அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

ஜக்கியின் "சம்போ... சம்போ" மந்திரம் தற்கொலைக்கு மாற்றாகுமா?!

"தற்கொலை கோழைத்தனம்" என்பார்கள்.

அது கோழைத்தனமோ அல்லவோ, விரக்தியின் விளிம்புநிலையைத் தொட்டவர்களே தற்கொலை புரிகிறார்கள்.

உயிரை மாய்த்துக்கொள்வதற்கு இப்படியொரு கொடூர வழிமுறையைத் தேர்ந்தெடுப்பவரின் மனம் படும் துயரம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் மட்டுமே உணர முடியும்.

தினம் தினம் தற்கொலை நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டுதான் உள்ளன.

கொடிய நஞ்சை உட்கொள்ளுதல், ரத்தக் குழாயை அறுத்தல், ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தல், ஆற்றிலோ ஆழமான கிணற்றிலோ குதித்தல், தூக்கில் தொங்குதல் என்றிப்படிப் பல வழிகளைக் கையாள்கிறார்கள் தற்கொலை புரிபவர்கள்.

தூக்க மாத்திரை உட்கொள்வதைத் தவிர[போதிய அளவு இந்த மாத்திரைகளை வாங்குவது அத்தனை எளிதல்ல] மேற்கண்ட வழிகளைக் கையாளும்போது மனம் படும் வேதனை அளவிடற்கரியது.

தற்கொலை நிகழ்வுகளை முற்றிலுமாய்த் தடுக்க இயலாத நிலையில், 'மன வலி' இல்லாமல் தற்கொலை செய்துகொள்வதற்கு வழியே இல்லையா என்று நான் சிந்திப்பதுண்டு. எத்தனை சிந்தித்தும் பயன் ஏதும் விளைந்திடவில்லை.

இந்நிலையில்.....

'உனக்காகவே ஒரு ரகசியம்'[விகடன் பிரசுரம், 3ஆம் பதிப்பு: 2008] என்னும் ஜக்கி வாசுதேவின் நூலை வாசிக்கும் 'பேறு' கிடைத்தது.

அதில், 'எது குற்றம்? எது நியாயம்?' என்னும் தலைப்பிலான கட்டுரையில்[பக்கம்: 342-343] ஜக்கியின் கூற்றாகக் கீழ்க்காணும் கருத்துரைகளை வாசிக்க நேர்ந்தது:

'...அந்தப் பௌர்ணமி தினத்தில் வெகு அதிகாலையிலேயே எழுந்து விஜி[ஜக்கியின் மனைவி] பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தாள்.

காலையில் ஒரு முறை, மூன்று மணி நேரங்களில் மறுமுறை, மதியம் ஒரு முறை என்று அவள் மீண்டும் மீண்டும் குளித்துவிட்டுச் சாதனைகளில் ஈடுபட்டாள்.

மதிய உணவை என்னுடன் அமர்ந்து உண்டாள்.

ஒரு கட்டத்தில், உடலிலிருந்த நகைகள், உலோகங்கள் என்று எல்லாவற்றையும் கழற்றி வைத்தாள்.

மாலை நேரம். சுமார் 6.15. "சம்போ... சம்போ..." என்று தீவிரமாக உச்சரித்துக்கொண்டிருந்தாள் அவள். உருவமற்ற உன்னதத்துக்கு அன்பும் பக்தியும் கலந்து 'சம்போ' என்ற ஒலி வடிவம் கொடுத்து அவள் ஆனந்த நிலையை எட்டினாள். அந்த உச்சரிப்பின் உச்சத்தில், அப்படியே தன் உடலைக் கடந்து அவள் வெளியேறிவிட்டாள்; 'மகா சமாதி' அடைந்துவிட்டாள்.....'


தன் மனைவி உயிரிழந்த முறை குறித்து இவ்வாறு விவரித்த ஜக்கி வாசுதேவ்,  "சம்போ... சம்போ" என்று உச்சரித்துச் சமாதி நிலை எய்துவது[உயிரிழப்பது] தனக்கும் சாத்தியப்படும் என்பதை பிறிதோரிடத்தில்[பக்கம்: 347] கீழ்க்காணும் வகையில் குறிப்பிட்டிருக்கிறார்.

'நான் நினைத்தால்கூட என் உடலிலிருந்து விடுபட, குறைந்தபட்சம் இருபத்து நான்கு மணி நேரம் உணவின்றி இருக்க நேரிடலாம்.'

ஆக, ஜக்கியின் கருத்துப்படி, விஜியைப் போல குறைந்த அவகாசத்தில் சமாதி[உயிரைப் போக்கிக்கொள்வது] எய்துவது சாத்தியமல்ல என்றாலும் 24 மணி நேரத்தில் அது சாத்தியப்படும் என்பது தெரிகிறது.

ஜக்கியின் இந்தக் கருத்தை நினைவுகூர்வதன் மூலம் நான் சொல்ல நினைப்பது என்னவென்றால்.....

தன் விசுவாசிகளுக்கு 'யோகா' கற்றுக் கொடுப்பது போல, "சம்போ... சம்போ..." சொல்லிக் கொடுத்துச் சமாதி நிலை எய்துவதையும்[பயிற்சி மட்டுமே] அவர் கற்பிக்கலாம். 

கற்றுக்கொள்பவர்களில் யாரேனும், தவிர்க்கவே இயலாத சூழலில் தற்கொலை புரிய முனைவார்களேயானால்[100% தவிர்க்கப்படுதற்குரியதும் கண்டிக்கத்தக்கதுமான செயல்], அவர்கள் விஜியைப் போல ஆனந்தப் பரவசத்துடன் மரணத்தைத் தழுவுவார்கள் என்பது உறுதி.

எனவே, நான் மிக மிக மிகப் பணிவுடன் கடவுள்களின் குருவான[சத்குரு] ஜக்கி வாசுதேவ் அவர்களிடம் வேண்டுவது.....

"சம்போ... சம்போ... சொல்லிச் சமாதி நிலை எய்தும் மந்திரம் கற்பிக்கும் பணியை உடனடியாகத் தொடங்குங்கள் மகானே"!

===========================================================================