ஜக்கி வாசுதேவனுக்கு மெய்யான ஆன்மிகம் தெரியாது, குறைந்தபட்சச் சிந்திக்கும் அறிவுகூட இல்லாதவன். சரளமாகப் பேசத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு போலி ஆன்மிகம் பேசி ஊர் உலகை ஏமாற்றித் திரிகிறான்; மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ‘லட்சம் கோடி’க்கும் மேலாகச் சொத்துச் சேர்த்திருக்கிறான்.
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
வெள்ளி, 28 பிப்ரவரி, 2025
2இல் 1 நடந்தால்தான் இவன்[ஜக்கி] அடங்குவான்!!!
வியாழன், 27 பிப்ரவரி, 2025
பிரதமர் மோடியின் ஆட்சி... '-’!!! ‘+’???
*நாட்டின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் அளவுக்கு, கற்பனையான புராணக் கதை மாந்தர்களுக்குக் கோடிகளில் செலவழித்துக் கோயில் கட்டுகிறார். பக்திப் பயணம் என்னும் பெயரில் வெட்டியாய் ஊர் சுற்றும் மூடர்களுக்கு வசதிகள் செய்துதரப் பெரும் தொகை செலவிடப்படுகிறது.
*பக்தி தொடர்பான தன்னுடைய நடவடிக்கைகளை இவரளவுக்கு எந்தவொரு பிரதமரும் விளம்பரம் செய்ததில்லை. சிந்திக்கும் அறிவை வளர்ப்பதற்கு எதிரான நடவடிக்கை இது.
*கடும் தண்டனைக்குரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் சாமியார்களுக்கு அதிக அளவில் மரியாதை தருகிறார்; நிரந்தரப் பாதுகாப்பும் உண்டு.
*அயல்நாட்டு உறவுகளை மேம்படுத்தப் பயணம் தேவைதான் என்றாலும், அதையே காரணம் காட்டி உலகம் சுற்றுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறார் நம் பிரதமர்.
*போதுமான ஆதாரங்கள் இல்லாமல் “அதைச் செய்தேன்; இதைச் சாதித்தேன்” என்று வெறும் வாயால் அடிக்கடி வடை சுடுகிறார்.
*குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எதிர்க் கட்சிக்காரர்களுடன் விவாதித்து, அவை குறித்த உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை.
*அடிக்கடி, சட்டங்களைத் திருத்தி மசோதாக்களை நிறைவேற்றும் நடவடிக்கைகள், கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரியாகத் தன்னை ஆக்கிக்கொள்ளும் முயற்சியில் இவர் தொடர்ந்து ஈடுபடுகிறாரோ என்று எண்ணத் தூண்டுகிறது.
*பிரச்சினைகளைக் கையாளுவதற்கும், வளர்ச்சித் திட்டங்களை வகுத்து அவற்றை நிறைவேற்றுவதற்கும் தேவையான அறிவாற்றலும் அனுபவமும் பெற்றவர்கள் இவரின் அமைச்சரவையில் இல்லை என்றே சொல்லலாம்.
*பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியைக் கருத்தில் கொண்டுதான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன; மாநிலங்களுக்கென்று அதிகாரங்களும் வழங்கப்பட்டன. அதை அலட்சியப்படுத்தி, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார் மோடி. மாநில அரசுகளால் இந்த அடாத செயல் சுட்டிக்காட்டப்படினும் தன்னைத் திருத்திக்கொள்ள அவர் தயாராக இல்லை.
மேற்கண்டவை மோடி ஆட்சி குறித்த மதிப்பீட்டு[-]ப் பட்டியல்!
‘+’?..... தேடித் தேடித் தேடிக் கண்டறிக!!
புதன், 26 பிப்ரவரி, 2025
கும்பமேளா நீராடல்... புனிதம் சேர்த்த மோடியும் தவிர்த்த காஞ்சி மட விஜயேந்திரனும்!
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடந்துவரும் கும்பமேளாவில் கலந்துகொண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தாராம்[செய்தி].
‘ஓர் அனாதை இல்லத்திற்கு நன்கொடை வழங்கினார்; சங்கர மடம் சார்பில் ஒரு முதியோர் இல்லம் தொடங்கி வைத்தார். ஏழை மக்களின் புகலிடமான அரசு மருத்துவமனைக்குச் சென்று தீராத நோய்களால் அவதிப்படுவோருக்கு ஆறுதல் சொன்னார்…’ என்றிப்படியான நல்ல காரியங்கள் ஏதும் செய்தாரா என்றால், இல்லை.
பின்னே என்ன செய்தார்?
ஊடகக்காரர்களுக்குப் பேட்டியளித்து அருள்பாலித்தார்.
பேட்டியில் என்ன சொன்னார்?
என்னென்னவோ சொன்னார். அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று: #அகில இந்திய அளவில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய தீர்த்த அடையாளமாக உள்ள அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்துகொள்ளும் மக்கள் அனைவருக்கும் நற்பலன்கள் கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்தோம்# என்பதும் ஒன்று[இவர் பிரார்த்திக்கலேன்னா பக்தர்களுக்கு நற்பலன்கள் கிடைக்காவோ?].
#காஞ்சி மடத்தின் மூலம் அங்கு மண்டபம் அமைத்து, கடந்த 40 நாட்களாக வேதபாடசாலைகள் மூலம் உலக நன்மைக்காக யாகங்கள், பூர்ணாஹூதி[!?] ஹோமங்கள், புனித பூஜைகள் மற்றும் அன்னதானங்கள் நடக்கிறது# இதுவும் அவர் சொன்னதே.
இப்படிச் சொன்ன அவரிடம்.....
“ஆண்டவனால் அனுப்பப்பட்ட மோடியும், இக உலகப் ‘போகம்’ துறந்த ‘யோகி’[ஆதித்யானந்த்]யும் குளியல் போட்டதால் கூடுதல் புனிதத்துவம் பெற்ற திரிவேணி சங்கமத்தில், ஈஸ்வரனின் அனுக்கிரஹம் பெற்ற தாங்களும் நீராடி அதில் அபிரிதமாகப் புனிதம் சேர்த்தீர்களா?” என்று ஊடகத்தார் கேட்டிருக்கலாம்.
கேட்டிருந்தால்…..
அவர் திருவாய் மலர்ந்தருளுவாரோ அல்லவோ, அவரின் சிஷ்யர்களில் எவரேனும் ஒருவர், “நீச மனிதர்கள் நீராடுகிறதும் பாவங்களின் கழிப்பிடமும் ஆன திரிவேணி சங்கமத்தில் அவர் நீராடமாட்டார்” என்று பதில் சொல்லியிருப்பார்.
ஏனோ எவரொருவரும் கேட்கவில்லை!
* * * * *
செவ்வாய், 25 பிப்ரவரி, 2025
எரிக்கிறான் ‘அவன்’! பற்றி எரிகிறது நம் பாழ் மனம்!!
திங்கள், 24 பிப்ரவரி, 2025
சொறிவது சுகம்! நன்மைகளும் உண்டு!![பகிர்வு]
அந்த ஆறுதல் உணர்வுக்குப் பிறகுதான், நம்மை யாரும் பார்த்தார்களா என்பதைக் கவனிப்போம். சிலருக்குப் பிறர் சொறிந்துகொள்வதைப் பார்த்தாலே, அவர்களுக்கு அரிப்பு ஏற்படுவதைப் போன்ற உணர்வு ஏற்படும்.
எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வின் முடிவில், தோலில் ஏற்படும் அரிப்பு நோய் எதிர்ப்புச் சக்தியைச் செயல்படுத்துகிறது என்றும், இது தீங்கு விளைவிக்கும் தொற்றுநோய்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனாலும் பொதுவாக, 'அதிகம் சொறியக் கூடாது, தோல் அழற்சியாக இருந்தால் அதைச் சொறிவது இன்னும் அந்நிலையைத் தீவிரப்படுத்தும்' என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்[பிபிசி தமிழ்14 பிப்ரவரி 2025]
* * * * *
கூடுதல் தகவல்களுக்கு:
https://www.bbc.com/tamil/articles/cz0le74dj7po
‘கும்ப்’ கூமுட்டைகள் 62 கோடி! இது யுகயுகாந்தர சாதனை!!
//‘மகா கும்பமேளாவில் இதுவரையில் 62 கோடி பேர் பங்கேற்றுப் புனித நீராடி உள்ளனர். இந்தக் கும்பமேளாவில் மக்களிடம் அதிக ஈர்ப்பு உண்டாகியுள்ளது. இது எனக்கு மிகவும் முக்கியமானது[ஆட்சியைத் தக்கவைத்திட]. ஆன்மிகம் மற்றும் கலாசாரம் நிறைந்து காணப்படும் பிரஜ் பூமிக்கு நான் வந்துள்ளேன்.
உலகில் நடக்கும் ஆன்மிக விழாவாக இருந்தாலும் சரி, அல்லது சுற்றுலா நோக்கத்திற்காக நடக்கும் நிகழ்வாக இருந்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இவ்வளவு மக்கள் கூடுவது, இந்த நூற்றாண்டின் அரிய நிகழ்வாகும்’ எனக் கூறினார் யோகி ஆதித்யநாத்// இது செய்தி.
மேற்கண்டவாறு, மேலோட்டமாகக் கும்பமேளா நிகழ்வைப் புகழ்ந்து கூறிப் புளகாங்கிதப்பட்டுள்ளார் யோகி ஆதித்யநாத் என்னும் மொட்டைச் சாமியார்.
“இந்த நூற்றாண்டின் அரிய நிகழ்வு இது” என்றும் கூறியுள்ளார்.
நூற்றாண்டு என்றது தவறு. யுக யுகங்களாக நடந்திராத பக்திப் பித்தன்களின் ‘கும்மாளம்... கூத்தடிப்பு’ என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
அழுக்கு நீர்க் குளியலின்போது நெரிசலில் சிக்கிச் செத்துப்போனவர்கள்[சொர்க்கம் சேர்ந்தவர்கள்], காணாமல் போனவர்கள், புதிதாக உருவாக்கப்பட்ட முட்டாள்கள் ஆகியோரின் எண்ணிக்கையும் கோடிகளில் இருக்கக்கூடும்.
அதற்கான நீண்டதொரு பட்டியலையும் தந்திருந்தால் இந்த மொட்டையனைரை யோக்கியன்ர் யோகி என்று சொல்லலாம்.
ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025
ஒரே கடவுளும் ஒருங்கிணைந்து பொய்யுரைக்கும் மதங்களும்!!!
எல்லா மதத்தவரும் இதையேதான் சொல்கிறார்கள்.
மனிதர்களுக்கு வாய்த்திருக்கும் அறிவு முழுமையானது என்றோ, இதற்கும்[மனித அறிவு] மேம்பட்டதான அறிவு இல்லை என்றோ நிறுவுவது சாத்தியமே அல்ல.
மனித அறிவு ‘குறை அறிவு’; அதாவது, குறைபாடு உடையது.
இதைக்கொண்டு பிரபஞ்ச வெளி[அளவுகோள்களுக்குக் கட்டுப்படாதது]யிலுள்ள அனைத்துப் பொருள்களின்[உயிர்கள் உட்பட] என்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்வதென்பதே இயலாதது.
அப்புறம் எப்படி, கடவுள் இருப்பதே உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார் என்கிறார்கள்[பல கடவுள்கள் இருந்தால் படைப்பதில் போட்டியும், படைத்தவற்றை நிர்வகிப்பதில் குழப்பமும் ஏற்படும் என்பது மூடத்தனத்தின் உச்சம்].
மனிதர்களுக்கு இந்த ‘ஒன்று’இன் மீது அளப்பரிய பிரேமை ஏற்பட்டது எப்படி?
எப்படி?!?!?!
சனி, 22 பிப்ரவரி, 2025
வெள்ளி, 21 பிப்ரவரி, 2025
‘தனித் தமிழ்நாடு’ பிரிவினைக் கோரிக்கை தலைதூக்குமா?!
“இந்தி பேசும் மாநிலத்தவர் எவரும் இந்தியைத் தவிர வேறு மொழியைக் கற்பதில்லை” என்பது முன்னாள் ஒன்றிய நிதியமச்சர் ப. சிதம்பரம் அவர்களின் கூற்று[[ஊடகச் செய்தி].
அறிவியல்&தொழில்நுட்பக் கல்வியில் ஈடுபாடோ, வேறு இந்திய மொழியைக் கற்கும் திறனோ இல்லாதவர்கள் ‘இந்தி’யர்கள். இந்தியைத் தவிர வேறு மொழி தேவையில்லை என்னும் திமிரும் அவர்களுக்கு உண்டு.
இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குவதன் மூலம் இந்த நாட்டைத் தாங்களே ஆளுவதும், பெருமளவில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதும் அவர்களின் கொள்கை. அதை நிறைவேற்றவே வெறித்தனமாகச் செயல்படுகிறார்கள்[இப்போதே ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அஞ்சலகம், ரயில் போக்குவரத்து, காப்பீட்டு நிறுவனம், பாதுகாப்புத் துறை போன்றவற்றில் இந்தி மொழி ஆதிக்கம் செலுத்துகிறது. அதை மாற்றியமைக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது].
வெறியர்களின் செயலுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆளும் ‘பாஜக’ வினரின் நடவடிக்கைகள் உள்ளன; தேவைக்கும் அதிகமான அதிகாரமும் உள்ளது.
இம்மாதிரி மிரட்டல்கள் இனியும் தொடரும்; நிதியுதவிகளை நிறுத்துவது போன்ற அட்டூழியங்களும் நிகழ்வது உறுதி.
இவர்களின் அடாத செயல்களை எதிர்த்துத் தமிழர்கள் தனியாக[‘இந்தி’யரல்லாத இனத்தவர் இணைந்து செயல்படுவது இப்போதைக்குச் சாத்தியம் அல்ல. அண்ணாமலை, ‘எச்சி’ராஜா போன்ற கொத்தடிமைகளின் காட்டிகொடுக்கும் துரோகச் செயல் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும்]ப் போராடி வெற்றி பெறுவது எளிதல்ல.
ஆக,
தமிழரின் தாய்மொழியாம் தமிழுக்கும் அவர்தம் இனத்துக்கும் பெரும் கேடு விளையவிருக்கும் ஆபத்தான சூழல் இன்று நிலவுகிறது.
தமிழினத்துத் தலைவர்கள், தம்மிடையே உள்ள சிறு சிறு கருத்துமாறுபாடுகளைப் புறம் தள்ளி, ஒருங்கிணைந்து சிந்தித்து, போராட்டத்துக்கான வழிமுறைகளை ஆராய்வது மிக அவசியம்.
செய்வார்களா?
வியாழன், 20 பிப்ரவரி, 2025
போப் பிரான்சிஸ்[ஆண்டவர்] கவலைக்கிடம்! இறுதி ஊர்வல ஒத்திகை தேவையா?
#போப் பிரான்சிஸ்[போப் ஆண்டவர்] பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், சிக்கல்களின் அபாயத்தில் உள்ளார். அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்திவருவதால், உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இல்லை.
அவர் தனது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளன. எனவே, போப் ஆண்டவரின் இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன#https://ibctamilnadu.com/

போப் பிரான்சிஸ் ஆகட்டும் நம்மைப் போன்ற சாமானியராகட்டும், ஒருவர் உயிருடன் இருக்கும்போதே, இறந்த பிறகு நடத்தப்படும் இறுதி ஊர்வலத்துக்கு ஒத்திகை பார்ப்பது ஒரு கொடூரமான வழக்கம் என்றே தோன்றுகிறது.
ஒத்திகை பார்க்காமல் நடத்தப்படும் இறுதி ஊர்வலத்தில் தவறு நேருமாயின் அது வருத்தம் தரும் நிகழ்வு அல்ல; ஒரு குற்றச் செயலும் அல்ல.
கர்த்தரின் அருளால்[மருத்துவர்களின் கணிப்பு பொய்த்துப்போகலாம்] இன்னும் சில காலம் போப் அவர்கள் உயிர் வாழ்வாரேயானால் ஊர்வல ஒத்திகை அர்த்தமற்றதாக ஆகிறதே; நல்ல மனங்களை உறுத்துவதாகவும் ஆகுமே.
அறிவுஜீவிகள் நிறைந்த கிறிஸ்தவ மதத்தவரிடம் இப்படியொரு வழக்கமா?
போப் ஆண்டவர் அவர்களுக்காகப் பெரிதும் வருந்துகிறது நம் மனம்.
* * * * *
https://ibctamilnadu.com/article/pope-francis-funeral-preparation-bigins-1740044550#google_vignette
எச்சரிக்கை! கும்பமேளா ஆற்றில் யோகியும் மோடியும் நீராடலாம்! மற்றவர்கள்.....
இன்று சட்டமன்றத்தில் பேசிய ‘உ.பி.’ மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடும் நீர் தூய்மையாகவே உள்ளது; பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல ஏன் குடிக்கவும் உகந்ததுதான்” எனத் தெரிவித்துள்ளார்[https://tamil.news18.com] என்பது செய்தி.
யோகி ஆதித்யநாத் ஒரு யோகி; ஆன்மிகப் பேரொளி; புலன்களை அடக்கி ஆளும் துறவி; இறை நேசர்; இறைவனால் நேசிக்கப்படுபவர். எனவே, பிரயாக்ராஜ் ஆற்று நீரில் இவர் குளிக்கலாம்; அதைக் குடிக்கவும் செய்யலாம். ஆற்று நீரில் உள்ள எந்தவொரு நோய்க் கிருமியும் இவரை நெருங்காது.
மோடி இந்த மண்ணுலக மக்களை உய்விக்கக் கடவுளால் அனுப்பப்பட்டவர்; உலகம் கண்டிராத உன்னதமான பக்திமான்; கடவுளின் ஓர் அம்சம். ஆகவே, இவரும் மனித மலம் கலந்ததும் அழுகிய பிணங்கள் மிதப்பதுமான பிரயாக்ராஜ் ஆற்று நீரில் குளிக்கலாம்; அதை எத்தனை முறையும் அருந்தலாம். இவரைக் கண்டு கிருமிகள் அஞ்சி அலறி விலகி ஓடும்.
இவர்கள் இருவரையும் தவிர்த்து வேறு எவரும்[அமித்ஷா உட்பட> புனிதர் அல்ல என்பதால்] மேற்கண்ட ஆற்று நீரில் குளிப்பது தவறு என்பதைப் பல்வேறு பாவங்களைச் சுமந்து திரியும் அப்பாவி மக்களுக்கும் பக்தர்களுக்கும் பணிவுடனும் கனிவுடனும் தெரிவிக்கிறோம்!
* * * * *
‘கும்பமேளா’... குமரிகளைப் படம் எடுத்து விற்கும் ‘காலி’களுக்கான விழா!!!
புதன், 19 பிப்ரவரி, 2025
பாடாய்ப்படுத்தும் பதின்பருவப் பாலியல் பலவீனங்கள்!!![இரவல் பதிவு]
கடந்த வாரம், கைவசம் தரமான ‘கருப்பொருள்’ இல்லாத நிலையில், இணையத்தில் தேடித் திரிந்தபோது முன்பு அறிந்திராத https://kathaippakkam.blogspot.com என்னும் தளம் கண்ணில் பட்டது. நுழைந்து துலாவியதில் 10 கதைகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. முதல் கதையே நெஞ்சைக் கலங்கச் செய்தது. திருத்தம் ஏதும் செய்யாமல் சுட்டெடுத்ததை இப்போது இங்குப் பதிவு செய்திருக்கிறேன்[சில நாட்கள் கழித்து மீண்டும் அதில் நுழைய முயன்றபோது, ‘நீங்கள் தேடும் வலைப்பதிவு இல்லை’ என்று பதில் வந்தது].
பள்ளி இறுதி வகுப்பில் தோல்வியடைந்த நாளிலிருந்தே டவுனில் இருந்த நூலகம் செல்வதும் நின்றுபோனது.
ஆனாலும், அங்கே போவதாக அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு, மனம்போன போக்கில் சைக்கிளில் ஊர் சுற்ற ஆரம்பித்தேன். கூட்டம் அதிகம் இல்லாத சாலையோரக் கடைகளில் தேனீர் குடித்துவிட்டு பொழுதைக் கழிப்பதும், அதுவே பின்னர் வயசுப் பெண்கள் நடத்தும் கடைகளில் நேரம்போவது தெரியாமல் அவர்களின் அழகில் கிறங்கிக் கிடப்பதும், வேறு கடை தேடி அலைவதும் வாடிக்கையானது.
இந்தக் கெட்ட பழக்கம் கவலையை மறக்க உதவிய அதே நேரத்தில், விபரீதமானதொரு அனுபவத்தைப் பெறவும் காரணமானது.
அது விபரீதமானதல்ல, வளரிளம் பருவத்தில் இயற்கை நிகழ்த்தும் விந்தை என்பது அப்புறம் புரிந்தது.
நான் ‘விந்தை’ என்று குறிப்பிடுவது, நாகரிகமாகச் சொன்னால் ஆண்மையின் வெளிப்பாடு. பெண்ணழகைத் தன்வயம் இழந்து ரசிக்கும்போது உடலெங்கும் பரவும் புத்தம் புதியதொரு சுக அனுபவம்.
அது சுகமானதுதான் என்றாலும் அதை அனுபவித்து முடிக்கும்போதெல்லாம் அது அசிங்கமானது, மிகவும் தப்பானது என்று உள்மனம் எச்சரித்தது.
‘எனக்குத் தெரிந்த என் வயசுப் பையன்களெல்லாம் தேர்வில் தோற்றிருந்தாலும் எப்போதும் போல கவலையில்லாமல் திரிந்துகொண்டிருக்க நான் மட்டும் ஏன் இப்படி? இத்தனைப் பலவீனமான நான் மீண்டும் தேர்வில் வெற்றி பெற்று மேல் படிப்புப் படிப்பதென்பது பகற்கனவுதானா?’ என்னும் கேள்விகள் அடிமனதைக் குடையலாயின.
பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலைங்களிலும்கூடத் தேவதைகளைத் தேடி அலைந்தபோதெல்லாம், பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிகளில் சேர்ந்து பேண்ட்&சட்டையும் கையில் கடிகாரமும், முகத்தில் பெருமிதக் களையுமாகக் காட்சியளித்த சக வயதுக்காரர்களைப் பார்த்து மனம் வெதும்பினேன்; “அடுத்து வரும் தேர்வில் தேர்ச்சி பெறுவேன்” என்று சபதம் மேற்கொள்வதும், ஓரிரு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் கவர்ச்சிக் கன்னிகளைக் கண்டுவிட்டால் நின்று ரசிப்பதும் தவிர்க்க முடியாதவையாக இருந்தன.
சாலையோர மர நிழல்களில் சைக்கிளை நிறுத்திவிட்டு, நேரம் போவது தெரியாமல் கண்ணீர்விட்டுத் தேம்பித் தேம்பி அழுததும் உண்டு.
புதிய இந்தக் கெட்ட பழக்கத்திலிருந்து விடுபடவே முடியாதோ என்றெண்ணித் தவிப்பது வழக்கமாகிப்போனது.
நாட்கள் கரைந்தன.
இடைவிடாத உணர்ச்சிப் போராட்டத்துக்கு உள்ளானதாலும் சரியாக உணவு உட்கொள்ளாததாலும் உடம்பு மிகவும் மெலியலாயிற்று.
“என்ன ஆச்சி உனக்கு? கன்னமெல்லாம் குழி விழுந்து துரும்பா இளைச்சிட்டே. செவச்செவன்னு இருந்த உடம்பு கறுத்துப்போச்சு. படிக்கலேன்னா பரவாயில்லை. ஏதாவது தொழில் செஞ்சி பிழைச்சுக்கலாம். கலைப்படாம வீட்டோடு இரு” என்று கண்கள் கலங்கச் சொன்னாள் அம்மா.
அம்மாவின் அந்தக் கண்ணீர் எனக்குள் புதிய உத்வேகத்தை உண்டுபண்ணியது. “படிச்சிடுவேன்மா. நல்ல உத்தியோகத்துக்குப் போகணும்கிற உன் ஆசையை நிறைவேத்துவேன்” என்றேன் உறுதியான குரலில்.
“நம் குலதெய்வம் நம்மைக் கைவிடாது. சிரமத்தைப் பார்க்காம பத்து நாள் டவுன்ல இருக்கிற மலைக்கோயிலுக்குப் போய், சாமியைத் தரிசனம் பண்ணிட்டு வா. நல்லதே நடக்கும்” என்று நம்பிக்கையூட்டினார் அம்மா.
அம்மா சொன்னபடியே மலைக் கோயிலுக்குப் போவதென்று தீர்மானித்தேன்.
அவர் வற்புறுத்தியும் கேளாமல், காலையில் காலி வயிற்றோடு ஒன்பது நாட்கள் அந்த உயரமான மலையில் குடியேறியிருந்த ஈஸ்வரக் கடவுளை கண்ணாரக் கண்டு தரிசித்தேன்.
பத்தாவது நாளும் காலையில் வெறும் வயிற்றோடு, பல நூறு படிகள் ஏறித் தரிசனம் முடித்துத் திரும்பும்போது, மிகவும் சோர்வாக இருந்ததால் சுமார் நூறு படிகளே எஞ்சியிருந்த நிலையில், அங்கிருந்த கல்மண்டபத்தின் ஒரு தூணை ஒட்டிய கற்பலகை மீது நீட்டிப் படுத்தேன்.
நேரம் போவது தெரியாமல் படுத்துக் கிடந்த என் தோள் தடவிப் பெயர் சொல்லி யாரோ அழைப்பது கேட்டுத் திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது, முகத்தில் புன்னகை தவழ, அன்று என் நல்ல நடத்தைக்காக அடிக்கடி பாராட்டிய என் வகுப்பு ஆசிரியை நின்றுகொண்டிருந்தார்.
“சட்டெனப் புன்னகை மறைய, சாமி கும்பிட வந்துட்டு ஏன் இப்படிச் சோர்ந்துபோய்ப் படுத்துக் கிடக்கிறே?” என்று கேட்டதோடு, அழகுப் பையனா தளதளன்னு இருந்த நீ இப்படிக் கறுத்துட்டியே. ரொம்பவே மெலிஞ்சுட்டியே. தேர்வில் தோத்துட்டமேன்னு ரொம்பத்தான் கவலைப்பட்டுட்டியா? வேற காரணம் எதுவும் இருக்கா?” என்று அருகே அமர்ந்து பரிவுடன் என் தலை வருடினார். “நானும் சாமி கும்பிடத்தான் வந்தேன். அப்புறம் ஒரு நாள் வர்றேன். சாமி கோவிச்சுக்காது” என்று சிரித்தவர், என் கை பற்றி “வா போகலாம்” என்றார்.
மலை அடிவாரத்தில் நிறுத்தியிருந்த அவர் காரில் என்னை ஏற்றிக்கொண்டார்.
டவுனை ஒட்டியிருந்த அவர் வீட்டுக்குப் போகாமல், என் ஊருக்குக் காரைச் செலுத்தினார்.
அம்மாவிடம் நலம் விசாரித்துவிட்டு, “தேர்வில் பெயிலான பத்து மாணவர்களை என் வீட்டின் மாடியில் தங்க வைத்துப் பயிற்சி கொடுத்துட்டிருக்கேன். இவனை அழைச்சிட்டுப் போறேன். தேர்வு முடிஞ்சிதான் இங்கே அனுப்புவேன். இவனோட அப்பாகிட்டே சொல்லிடுங்க” என்றார்.
அம்மா நன்றி ததும்பும் பார்வையுடன் வழியனுப்ப இருவரும் காரில் புறப்பட்டோம்.
இது என் வாழ்க்கையில் இடம்பெற்ற எதிர்பாராத திருப்பங்களில் ஒன்று.
அப்புறம் நடந்ததெல்லாம் நல்லவையே என்று சொல்ல ஆசைதான்.
கடவுளுக்கும் ‘ஆசை’ உண்டு!!!
எல்லாவற்றையும் படைத்த கடவுள் மனிதனையும் படைத்து அவனுக்கு மட்டும் ஆறறிவைக் கொடுத்தாராம்.
சரி.
ஆறறிவைக் கொடுத்தவர் அவரே என்பதால், அதை எதற்கெல்லாம் எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்ததோடு, பயன்பாட்டுக்கு வரம்பு கட்டியவரும் அவரே ஆதல் வேண்டும்[வரம்பு இல்லையென்றால் அவரைப் போலவே இன்னொரு கடவுளையோ, பல கடவுளர்களையோ படைத்து அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிடுவான் மனிதன்].
தனக்கு வழங்கி அருளப்பட்ட ஆறறிவால் அவரைப்[கண்ட கண்ட கசமாலக் கடவுள்களைப் படைக்கத் தூண்டியவரும் அவரே] புகழ்ந்து தள்ளுகிறான் மனிதன்.
‘அவன்’ இன்றி அணுவும் அசையாது என்பதால் தன்னைப் புகழ வைத்தவரும் அவரே என்றாகிறது.
ஆக, மனிதனுக்கு ஆறறிவு வழங்கியதற்கான காரணங்களில் அவரைப் புகழ்வதும் ஒன்று என்பதால், மனிதர்களைப் போலவே கடவுளுக்கும் ‘புகழாசை’ உண்டு என்பதை அறிய இயலுகிறது.
புகழ்வதோடு, “எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு” என்று கோரிக்கை வைக்க வழிவகுத்தவரும் அவரே என்பதால்.....
தினம் தினம், தூங்கி எழுந்தவுடன் உங்களுக்குப் பிடித்த கடவுளையோ கடவுள்களையோ வழிபடத் தவறாதீர்கள்.
இன்று வழிபட்டீர்களா?
“இல்லை” என்பவர்கள், கீழே எழுந்தருளியுள்ள, உலகின் நம்பர் 1 பிரபலக் கடவுளான பிள்ளையாரப்பனைப்[படத்தை இங்குப் பதிவு செய்ய வைத்தவர் பிள்ளையாரே] புகழ்ந்து போற்றி வழிபட்டுச் செல்லுஙகள்[மற்ற மதத்தவர்கள் மானசீகமாக அவரவர் கடவுளைப் புகழ்ந்து வழிபடலாம்].
செவ்வாய், 18 பிப்ரவரி, 2025
ஆளும் செவிடர்களின் காதுகளில் ஊதிய சங்கு!!!
‘கங்கையும் யமுனையும் சரஸ்வதியும்[புருடா> கண்ணுக்குத் தெரியாதாம்!] கலக்கிற திரிவேணி சங்கம ஆறுகளின் நீரில் பிணங்கள் மிதக்கின்றன[கரையோரங்களில் அரைகுறையாய் எரிக்கப்பட்ட பிணங்களை மேற்கண்ட ஆறுகளில்தான் வீசுகிறார்கள்]. எனவே, தி.வே.ச. நீர் புனித நீரல்ல, அழுக்கு நீர்’ என்று, கும்பமேளா கொண்டாட்டத்தைச் சாடி எழுதிய என் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ‘மகா கும்பமேளா நடக்கும் உ.பி. பிரயாபிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில், ஆற்றின் நீரில் 'Faecal Coliform' என்ற பாக்டீரியா அதிகளவில் இருப்பதால், அவை குளிப்பதற்குத் தகுதியற்றவை. Faecal Coliform என்பது மனிதர்கள், விலங்குகளின் மலக் குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும்’ என்று வெளியிட்டுள்ள அறிக்கை மேற்கண்ட என் கருத்து மிகச் சரியானதே என்பதை உறுதிப்படுத்துகிறது.
நான் வெகு சாமானிய வலைப்பதிவாளன் என்பதால் என் எச்சரிக்கையை ‘மேலிடம்’ செவிமடுக்கவில்லை என்றோ, அது செவிடர்களின் காதுகளில் ஊதிய சங்கு என்றோ சொல்ல விரும்பவில்லை. காரணம்.....
தெரிந்திருந்தும், பக்தியின் பெயரால் இந்தப் புனித நீராடல் உட்பட ஏராளமான மூடநம்பிக்கைகளைச் சுமந்து திரியும் மூடர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்தான் தொடர்ந்து ஆட்சி பீடம் ஏற முடியும் என்பதால், இந்த உண்மையைப் ‘புனிதம்’ என்னும் போர்வையால் மூடி மறைத்தார்கள்; மறைக்கிறார்கள் அவர்கள்.
இந்தச் சுயநலக்காரர்களால் இந்தப் புண்ணியத் தேசம்[என்று சொல்கிறார்கள்] பாவத் தேசமாக மட்டுமல்ல, விதம் விதமான நோய்களின் உற்பத்தித் தேசமாகவும் மாறும் என்பது உறுதி!
* * * * *
திங்கள், 17 பிப்ரவரி, 2025
கவர்ச்சியின் மறுபக்கமும் ‘குடுகுடு’ கிழங்களின் மனமாற்றமும்!!!
இதன் எதிர்ச்சொல் ‘அசிங்கம்’.
ஆணின் எடுப்பான தோற்றமும் பெண்ணின் கவர்ச்சியான உறுப்புகளின் அமைப்பும் ஒருவர் மீது பிறிதொருவர் ‘நாட்டம்’ கொள்ளச் செய்பவை; பாலுணர்ச்சியைத் தூண்டி உடலுறவு கொள்ள வைப்பவை.
வெளியேற்றும் கழிவின் கெட்ட நாற்றம், நாசியில் வழியும் ‘கொழகொழ’ சளி, கண்களில் வெளியேறும் ‘பிசுபிசு’ பீழை என்று இருபாலாரிடத்தும் அருவருக்கத்தக்க அம்சங்களும் உள்ளன.
துள்ளும் இளமைப் பருவத்தில், எப்போதேனும் அருவருக்கத்தக்கவை உள்மனதை உறுத்தினாலும் அவ்வப்போதே அவை காணாமல் போவதற்கு, எப்போதும் கவர்ச்சி அம்சங்களின் ஆதிக்கம் மேலோங்கியிருப்பதே காரணம். விளைவு, ஆசைப்படும்போதெல்லாம் இடர்ப்பாடு இல்லாமல் அந்தரங்கச் சுகத்தை அனுபவிக்கிறார்கள் ஆடவரும் பெண்டிரும்.
வயது ஆக ஆக…..
கவர்ச்சி அம்சங்களின் ஆதிக்கம் குறைவதால், அருவருக்கத்தக்கனவற்றின் பாதிப்பு அதிகரிக்கிறது. அதனால், பாலுறவின் மீதான ஈடுபாடு குறையத் தொடங்குகிறது.
வயது முதிர்ந்த குடுகுடு கிழங்கள் இளசுகளைப் பார்த்து, “கொட்டம் அடிக்கிறார்கள்….. கும்மாளம் போடுகிறார்கள்” என்றெல்லாம் கரித்துக்கொட்டுவதற்கான காரணம் இதுதான்!
இது இயற்கை நிகழ்வா, இறைவனின்[இருந்தால்] திருவிளையாடலா?!
ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025
தொடரும் ‘டிரம்ப்’ திமிராட்டம்! குருதி கொதிக்குமா நம் பிரதமர் மோடிக்கு?!
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை இந்தியாவுக்கு அனுப்பும்போது, மனிதாபிமானத்துடன் அது நடந்துகொள்ளுதல் வேண்டும் என்று இந்தியா டிரம்புக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.
இதை அலட்சியப்படுத்திய ‘டிரம்ப்’ இப்போது 119 இந்தியர்களை, முன்பு போலவே[104 பேர் கை கால்களில் விலங்கு பூட்டி ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்டார்கள்] கை கால்களில் விலங்கிட்டு அனுப்பியிருக்கிறார்.
அப்போது அமைதி காத்த நம் பிரதமர் மோடி இப்போதும் அமைதி காத்து இந்திய-அமெரிக்க நல்லுறவுக்குப் பங்கம் நேராமல் பாதுகாப்பதன் மூலம் இந்தியாவின் தன்மானத்தை அந்தரத்தில் பறக்கவிடுவாரா?
அல்லது,
கொதித்தெழுந்து டிரம்புக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு.....
அமெரிக்கனின் ஈனத்தனமான நடவடிக்கைக்குப் பதிலடியாக, இங்கு வருகைபுரிந்துள்ள அமெரிக்கக் குடிமகன்களில் சிலரையேனும்[‘வேவு பார்த்தல்’ போல பொய்க் குற்றம் சுமத்தியேனும்], கை கால்களில் விலங்கு மாட்டி, நம் ராணுவ விமானத்தில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பாரா? அல்லது வேறு சிறப்பான நடவடிக்கை மூலம் பாடம் கற்பிப்பாரா?
என்ன செய்யப்போகிறார் நம் பிரதமர்?
* * * * *
119 பேர் அனுப்பிவைக்கப்பட்டது தொடர்பாக வெளியான காணொலி:
மோடிக்கு விலங்கு மாட்டிய விகடன் கார்ட்டூன்... ஒன்று போதாது! ஓராயிரம் தேவை!!
அரைக் கிறுக்கனும் அமெரிக்க அதிபனுமான டொனால்டு டிரம்பின்[‘ஜோ பைடன்’ போட்டியிட்டிருந்தால் இவன் தோற்றிருப்பான்] முன்னிலையில், ‘கை கால்’ விலங்கு பூட்டப்பட்ட பரிதாபக் கோலத்தில் நம் பிரதமர் மோடி அவர்கள் காட்சியளிக்கும் கார்ட்டூனைத் தமிழின் முன்னணி இணையத்தளமான ‘விகடன்’ வெளியிட்டுள்ள நிலையில், அந்தத் தளம் நடுவணரசால் முடக்கப்பட்டது என்பது நேற்றையச் செய்தி.
கார்ட்டூன் உருவானதன் பின்னணி பலரும் அறிந்ததே.
அது.....
‘அனுமதியின்றி அமெரிக்காவில் குடியேறியவர்களில்[தண்டனைக்குரிய வேறு குற்றங்களில் ஈடுபடாதவர்கள்] 104 பேருக்குக் கை கால்களில் விலங்கு பூட்டி, இந்தியாவுக்கு[அமெரிக்காவின் ராணுவ விமானத்தில்] அனுப்பப்பட்டார்கள்’[இதுவும் அவமானப்படுத்தும் செயல்தான்] என்பது.
104 பேருக்கு என்றில்லை, ஒரே ஒரு இந்தியனுக்கு இந்த அவமானம் இழைக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த இந்தியாவின் அடையாளமான நம் பிரதமர் மோடிக்கே இது இழைக்கப்பட்டதாகக் கருதுதல் வேண்டும்.
ஆம். கிறுக்கன் டிரம்ப், மோடியின் கை கால்களுக்கு[+கழுத்துக்கு?] விலங்கு பூட்டித் தன் ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பினான் என்றே நாம் கருதுதல் வேண்டும்.
இந்த மிக இழிந்த குற்றச் செயலுக்காக விமானத்தைத் திருப்பி அனுப்புவதோடு[குட்டி நாடு கொலம்பியா இதைத்தான் செய்தது; பின்னர் இரு நாடுகளுக்குள்ளும் உடன்பாடு ஏற்பட்டது] டிரம்பை மன்னிப்புக் கேட்கச் செய்த பிறகே நம் மக்களைத் திரும்பப் பெற்றிருத்தல் வேண்டும்.
மன்னிப்புக் கேட்க மறுத்திருந்தால் அமெரிக்கா மீது போர் தொடுப்பதாக அறிவித்திருத்தல் வேண்டும். நம்மை விடப் பலம் வாய்ந்தவன் என்பதால் வாய் பொத்தி மௌனம் சுமந்தாரா நம் பிரதமர் மோடி? இந்தியர்களுக்கு மானம் ரோஷம் என்பதெல்லாம் இல்லையா?[அமெரிக்கா சென்று அவனைச் சந்தித்து விருந்துண்டது இந்த இந்திய மண் அடைந்திராத மிகப் பெரிய அவமானம்].
தமக்கு[நமக்கானதும் ஆகும்] நேர்ந்த அவமானத்தைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், ஒரு ஊடகத்தில்[விகடன்] வெளியான கார்ட்டூனுக்காக அதை முடக்குவது[பொது அறிவோ சிந்திக்கும் ஆற்றலோ இல்லாத நபரின் பரிந்துரை] என்பது கற்பனைக்கெட்டாத கோழைத்தனம் ஆகும்.
இதை அறியச் செய்யும் வகையில் ‘விகடன்’ மட்டுமே கார்ட்டூன் வெளியிட்டது. இது போதாது; ஆட்சியாளர்களின் தன்மானத்தைத் தட்டி எழுப்ப இன்னும் ஓராயிரம் கார்ட்டூன்கள் தேவை!
* * * * *
சற்று முன்னர் வெளியான காணொலிச் செய்தி:
சனி, 15 பிப்ரவரி, 2025
கும்பமேளா... இன்னும் எத்தனைப் பக்தர்களைச் சொர்க்கம் அனுப்புவீர்கள் மோடி?!
மாநிலங்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, சிவசேனா(UBT) எம்பி சஞ்சய் ராவத், ஜனவரி 29 அன்று கும்பமேளாவில் "2,000 பேர் இறந்தனர்" என்று கூறியிருக்கிறார்[https://www.thehindu.com].
“புனித நீராடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறந்தார்கள்’ என்றார் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. நீங்கள் உண்மையான சாவுக் கணக்கைச் சொல்லாத நிலையில், உங்களின் அல்லக்கைகள் கார்கே அவர்களை வசைபாடினார்கள்.
//உத்தர பிரதேச மகாகும்பமேளாவில் கலந்து கொள்வதற்காகச் சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் காரில் புறப்பட்டுச் சென்றனர். அவர்களுடைய கார் பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் உள்ள மேஜா பகுதியில் அதிகாலை 2.30 மணியளவில் பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் காரில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனர்// இது அண்மையில் வெளியான ஊடகச் செய்தி[https://www.dinakaran.com]
//மகா கும்பமேளா | டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 18 பேர் பலி![https://www.puthiyathalaimurai.com/india/kumbh-mela-stampede-at-delhi-railway-station-15-people-including-3-children-killed// இது சற்று முன்னரான செய்தி.
ஊடகத் தகவல்கள் இவ்வாறிருக்க, என்னதான் நீங்கள் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மூடி மறைத்தாலும், புனித நீர் என்னும் அழுக்கு நீராடலை முன்னிட்டு ஆயிரக்கணக்கானவர் இறந்திருக்கிறார்கள் என்றே மக்கள் நினைக்கிறார்கள்.
பல்லாயிரவர் ‘சொர்க்கம்’ சேர்ந்திருக்கிறார்கள்.
ஆக, கும்பமேளா கொண்டாட்டம் காரணமாகப் பெரிதும் நன்மையே விளைந்திருக்கிறது என்று உறுதிபடச் சொல்லலாம்.
இந்நிலையில்,
தங்குதடையில்லாமல், கட்டுப்பாடுகள் ஏதுமின்றிப் பக்தர்கள் கும்பமேளாவுக்குச் செல்ல ஏராள வசதிகளைச் செய்துகொடுத்த தாங்கள், இன்னும் எத்தனை ஆயிரம் பேர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பத் திட்டம் வகுத்துள்ளீர்கள் என்பதை அறிந்திடப் பேரார்வத்துடன் காத்திருக்கிறார்கள் நம் மக்கள்.
எண்ணிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடுவீர்களா மோடிஜி?!
* * * * *
https://www.dinakaran.com/kumbh-mela-devotees-accident-death/amp/