புதன், 30 ஏப்ரல், 2025

பயமுறுத்தும் பக்திமான் மோடியும் ‘பக்கா’ பகுத்தறிவாளன் ‘டிரம்ப்’பும்!!!

‘NEWS தமிழ்’ தொலைக்காட்சியில் காலை 09.45 மணிக்கு வெளியான ஒரு செய்தி என்னைப் பிரமிக்கச் செய்தது.

“நான் அடுத்த ‘போப்’ ஆக விரும்புகிறேன்” -முகத்தில் வசீகரப் புன்னகை தவழ இதைச் சொன்னவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர்[ஜனாதிபதி] ‘டொனால்டு டிரம்ப்’ ஆவார்.

தான் மதச்சார்பற்ற ஒரு பெரிய நாட்டின் பிரதமர் என்பதை மறந்து, கோயில்களைக் காணும்போதெல்லாம் நீட்டிப் படுத்துக் கும்பிடு போடும் மோடியுடன்[வழிபடுவது அவரின் உரிமை. ஆனால், படம் பிடித்து ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரம் தேடுவது ஏற்கத்தக்கதல்ல] ஒப்பிட்டபோது.....

உலக அளவில் முன்னணி பெற்றிருப்பதும், அமெரிக்காவில் அதிக அளவில் பின்பற்றப்படுவதுமான கிறித்தவ மதத் தலைவர் ‘போப்’ பதவியை டிரம்ப் கிண்டலடித்தது அடியேனைப் பெரிதும் வியக்கச் செய்தது.

மூடநம்பிக்கைகளின் விளைநிலங்களான[மதங்களால் விளைந்த நன்மைகளைவிடவும், உண்டாகும் தீமைகள் மிக மிக ஆதிகம்] மதங்கள் மீது மக்கள் கொண்டிருக்கும் அளவிறந்த மோகம் டிரம்ப் போன்றவர்களின் செயல்பாடுகளால் படிப்படியாக குறையும் என்று நம்பலாம்.

அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு என் மன நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

காணொலி:

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

“நான் இந்தியன் அல்ல”... சொல்லத்தான் நினைக்கிறேன்! ‘தில்’ இல்லை!!

இந்திய ராணுவத்தில்கூட, இந்தி-பீகாரி வீரர்களின் ஆதிக்கத்தால், இந்தி பேசாத வீரர்கள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்திய ராணுவத்தில் இந்தச் சூழ்நிலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?[கோரா கேள்வி]

பதில்[Venkat Rusty]:

என் உறவினர்கள் சிலர் இராணுவத்தில் இருந்தார்கள். அவர்கள் சொன்ன சில தகவல்கள்.

//அங்கு இந்தி கட்டாயம். பணியில் சேர்ந்த சில நாள்களில் அனைவரும் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும்[ஒன்றும் பிரச்சனை இல்லை. பேசக் கத்துக்கிறாங்க. மற்றவர்களோடு பேசிப்பழகத் தேவையான அளவு கற்றுக்கொள்கிறார்கள்].

பிரச்சனை எங்கு என்றால், உயர் பதவிக்கான தேர்வுகளில்தான். தேர்வுகள் பெரும்பாலும் ஹிந்தியில்தான் நடக்கும். ஹிந்தி கத்துக்கிட்டவர்கள் ஹிந்தியைத் தாய் மொழியாகக் கற்றவர்களோடு போட்டியிட வேண்டும். சில தேர்வுகள் ஆங்கிலத்தில் உண்டு. நம்ம ஊரிலிருந்து 10ஆவது மட்டும் படித்துவிட்டுப் போகிறவர்களுக்கு ஆங்கிலம் எப்படி வரும்?[உரையாடல் மொழி இந்திக்குப் பதிலாக ஆங்கிலமாக இருந்தால், பிழைகள் இருந்தாலும் தேர்வை எதிர்கொள்ள முடியும். ‘இந்தி’யன்கள் முந்திக்கொண்டான்கள்] ஹிந்தி தெரிந்த அளவுக்குக்கூட அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.

இப்படி ஒரு சிக்கல் பொதுத் தேர்வுகளிலேயே உண்டு என்பதைப் பெரியாரும் அண்ணாவும் அன்றே சுட்டிக்காட்டினார்கள். ஆனால், இராணுவத்துக்குள் நடக்கும் இந்த அநியாயத்தைத் தடுக்க அவர்களால் இயலவில்லை!

இது போன்ற எந்தப் பிரச்சனையைப் பற்றியும் கவலைப்படாமல் மும்மொழிக்கும் ஹிந்திக்கும் ஆதரவு கொடுக்கும் நம்ம ஊர் துரோகிகளைப் பற்றி என்ன சொல்வது! 


!!!!!இந்தி வெறியன்களின் இந்த அட்டூழியம் நீடிக்கும் நிலையில் நான் தொடர்ந்து இந்தியனாக இருப்பது[எப்போதும் இந்தியாவில் வாழும் தமிழனாக மட்டும்] சாத்தியமே இல்லை” என்று சொல்லத் தோன்றுகிறது. பாகிஸ்தானுடன் மோதல் வலுத்துவரும் நிலையில், சொன்னால் ‘தேசத் துரோகி’ என்பார்களே!


https://ta.quora.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88 -

திங்கள், 28 ஏப்ரல், 2025

தீவிரவாதிகளை[Terrorist group] ஆயுதக் குழுக்கள்[Armed group] என்று BBC சொன்னது தவறா?!


மேற்கண்ட செய்தியைப் படித்தவுடன், ஆயுதக் குழு[Armed group> militants]என்பதற்கும் ‘தீவிரவாதிகள்’[terrorist group] என்பதற்கும் உள்ள் பொருள் வேறுபாட்டை அறிந்திடக் ‘கூகுள் மொழியாக்கத்தைப் பயன்படுத்தியதில் கீழ்க்காணும் விளக்கம் கிடைத்தது.

The key difference between an armed group and a terrorist group lies in their primary tactics and target. Armed groups primarily engage in armed conflict to achieve political or ideological goals, while terrorist groups focus on using violence and fear to achieve their objectives, often targeting civilians>
ஆயுதமேந்திய குழுவிற்கும் பயங்கரவாதக் குழுவிற்கும் இடையிலான முக்கிய வேறுபாடு அவர்களின் முதன்மைத் தந்திரோபாயங்கள் மற்றும் இலக்குகளில் உள்ளது. 'ஆயுதக் குழுக்கள்' முதன்மையாக, அரசியல் அல்லது சித்தாந்த இலக்குகளை அடைய ஆயுத மோதலில் ஈடுபடுகின்றன, அதே நேரத்தில் 'பயங்கரவாதக் குழுக்கள் தங்கள் நோக்கங்களை அடைய வன்முறை மற்றும் பயத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன; பெரும்பாலும் பொதுமக்களை குறிவைக்கின்றன.
 
‘ஆயுதக் குழுக்கள்’ என்பதற்கும் 'தீவிரவாதிகள்[குழுக்கள்]’ என்பதற்கும் வேறுபாடு இருப்பினும், ‘பிபிசி’ ஆயுதக் குழுக்கள் என்று குறிப்பிட்டது[செய்தி நிறுவனத்திற்கு உள்ள உரிமை] நம் கண்ணோட்டத்தில் தவறாக இருப்பினும், அதிருப்தி விரக்தி எல்லாம் தெரிவிப்பது தேவையற்றது எனலாம்[ஒரு செய்தியிலுள்ள சொல்லாட்சிகளில் குற்றம் கண்டுபிடிக்கும் வெட்டி வேலையைத் தவிர்த்து, குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்கான வழிவகைகளைத் தேடுவது புத்திசாலித்தனம் ஆகும். 

26 பேர் கொலை செய்யப்பட்டு ஆறேழு நாட்கள் போல ஆகியும் கொலைகாரர்கள் பற்றி[தீவிரவாதிகள் என்று குறிப்பிடவேண்டுமோ?] யாதொரு துப்பும் கண்டறியப்படாத நிலையில், மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ஒன்றிய அரசு செய்யும் வேண்டாத தடாலடி நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

உறுதிமொழி:
இந்தப் பதிவை வெளியிட்ட நான் 100% அதிதீவிரமான இந்தியத் தேசப் பக்தனே தவிர தேசத் துரோகி அல்ல என்று உறுதியளிக்கிறேன்[ஹி... ஹி... ஹி!!!].

இந்தியாவைக் காட்டுமிரண்டி நாடாக்கும் நாசகாரப் ‘பாஜக’ ஆட்சி!!!

//முகலாயர்கள் & டெல்லி சுல்தான்கள் பற்றிய அனைத்துப் பாடப்பிரிவுகளும் 7ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்திய வம்சங்கள், 'புனிதப் புவியியல்', மகா கும்பமேளா பற்றிய குறிப்புகளும், மேக் இன் இந்தியா மற்றும் பேட்டி பச்சாவ்[?], பேட்டி பதாவோ[?] போன்ற அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய அத்தியாயங்களும் புதியதாகச் சேர்க்கப்படவுள்ளன[https://tamil.abplive.com]//

கும்பமேளா கொண்டாட்டம் என்னும் பெயரில் மூடர்களின் எண்ணிக்கையைப்  பெருக்கித் தங்களுக்கான ஆதரவாளர்களை அதிகரித்துக்கொண்ட மோடி வகையறாக்கள், இனியும் இந்த முட்டாள்களின்[மாணவர்கள் உட்பட] எண்ணிக்கையைக் கூட்டுவதற்கு மேற்கொண்ட சூழ்ச்சியே பாடத்திட்டத்தில் கும்பமேளாவையும், புவியியலில் புனிதத்தையும் சேர்க்கும் நடவடிக்கை.

முகலாயர்கள் & டெல்லி சுல்தான்கள் பற்றிய அனைத்துப் பாடப்பிரிவுகளையும் நீக்குவதால் விளையும் பயன் என்ன?[நல்ல நிகழ்வுகளும் கெட்டவையும் நிறைந்ததுதான் வரலாறு. கெட்ட நிகழ்வுகள் எதிர்காலச் சந்ததியினருக்குப் படிப்பினை நல்குவதாக அமையும்> நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்> https://www.kalaignarseithigal.com/politics/2023/04/05/mughal-history-ban-on-rss-removal-of-courses-on-godse-in-cbse-syllabus-suvenkatesan-mp-condemns.

மொகலாயர் பற்றிய வரலாற்று நிகழ்வுகளை மறைப்பதன் மூலம் இங்குள்ள பல லட்சம் இஸ்லாமியர்கள் இந்துக்கள் ஆவார்கள் அல்லது, ஆக்கிவிடலாம் என்று நம்புகிறார்களா?

காலப்போக்கில் தங்களால் வெறுக்கப்படுபவர்கள், குறிப்பாகத் தமிழர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் பள்ளிப் பாடத்திட்டங்களிலிருந்து நீக்குவார்கள் என்பது உறுதி. மத வெறி தலைக்கேறியதன் விளைவுதான் ‘பாஜக’வின் இம்மாதிரி நடவடிக்கைகள்.

இவர்களின் அடாவடித்தனங்களை அடியோடு களைந்தெறிய, மனிதாபிமானம் போற்றுகிற அனைத்து மக்களும் தமக்கிடையேயுள்ள வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஒருங்கிணைந்து போராடுவது மிக மிக அவசியம்.

  * * * * *

https://tamil.abplive.com/education/ncert-drops-all-portions-on-mughals-and-delhi-sultanate-from-class-7-cbse-textbooks-adds-maha-kumbh-char-dham-yatra-222314

சனி, 26 ஏப்ரல், 2025

மக்களுக்குக் ‘குல்லா’ போடும் மோடி!

மைசூர்(பி.டி.ஐ): ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி மக்களை "முட்டாளாக்குகிறார்" என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை தெரிவித்தார்.

தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தெரிவித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றும், பீகாரில் நடந்த தேர்தல் பேரணியில் பங்கேற்றார் என்றும் முதல்வர் கூறினார்.

"அனைத்துக் கட்சி கூட்டத்தின்போது பிரதமர் அங்கு இருந்திருக்க வேண்டும். அவர் பீகாரில் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்தார். அவர் மக்களுக்குத் 'தொப்பி' போடுகிறார்(மக்களை முட்டாளாக்குவது என்று பொருள்)" என்று சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறினார்[ஊடகச் செய்தி]

மோடி தொப்பி போடுகிறாரோ குல்லா அணிவிக்கிறாரோ, அதி பயங்கரமான தீவிரவாதிகளின் தாக்குதலால் நாடு நிலைகுலைந்துள்ள நிலையில், அவர் பீகார் பயணத்தைத் தவிர்த்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தால், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கமாட்டார் என்பது உறுதி.

பெரியதொரு நாட்டின் பிரதமரான அவருக்கு இது
தெரியாமல்போனது நம்மைப் பேராச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

அமித்ஷாஜி அசாத்திய தைரியசாலி! மோடிஜி?!?!

பிரதமர் மோடி சவுதிப் பயணத்தை முடித்துவிட்டு வேக வேகமாக நாடு திரும்பினார். சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்ட இடத்தை[காஷ்மீர்> பகல்காம்]ப் பார்வையிடுவார்[உள்துறை அமைச்சர் அமித்ஷா அதைச் செய்தார்] என எதிர்பார்த்தோம். ஆனால் அவரோ,

பீகார் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. இந்தத் தாக்குதலைப் பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துகிறாரோ என்னும் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை என்று பேசியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள்.

திருமாவுக்கு எழுகிற சந்தேகம் நமக்கும் எழுகிறது. கூடவே.....

கலவரப் பூமியான மணிப்பூருக்கு ஒரு முறைகூடச் செல்லாத மோடி, 26 அப்பாவிப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்ட இடத்திற்கும் செல்லாமலிருப்பது, இவர் ஒரு பெரிய நாட்டை ஆளுவதற்குத் தேவையான மன உறுதி இல்லாதவரோ என்னும் சந்தேகத்தையும் தோற்றுவிக்கிறது![அமித்ஷாவின் மனோதிடம் பாராட்டத்தக்கது. ராகுல் காந்தியும் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது]

* * * * *

https://www.vikatan.com/government-and-politics/policy/pahalgam-attack-modi-bihar-election-campaign-thirumavalavan

வியாழன், 24 ஏப்ரல், 2025

மோடிஜியிடம் ஒரு வேண்டுகோள்... முதலில் ‘இது’! ‘அது’ அப்புறம்!!

#லக நாடுகள் மத்தியில் பஹல்காம் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தீவிரவாதிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குத் தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்[https://tamil.abplive.com/news/india/pm-modi-switch-to-english-and-said-will-pursue-pahalgam-terrorists-to-the-ends-of-the-world-222059]#

மோடிஜியின் இந்த ஆவேச அறிவிப்பு அனைத்து இந்தியக் குடிமக்களையும் பேரானந்தத்தில் ஆழ்த்துவதாகும்.

தீவிரவாதிகள் உலகின் எந்தவொரு மூலைமுடுக்கில் இருந்தாலும் கண்டுபிடித்து இழுத்துவரும் வல்லமை படைத்த நம் பிரதமருக்கு, அண்டை நாடான பாகிஸ்தானில் சிறையிலிடப்பட்டுச் சித்ரவதைக்கு உள்ளாகியிருக்கும் நம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை[கீழ்க்காண்பவற்றில் ஒரு காணொலி அதை உறுதிப்படுத்துகிறது] மீட்டுவருவதென்பது மிக மிக மிக எளிது.

நம் பிரதமர் முதலில் இந்த மீட்புப் பணியைச் செய்திடல் வேண்டும் என்பது நம் கோரிக்கை.

கோரிக்கை நிறைவேறும் நாளை வெகு ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறோம்.

‘பூக்குழி’ என்னும் உயிர் பறிக்கும் படுகுழி!!!

எங்கெல்லாம் கோயில்கள் உள்ளனவோ[குறிப்பாக அம்மன் கோயில்கள்] அங்கெல்லாம் தவறாமல் ஆண்டுதோறும் ‘தீ மிதி’(பூக்குழி மிதித்தல்) விழா நடத்துகிறார்கள் பக்தர்கள்.

பெயர்தான் ‘தீ மிதி’ விழாவே தவிர, ‘தீக்குழி’யில் கொட்டப்பட்டுள்ள தீயை[நெருப்பு] மிதித்து நடந்து செல்வர்கள் எவரும் இல்லை; உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள்.

பக்தியால் அபிரிதமான சக்தி பெறுகிற நீங்கள், பூக்குழியில் படுத்துப் புரளலாமே என்றால், நெற்றிக்கண் திறக்கிறார்கள். 

அடித்துப்பிடித்து ஓடும் பக்திமான்களில் கணிசமானவர்கள் அவ்வப்போது குப்புறக் கவிழ்ந்து விழுந்து படுகாயமடைவதும் நிகழ்கிறது; சாமிக்கு உயிரைக் காணிக்கை ஆக்குபவர்களும் உள்ளனர்.

காலங்காலமாக இவர்கள் கடைபிடிக்கும் காட்டுமிராண்டித்தனம் இது.

நாமக்கல் எங்கள் மாவட்டம். முட்டை உற்பத்தியிலும் சுமையுந்து[லாரி] & ஆழ்துளைக் கிணறு தோண்டும்[ரிக்] தொழில்களிலும்,  உலகப் புகழ் பெற்ற இந்த மாவட்டத்தில் தரமான கல்வியளிக்கும் நிலையங்கள் பெருமளவில் இருக்கின்றன.

இருந்தும், பக்தி நெறியில் செல்வோரின் புத்தி மட்டும் வளரவே இல்லை.

கீழே இடம்பெற்றுள்ள காணொலி நிகழ்ச்சி இதற்கான  அண்மைக் கால உதாரணம்.

காணொலி:

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

மனிதம் தெரியும்! அதென்ன புனிதம்?!

கராதிகளெல்லாம், 'புனிதம்' என்னும் சொல்லுக்குத் 'தூய்மை', 'தெய்வீகத்தன்மை' என்பதாகப் பொருள் தருகின்றன.

புனிதத்திற்குத் ‘தூய்மை’ என்னும் பொருள் ஏற்கத்தக்கது. 'தெய்வம்' இருப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாதவரை, அது 'தெய்வீகத் தன்மை'யைக் குறிப்பதாக மதவாதிகள் சொல்வது ஏற்கத்தக்கதல்ல.

புனிதத்தைத் தெய்வீகம் ஆக்கிய அவர்கள்தான் அசுத்தம் நிறைந்த ஆற்று நீரைப் புரியாத ஏதேதோ மந்திரங்களைச் சொல்லிப் 'புனித நீர்'  ஆக்கினார்கள்.

[புனிதர்களுக்கு மட்டுமே புரிகிற மந்திரம்!]

அதைக் கோபுரக் கலசங்கள் மீது கொட்டி மந்திரம்[சாமானியர்களை முட்டாள்கள் ஆக்கும் தந்திரம்] ஓதினால், லட்சக்கணக்கானவர் கூடி நின்று மெய் மறந்து வழிபடுகிறார்கள்.

சிற்பிகளால் உருவாக்கப்பட்ட சிலைகள் மீது அதை ஊற்றினால் அவற்றில் தெய்வம் குடியேறிவிடும் என்று நம்ப வைத்தார்கள்.

நம்புகிற அறிவிலிகளின் எண்ணிக்கை நாளும் அதிகரிக்கிறது.

அந்தச் சூதுவாதர்கள் சொல்வதை நம்பாதீர்கள் என்றவர்கள் ‘நாத்திகர்’ ஆக்கப்பட்டார்கள்.

‘கும்பாபிஷேகம்’ செய்து கோயில்களைப் புனிதப்படுத்துவதாகவும், கல்லாலும் உலோகங்களாலும் ஆன சிலைகளுக்குப் புனிதாபிஷேகம் செய்து கடவுளாக்குவதாகவும் சொல்லும் பொய்யர்களைத்தான் உலகம்[பெரும்பாலோர்] நம்புகிறது!

அவர்களின் பார்வையில், சிந்திக்கத் தூண்டும் பகுத்தறிவாளர்கள்[நாத்திகர்கள்] படு அயோக்கியர்கள்!!

திங்கள், 21 ஏப்ரல், 2025

முற்றுகிறது ஆதிக்க வெறியனுக்கும் தமிழ்நாட்டுத் தலைவனுக்குமான மோதல்!!!

மிழ்நாடு அரசு நிர்வாகத்தைச் சீர்குலைப்பதற்கென்றே தான் அனுப்பிய ‘எடுபிடி’யைத் தூண்டிவிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் இழந்த அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான[உதகையில் பல்கலக்கழகத் துணைவேந்தர்கள் மாநாடு] நடவடிக்கையில் ஈடுபட வைக்கிறார் இந்த நாட்டுப் பிரதமர் மோடி என்றால், அவர் எந்த அளவுக்கு ஆதிக்க வெறி கொண்டவர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஏற்கனவே, ‘எடுபிடி’யின் அடாவடித்தனங்களால் கடும் சினத்திற்கும் மனக் கொதிப்பிற்கும் உள்ளாகியிருக்கும் தமிழர்கள், கட்டுப்பாடிழந்து கலவரங்களில் ஈடுபட்டால், தமிழ்நாட்டில் அமைதி சீர்குலைந்துவிட்டதாகத் ‘திமுக’ ஆட்சியைக் கலைப்பதோடு.....

இங்குள்ள தமிழினத் துரோகிகளை அணி சேர்த்து, 2026 தேர்தலில் வென்று தமிழ்நாட்டில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது மோடியின் திட்டம்.

‘எடுபிடி’யின் உதகை மாநாடு தொடர்பான அடுத்த கட்ட நிகழ்வுகளுக்குப் பிறகு மோடியின்  சுயரூபம் வெளிப்படும் என்று நம்பலாம்.

வடக்கன்களிடம் விலைபோகும் கொத்தடிமைகளைப் போலவே, ஒட்டுமொத்தத் தமிழினமும் வடக்கன்களின் தலைவனுக்கு ஆதரவளிக்குமா, எதிர்த்துப் போராடி வெற்றி பெறுமா என்பது கொஞ்சம் நாட்களில் தெரியவரும்.

இனியும் தமிழ்நாட்டை ஆட்சிபுரிவது வடக்கன்களா, தமிழினத் தலைவர்களா[ஸ்டாலினோ வேறு எவருமோ] என்பதை முடிவு செய்யவேண்டிய இக்கட்டான அரசியல் சூழலில் சிக்கிக் கிடக்கிறார்கள் தமிழ் மக்கள்.

பாவம் கடவுள்! பாடாய்ப்படுத்தும் மூன்று முன்னணி மதங்கள்!!

‘கடவுள் உலகைப் படைத்தது ஏன் என்னும் இன்றியமையாத கேள்விக்கு விடை தேடும் முயற்சியைத் தவிர்த்துவிட்ட மதவாதிகள், ‘எத்தனை நாட்களில் படைத்தார்?’ என்ற கேள்வியை எழுப்பி அதற்கு விலாவாரியாகப் பதிலும் சொல்லுகிறார்கள்; மனிதர்களால் எழுதப்பட்ட மத நூல்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இவர்கள் சொல்வதில் உண்மை இல்லை என்று மறுப்புத் தெரிவித்தால் வசைமாரி பொழிகிறார்கள்; மறுப்பவர்களின் தலைகளுக்கு ‘விலை’ வைக்கிறார்கள்.

கடவுள் 6 நாட்களில் உலகங்களைப் படைத்துவிட்டு 7 ஆவது நாளில் ‘ஓய்வு’ எடுத்துக்கொண்டாராம்[ரொம்பத்தான் வயதாகிவிட்டதோ? ஹி... ஹி... ஹி!!!]. ‘ஆதி ஆகமம்’ முதல் அத்தியாயத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதாம். இப்படிக் கிறித்தவர்கள் சொல்கிறார்கள்.[-www.cmn.co.za/html/faq/how_long_create.htmகடவுளைப் போலவே மனிதர்களாகிய நாமும், ஆறு நாட்கள் உழைத்துவிட்டு ஏழாவது நாள் ஓய்வெடுக்கலாமாம். கடவுளின் வழியில் மனிதன்! இது எப்படியிருக்கு?

சூரியனின் இயக்கத்தைக் கொண்டுதான் நாட்களும் நேரங்களும் கணிக்கப்படுகின்றன. சூரியனே இல்லாத நிலையில், ஆறு நாள் என்று கணக்கிட்டது எப்படி? முதலில் கதை கட்டியவர் கொஞ்சமேனும் சிந்தித்திருக்க வேண்டாமா?

ஆறு நாட்கள்! அது என்னய்யா கணக்கு?

விவரிப்புக்கு அப்பாற்பட்ட பேராற்றல் வாய்ந்த கடவுளால், ஆறே ஆறு மைக்ரோ...மைக்ரோ...மைக்ரோ நொடிகளில்[இப்படி நாம் வரையறுப்பதும் தவறுதான்] தாம் நினைப்பதையெல்லாம் படைத்துவிட முடியுமே. அப்புறம் எதற்கு ஆறு நாள் ஏழு நாள் எல்லாம்?

ஆறு நாள் குழறுபடியைப் புரிந்துகொண்ட மதப் பற்றாளர்கள்,  “ஆறு என்பது அடுத்தடுத்த கட்டங்களே தவிர, ஆறு நாட்கள் அல்ல; ஆறு கட்டங்களில் லட்சோப லட்சம் ஆண்டுகள் உழைத்து[...millions of years when God created the world...] அவர் தம் செயலைச் செய்து முடித்தார்” என்று சொல்லிச் சமாளித்தார்கள்.

உலகங்களை[பிரபஞ்சத்தை]க் கடவுள் படைத்தார் என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். எதற்கு இந்த வழவழா கொழகொழா வியாக்கியானம் என்பது நமக்குப் புரியவே புரியாத புதிராக இருக்கிறது!

பாவம் கடவுள்! அப்படி ஒருவர் இருந்தால், இந்தக் கதைகளை எல்லாம் கேள்விப்பட்டு, திக்குத் தெரியாத வெட்ட வெளியில் பித்துப் பிடித்து அலைந்துகொண்டிருப்பார் என்பதில் எள் முனை அளவும் சந்தேகமில்லை.

இந்த நாள் கணக்கு குரானிலும் இடம் பெற்றிருக்கிறது

அந்த ஆறு நாட்களில் ‘சொர்க்கம், நரகம்’ ஆகியவற்றை மட்டுமே 
கடவுள் உருவாக்கினார் என்கிறது அது. 

‘ஆறு’ எனபது வெறும் கணக்குத்தான். உலகங்களைப் படைக்க வரையறையற்ற ஆண்டுகள் அவருக்குத் தேவைப்பட்டன என்கிறார்கள் மதப் பிரச்சாரகர்கள்[The Quran in S. 7:54, 10:3, 11:7, and 25:59 clearly teaches that God created "the heavens and the earth" in six days.]

உயிர்களே படைக்கப்படாத நிலையில், சொர்க்கத்தையும் நரகத்தையும் கடவுள் படைத்ததன் பொருள் என்ன?

தான் படைக்கவிருக்கும் உயிர்களில் புண்ணியம் செய்பவை சொர்க்கத்திற்கும் பாவம் செய்பவை நரகத்திற்கும் செல்ல வேண்டும் என்பதற்காகத்தானே?

ஆக, பாவ புண்ணியச் செயல்களில் ஈடுபடும் வகையில் உயிர்களைப் படைப்பதென்று கடவுள் முடிவெடுத்திருக்கிறார்; படைத்திருக்கிறார்.

கடவுளின் இந்தச் செயல், கடும் கண்டனத்திற்கு உரியதல்லவா?

இந்து மதவாதிகளைப் பொருத்தவரை ஆறு, ஏழு என்று கடவுளுக்குக் ‘காலக்கெடு விதிப்பதைத் தவிர்த்துவிட்டு, அது எப்படித் தோன்றியது என்பதற்கு மட்டும் கதை கற்பித்திருக்கிறார்கள்.

முட்டை வடிவிலான உலக உருண்டையிருந்தே["Egg-shaped cosmos"]
அனைத்து உலகங்களும்[பிரபஞ்சம்] விரிவடைந்ததாகச் சொல்கிறார்கள். இது பற்றிப்  பிரமானந்த புராணம்[Brahmanda Purana] விரிவாகப் பேசுகிறதாம். [Wikipedia]

கோழி முட்டையிலிருந்து குஞ்சு வெளியாவதைப் பார்த்த அனுபவம் இவர்களை இப்படிக் கற்பனை செய்ய வைத்திருக்கிறது. ஆண் பெண் சேர்க்கையால் புதிய உயிர் தோன்றுவது போல, பூமிப் பெண்ணும் ஆகாய ஆணும் புணர்ச்சி செய்ததால் பிரபஞ்சம் தோன்றியது என்று நம்பினார்களே, அது போல.

அந்த நம்பிக்கையின் விளைவாகச் ‘சிவலிங்கம்’ உருவாக்கப்பட்டது[வெகு சுவாரசியமான கதை உண்டு]. அன்றிலிருந்து இன்றுவரை அது கடவுளாக வழிபடப்படுகிறது.

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ கதைகள் சொல்லிச் சொல்லித்தான் மதங்கள் மக்களைத் தங்களின் அடிமைகள் ஆக்கின.

இன்னும் சொல்லலாம். இப்போதைக்கு இவை போதும்.

சனி, 19 ஏப்ரல், 2025

300[293] முட்டாள்கள் வேண்டாம்! நாட்டை ஆள 3 அறிஞர்கள் போதும்!!

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் உச்ச நீதிமன்றத்தைக் கேள்வி எழுப்பியதை அடுத்து, தற்போது பாஜக தலைவர் ஒருவர்[பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே] உச்ச நீதிமன்றம் இதுபோன்று செயல்பட்டால் நாடாளுமன்றம் செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று கூறி, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியுள்ளார். மேலும், "நாட்டில் மதப் போர்களைத் தூண்டுவதற்கு உச்ச நீதிமன்றம் பொறுப்பு" என்றும் அவர் கூறினார்[ஊடகச் செய்தி*

துபே கூறியதில் தவறே இல்லை. நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே[தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார் & கே.வி. விஸ்வநாதன்] நாட்டை ஆளும்படி வேண்டிக்கொள்ளலாம்.


காரணம்.....

300[பாஜக சங்கிக் கூட்டணி 293] முட்டாள்கள் ஆள்வதைவிடவும் மெத்தப் படித்த மூன்று சட்டவியல் அறிஞர்கள்[தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகள்] ஆளுவதால் இந்த இந்தியா துரித கதியில் முன்னேறும்.


சங்கிகளால் தொடுக்கப்பட்டுள்ள மதப் போர் முற்றிலுமாய் அடங்கிவிடும் என்பது உறுதி.


* * * * *

https://www.msn.com/en-in/news/India/close-down-parliament-if-supreme-court-has-to-make-

law-after-dhankhar-bjp-questions-top-court-direction/ar-AA1DdFMC?ocid=

winp2fptaskbarhover&cvid=5ce1bef6c1ca4f2c9ae70ec39f6e12df&ei=9

மோடி பெரிய லூசு! இது[பாஜக பெண் எம்.எல்.ஏ] கொஞ்சம் சின்னது!!

“நான் கடவுளுடன் நேரடித் தொடர்பு வைத்திருக்கிறேன்” என்று ஒருவர்[மத்திய பிரதேசத்தின் மோவ் சட்டசபைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் உஷா தாகூர்] சொன்னால் அவரைப் பற்றி நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்?

முடிவெடுப்பதற்கு முன்னால், “தான் சாதாரண மனிதப் பிறவி அல்ல; கடவுளால் அனுப்பப்பட்டவன் என்றும், கடவுளின் குழந்தை என்றும் மோடி சொன்னாரே, அவரைப் போலத்தான் இவரும் பேசியிருக்கிறார்?’ என்று எதிர்க் கேள்வி எழுப்புவீர்கள்.

“இருவரின் பேச்சும் உங்களுக்கு ஏற்புடையவைதானா?” என்று நாம் கேட்டால், “அது பெரிய லூசு[பைத்தியம்]. இது அதைவிடவும் கொஞ்சம் சின்னது” என்பீர்கள்?

நீங்கள் இப்படிச் சொல்வீர்களோ அல்லவோ, நாம் உறுதிபடச் சொல்வது இதையேதான்.

இவர்களைப் போல் பெரிய லூசுகளும் சின்னச் சின்ன லூசுகளும் நிறைந்த கட்சிதான் ‘பாரதீய ஜனதா கட்சி’!

லூசுகளின் இந்தக் கட்சிதான்[இந்தித் திணிப்புடன் மூடநம்பிக்கைகளைத் திணிப்பதும், மதவெறியைப் பரப்புவதும்தான் இவர்களின் முழுநேரத் தொழில்] இந்தியாவைப் பல ஆண்டுகளாக ஆண்டது; ஆண்டுகொண்டிருக்கிறது.

இந்தியர்கள் அத்தனை பேரும் ‘லூசுகள்’ ஆகும்வரை இந்த லூசுகள்தான் இந்த நாட்டை ஆள்வார்களா?

விடை தெரியாத கேள்வி!

* * * * *

மாலைமலர்ச் செய்தி:

#மத்திய பிரதேசத்தின் மோவ் சட்டசபைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக இருப்பது உஷா தாகூர்.

அப்படி பணம், சேலை, மது போன்றவற்றை வாங்கிக்கொண்டு வாக்களிப்பவர்கள், அடுத்த ஜென்மத்தில் நிச்சயமாக ஒட்டகம், செம்மறி, வெள்ளாடு, நாய், பூனையாகத்தான் பிறப்பார்கள்[இன்னொரு உஷா தாகூராகப் பிறக்காமலிருந்தால் போதும்]

கடவுள் அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் கடவுளுடன் நேரடித் தொடர்பு வைத்திருக்கிறேன். என்னை நம்புங்கள் என தெரிவித்தார்#


https://www.maalaimalar.com/news/national/those-voting-on-basis-of-money-liquor-will-be-reborn-as-animals-bjp-mla-769368?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjDtzp8LMPrYtwMwr9bAAw&utm_content=rundown


வெள்ளி, 18 ஏப்ரல், 2025

போதைப் புருசனும் புத்திசாலிப் பெண்டாட்டியும்![குடும்பக் கதை> பழசோ பழசு]

"கொட மிளகா பஜ்ஜி போடுன்னு ஒரு மாசமா சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்க மாட்டேங்குற" -கண்ணுச்சாமியின் குரலில் ஏக்கம் கலந்த வருத்தம்.

“யோவ், முந்தா நாள் போட்டேனே. போடப் போடத் தின்னு தீர்த்தியே, மறந்து போச்சா? என்றாள் கல்யாணி.

“ஏண்டி பொய் சொல்றே?”

“நான் எதுக்குப் பொய் சொல்லணும்? பத்து நாள் முந்தி, சுடச்சுடக் குழிப் பணியாரம் வேணும்னே. போட்டுத் தந்தேன். வயிறு முட்டத் தின்னே. அடுத்த நாளே, ‘பணியாரம் கேட்டேனே, ஏன் போடலைன்னு கோபப்பட்டே. நல்லா போதை ஏத்திட்டு வந்து திங்கறே. தூங்கி முழிச்சா எல்லாம் மறந்து போயிடுது!” -முகம் சிவக்கச் சொன்னாள் கல்யாணி.

“என்னை மன்னிச்சுடு புள்ள.” -குழைவாகச் சொல்லிக்கொண்டே, உடம்பெங்கும் காமம் பரவ, கண்கள் கிறங்கக் கல்யாணியின் கை பற்றினான் கண்ணுச்சாமி.

வெடுக்கெனக் கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்ட கல்யாணி, “குடிச்சிட்டு வந்து என்னைத் தொடுறதை நிறுத்திக்கோ. நான் கர்ப்பம் ஆயிட்டா, ‘உன்னை நான் தொடவே இல்லை’ன்னு கூசாம பொய் சொல்லுவே” என்று கடுகடுத்தாள் கல்யாணி.

குடிசையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தான் கண்ணுச்சாமி.

                                *   *   *   *   *
'குமுதம்’ வார இதழில்[2010] வெளியான கதை[கதாசிரியன்... நானே நான்!].

வியாழன், 17 ஏப்ரல், 2025

வறுமையில் வாடும் சாதியாருக்கு அரசாங்கச் செலவில் கோயில்!!![பரிந்துரைப் பதிவு]


“கடவுள் என்றொருவர் இருப்பதே உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஏன் இப்படிக் கண்ட கண்ட சாமியின் பெயரால் அடித்துக்கொள்கிறீர்கள்?என்று பகுத்தறிவு பேசி அறியாமையில் உழலும் மனிதர்களைத் திருத்துவது இயலவே இயலாது.

எத்தனை எத்தனைப் பெரியார்கள் வந்து, இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகளுக்குப் பரப்புரை செய்தாலும், இவர்களைத் திருத்துவது அத்தனை எளிதல்ல.

மேற்கண்டது[காணொலி] போன்ற பிரச்சினைகள் எங்குமே எழாமலிருக்க, அனைத்துக் கிராமப்புறக் கோயில்களையும் அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, விழாக்கள் நடத்தும் பொறுப்பையும் ஏற்கலாம்.

ஆனால், கோயிலுக்கு உரிமை கொண்டாடும் ஜாதிக்காரகள் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்[தேர்தலில் வாக்களிக்கமாட்டார்கள்] என்பதால் இது சாத்தியமே இல்லை.

எனவே, இது மாதிரியான நடவடிக்கைகளைத் தவிர்த்துவிட்டு, எந்தெந்த ஊரிலெல்லாம் எந்தெந்தச் சாதியாருக்குக் கோயில் இல்லையோ அந்தந்தச் சாதியாருக்கென்று அரசாங்கம் தனித் தனிக் கோயில் கட்டிக் கொடுக்கலாம்[சாதிக்காரர்களின் எண்ணிக்கையைப் பொருத்து கோயில் எழுப்ப ஆகும் செலவை நிர்ணயிக்கலாம்?].

தங்களுக்கான கோயிலைத் தவிர பிற சாதிக்காரர்களின் கோயிலுக்குள் அவர்களின் அனுமதியில்லாமல் நுழையக்கூடாது என்று ஆணை பிறப்பித்தல் மிக அவசியம்.

திருந்தவே திருந்தாத முட்டாள்களை அவர்கள் வழியில் சென்று திருப்திப்படுத்தினால் மட்டுமே, சாமிகளின் பெயரால் நிகழும் மோதல்களைத் தடுத்திட இயலும் என்பது கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.

புதன், 16 ஏப்ரல், 2025

கடவுளை நம்புவதால் தடைபடும் ஆறறிவு வளர்ச்சி!!!

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன, சூரியனைச் சுற்றியுள்ள கோள்களின் சுற்றுப்பாதையில் இருந்து விண்மீன் திரள்களின் சுழற்சிவரை. 

இயங்குவது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. விண்வெளியில் அசைவில்லாமல் இருப்பது எதுவும் இல்லை. அசைவற்றிருப்பவை போல் காட்சியளிக்கிற கற்பாறை, இரும்புத்தூண் போன்றவற்றில்கூட இயக்கம்[இதன் விளைவுதான் அவற்றின் உருமாற்றம்] இடம்பெற்றிருக்கிறது.

இந்த இயக்கம்தான் அண்டவெளியின்[பிரபஞ்சம்] அடிப்படை அம்சங்களில் மிக முக்கியமானது.

கோள்கள் மட்டுமல்ல, விண்மீன்கள் மட்டுமல்ல, மிகச் சிறிய துகள்களும்கூட இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

ஏன் இந்த இடைநிறுத்தம் இல்லாத இயக்கம்?

'விண்வெளியில் இரண்டு பொருள்கள் ஒன்றையொன்று நெருங்கி வரும்போது, ​​அவற்றின் பரஸ்பர ஈர்ப்பு விசையால் பெரும்பாலும் அவை மோதுவதற்கு அல்லது பிரிந்து செல்வதற்குப் பதிலாக ஒன்றையொன்று சுற்றி வருவதற்கு இந்த இயக்கம்தான் காரணம்'

இயக்கம் பிரபஞ்சத்தின் உயிர்நாடி. 

இயக்கம் என்பது ஆற்றலின் வெளிப்பாடு.

இந்த இயக்கம் தானாக நிகழ்கிறதா, நிகழ்த்தப்படுகிறதா?

“ஆண்டவனால் நிகழ்த்தப்படுகிறது என்று அறிவியலாளர்கள்[பெரும்பாலோர்] சொல்வதில்லை; சொல்லப்படுவதை ஏற்பதும் இல்லை.

ஏற்றால்.....

கேள்விக்கு விடை தேடும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி விழும். அறிவு வளர்ச்சி முற்றிலுமாய்த் தடைபடும்.

ஆகவே, இவ்வகையான எந்தவொரு கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைப்பதை அவர்கள் விரும்புவதில்லை.

கேட்கிறார்கள்; கேள்விகளைக் கேட்கிறார்கள். இதனால் அவர்களின் அறிவு வளர்கிறது; அறிவியலும் வளர்ச்சி பெறுகிறது.

முற்றுப்புள்ளி வைப்பவர்கள் மதவாதிகள். கடவுளின் பெயரால் கணக்குவழக்கில்லாமல் மூடநம்பிக்கைகளை உற்பத்தி செய்தவர்கள்... செய்பவர்கள் அவர்கள்!

செவ்வாய், 15 ஏப்ரல், 2025

“செருப்புப் போடமாட்டேன்”... சபதம் செய்த[மோடி பிரதமராகும்வரை] ஹரியானா பைத்தியம்!!!

‘கப்ஸா’ என்னும் அரபுச் சொல்லுக்கு, ‘மெய் என்று நம்பும் வகையில் பேசும் பொய்’ என்று பொருள்.

இதற்கு உதாரணம் தேடி நீங்கள் எங்கும் அலையவே வேண்டாம். தொடர்ந்து வாசியுங்கள்.

திமுக ஆட்சியை அகற்றும்வரை செருப்புப் போடமாட்டேன் என்று நம்ம ஊர்க் கிறுக்கன் அண்ணாமலை சபதம் செய்தது போல,  மோடியின் தீவிர ரசிகனான ராம்பால் காஷ்யப் என்பவன்[ஹரியானாவின் கைதல் மாவட்டத்தைச் சேர்ந்தவன்]. 'மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு அவரைச் சந்திப்பேன். அப்போதுதான் காலணிகளை அணிவேன்; அதுவரை காலணிகளை அணிய மாட்டேன்" என்று சபதம்[2011இல் சபதம்> 2025வரை>14 ஆண்டுகளாகச் செருப்பணியவில்லை] செய்தானாம்[https://www.vikatan.com].

இவனின் இந்தச் சபதம் ஏற்கத்தக்கதுதான்.

ஆனால்.....

மோடி முதன்முதலாக 2014இல் இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றபோதே இந்த ‘மெண்டல்’ காலணி அணிந்திருக்கலாம். அல்லது, மோடியால் பாராட்டப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால் அதையும் நிறைவேற்றியிருக்கலாம்{தகவல் தெரிந்ததும் இவரின் வீடு தேடி ஓடிவந்து தன்னுடைய பொற்கரங்களாலேயே[கடவுளால் அனுப்பப்படவரின் கை சாதாரண மனிதக் கையா என்ன?] அவனுக்குக் காலணி அணிவித்திருப்பார்}.

இப்படியான நிகழ்வு ஏதும் நடைபெறவில்லை.

மாறாக.....

2011ஆம் ஆண்டிலிருந்து வெறும் காலுடனேயே இருந்துவந்த இந்த ஆளுக்கு[ராம்பால் காஷ்யப்], ஹரியானவின் யமுனா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட[2025இல்] பிறகு, மோடி புதிய ஷூவை வழங்கி “இனி இதுபோல செய்யக் கூடாது” என்று கண்டித்தாராம்[மனப்பூர்வமாக அல்ல; இம்மாதிரியான அடிமுட்டாள்கள்தானே அவருக்குத் தேவை].

2014இல் நடைபெற வேண்டிய இந்த நிகழ்ச்சி, 11 ஆண்டுகள் காலதாமதமாக 2025இல் இடம்பெற்றுள்ளது.

இந்தக் காலதாமதமே ‘பாஜக’ சங்கிகளின் திட்டமிட்ட நாடகம் இது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.

மூடநம்பிக்கைகளை வளர்த்தும், அடுக்கடுக்காய் மக்களிடையே இட்டுக்கட்டிய பொய்களைப் பரப்பியும் ஆட்சியைக் கைப்பற்றும் இந்தப் பொய்யர்கள் அரசியல் களத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவது எப்போது?

* * * * *

https://www.vikatan.com/government-and-politics/modi-criticizes-volunteer-who-went-14-years-without-wearing-shoes

தலைவனின்[மோடி] தந்திரம் தொண்டனின்[அண்ணாமலை] மந்திரம்!!!

பொதுமக்களுக்குப் பணி செய்வதே ஓர் அரசியல்வாதியின் தலையாய கடமையாகும்.

தனக்கானதும் தன்னைச் சார்ந்துள்ள சொந்தபந்தங்களுக்கானதுமான பணிகளைச் செய்வதும் அவருக்குள்ள பிற கடமைகள்தான். ஆனால், இவற்றைப் பொதுமக்கள் அறியும் வகையில்{சுற்றுலாச் செல்வது, கோயிலுக்குப் போவது, பொது இடங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் மத்தியில் தியானம்[மூச்சுப் பயிற்சி&உடற்பயிற்சி போன்றவற்றால் பயனுண்டு; தியானத்தால் பயன் ஏதுமில்லை] என்னும் பெயரில் ‘பந்தா’ பண்ணுவது போன்றவை} அவர்கள் செய்தல் கூடாது.

{அவதாரி[கடவுள் அவதாரம்] மோடியின் சீடர் அண்ணாமலையார் திருவடி போற்றி!}

இவற்றைத் தவறுகள் என்பதைக் காட்டிலும் மன்னிக்கத் தகாத குற்றங்கள் என்பதே பொருந்தும்.

இம்மாதிரிக் குற்றங்களைச் சர்வ அதிகாரம் படைத்த மோடி செய்வதை[உலகம் அறிந்திட மோடி கையாளும் தந்திரமும்கூட] ஒட்டுமொத்த உலகமும் அறியும்.

மோடியின் ஆயுட்கால அடிமைகளில் முதல்நிலை வகிக்கும் அண்ணாமலை தன் தலைவனான மோடியின் மேற்கண்ட தந்திர உத்தியைத் தனக்கான ‘செயலூக்கி மந்திரமாக’ ஏற்றிருக்கிறார் என்பதைக் கீழ்க்காணும் ஒரு நிகழ்வு உறுதிப்படுத்துகிறது.

#ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ள பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, ஸ்ரீ ஸ்ரீ மகாவதார் பாபாஜி குகையில் தியானம் செய்தார்# [தினத்தந்தி].

இந்தக் கொத்தடிமையைத் தமிழ்நாடு ‘பாஜக’ தலைவர் பதவியிலிருந்து நீக்கியதன் தீய விளைவு இதுவாகும்..

‘திமுக’ ஆட்சி மீது குற்றங்கள் கண்டுபிடித்துப் பட்டியலிடுவது, அடுக்கடுக்காய்ப் பொய்கள் பேசுவது, பொது இடங்களில் சவுக்கால் அடித்துக்கொண்டு சபதம் ஏற்பது போன்றவற்றை முழுநேரக் கடமையாகச் செய்துகொண்டிருந்தவருக்கு வேறு வேலை எதுவும் இல்லாததால், மேற்கண்ட தன் தன்னிகரில்லாத் தலைவனின் வழியைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்.

இதை இவர் தவிர்க்க வேண்டுமாயின், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை வசைபாடுவதற்கும், சவால்கள் விடுவதற்கும், சபதங்கள் ஏற்பதற்கும் வசதியாக மீண்டும் தமிழ்நாடு ‘பாஜக’ தலைவராக அண்ணாமலையையே நியமிக்கலாம்[பாஜக தலைமை, நயினார் நாகேந்திரனுக்கு  வேறு நல்ல பதவி கொடுத்துச் சமாளிக்கலாம்].

அடியேனின் இந்த ஆசை நிறைவேற, பரலோகத்திலிருந்து இந்த நரகலோகத்திற்கு மோடியை அனுப்பி வைத்த எல்லாம் வல்ல இறைவன் கருணை காட்டுவாராக!

  * * * * *

https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-meditation-in-sri-mahavatar-babajis-cave-1152732?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqKggAIhBAUQ6VKwIUuERCN2qDtgZWKhQICiIQQFEOlSsCFLhEQjdqg7YGVjDto8AD&utm_content=rundown

திங்கள், 14 ஏப்ரல், 2025

கன்னடம் வாழ்க! கன்னடச் சகோதரர்களும் வாழ்க!!

தமிழ்நாடு மட்டுமின்றித் தென்னிந்தியாவின் மற்றொரு மாநிலமான கர்நாடகாவிலும் இந்தித் திணிப்பிற்கு[இந்தி மொழிப் பாடத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தனர்] எதிராகக் கர்நாடகாவில் உள்ள பள்ளி மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். இந்தி எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

மெட்ரோ ரயில் போன்ற பொது இடங்களில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் கன்னட அமைப்புகள் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றன.

இதனிடையே, கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின்[மிகவும் பெரியது] அறிவிப்புப் பலகையில், சத்தமே இல்லாமல் இந்தி மொழி அதிரடியாக நீக்கப்பட்டுக் கன்னடமும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் கன்னட மொழியின் பயன்பாடு மிகக் குறைந்த அளவில் உள்ளதால், அது குறித்து அங்குள்ள கன்னடர்களும், கன்னட அமைப்பினரும் மிக அதிக அளவில் கவலையடைந்திருக்கிறார்கள்.

இதன் விளைவுதான் மேற்கண்ட அதிரடி நடவடிக்கை.

இந்த நடவடிக்கையைச் சமூக வலைதளங்களில் கன்னட அமைப்பினர் கொண்டாடிவருகின்றனர்.

* * * * *

https://minnambalam.com/hindi-removed-at-bengalurus-kempegowda-airport/