ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

சரணம் சரணம்... சுப்பிரமணியன் சுவாமியே சரணம்!!!

 மோடி ஒரு சர்வாதிகாரி என்பது பற்றியோ, அவர் நினைத்திருந்தால் தன்னைக் கம்பி எண்ண வைத்திருக்கலாம் என்பது பற்றியோ கவலைப்படாமல்,  அவர் செய்யும் அடுக்கடுக்கான தகிடுதத்தங்களை அம்பலப்படுத்துவதற்கே தம் வாழ்நாளை அர்ப்பணித்துள்ள சு.சுவாமி அவர்களை மனதாரப் பாராட்டுகிறோம்; போற்றுகிறோம்.

கொஞ்சம் மாதங்களுக்கு முன்பு அவர் எடுத்துள்ள சபதம்[காணொலி].....

மோடி செய்த அசிங்கத்தை அம்பலப்படுத்தும் ‘எப்ஸ்டீன்’ ஆவணங்களைப் பெறுவதற்காகக் கடுமையாக உழைப்பார் என்பதுதான்.

உழைப்பதற்குத் தேவையான மன வலிமையையும் உடல் வலிமையையும் அவருக்கு வழங்கியருளுமாறு, அவர் பெயரில் உலகுக்கு அருள்பாலிக்கும் தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் திருவடி தொழுது வேண்டுகிறோம்.

வாழ்க தலைவர் சுப்பிரமணியன் சுவாமி! வெல்க அவரின் லட்சியம்!!