாயினும் அதற்கு ஒரு வரன்முறை உண்டு. அதை மீறினால், ஆணோ பெண்ணோ இயற்கை வேடிக்கை பார்க்காது; ஏதோ ஒருவகையில் தண்டித்துவிடும்.

ஆகவே மானிடர்களே,

கடவுளுக்குக்[இருந்தால்] காணிக்கை செலுத்தியோ, கண்ணீர்விட்டு கதறிக் கதறி அழுது புலம்பியோ செய்த குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். இயற்கையிடம் அவை செல்லுபடி ஆகாது என்பதை அறிவீராக!