செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

போலி உலக ஞானி ஜக்கியும் புரிந்துகொள்ள இயலாத அடிமை மோடியும்!!!

முகம் முழுக்க அடர் தாடி மீசையுடன், உயர்தர பக்திமான் வேடம் புனைந்து, புரியாமல்... ஆனால், வெகு கவர்ச்சிகரமாகக் கடவுள் தத்துவம் பேசிப் பேசி, தன்னைக் கடவுளின் அவதாரமாக[சத்குரு: சத்> பரம்பொருள்> கடவுள்> கடவுளின் குரு] மக்களை நம்பச் செய்து, கோடி கோடியாகப் பணம் சம்பாதித்துவிட்ட ஒரு குபேர மோசடிச் சாமியார் ஜக்கி வாசுதேவன்.

இந்த நபரின் 100% கற்பனையில் உருவாக்கப்பட்ட ‘ஆதியோகி’ சிலையை, ஒரு மதச் சார்பற்ற நாட்டின் பிரதமரான மோடி திறந்து வைத்து, ஓர் அடிமை போல் கைகட்டி உபதேசம் பெற்றுப்போனது கடந்த காலக் கசப்பான சம்பவம்[இருவருக்கும் இடையேயான மிக நெருக்கமான தொடர்பின் பின்னணியில் ஏதோ மர்மம் புதைந்திருக்கிறது].

மோடியின் ஆதரவில்தான், பல குற்ற வழக்குகளிலிருந்து தப்பி[மனைவியை மகா சமாதியாக்கியது, வெள்ளியங்கிரிக் காடுகளைத் தன்வசப்படுத்தியது, யோகா கற்பிப்பதாகச் சொல்லி, அனுமதி ஏதுமின்றி வயசுக் குமரிகளை ஆசிரமத்தில் இரவுபகலாய்த் தங்க வைப்பது, அவர்களில் சிலர் காணாமல்போனது என்றிப்படி], மனித இனத்தை உய்விக்க வந்த அவதாரி போல் உலகை வலம்வந்துகொண்டிருக்க இயலுகிறது இவனால்.

ஆண்டுதோறும் தான் நடத்தும் சிவராத்திரி விழாவில் பிரபலங்களை[படு கவர்ச்சி நடிகைகள் உட்பட]க் கலந்துகொள்ளச் செய்வதுபோல்[கடந்தமுறை குடியரசுத் தலைவர் முர்மு], நடந்து முடிந்த விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் கலந்துகொண்டது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இதனினும் நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது, சீருடையுடன் முப்படை அதிகாரிகள் கலந்துகொண்டதுதான்.

இந்த ஆசாமியால் விளைவது பெரும் தீங்குகளே தவிர, கடுகளவு நன்மைகூட இந்த நாட்டுக்கு விளைந்ததில்லை.

உண்மை இதுவாக இருக்க, தொடர்ந்து இந்த ஆளின் ‘உலக ஆன்மிகக் குரு’ என்னும் மாய பிம்பம் நிலை மாறாமலிருக்க, மோடி அயராது பாடுபடுவதன் உண்மை நோக்கம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது.

மட்டுமல்ல, ஒரு போலிச் சாமியாருக்கு மரியாதை செலுத்த முப்படை அதிகாரிகளை மோடி அனுப்பியது மன்னிக்கக் கூடாத குற்றம்.

இந்தக் குற்றத்தைச் செய்தது குறித்து மோடிக்கு எள்ளளவும் கவலையில்லை.

ஏனென்றால், இதுபோல எத்தனைக் குற்றங்கள் செய்தாலும் அவற்றைக் கண்டுகொள்ளாத மக்கள்தான் இங்கே அதிகம். அறியாமையிலிருந்து அவர்கள் மீண்டுவிடாதிருக்க பல போலிச் சாமியார்கள் மோடியின் ஆதரவுடன் பாடுபடுகிறார்கள். அவர்களில் முதல் இடம் பெறுகிற ஆள்தான் இந்த ஜக்கி. பிரதமர் மோடி இந்த நபரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் காரணம் இதுவாக[வும்] இருக்கக்கூடும்.

இதன் மூலம் மோடி பயன்பெறுவது தொடருமா தடைப்படுமா என்பது அனுமானிக்க முடியாதது என்றாலும், இந்த மோசடிச் சாமியாரால்[+பிற சாமியார்கள்] இந்த நாட்டிற்குப் பெரும் பெரும் கேடுகள் விளையும் என்பது உறுதி... உறுதி... உறுதி.

கில்லாடி ஜக்கியின் சிவராத்திரிக் கூத்தில், பாதுகாப்பு அமைச்சரும் முப்படை அதிகாரிகளும் கலந்துகொண்டது குறித்த மு.வீரபாண்டியன் அவர்களின் கண்டன அறிக்கை பின்வருமாறு:

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

//கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டது நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். இந்நிலையில், இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் சிவராத்திரி விழாவில் ராணுவ சீருடையுடன் கலந்து கொண்டுள்ளனர். ஒன்றிய பாஜ அரசின் அழுத்தத்தின் காரணமாக, முப்படை உயரதிகாரிகள் விழாவில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும், இந்தியாவின் ராணுவம் மதச்சார்பற்ற ராணுவமாகும். அவ்வாறு இருக்கின்றபோது முப்படை உயர் அதிகாரிகள் ஈஷா யோகா மையம் நடத்திய சிவராத்திரி விழாவில் சீருடையுடன் கலந்து கொண்டது கடும் கண்டனத்திற்குரியது//.

https://www.dinakaran.com/news/politics_news/coimbatore_ishacenter_shivaratrifestival_tri-servicesofficers_opposition_m-veerapandian_condemnation/