செவ்வாய், 13 செப்டம்பர், 2022

கிண்டிலில்[அமேசான்] கலக்கவிருக்கும் 'பசி'பரமசிவத்தின் 'காமம் கற்பீர்'!!!

'காமம் கற்பீர்!!!: [பாலுறவில் விழிப்புணர்வூட்டும் புதினம்]' 

(Tamil Edition) Kindle Edition

காமம் கற்பீர்!!!: [பாலுறவில் விழிப்புணர்வூட்டும் புதினம்] (Tamil Edition) by ['பசி'பரமசிவம்]                                                                           


இது நூலுக்கான அறிமுக உரையின் தொடக்கம் மட்டுமே.

நூலின் தலைப்பில் 'காமம்' சேர்த்தது வாசகரைக் கவர்ந்திழுப்பதற்காக மட்டுமல்ல, 'கல்வி கற்றல், கலைகள் கற்றல்' போல, காமம் கற்பது இல்லற வாழ்வை இன்பம் செறிந்ததாக மாற்றும் என்னும் நம்பிக்கையால்தான்.

போட்டியில் 10 எழுத்தாளர்களுக்குப் பரிசு வழங்கவிருக்கிறது அமேசான். பரிசு பெறுவது ஒரு பொருட்டல்ல என்று நான் பொய் சொல்ல விரும்பவில்லை.

முதல் பரிசு[ரூ1,00,000] எனக்கே எனக்குக் கிடைத்திடல் வேண்டும்.

கிடைத்தால், கொஞ்சம் நாட்களுக்குச் சொந்தங்களிடமும் பந்தங்களிடமும் "அமேசான் கிண்டிலில் எழுத்தாளர்களுக்கான போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறேன்" என்று பந்தாவாகச் சொல்லித் திரியலாம். 

இது நப்பாசைதானே தவிர, ஒரு வயசாளியின் தப்பான ஆசை அல்ல என்பதால்.....

நீங்கள் உடனடியாக அமேசான் சந்தாதாரர் ஆகுங்கள்; ரூ2000க்குக் குறையாமல் பொருள்கள் வாங்குங்கள்["நீ ரூபாய் ஒரு லட்சம் பெற நாங்க தண்டத்துக்கு ரூ2000 செலவு செய்ய வேண்டுமா என்று நீங்கள் முணுமுணுப்பதை மானசீகமாக உணர முடிகிறது].

பாராட்டி மதிப்புரை எழுதுங்கள். மனசாட்சி இடம்தராவிட்டால், 'நறுக்' என்று கொஞ்சம் நாராச வார்த்தைகளால் அர்ச்சனையாவது செய்யுங்கள். "பாவம் பரமசிவம், ஒரு 'சாடல் மதிப்புரை' பெறுவதற்குக்கூட இவர் நூலுக்கு[காமம் கற்பீர்!!!] அருகதை இல்லையா[கடந்த காலத்தில் போட்டிகளில் பெற்ற கசப்பான அனுபவம்] என்று பலரும் பரிதாபப்படும்  அவலநிலைக்கு நான் ஆட்படாமல் தப்பிக்க இது வழிகோலும்! ஹி... ஹி... ஹி!!!
==========================================================================