புதன், 3 ஜூலை, 2024

போலிச் சாமியார்கள்! ஆண்டவனின் திருவடி தொழுது நாம் வேண்டுவது.....

த்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் சாமியார் ஒருவர் நடத்திய பிரசங்க நிகழ்ச்சியின்போது, 122 பேர் பலியானதற்கு, அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியது மட்டுமே காரணம் என்று ஊடகங்கள் வாயிலாக முன்பு அறியப்பட்ட செய்தி தவறானது.

போலி ஆன்மிகம் பேசியே பிரபலம் ஆன இந்த அயோக்கியன் ‘போலோ பாபா’, காரில் ஏறி அங்கிருந்து வெளியேறியபோது.....

‘இவனின் காலடி மண்ணையும், கார் சென்ற பாதையின் மண்ணையும் தொட்டு முகத்தில் ஒற்றிக்கொள்ள, பக்தர்கள்[3 லட்சம் பேர்] முண்டியடித்ததால்தான் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்’ என்பது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அண்மைச் செய்தி.

கண்டதைத் தின்று, நாறும் மலம் கழித்து வாழும் இந்தக் கழிசடைகளின் கால் பட்ட மண்ணைத் தொட்டுப் புண்ணியம் சேர்க்கலாம் என்று இவர்களை நம்பவைத்தவர்கள் நச்சு மனம் படைத்த இவனும் இவனைப் போன்ற சாமியார்களும்தான்.

போலோ பாபா எங்கோ ஓடி ஒளிந்துகொண்டுள்ளான்.

மோடி என்ன செய்யப்போகிறார்?

இவன் எங்கு ஓடி ஒளிந்திருந்தாலும் தேடிக் கண்டுபிடித்துத் தண்டிப்பாரா?

அல்லது,

நாளை, கடவுளால் அனுப்பப்பட்ட தன்னுடைய காலடி மண்ணைத் தொடவும் பக்தர்கள் முண்டியடித்து மோதி விழுந்து செத்துத் தொலைத்தால், தன்னைத்தானே தண்டித்துக்கொள்ள இயலாது என்பதால், ’போலோ பாபா’ என்னும் இழிகுணச் சாமியாரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரா?

என்ன செய்யவிருக்கிறார் மோடி என்பதை அவரைப் பூவுலகுக்கு அனுப்பி வைத்த அந்த ஆண்டவனே அறிவான்!

அப்படி ஒருவன் இருந்தால், அவனின் அடிபணிந்து நாம் வேண்டிக்கொள்வது.....

“ஒரே ஒரு முறை உலகத்தோர் காணும் வகையில் காட்சி தந்து ஒரு பேட்டி அளித்தருள்வாய் பகவானே. நீ இதைச் செய்தால், ‘நான் கடவுளின் அவதாரம்; நான் கடவுளால் அனுப்பப்பட்டவன்’ என்று பொய்யுரைத்து மக்களை மடையர்கள் ஆக்கும் போலி ஆன்மிகர்களின் கொட்டம் முற்றிலுமாய் அடங்கும்” என்பதுதான்!

கள்ளச்சாராயமும் காவிகளின் பிரச்சாரமும்!

//உ.பி ஹத்ராஸில் சாமியார் பிரசங்க நிகழ்ச்சியில் பயங்கரக் கூட்ட நெரிசல். பலி எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு! Tuesday, July 2, 2024, 19:28 [IST]

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் சாமியார் ஒருவர் நடத்திய பிரசங்க நிகழ்ச்சியின்போது, கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 40 பேர் பெண்கள். கூட்ட நெரிசலில் சிக்கிய மேலும் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உ.பி. சாமியார் பிரசங்க நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.[https://tamil.oneindia.com/news/lucknow/40-people-died-in-stampede-at-religious-gathering-in-up-hathras-618675.html]//

போதையை அதிகரித்து, குடிகாரனின் உயிரைப் பலிவாங்கும் கள்ளச்சாராய வியாபாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது; தண்டனையும் வழங்கப்படுகிறது.

கள்ளச்சாராயம் தரும் போதையைக் காட்டிலும் மிகப் பல மடங்கு போதை ஊட்டுவது பக்தி.

பக்தி வளர்த்தால் துன்பங்கள் தீரும்; நினைத்த காரியம் கைகூடும்; செத்தால் சொர்க்கம் நிச்சயம்; மறுபிறவியில் நாயாகவோ, சாக்கடைப் பன்றியாகவோ, பொதி சுமக்கும் கழுதையாகவோ பிறக்காமல், மனிதனாகவே பிறந்து புண்ணியம் சேர்த்து இறைவனின் திருவடியில் நிரந்தரமாய்த் தங்கிப் பேரானந்தத்தில் மிதக்கலாம் என்றெல்லாம் பொய்ப் பிரச்சாரங்கள் செய்து மக்கள் மனங்களில் போதை ஏற்றிப் பகுத்தறிவைப் பாழடிக்கும் காவிகளுக்கு[+மதபோதகர்கள்]த் தண்டனையே இல்லை.

மாறாக, அவதாரங்கள் என்றும், மகான்கள் என்றும் போற்றப்படுகிறார்கள்.

மேற்கண்ட செய்தியில் இடம்பெற்றுள்ள காவிச் சாமியார் ஏற்றிய பக்திப் போதையால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்[மனக் கட்டுப்பாட்டை இழந்து நெரிசலில் சிக்கிச் செத்திருக்கிறார்கள். சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது செய்தி].

சாராய வியாபாரிகளுக்குத் தரப்படும் தண்டனையைவிடவும் கடுமையான தண்டனை பெற வேண்டியவர்கள் இவர்கள். அவசியம் எனின், மக்களின் பகுத்தறிவை நாசமாக்குவதோடு நூற்றுக்கணக்கில் அவர்களின் உயிர்களைக் கற்பனைக் கடவுள்களுக்குக் காவு கொடுக்கிற இவர்களுக்கு மரண தண்டனையே வழங்கலாம்.

சாமி கும்பிடவும் தியானங்கள் செய்யவும் கற்றுக்கொடுப்பதைத் தவிர, தலைவனுக்குரிய வேறு தகுதி ஏதும் பெற்றிராதவர்கள் ஆட்சிபீடத்தில் இருக்கும்வரை இதெல்லாம் வெறும் பகற்கனவு மட்டுமே!

செவ்வாய், 2 ஜூலை, 2024

அப்பாவிப் பெண்ணின் மூக்கு&மு... அறுத்தவனா அகிலம் போற்றும் கடவுள்?!?!?!

கேள்வி கேட்பவன் நான்.

தூண்டுதலாய் அமைந்தது....

நம் பாராட்டுக்குரிய, ‘முனைவர் ஆதிரை முல்லை’யின், ‘முதுமை என்னும் பூங்காற்று’ இதழில் வெளியான கட்டுரையின் குறிப்பிடத்தக்க ஒரு பத்தி.

அதன் நகல்:


ஆணாதிக்கத்தின் உச்சம் மட்டுமல்ல, அறிவின்மையின் வெளிப்பாடும்கூட.

வால்மீகியின் கற்பனைக் கதைமாந்தனான இவனைத்தான் கடவுளாக்கிப்[ஓர் அப்பாவிப் பெண்ணைத் தன் மீது ஆசைப்பட்டதற்காக அவமானப்படுத்தியவன்], பெரும்பான்மை மக்களை வழிபடச் செய்திருக்கிறார்கள் வாழ்ந்த/ வாழ்ந்துகொண்டிருக்கிற மகானுபவர்கள்.

இவனுக்குத்தான் அதிபிரமாண்டமான கோயிலை அயோத்தியில் கட்டிப் பெருமிதப்பட்டார்/படுகிறார் மோடி.

இவன் புகழ்பாடித்தான்[அநுமன், பிள்ளையார் என்று ஒரு நீண்ட பட்டியல் போடலாம்] சங்கிகள் இங்கே இந்துமதம் வளர்க்கிறார்கள்[மக்களுக்குத் தொண்டு செய்து மதம் வளர்க்கும் பெருந்தன்மையோ மனப்பக்குவமோ இவர்களுக்கு இல்லை; இல்லவே இல்லை].

இந்தியாவை ‘ராம ராஜ்ஜியம்’ ஆக்குவார்களாம்.

ஆக்கலாம். கூடவே இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் நெற்றிகளிலும் ‘பட்டை நாமம்’ தீட்டலாம். 

திங்கள், 1 ஜூலை, 2024

அடேய், India[இந்தியா]வை भारतीय देश[இந்தி நாடு]ன்னு சீக்கிரம் மாத்துங்கடா!!!

இந்தியக் குற்றவியல் சட்டம்(ஐபிசி), இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம்(சிஆர்பிசி) மற்றும் இந்தியச் சாட்சிகள் சட்டம்(ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை இன்று(ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன[https://www.hindutamil.in].

‘இந்தி’யர்களே,

இந்த மூன்று சட்டங்களை மட்டுமல்ல, இனி நீங்கள் அடுத்தடுத்துக் கொண்டுவரவிருக்கும் அத்தனைச் சட்டங்களுக்கும் இந்தியிலேயே[சமஸ்கிருதம் கொஞ்சம் கலக்கலாம்] பெயர் சூட்டுங்கள்.

நாடெங்கும் உள்ள நடவணரசின் அலுவலகங்களுக்கும், தபால் நிலையங்களுக்கும், வங்கிகளுக்கும், ரயில் நிலையங்களுக்கும், இதர பிற நிறுவனங்களுக்கும் சூட்டப்பட்டுள்ள பெயர்களை[ஆங்கில&மாநில மொழிகள்] இந்திப் பெயர்களாக மாற்றுங்கள். அடையாளத்துக்குக்கூட, ஆங்கிலத்திலான பெயர்களோ ஆங்கில எழுத்துகளோ இடம்பெற்றிருத்தல் கூடாது.

India[இந்தியா] என்னும் இந்த நாட்டின் பெயரையும் भारतीय देश[இந்தி நாடு] என்று மாற்றுங்கள்.

மோடி, அமித்ஷா[குஜராத்தி மொழிப் பெயர்கள்?] போன்ற இந்தி நாட்டின் தலைவர்களின் பெயர்களையும், அவை வேறு வேறு இந்திய மொழிப் பெயர்களாக இருக்குமாதலால், ‘இந்தி’யரால் காலங்காலமாகப் பயன்படுத்தப்படும் இந்திப் பெயர்களாக மாற்றிடுவீர்.

மறந்தும்கூட மக்களில் எவராவது இந்தி தவிர அவரவர் தாய்மொழியில் பேசினால், அவர்களைச் செத்தொழியும்வரை கடுங்காவல் சிறையில் அடைப்பீர். 

எதிர்த்துப் பேசினால், சிரச்சேதம்கூடச் செய்யலாம்.

இவற்றையும் இவை போன்ற அதிரடி மாற்றங்களையும் செய்தால், ’ஒரே நாடு ஒரே மொழி’ என்னும் மோடி, அமித்ஷா போன்ற ‘இந்தி’யத் தலைவர்களின் கனவு வெகு விரைவில் நனவாகும்!

வாழ்க இந்தி! வளர்க இந்தி!! வெல்க இந்தி!!!

https://www.hindutamil.in/news/india/1272854-new-criminal-laws-explained-and-important-changes-to-be-known.html