தவறே செய்யாமல் வாழ்வது சாத்தியம் இல்லை.
செய்த தவற்றை நினைத்து வருந்தும்போது, அதனால் பாதிக்கப்பட்டவர் நமக்குத் தெரிந்தவராக இருந்தால், அவரிடம் மன்னிப்புக் கேட்பதன் மூலம் சற்றே ஆறுதல் பெறலாம்.
முன்பின் அறிமுகமே இல்லாதவர்களிடம் தவறாக நடந்துகொண்டால்[குறிப்பாகப் பொதுவிடங்களில்], பின்னர் மனம் திருந்தி வருந்தினாலும் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வாய்ப்பே இல்லை. ஆயுட்காலம்வரை முழு வருத்தத்தையும் சுமந்து வாழ நேரிடும்.
எனவே, பொதுவிடங்களில் பிறரை மதித்து நடந்துகொள்வது மிகவும் நன்மை பயப்பதாகும்.
