சனி, 28 பிப்ரவரி, 2026

அடங்காத காமமும் அடக்கப்படாத காமுகர்களும்!!!

மேற்கண்ட செய்தியை வாசிக்கும்போது நம்மில் பெரும்பாலோர், “இவனையெல்லாம் உலகறியப் பொதுவிடத்தில் அம்மணப்படுத்தி, ஒவ்வொரு உறுப்பாய்ச் சிதைத்துச் சித்திரவதை செய்து சாகடித்தால்தான், பச்சிளஞ் சிசுக்களைப் பலாத்காரம் செய்யும் கொடூரங்கள் நிகழ்வதைத் தடுக்க இயலும்” என்று சொல்ல நினைப்போம்.

மாறுபட்டக் கருத்துக்கு இடமில்லைதான்.

ஆனாலும், மனிதர்கள் இப்படி மிருகங்களாக ஆவது ஏன் என்னும் கேள்வி தவிர்க்க இயலாதது.

கள்ளங்கபடம் இல்லாத குழந்தைகளின் அழுகையும் சிரிப்பும் ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்துமே தவிர, விபரீத இச்சையைத் தூண்டுவது எப்படி?


இவன்களின் மரபணுவில் குறைபாடா?


பெற்றோரின் வளர்ப்பு முறையில் நிகழ்ந்த தவறுகளா?


பக்குவப்படாத/படுத்தப்படாத மனமா?


தனிமனித  ஒழுக்கத்தில் அக்கறை காட்டாத சமுதாயமா? அரசாங்கமா?


இவனைப் போன்றவர்களுக்கு விலைமாதரை நாடிப்போய் இச்சை தணிக்கக் குறைந்தபட்ச வசதிகூட இல்லையா?


அடிக்கடி ஆபாசப் படங்கள் பார்ப்பதால் இவன்களின் குருதியில் காமம் இரண்டறக் கலந்துகிடக்கிறதா?


அனைத்திற்கும் மேலாக,  மனிதர்களை இவ்வாறான நாசகாரச் செயல்களில் ஈடுபடுத்தி வேடிக்கை பார்ப்பது கடவுளின் விருப்பமா?


சிசுக்களை வன்புணர்வு செய்தல் என்றில்லை, மனித இனத்தவர் செய்யும் பெரும்பாலான படு பயங்கரக் குற்றச் செயல்களுக்கு அடங்காத காமமே காரணமாக உள்ளது. 


இதைக் கட்டுப்படுத்தவும் முறைப்படுத்தவுமான நடவடிக்கைகளில், ஒட்டுமொத்த உலக நாடுகளும் அதீதக் கவனம் செலுத்துவது காலத்தின் தேவை.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

மோடியைப் ‘பின்தொடர்வோர்’[followers] 10 கோடி! அடேஏஏஏஏஏங்கப்பா!!

 ளுந்து வடை, பருப்பு வடை, வாழைப்பூ வடை, கீரை வடை, மசால் வடை என்று விதம் விதமாய் வடைகள் சுடுவதில்[பொய் பேசுவது] இவருக்கு இணையான தலைவர்கள் எவரும் இல்லை.

இவர் வடை சுடுவதைக் கண்டு கண்டு ரசிப்பவர்களா இந்த 10 கோடிப் பேர்?

கைவசம் உள்ள எண்ணற்ற வண்ண வண்ண ஆடைகளால்[நேரத்துக்கு ஒன்று] தன்னை அலங்கரித்து, ஏறு போல் நடை பயில்வதைப் படம் எடுக்கச்செய்து வெளியிடுகிறாரே, அந்தக் கண்கொள்ளாக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்படுபவர்களா அவர்கள்?

ஆண்டின் பெரும்பாலான நாட்களில், அயல்நாட்டு உறவை மேம்படுத்துவதாகச் சொல்லி, இவர் உலக நாடுகளுக்குச் சுற்றுலாச் செல்லும் நிகழ்வுகளை, ஊடகங்களில் பார்வையிட்டுத் தாமும் உலகம் சுற்றும் அனுபவத்தைப் பெறுகிறவர்களா அவர்கள்?

இவர் கோயில் கோயிலாகச் சென்று விழுந்து கும்பிடுகையில், தாங்களும் விழுந்து கும்பிட்ட அனுபவத்தைப் பெற்று[ஊடகங்கள் வாயிலாக]ப் புண்ணியம் சேர்க்கிறார்களே அந்தப் பக்திமான்களா அவர்கள்?

அந்த அவர்களின் எண்ணிக்கைதான் 10 கோடி என்றால்.....

10 கோடியில், இன்ஸ்டாகிராமில்[மோடியின் தளத்தில்] தாமாக இணைந்தவர்கள் எத்தனைப் பேர்?

இணைக்கப்பட்டவர்களின்[போலி முகவரியில்] எண்ணிக்கை என்ன?[//வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராமில் போலி இணைப்புகள் போன்ற சமூக ஊடக மோசடிகள் இடம்பெறுகின்றன// -https://www.quickheal.co.in/knowledge-centre/how-to-spot-social-media-scams/]

அறிந்துகொள்ளும் ஆர்வம் நம் மக்களில் ஏராளமானவர்களுக்கு உள்ளது!

வியாழன், 26 பிப்ரவரி, 2026

தங்கம் கொடுத்துத் தாம்பத்திய இன்பம் துய்த்த ஒரு தையலின் கதை!!!

சென்னையில்[வசிப்பிடம் வேண்டாம்] ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் அந்தத் தொழிலதிபர் தன் மனைவியுடன் வசிக்கிறார்.

அங்குக் குடியேறிய ஓர் இளைஞன்[+தாய் & சகோதரன்], தொழிலதிபர் மனைவியுடன் நெருங்கிப் பழகினான். நெருக்கம் கள்ளக் காதலாக[காம உறவு] மாறியது.

அவன் அந்த அம்மணிக்குத் திகட்டத் திகட்ட உடலுறவுச் சுகத்தை வாரி வழங்கியதால், அவன் கேட்கும்போதெல்லாம் தங்க நகைகளை அவனுக்குக் கொடுத்து நன்றி செலுத்தினாள் அவள்.

அப்படிக் கொடுத்தவற்றை ஒரு கட்டத்தில் கணக்கிட்டபோது அவற்றின் அளவு ஒரு கிலோ என்பது தெரிந்தது. தங்கம் என்றில்லாமல் அவனுக்கு வைர நகைகளும், வெள்ளிப் பொருட்களும் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தாள்.

அளவு மீறி உடலுறவுச் சுகம் துய்த்து, ஒரு நிலையில் சலிப்புணர்ச்சிக்கு உள்ளானதாலோ என்னவோ, அவள் அவனின் தொடர்பைத் துண்டித்ததும், கையிருப்பில் அவளின் ஆபாசப் படங்கள் தன்னிடம் இருப்பதாக அவன் மிரட்டியதும், அம்மணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும், அவர்கள் விசாரணை மேற்கொண்டிருப்பதும் கூடுதல் செய்திகள்.

தங்க வைர நகைகள் கொடுத்துத் தாபம் தணித்துக்கொள்ளும் கட்டுக்கடங்காத காம இச்சைப் பெண்களும்[சிலர்?] நம்மிடையே இருக்கிறார்கள் என்பது, நவீன நாகரிக உலகில் வியக்கத்தக்க ஒன்றல்ல எனினும், அவனுடனான உறவில் அவளுக்குச் சலிப்பு ஏற்பட்டதற்கான காரணம் அறியப்படவில்லை.

அவனைவிடவும் காமக் கலையில் அதி நிபுணத்துவம் பெற்றவனுடன் உறவாடும் வாய்ப்பு அவளுக்குக் கிட்டியிருக்கலாம்.

எது எப்படியோ, அள்ளி அள்ளிக் கொடுத்து அது விசயத்தில் அள்ள அள்ளக் குறையாத அந்தரங்கச் சுகம் பெறும் பெண்களுக்கிடையே, போதிய அழகில்லாததாலோ, வரதட்சணை கொடுக்க வசதி இல்லாததாலோ, கழுத்தில் தாலி ஏறாமல், தாம்பத்தியம் என்றால் என்னவென்றே அறியாத முதிர் கன்னிகளும் இங்கே இருக்கிறார்கள் என்பது மனதை நெருடும்/வருத்தும் கசப்பான உண்மை.

‘ஆண்களுடன் புணர்ச்சி இன்பம் துய்த்த பின், கூந்தலில் பூச் சூடி மகிழ்ந்திருக்கும் பெண்களுக்கிடையே, அதற்கான வாய்ப்பில்லாமல் வாடி வருந்தும் பெண்களையும் படைத்த கடவுள் பண்பில்லாதவன்’ என்னும் பொருளமைந்த சங்கப் பாடலடிகள் நினைவுக்கு வருகின்றன.

‘..... புணர்ந்தோர் பூவணி அணிய, பிரிந்தோர் பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப, படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்.....’

https://www.dailythanthi.com/amp/story/news/tamilnadu/misfortune-due-to-theft-1-kg-of-gold-and-diamond-jewelry-stolen-from-businessmans-wife


https://tamil.getlokalapp.com/tamilnadu-news/chennai/perambur/fake-love-1-kg-of-gold-stolen-from-businessman-s-wife-16343253[copy& paste]

புதன், 25 பிப்ரவரி, 2026

’நீட்’ தேர்வுத் திணிப்பு... நேற்றுவரை பல தற்கொலைகள்! இன்று ஒரு கொலை!!

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதற்கான சங்கி அரசின்[ஒன்றியம்] தொடர் நடவடிக்கைகளால் விளைந்த/விளையும் தீமைகள் பல.

அவற்றில், மாநில அரசுகள் மருத்துவர்களைத் தேர்வு செய்வதற்கு நடத்தும் தேர்வுகளுக்குப் பதிலாக ‘நீட்’ தேர்வைத் திணித்ததும் ஒன்று. 

இதனால், பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள் மனச் சிதைவுகளுக்கு உள்ளாகி,  தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள்['நீட்' திணிப்புக்கு முன்பு, தோல்வியால் தற்கொலை புரிந்த மாணவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு] அதிகரித்திருக்கிறது.

இந்த அவலம் தொடரும் நிலையில், 

21 வயது மாணவர் ஒருவர், தேசியத் தகுதி & நுழைவுத் தேர்வில்(நீட்) தேர்ச்சி பெற, தொடர்ந்து அழுத்தம் கொடுத்த தன் தந்தையைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பாஜக’ சங்கிகளின் ஆதிக்க வெறி இதைப் போன்ற மேலும் பல கொலைகளுக்குக் காரணமாக அமையக்கூடும்.

எனவே, நீட் தேர்வை ரத்து செய்வது மிக அவசியம்.

ஆனால், ஆதிக்க வெறி பிடித்த சங்கிகள் ஆட்சிப்பீடத்திலிருது அகற்றப்பட்டால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.

அகற்றப்படுவது அத்தனை எளிதில் நிகழாது; காரணம், வடபுலத்தில் சிந்திக்கவே தெரியாத முட்டாள்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதுதான்.

                                   *   *   *   *   *

*https://tamil.newsbytesapp.com/news/india/lucknow-murder-son-shoots-father-dismembered-body-dumped-in-blue-drum/story

*Lucknow horror: Father's NEET dream for son ends in chop-and-drum murder — what we know

“ஆண்களுக்குப் பெண்டாட்டிகள் இலவசம்” -சி.வி.சண்முகம்! பெண்களுக்கு?

          முன்னாள் அமைச்சர் சண்முகம் அவர்களே,

“ஓட்டுக்காக ஸ்டாலின்[முதலமைச்சர்] ஆண்களுக்கு ஆளுக்கொரு பெண்டாட்டி[திருமணம் ஆனவர்ளுக்கும்தான்> எத்தனைப் பெண்டாட்டிகளும் ‘வைப்பாட்டி’களும் இருப்பினும்]யை இலவசமாகக் கொடுப்பார்” என்ற உங்களின் பேச்சை  மனப்பூர்வமாகப் பாராட்டுகிறோம்.

ஆனால், ஸ்டாலினை மட்டம்தட்டுவதற்காக நீங்கள் இப்படிப் பேசியிருந்தாலும், அதி புத்திசாலி அரசியல்வாதியான அவர், உடனடியாக ஆளுக்கொரு பெண்டாட்டியை இலவசமாகக் கொடுத்து 2026 தேர்தலில் ஆண்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் அள்ளுவார் என்பதில் எள்முனை அளவும் சந்தேகமில்லை.

தேர்தலுக்கு இரண்டொரு நாட்கள் இருக்கும்போது உங்கள் கட்சியின் தலைவரான 'புரட்சித் தமிழர்’ எடப்பாடியார் மூலம், “நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்களுக்கு இலவசமாகப் பெண்டாட்டிகள் தருவோம்” என்று சொல்ல வைத்திருக்கலாம்.

தவறு செய்துவிட்டீர்கள்.

“ஆண்களுக்கு இலவசமாகப் பெண்டாட்டிகள் தருவார் ஸ்டாலின்” என்ற உங்கள் பேச்சால் வாக்குரிமை பெற்ற அனைத்து ஆண்களுக்கும் ஸ்டாலின் பெண்டாட்டிகளைத் தருவது போலவே, “ஸ்டாலின், ஓட்டுக்காக ஒவ்வொரு பெண்ணுக்கும்[மணமானவர்கள் உட்பட] இலவசமாகப் புருஷன் வழங்குவார்” என்று நீங்கள் சொல்லாதிருப்பினும், கலியுகச் சாணக்கியரான ஸ்டாலின் வாக்குரிமை பெற்ற அத்தனைப் பெண்களுக்கும், ஆண்களுக்குச் சமமாகப் புத்தம் புதியப் புருஷன்களை இலவசமாக வழங்குவார் என்பது நூறு விழுக்காடு உறுதி.

ஆக, 

தற்குறித்தனமான உங்கள் பேச்சால், 2026 தேர்தலில் உங்கள் கட்சி படு படு படு தோல்வியைத் தழுவும்[ஒட்டுமொத்த ஆண்களும் பெண்களும் வாக்களிக்காததால்] என்பது உறுதி.

தெரிந்தோ தெரியாமலோ இமாலயத் தவறு செய்துவிட்டீர்கள் சண்முகம் அவர்களே!

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

‘ஆன்மிகக் குருக்கள்’... பட்டியல் தந்தருள்வாரா நீதியரசர் சுவாமிநாதன்?

ஆன்மீகக் குருக்களைக் கடவுளாக ஏற்காதவர்கள் அயோக்கியர்கள்; முட்டாள்கள்; காட்டுமிராண்டிகள்” -நீதிபதி சுவாமிநாதன்[மாலைமலர்*].

பெரும் எண்ணிக்கையில் உள்ள இவர்களை[அடியேன் உட்பட]த் திருத்த நிறையவே ஆன்மிகக் குருக்கள் தேவை.

குருக்கள்[ஒரிஜினல்] ஆக மதிக்கப்படுபவர்களின் நீண்டதொரு பட்டியலை, நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் வழங்கியருள வேண்டும் என்பது எம் பணிவான வேண்டுகோள்.

நீதியரசரின் நல்ல உள்ளம் போற்றுதலுக்கும் வணங்குதற்கும் உரியது.

======================

*https://www.maalaimalar.com/news/tamilnadu/those-who-do-not-accept-spiritual-gurus-as-forms-of-god-are-scoundrels-fools-and-savages-gr-swaminathan-810585?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjDtzp8LMPrYtwMwr7X2BA&utm_content=rundown

‘போலி ஞானி[ஜக்கி]’யைப் ‘போட்டுப் பொளந்த’ இசைஞானி!!!

//இளையராஜா தீவிரமான ஆன்மீகவாதி ஆவார். அவரது ஸ்டூடியோவில் ரமண மகரிஷி புகைப்படம் எல்லாம் அலங்கரிக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளையராஜாவை சாமி என்றுதான் அழைப்பார்.

சினிமாவுக்கு இசையமைத்தது மட்டுமின்றி ஆன்மீகம் தொடர்பாகவும் ஏகப்பட்ட பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் அவர். 


இந்நிலையில் ராஜா பேசியிருக்கும் காணொலி[வீடியோ] ஒன்று சமூக வலைதளங்களில்[சோஷியல் மீடியா] பெருமளவில் பகிரப்பட்டுள்ளது.

ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா,  "எல்லோருக்கும் பேதம் இல்லாத அன்பைக் காட்டுபவன்தான் சத்குரு. ‘சத்குரு’னு சொல்லிக்கொள்பவன் எல்லாம் சத்குரு கிடையாது; சத்தியமாக ஆக முடியாது" என்றார். 

அவர் அப்படி சொன்னபோது அந்த அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது. இந்தக் காணொலியை[வீடியோ] ரசித்த ரசிகர்களோ, 'ஈஷா யோகா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவனை இசைஞானி போட்டுப் பொளந்துவிட்டார்' என்று அவரைப் பாராட்டுகிறார்கள்//[ஊடகச் செய்தி].

இசைஞானியை நாமும் பாராட்டுகிறோம்.


https://tamil.filmibeat.com/throw-back-stories/ilaiyaraaja-s-sadhguru-remark-goes-viral-music-maestro-s-spiritual-speech-sparks-debate-172249.html


திங்கள், 23 பிப்ரவரி, 2026

‘சூட்[கின்னஸ்] சாதனையாளர் மோடியின் அடுத்த சாதனை ‘சுற்றுலா நாயகன்’?!

https://www.youtube.com/watch?v=pSOmCyVPjz0] இதைச் சொடுக்கினால் ஒரு காணொலி[20 ஆகஸ்ட் 2016] தென்படும்.

//அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புது தில்லிக்கு வருகை தந்தபோது, நம் பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த சர்ச்சைக்குரியதும் விலையுயர்ந்ததுமான சூட், பின்னர் ரூ.43,131,311 கோடிக்கு ஏலம் விடப்பட்டு, மிகவும் விலையுயர்ந்த சூட் என்று, கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது. இந்தச் சூட்டை சூரத் வைர வியாபாரியும், தனியார் விமான நிறுவன உரிமையாளருமான லால்ஜிபாய் படேல் வாங்கினார்// என்பது இதன் உள்ளடக்கம்.

மேற்கண்ட சாதனையின் மூலம் ‘கின்னஸ்’ஸில் இடம்பிடித்த நம் பிரதமர் விரைவில், உலகம் சுற்றுவதிலும் மாபெரும் சாதனை புரிவார். மீண்டும் அதில்]கின்னஸ்] அவர் பெயர் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் என்பது நம் நம்பிக்கை.

தொடர்ந்து ‘கின்னஸ்’ஸில் இடம்பெறுவதன் மூலம், ‘கின்னஸ் நாயகன்’ என்னும் பட்டத்தையும் நம்மவர் பெற்றிட நெஞ்சார வாழ்த்துகிறோம்!

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

மூட்டை மூட்டையாய் மூடநம்பிக்கையைப் புதுப்பிக்கும் ‘தி.மு.க.’ ஸ்டாலின் அரசு!!!

//ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறாத கோயில்களைக் கண்டறிந்து, குடமுழுக்கு நடத்தும் பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக, 400 ஆண்டுகளுக்குப் பிறகு[!!!!!], கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலுக்கும், 300 ஆண்டுகளுக்குப் பிறகு[!!!], காஞ்சிபுரம் மாவட்டம் சாத்தனஞ்சேரி கரியமாணிக்க வரதராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கும், மேலும் பல கோயில்களுக்கும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன.

தொன்மையான திருக்கோயில்களைப் புதுப்பித்துப் பாதுகாத்திடும் வகையில், முதல்வர் ஸ்டாலின் ரூ.425 கோடியை அரசு மானியமாக வழங்கியுள்ளார்.

அரசு மானியம், பொதுநல நிதி, திருக்கோயில் நிதி, உபயதாரர்கள் நிதி என மொத்தம் ரூ.560 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான[!!!!!!!!!!] 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

1,000ஆவது[!] குடமுழுக்கு சென்னை, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயிலுக்கும்,

2,000ஆவது[!!] குடமுழுக்கு மயிலாடுதுறை - கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயிலுக்கும்,

3,000ஆவது[!!!] குடமுழுக்கு நாகை - திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயிலுக்கும் நடத்தப்பட்டுள்ளன.

4,000ஆவது[!!!!] குடமுழுக்கு இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோயிலுக்கு நடத்தப்படவுள்ளது.

இதுவரை இப்படி ஒரு சாதனை[மூடநம்பிக்கைப் பாதுகாப்பு] தமிழ்நாட்டின் வரலாற்றில் நிகழ்த்தப்பட்டதில்லை//

மேற்கண்டது அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள[காணொலி*] அறிக்கை.

பெருமளவில் பகுத்தறிவாளர்கள் உள்ள கட்சி என்னும் பாராட்டைப் பெற்றது திராவிட முன்னேற்றக் கழகம்.

இங்கு நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி என்று, அவ்வப்போது முக்கியப் பொறுப்பு வகிப்பவர்கள் பலரும்[மு.க.ஸ்டாலின் உட்பட] பேசிப் பேசிப் பெருமிதப்படுகிறார்கள்.

தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளைப் பெற்று, ஆட்சியைக் கைப்பற்ற முயலும் எந்தவொரு கட்சியும், எவ்வகையிலும், மக்களின், குறிப்பாகப் பக்தர்களின் மனங்கள் புண்படும் வகையில் செயல்படக் கூடாது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதுதான்.

எனவே, நிகழ்காலத்தில் மக்கள், குறிப்பாகப் பக்தர்கள் விரும்பி மேற்கொள்கிற கோயில் விழாக்களைத்[கொண்டாட்டங்கள், குடமுழுக்கு போன்றவை]தொடர்ந்து நடத்திட அனுமதிக்கலாம்.

ஆனால், நடைமுறையில் இல்லாமல்போனவையும், மக்களால் மறக்கப்பட்டவையுமான பக்தி சார்ந்த நிகழ்வுகளை அவர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், சிதைந்து அழிந்த பழைய கோயில்களைப் புதுப்பிப்பதும், அவற்றிற்குக் குடமுழக்குகள் நடத்துவதும், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவதைத் தடுக்கும் தவறான நடவடிக்கை ஆகும்[இதற்காகச் செலவிடும் தொகையை வேறு நல்ல பணிகளுக்குப் பயன்படுத்தலாம்].

தி.மு.க. அரசு இது விசயத்தில் தன்னைத் திருத்திக்கொள்வது கட்சிக்கும் மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

*https://www.youtube.com/watch?v=_U3Zpo12ZLw&authuser=0

சனி, 21 பிப்ரவரி, 2026

கருந்துளையில் ‘துளை’[துவாரம்]யா? உண்மையா?!

“ஒரு பெரிய நட்சத்திரம் தன் வாழ்நாளின் இறுதியில் எரிபொருளை இழந்து, சிதைந்து(Collapse), அடர்த்தியான புள்ளியாக மாறும்போது கருந்துளை'(Black Hole) உருவாகிறதுஎன்கிறார்கள் விஞ்ஞானிகள்..... சரி.

“இதன் ஈர்ப்பு விசை எவ்வளவு வலிமையானது என்றால், தற்கு மிக அருகில் செல்லும் நட்சத்திரங்கள், கோள்கள், ஏன் ஒளிகூட உள்ளே இழுக்கப்படும்; மீண்டும் வெளியே வர இயலாது” என்று மிரட்டுகிறார்கள் அவர்கள்..... சரிங்க.


“அடிவானம்தான் கருந்துளையைச் சுற்றியுள்ள எல்லை. இந்த எல்லைக்கு அப்பால் சென்றால், எதுவும் திரும்பி வர இயலாது” என்றும் உறுதிபடச் சொல்கிறார்கள்..... ஏற்போம்.

இவர்கள் கருந்துளை... கருந்துளை என்கிறார்களே, இந்தக் ‘கருந்துளை’க்குள் பிரமாண்டமான ‘துளை’[துவாரம்/Hole] இருக்கும்தானே? -இது அறிவியலின் அரிச்சுவடிகூட அறியாத என் நீண்ட நாள் கேள்வி.

சற்று முன்னரான இணையத் தேடலில் கிடைத்தது பதில். அது.....


கருந்துளை, வாயுக்கள் மற்றும் தூசுகளால் ஆன ஒரு சுழலும் வட்டு(Accretion Disk)தானே தவிர, கருந்துளைகளில் உண்மையில் "துளைகள்" இல்லை.


கருந்துளை(Black Hole) என்ற பெயர் 1960-களில் இயற்பியலாளர் ஜான் வீலரால் பிரபலப்படுத்தப்பட்டது. ஒளியைக்கூட வெளியேற விடாத, மிக அதிக ஈர்ப்பு விசை கொண்ட இருண்ட பகுதி என்பதாலும், விண்வெளியில் ஒரு 'கருமையான ஓட்டை'(Black Hole) போலத் தோன்றுவதாலும் இந்தப் பெயர் உருவானது[BBC +4]

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

இஸ்லாமியருக்கு இரக்கக் குணம் இல்லையா? ‘அல்லா’வின் மனம் கல்லா?!

[அறிவிப்பு: இது ‘பார்வை’ எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பதிவு அல்ல; உள்மனப் பரிதவிப்பின் வெளிப்பாடு] 

ற்று முன்னர், தற்செயலாக ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் புதிய ஆணை தொடர்பான ஒரு காணொலி தென்பட்டது{தலிபான்கள் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, தங்கள் நாட்டுப் பெண்களுக்கு[இஸ்லாம்] இழைக்கும் கொடுமைகள் குறித்தக் காணொலிகள் இணையத்தில் அணிவகுத்து நிற்பது பலரும் அறிந்ததே}.

ஒட்டுமொத்த மனித இனத்தையும் நடு நடுங்கச் செய்கிற, பெண்கள் மீதான தாக்குதல் நிகழ்வுகள் அதில் இடம்பெற்றுள்ளன.

பெண்டாட்டிகளை[+பெண் பிள்ளைகள்?] எலும்பு முறியாமல் தாக்கித் தண்டிக்க[எலும்புகள் முறியாமலே தாக்கிக் கொல்லலாம்], புதியதொரு சட்டத்தை இயற்றியிருக்கிறார்களாம் தலிபான்கள்[புதிய கட்டமைப்பின் கீழ், கணவர்கள் தங்கள் மனைவிகளுக்கு த'சீர் என்ற கருத்தின் கீழ் "விருப்பப்படி தண்டனை" வழங்க வெளிப்படையாக அனுமதிக்கப்படுகிறார்கள்].

அதன் விளைவு, அங்கே பெண்களை ஆண்கள் கொடூரமாகத் தண்டிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன{அவை காணொலிகளாகவும் வெளியிடப்படுகின்றன.

இஸ்லாமியரோ அல்லாதவரோ, அவற்றைக் காணுவோர்  மனம் பதறும்; கண்கள் கலங்கும் என்பது உறுதி.

தலிபான்கள் அல்லா மீது அதி தீவிரப் பற்றுள்ளவர்கள்.

கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் இரக்கக் குணம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. இந்தத் தலிபான்களோ அரக்கக் குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

கல்வி கற்றல், வேலைக்குச் செல்லுதல் போன்ற பெண்களுக்கான அத்தனை உரிமைகளையும் பறித்ததோடு, வீட்டில் அடைத்துவைத்து அவர்களை அடிமைகளாக நடத்துகிறார்கள்.

உலகின் ஒட்டுமொத்த இஸ்லாமியரும் இதை வேடிக்கை பார்ப்பது உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது.

உலகின் பெரும்பான்மை இஸ்லாமியர்கள், இந்தச் சிறுபான்மைத் தலிபான்களைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் தயங்குவது புரியாத புதிராக உள்ளது. பிற நாடுகளிலுள்ள இஸ்லாம் பெண்களும் ஆப்கானிஸ்தான் பெண்களைப் போலவே, 100% அடிமைகளாக நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ!

உலக அளவிலான இஸ்லாமியருக்குத்தான் இரக்கக் குணம் இல்லையென்றால், அவர்களால் மனப்பூர்வமாக வழிபடப்படுகிற கடவுள் ‘அல்லா’வும் வன்முறைகளுக்கு உள்ளாகும் ஆப்கானிஸ்தான் பெண்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

வியாழன், 19 பிப்ரவரி, 2026

‘பாபா ராம்தேவ்’ என்னும் மத வெறியனின் திமிர்ப் பேச்சு!!!

//காவனில் உள்ள புகழ்பெற்ற ராமன்ரெட்டி ஆசிரமத்தில் 95ஆவது ஆண்டு கர்ஷ்ணி கோபால் ஜெயந்தி விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற துறவிகள் இந்த மத மஹாகும்பத்தில் பங்கேற்று, பக்தர்களைப் பக்தி & ஆன்மீகப் பாதையில்[அல்ல, போதையில்] வழிநடத்தினர்.


விழாவில் யோகா முகாமை நடத்தும்போது, ​‘​யோகா குரு’ என்று அழைக்கப்படும் பாபா ராம்தேவ் யோகா ஆசனங்களின் முக்கியத்துவத்தை விரிவாகக் கூறினார்.


சமகாலப் பிரச்சினைகள் குறித்துத் தனது கருத்துக்களை வெளிப்படுத்தும்போது அவர் தெளிவாகக் கூறினார்; "இந்தியா ராமர், கிருஷ்ணர், அனுமன் ஆகியோருக்கான நாடு; இது பாபரின் நாடு அல்ல. பாபரைப் பற்றிப் பேசுபவர்கள் அழிக்கப்படுவார்கள்.”// -ஊடகச் செய்தி


இந்த வெறியனால் எப்படி இபடிப் பேச முடிகிறது? இதற்கான தைரியத்தை இவன் பெற்றது எப்படி?


கற்பனையான புராணக் கதை நாயகர்களுக்கும் ஐந்தறிவுக் குரங்குக்கும்தான் இந்த இந்தியா சொந்தமா? மாற்று மதத்தவராக[வாழ்ந்து மறைந்து வரலாற்றில் மட்டுமே இடம்பெற்றவர்] இந்த நாட்டை ஆண்டவரைப் பற்றிப் பேசுவதுகூடக் குற்றமா? பேசுபவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று பேசும் இந்த அயோக்கியனும் அழிக்கப்படலாம்தானே?


இந்த நாட்டை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆள்கிறதா, வெற்று ஆன்மிகக் கதை பேசித் திரியும் இவனும்[பாபா ராம்தேவ்] இவனைப் போன்ற சல்லாபச் சாமியார்களா?


சாமியார்கள்தான். அரசாங்கம் என்றால், இந்த வெறிப் பேச்சுக்காக மட்டுமே இவனைச் சிறையில் அடைத்திருக்கும்.


தொடரட்டும் ராம்தேவன்களின் அடாவடித்தனங்கள்.


 https://www.msn.com/en-in/news/india/those-who-talk-about-babar-will-be-destroyed-baba-ramdev-at-ramanreti-ashram/ar-AA1WBkJv?ocid=msedgdhp&pc=NMTS&cvid=6996eab054e24a769c8e267aa4fe41ec&ei=63

புதன், 18 பிப்ரவரி, 2026

அக்கா அக்கா... தமிழிசை அக்கா! நீங்க மட்டுமே அக்கா![ஹி... ஹி... ஹி!!! பதிவு]

ஆமாங்க அக்கா. ஜெயலலிதாதான் எல்லாருக்கும் அம்மா அக்கா. நீங்க சொன்னது 100% உண்மைதானுங்க அக்கா. ரொம்ப நல்லா பேசுறீங்க அக்கா. நீங்க நல்லா இருப்பீங்க அக்கா. உங்களுக்கு ஆயுசு நூறு அக்கா.

அக்கா... அக்கா, நீங்க எனக்கு மட்டுமல்ல, என் அப்பாவுக்கு, என் அம்மாவுக்கு என் அக்காவுக்கு, என் தங்கச்சி தம்பிகளுக்கு, என் பெண்டாட்டிக்கு, என் பிள்ளைகளுக்குன்னு எல்லாருக்குமே ‘நீங்கதான் அக்கா’ அக்கா.

அக்கான்னா அது தமிழிசை அக்கா மட்டும்தான்! ஹி... ஹி... ஹி!!!

‘தமிழன்’ சீமானுக்குப் பாராட்டும் புத்திமதியும்!!!

சீமானைத் ‘தமிழன்’ என்றழைப்பதை அவரை வெறுப்பவர்கள் உட்பட, எதிர்ப்பவர் எவரும் இல்லை என்று உறுதிபடச் சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் அப்பழுக்கற்ற இனவுணர்வு கொண்டவர்.

தமிழினத்தின் மேம்பாட்டுக்கு என்றே ‘நாம் தமிழர்’ என்னும் பெயரில் கட்சி நடத்துகிறார், சிறிதும் தன்னலம் கருதாமல்.

தமிழ்நாட்டில் தேர்தல்[சட்டமன்றம்> 2026] நடக்கவுள்ள நிலையில், கட்சிகள் பலவும் ஏதாவது ஒரு கூட்டணியில் இடம்பிடித்து, பதவிக்காகவும் வருமானத்திற்காகவும் பேரம் பேசித் திரிந்துகொண்டிருக்க, ‘தமிழனைத் தமிழனே ஆள வேண்டும்’ என்னும் உன்னத லட்சியத்துடன் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள சீமானின் மனவுறுதியை நெஞ்சாரப் பாராட்டலாம்.

கடுமையாக உழைக்கிறார். இந்த உழைப்பு 2026இல் இல்லையென்றாலும், அடுத்துவரும் தேர்தலிலேனும் உரிய பலனை நல்கக்கூடும்.

ஆனால்.....

ஆழ்ந்து சிந்திக்காமல் அதிரடியாய் இவர் பேசும், தமிழர் அல்லாத பிற இனத்தவர் குறித்த பேச்சுகள் அதற்குத் தடைக்கற்களாக அமையும் என்று உறுதிபடச் சொல்லலாம்.

குறிப்பாகக் கன்னடர், தெலுங்கர் மீதான வெறுப்புரை.

தாம் நடத்திய ‘குடியரசு’ இதழின் முதல் பக்கதில்[தலைப்புப் பகுதி], ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்னும் வாசகத்தை, தமிழ்நாடு தமிழருக்கே’ என்று மாற்றியமைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. 

பிறப்பால் கன்னடராயினும், மூடநம்பிக்கை ஒழிப்பிற்காகவும், தமிழரின் முன்னேற்றத்திற்காவும்[தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றது அதன் வளர்ச்சியின்மையைச் சுட்டிக்காட்டிச் ‘சொரணை’ ஊட்டுவதற்காகவே] அரும்பாடு பட்டவர். அவர் கட்சி நடத்தியது கன்னடர்களுக்காக அல்ல[எல்லாம் தெரிந்திருந்தும், தேர்தலில் பக்தர்களின் வாக்குகளை அள்ளுவதற்காகவே சீமான் பெரியாரைக் கடுமையாகச் சாடுகிறார்].

‘வைகோ’ பிறப்பால் தெலுங்கர் எனினும் தமிழினத்திற்கென்றே தன்னை அர்ப்பணித்தவர்.

விதிவிலக்காகச் சிலரோ[முன்னாள் காமாட்சி நாயுடு; இந்நாள் பாக்கியராஜ்> கம்மா பாக்கியராஜுலு> தெலுங்குப் பேச்சு; ராதா ரவி] கணிசமானோரோ இருப்பினும், மிகப் பெரும்பாலான தெலுங்கு மரபினர் இங்குத் தமிழராகவே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.

வீட்டிற்குள் தெலுங்கு[ஆந்திர மாநிலத் தெலுங்குக்கும் இவர்கள் பேசும் தெலுங்கிற்கு நிறைய வேற்பாடு உண்டு] பேசுவதைத் தவிர, வெளியிடங்களில் அவர்கள் தங்களுக்குள்ளேகூடத் தெலுங்கில் பேசுவதில்லை.

‘பிஎஸ்ஜி’[கோவை> தெலுங்கு நாயுடுகள் கல்லூரி] கலை அறிவியல் கல்லூரிதான், ‘கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுமொழி’ வகுப்புகளை முதலில் நடத்தியது என்பதெல்லாம் தமிழின் மீதான தெலுங்கரின் பற்றுதலை அடையாளப்படுத்துகிறது.

அறிவியல் அறிஞர் ஜி.டி.நாயுடு எப்போதுமே தன்னை ஒரு தெலுங்கராக அடையாளப்படுத்தியதில்லை.

ஆக, இங்குள்ள தெலுங்கர், கன்னடர் மீதான தேவையற்ற சீமானின் தொடர் தாக்குதல் பேச்சு, அவர்களைத் தங்களின் பாதுகாப்புக்காக, இன அமைப்புகளை வலுப்படுத்தி, தமிழருக்கு எதிராக இணைந்து செயல்படத் தூண்டும்.

எனவே, போகிறபோக்கில் வாரி இறைக்கிற இன வெறுப்பை வளர்க்கும் ஆவேசப் பேச்சை, இனியேனும் தவிர்ப்பது சீமானுக்கு மட்டுமல்ல, தமிழினத்திற்கும் நன்மை பயப்பதாக அமையும்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

போலி உலக ஞானி ஜக்கியும் புரிந்துகொள்ள இயலாத அடிமை மோடியும்!!!

முகம் முழுக்க அடர் தாடி மீசையுடன், உயர்தர பக்திமான் வேடம் புனைந்து, புரியாமல்... ஆனால், வெகு கவர்ச்சிகரமாகக் கடவுள் தத்துவம் பேசிப் பேசி, தன்னைக் கடவுளின் அவதாரமாக[சத்குரு: சத்> பரம்பொருள்> கடவுள்> கடவுளின் குரு] மக்களை நம்பச் செய்து, கோடி கோடியாகப் பணம் சம்பாதித்துவிட்ட ஒரு குபேர மோசடிச் சாமியார் ஜக்கி வாசுதேவன்.

இந்த நபரின் 100% கற்பனையில் உருவாக்கப்பட்ட ‘ஆதியோகி’ சிலையை, ஒரு மதச் சார்பற்ற நாட்டின் பிரதமரான மோடி திறந்து வைத்து, ஓர் அடிமை போல் கைகட்டி உபதேசம் பெற்றுப்போனது கடந்த காலக் கசப்பான சம்பவம்[இருவருக்கும் இடையேயான மிக நெருக்கமான தொடர்பின் பின்னணியில் ஏதோ மர்மம் புதைந்திருக்கிறது].

மோடியின் ஆதரவில்தான், பல குற்ற வழக்குகளிலிருந்து தப்பி[மனைவியை மகா சமாதியாக்கியது, வெள்ளியங்கிரிக் காடுகளைத் தன்வசப்படுத்தியது, யோகா கற்பிப்பதாகச் சொல்லி, அனுமதி ஏதுமின்றி வயசுக் குமரிகளை ஆசிரமத்தில் இரவுபகலாய்த் தங்க வைப்பது, அவர்களில் சிலர் காணாமல்போனது என்றிப்படி], மனித இனத்தை உய்விக்க வந்த அவதாரி போல் உலகை வலம்வந்துகொண்டிருக்க இயலுகிறது இவனால்.

ஆண்டுதோறும் தான் நடத்தும் சிவராத்திரி விழாவில் பிரபலங்களை[படு கவர்ச்சி நடிகைகள் உட்பட]க் கலந்துகொள்ளச் செய்வதுபோல்[கடந்தமுறை குடியரசுத் தலைவர் முர்மு], நடந்து முடிந்த விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் கலந்துகொண்டது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இதனினும் நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது, சீருடையுடன் முப்படை அதிகாரிகள் கலந்துகொண்டதுதான்.

இந்த ஆசாமியால் விளைவது பெரும் தீங்குகளே தவிர, கடுகளவு நன்மைகூட இந்த நாட்டுக்கு விளைந்ததில்லை.

உண்மை இதுவாக இருக்க, தொடர்ந்து இந்த ஆளின் ‘உலக ஆன்மிகக் குரு’ என்னும் மாய பிம்பம் நிலை மாறாமலிருக்க, மோடி அயராது பாடுபடுவதன் உண்மை நோக்கம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது.

மட்டுமல்ல, ஒரு போலிச் சாமியாருக்கு மரியாதை செலுத்த முப்படை அதிகாரிகளை மோடி அனுப்பியது மன்னிக்கக் கூடாத குற்றம்.

இந்தக் குற்றத்தைச் செய்தது குறித்து மோடிக்கு எள்ளளவும் கவலையில்லை.

ஏனென்றால், இதுபோல எத்தனைக் குற்றங்கள் செய்தாலும் அவற்றைக் கண்டுகொள்ளாத மக்கள்தான் இங்கே அதிகம். அறியாமையிலிருந்து அவர்கள் மீண்டுவிடாதிருக்க பல போலிச் சாமியார்கள் மோடியின் ஆதரவுடன் பாடுபடுகிறார்கள். அவர்களில் முதல் இடம் பெறுகிற ஆள்தான் இந்த ஜக்கி. பிரதமர் மோடி இந்த நபரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் காரணம் இதுவாக[வும்] இருக்கக்கூடும்.

இதன் மூலம் மோடி பயன்பெறுவது தொடருமா தடைப்படுமா என்பது அனுமானிக்க முடியாதது என்றாலும், இந்த மோசடிச் சாமியாரால்[+பிற சாமியார்கள்] இந்த நாட்டிற்குப் பெரும் பெரும் கேடுகள் விளையும் என்பது உறுதி... உறுதி... உறுதி.

கில்லாடி ஜக்கியின் சிவராத்திரிக் கூத்தில், பாதுகாப்பு அமைச்சரும் முப்படை அதிகாரிகளும் கலந்துகொண்டது குறித்த மு.வீரபாண்டியன் அவர்களின் கண்டன அறிக்கை பின்வருமாறு:

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

//கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டது நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். இந்நிலையில், இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் சிவராத்திரி விழாவில் ராணுவ சீருடையுடன் கலந்து கொண்டுள்ளனர். ஒன்றிய பாஜ அரசின் அழுத்தத்தின் காரணமாக, முப்படை உயரதிகாரிகள் விழாவில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும், இந்தியாவின் ராணுவம் மதச்சார்பற்ற ராணுவமாகும். அவ்வாறு இருக்கின்றபோது முப்படை உயர் அதிகாரிகள் ஈஷா யோகா மையம் நடத்திய சிவராத்திரி விழாவில் சீருடையுடன் கலந்து கொண்டது கடும் கண்டனத்திற்குரியது//.

https://www.dinakaran.com/news/politics_news/coimbatore_ishacenter_shivaratrifestival_tri-servicesofficers_opposition_m-veerapandian_condemnation/

திங்கள், 16 பிப்ரவரி, 2026

நயினார் நாகேந்திரரே, திரிஷாவின் பாதம் தொட்டு மன்னிப்புக் கேளும்!

//நயினார் நாகேந்திரன், ‘விஜய்’யை “அரசியல் அனுபவமில்லாதவர்” என்று கூறி, “நீ முதலில் திரிஷா வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். குடும்பத்துடன் நல்லுறவு வைத்திருக்க வேண்டும்” என்று தனிப்பட்ட வாழ்க்கையை இழித்துப் பேசினார்//*


நடிகை திரிஷாவை மேற்கண்டவாறு கொச்சைப்படுத்திப் பேசியதற்காகக் கடும் கண்டனங்களுக்கு உள்ளான நயினார் நாகேந்திரன், அது குறித்துக் கீழ்க்காணும் வகையில் வருத்தம் தெரிவித்ததாக ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டுள்ளன.

“அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை. உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்படுவார்களேயானால், என்னுடைய வருத்தத்தை நான் மனப்பூர்மாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என நடிகை திரிஷா குறித்த பேச்சுக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மன்னிப்புக் கோரினார்[இது ‘இந்து தமிழ்’ச் செய்தி].

அதென்ன ‘யாரேனும்’? செய்யக்கூடாத மாபெரும் குற்றத்தைச் செய்துவிட்டு, ‘திரிஷா[+விஜய்]வின் பெயர் சொல்லி வருத்தம் தெரிவிக்காத அளவுக்கு அத்தனை மண்டைக் கொழுப்பா இந்தப் ‘பாஜக’காரனுக்கு?!


குடும்பப் பெண்ணோ, நடிகையோ, விலைமகளோ[அவளும் ஒரு குடும்பத்துப் பெண்தான்> வயிற்றுப்பாட்டுக்காக இந்தத் தொழிலில் தள்ளப்பட்டிருக்கலாம்] ஒரு பெண் எப்படிப்பட்டவளாக இருந்தாலும், அவளை இந்த அளவுக்கு இழிவுபடுத்தியிருப்பது, மன்னிக்கவே கூடாத இழி செயல் ஆகும்; கடும் தண்டனைக்குரியதும்கூட.


திரிஷா ஆக்ரோஷக் குணமுள்ள ஆடவர்களின் பாதுகாப்பில் இருந்திருந்தால், இந்த ஆளைத் துண்டு துண்டாக வெட்டிப் புதைத்திருப்பார்கள்.


மேலும், வெறுமனே வருத்தம் தெரிவித்து மறந்துவிடச் சொல்லுகிற குற்றம் அல்ல இது. திரிஷாவை, அவரின் அனுமதியுடன் நேரில் சந்தித்து, அவரின் பாதம் தொட்டு[அதற்கான தகுதிகூட இந்த நபருக்கு இல்லை] மன்னிப்புப் கேட்க வேண்டும்.


இந்த ஆள் அதைச் செய்யும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

                                             *   *   *   *   *

https://minnambalam.com/nainar-nagendran-clarifies-his-statement-on-vijay-trisha/[copy&paste]


https://www.hindutamil.in/news/tamilnadu/word-that-was-missed-nayinar-nagendran-regrets-his-speech-on-trisha

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

மரணம் கொடியது! அதனினும் கொடியவை அதன் அந்திமக்கால அறிகுறிகள்!!

றப்பு(Death) எல்லோருக்கும் பொதுவான நிகழ்வுதான். ஆனால், அது நிகழ்வதைப் பார்த்து[நினைத்தும்தான்] நாம் பெரிதும் அஞ்சுகிறோம். அதைப் பற்றிப் பேசுவதற்குகூடத் தயங்குகிறோம்.

வயதான நிலையில் இயற்கையான மரணம் நிகழும்போது, மரணிப்பவர்கள் அதிக அளவில் வலிகளை உணரமாட்டார்கள் என்று சொல்லப்பட்டாலும், அவர்களின் உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகள் நம்மை அச்சுறுத்துவனவாகவே உள்ளன.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை:

1.இறந்துகொண்டிருப்பவர்கள் மூச்சு இயல்பாக இருக்காது; பெரிதும் சிரமப்படுவார்கள்.

2.மிகவும் சோர்வாகக் காணப்படுவார்கள். அதிகமாகக் கொட்டாவி விடுவார்கள். 

3.அவர்கள் மூச்சு விடும்போது சத்தம் கேட்கும். அதை Rattling noise என்று சொல்வார்கள்.

4.இறக்கும் நிலையில் இருக்கக்கூடியவர்கள் அதிகம் தூங்குவார்கள். சில சமயம் பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிடுவார்கள்.  


5.செயல்பாட்டை இழக்கும் உறுப்புகளில் கடைசியில் இடம்பெறுவது செவிப்புலன் ஆகும். இறக்கப்போகிறவர்கள் கண்களை மூடிப் படுத்திருந்தாலும் அருகில் இருப்பவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.


6.மரணம் நிகழ்கையில் அவர்களால் சிறுநீர், மலம் போன்றவை வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயலாது. தசைகள் தளர்வடைவது அதற்கான முக்கியக் காரணம்.


7.பசி உணர்வு சிறிதுகூட இருக்காது. உணவை விழுங்குவதும் சாத்தியப்படாது.


8.சில நேரங்களில் அவர்களின் உடலில் இருந்து Nail polish removerஇன் வாசனை வெளிப்படும்[நெய்ல் பாலிஷ் ரிமூவர் கொண்டு நகத்தில் உரிந்த பாலிஷை அகற்றலாம்].


9.அவர்களின் கைகள், கால்கள், காதுகள் போன்றவற்றைத் தொடும்போது அவை ஜில்லென்று இருக்கும். சிலசமயம் கைகளில் வீக்கம் தென்படலாம். உடலில் ரத்த ஓட்டம் குறைவது இதற்கான காரணம்.


10.சிலருக்கு இறப்பதற்கு முன்பு மனக் குழப்பம் ஏற்படும். தாங்கள் யார் என்பதை மறந்துவிடுவார்கள். தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் நினைவுகூர்தல் இயலாது.


11.அவர்கள் எதிர்பாராத மன உறுதியுடன் எழுந்து உட்காருவார்கள். ஆனால் அது தற்காலிகமானதே. மறுபடியும் அவர்களின் நிலை மோசமாகி இறப்பு நிலைக்குச் செல்வார்கள்.


12.பொதுவாக இறப்பு வரும்போது தசைகள் தளர்வடைவதன் காரணமாக வாய் திறந்த மாதிரி இருக்கும்; கண்கள் விட்டத்தை[மேல்நோக்கி]ப் பார்ப்பதுபோல் தோன்றும். இறுதியில் மூச்சும், இதய துடிப்பும் நின்று இறப்பைத் தழுவுவார்கள் அவர்கள்.

====================


நன்றி:

https://kalkionline.com/wellness/12-mysterious-signs-of-approaching-deathwarning-body-changes