அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 17 மே, 2020

‘3’இல் ‘2’ பங்கு அமெரிக்கர்கள் அடிமுட்டாள்கள்'!!!


what is Coronavirus: Coronavirus: ஏன் கொரோனாவை ...
கீழ்க்காணும் செய்தி இன்றைய ‘தினத்தந்தி’யில்[ https://www.dailythanthi.com/.../Coronavirus-a-message-from-God-to-change -ways-twothirds.vpf ] வாசித்தது. நீங்களும் வாசியுங்கள். இறுதியில் வழக்கம்போல் நாம் தொடுக்கும் கேள்விக் கணைகள்!

#உலகச் செய்திகள்:
கொரோனா பாதிப்பு: கடவுளிடம் இருந்து வந்த செய்தி 3-ல் 2 அமெரிக்கர்கள் நம்புகிறார்கள்

கொரோனா பாதிப்பு என்பது அமெரிக்கர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ள, கடவுளிடம் இருந்து வந்த செய்தி என மூன்றில் 2 அமெரிக்கர்கள் நம்புகிறார்கள்.
பதிவு: மே 16,  2020 12:32 PM
வாஷிங்டன்

கடவுளை நம்பும் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் என்பது அமெரிக்கர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள சர்வ வல்லமையுள்ள கடவுளிடம் இருந்து வந்த செய்தி என நம்புகிறார்கள் என ஒரு கருத்து கணிப்பில் தெரிய வந்து உள்ளது.

எவாஞ்சலிகல் புராட்டஸ்டன்ட்டுகள் என அடையாளம் காணப்பட்டவர்கள், கொரோனா வைரஸ் என்பது மனிதர்களின் நடத்தையை மாற்ற எச்சரிக்கும் கடவுள்  செய்தி என்று உறுதியாக நம்புவதாக, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத் தெய்வீகப் பள்ளி ஆகியவை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

43 சதவீத எவாஞ்சலிகல் புராட்டஸ்டன்ட்டுகள் வைரஸ் கடவுளின் செய்தி என்று நம்புகிறார்கள், அதே நேரத்தில் 28 சதவீத  கத்தோலிக்கர்கள் மற்றும் எவாஞ்சலிக்கல் அல்லாத புராட்டஸ்டன்ட்டுகளும் இந்த நம்பிக்கையை ஏற்றுக்கொண்டனர் என்று ஆய்வில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று என்பது கடவுளிடம்  இருந்து வந்த அறிகுறியாகும் என்று பதிலளித்தவர்கள் வெள்ளைக்காரர்களை விட கறுப்பு இனத்தவர் மற்றும் லத்தீன் மக்களும் அதிகமாக இருந்தனர்.

கறுப்பினத்தில் பதிலளித்தவர்களில் 47  சதவீதம் இது கடவுளிடமிருந்து வந்த செய்தி என்று உறுதியாக நம்பினர், அதைத் தொடர்ந்து 37 சதவீத லத்தீன் மக்களும் 27 சதவீத வெள்ளை அமெரிக்கர்களும் உள்ளனர்.

மத ரீதியாக இணைக்கப்படாத பலரும் வைரஸ் உண்மையில் அதிக சக்தியில் இருந்து வந்த செய்தியாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

பென்சில்வேனியாவைச் சேர்ந்த 52 வயதான லான்ஸ் டிஜேசஸ் என்பவர் கூறும் போது, திடீரென்று இந்த கொரோனா வைரஸ் உங்களைத் தக்குகிறது, உங்கள் செயல்களைப் பாருங்கள், இது ஒரு அடையாளமாக இருக்கலாம். எல்லாம் ஒரு சரியான திசையில் செல்வது போல் தெரிகிறது என்று அவர் கூறினார்#

‘தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ள, கடவுளிடம் இருந்து வந்த செய்தி’ என்று சொல்லுகிற அந்த மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்களிடம் நாம் எழுப்பும் கேள்விகள் பின்வருமாறு:

கேள்வி ஒன்று:
நடத்தையை மாற்றிக்கொள்வது என்றால் என்ன? மனிதர்கள் அத்தனை பேரும் அயோக்கியர்களாக இருக்கிறீர்கள். இனி நல்லவர்களாக நடந்துகொள்ளுங்கள் என்கிறாரா கடவுள்?

இரண்டு:
கொரோனா படு பயங்கரமான தீய சக்தி. உங்களில் லட்சக்கணக்கானவர்களைப் பலிகொண்டுவிட்டது. உயிர்ப்பலி இனியும் தொடரும். அந்தத் தீய சக்தியை என்னால் அழித்தொழிக்கவோ, அடக்கியாளவோ முடியவில்லை. ஆகவே, என்னை வழிபடுவதை நிறுத்திவிட்டு அதைச் சரணடையுங்கள் என்கிறாரா?

மூன்று:
கொரோனாவை அழித்தொழிக்க அரும்பாடு படுகிறீர்கள். அது சாத்தியமே இல்லை. இனி, அதன் போக்கில் விட்டுவிடுங்கள். உங்களில் பெரும்பான்மையினரைப் பலிகொண்ட பிறகு அதுவாகவே முடங்கிவிடும். மனிதப் பதர்களாகிய நீங்கள் சும்மா இருங்கள் என்கிறாரா?

நான்கு:
உங்களைத் திருத்துவதற்கு என்னால் அனுப்பப்பட்ட அதி பயங்கரமான சக்தி படைத்த அரக்கன்தான் கொரோனா. அதை எதிர்த்துப் போராடாமல் அனைவரும் செத்தொழியுங்கள். செத்த பிறகு உங்கள் அனைவருக்கும் மோட்சம் நிச்சயம் என்கிறாரா?

ஐந்து:
“கடவுளே, கருணையின் வடிவம் நீங்கள். நாங்கள் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் கொரோனாவை அனுப்பித் தாக்குதல் நடத்துகிறீர்கள். ‘நீங்கள் உங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ளுங்கள். தவறினால் கொரோனாவை அனுப்பித் தாக்குதல் நடத்துவேன்’ என்று நீங்கள் முன்னெச்சரிக்கை செய்திருக்கலாமே, ஏன் செய்யவில்லை பகவானே? என்று கேட்டுப் புலம்பாதீர். எதையெதை எவ்வெப்போது எப்படி எப்படிச் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பது என் விருப்பம். என்கிறாரா?

மேற்கண்டவற்றில் எதை அல்லது, எவற்றைக் கருத்தில் கொண்டு, ‘கடவுள் நம் நடத்தையை மாற்றிக்கொள்ளச் சொல்கிறார்’ என்று சொன்னீர்கள்? அமெரிக்காவின் மூன்றில் இரண்டு பங்குப் பக்தகோடிகளே, கொஞ்சம் சிந்திப்பீர்களா?
========================================================================