வியாழன், 2 ஜனவரி, 2025

“மாணவிக்கு நீதி கேட்டுக் கழிசடைக் கட்சிகள் நடத்தும் கபட நாடகம்! எது நீதி?

“மாணவிக்கு[அண்ணா பல்கலை.] நீதி கிடைக்கும்வரை[திமுக அரசு கவிழ்க்கப்படும்வரை?] அதிமுக போராட்டம் தொடரும்” என்று ஆவேசக் குரல் எழுப்பியிருக்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடியார்[https://www.dinakaran.com].

மற்றக் கட்சிக்காரர்களும் இதைததான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

காமுகன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை[காவல்துறை உட்பட, ஆட்சியாளர்களால்(+நீதிமன்றம்) நியமிக்கப்பட்ட குழுக்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றன. குற்றவாளிக்குத் தக்கத் தண்டனை கிடைத்தே தீரும்].

குற்றவாளி தண்டிக்கப்படுவது, இம்மாதிரிக் குற்றங்கள் இனியும் இந்தச் சமுதாயத்தில் நிகழ்வதை ஓரளவுக்கேனும் தடுக்கும் நடவடிக்கைதான் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், குற்றவாளி தண்டிக்கப்படுவதால் பாதிக்கப்பட்ட மாணவிக்குச் சற்றேனும் ஆறுதல் கிடைக்குமே தவிர, அவருக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது சரியா?

‘நீதி’ பற்றிப் பேசுவதற்கு முன்னால், இந்த வன்கொடுமையால் மாணவிக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன என்பதைப் புரிந்துகொள்ளுதல் மிக முக்கியம்.

இந்தப் பெண்[மாணவி] என்றில்லை, மணமாகாத வேறு எந்தவொரு பெண்ணாக இருந்தாலும் அவர் வன்புணர்வுக்குள்ளாவதால் அவர் தன் கன்னித்தன்மையை இழக்கிறார்[சுட்டிக்காட்டுவதைத் தவிர்க்க இயலவில்லை].

[இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை> கலவரம்> மதவாதிகளின் வெறிக்கூத்து...] 
இதன் விளைவு அவரின் திருமண வாழ்க்கை கேள்விக்குறி ஆகிறது.
ஆக்குவது இந்தச் சமுதாயம்தான். 

எந்தச் சமுதாயம் கேடிகளும் ரவுடிகளும் உருவாக அனுமதித்ததோ/அனுமதிக்கிறதோ அதே சமுதாயம்தான், ‘இவள் கெட்டுப்போனவள்’ என்று பழி சுமத்திப் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது.

இதை மனதில் கொண்டுதான், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட பயங்கர மதக் கலவரத்தில் வன்புணர்வுக்கு உள்ளான[இரு தரப்பிலும்]  பெண்கள் களங்கப்பட்டவர்கள் அல்ல; அவர்களுக்கு வாழ்வுதர இளைஞர்கள் முன்வர வேண்டும்’ என்று அறிக்கைவிட்டார் காந்தியடிகள்.

காந்தியடிகளின் இந்த வேண்டுகோளைப் பரப்புரை செய்து மக்களின் மனங்களில் பதிய வைத்து, இந்த மண்டூகங்களைத் திருத்துவதே வன்கொடுமைக்கு ஆளாகும் அபலைகளுக்கு வழங்கப்படும் நீதியாகும்.

“மாணவிக்கு நீதி வழங்கு நீதி வழங்கு... வழங்கு... வழங்கு” என்று வெறுமனே கூச்சலிடுவது, நிகழ்ந்த அசம்பாவிதத்தைப் பெரிதுபடுத்தி அவரின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் செயலாகும்.

                                         *   *   *   *   *

*****நம் கருத்துக்கு வலிமை சேர்க்கும் நீதிமன்ற நடவடிக்கை[சற்று முன்னர் வெளியான காணொலி]:

                                            *   *   *   *   *

https://www.dinakaran.com/student-will-get-justice-aiadmk-protest-edappadi/