பிறந்ததன் விளைவாகப் பிற உயிர்களை வதைத்துச் சிதைத்து உணவாக்கி வாழ்கிறோம்.
ஆசைப்பட்டபடியெல்லாம் வாழ்ந்து முடிப்பதற்குள், வகை வகையான உணர்ச்சிப் போராட்டங்களுக்கிடையே கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத உயிரினங்களின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சிதைகிறோம்.
பிறப்புக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட காலத்தில், ஆணும் பெண்ணுமாகச் சதையோடு சதை தேய்த்துச் சந்ததிகளை உருவாக்குகிறோம். எதனுடனோ எவருடனோ எல்லாமோ போராடி வதைபடுகிறோம். வாழ்நாள் முடிந்ததும் செத்துத் தொலைக்கிறோம்.
“ஒன்னுமே புரியல.”
* * * * *
இப்பதிவை எழுதத் தூண்டிய ‘ஔவை’யின் பாடல்:
‘வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமென்றால் போகா -இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்’
[துஞ்சுதல் - இறத்தல்]
=============================================================
***புதுப்பிக்கப்பட்ட பதிவு இது.

