சிற்றின்பம்?
ஆண்-பெண் இணைந்து பெறும் இன்பத்தைத்தான் சிற்றின்பம் என்றார்கள் நம் முன்னோர்கள்.
சிறிது நேரம் மட்டுமே[அதிக நேரம் ஆக்குவதற்கு ஆண்கள் படாத பாடெல்லாம் படுகிறார்கள்] அனுபவிப்பதோ, இதன் பொருட்டு எதிர்கொள்ளும் இடையூறுகளோ ஏராளமான துன்பங்களோ இதற்கான காரணங்கள் ஆகும்.
இதற்கு மாற்றாக, கடவுளைக் கற்பித்து அவரை வழிபடுவதன் மூலம் பெறும் இன்பம்தான் ‘பேரின்பம்’ என்றுசொல்லித் திருப்தி காண்டார்கள்; காண்கிறார்கள் நம் மக்கள்.
உண்மையில் பேரின்பம் என்று எதுவும் இல்லையாயினும், கீழ்க்காணும் வகைகளில், இடர்ப்பாடுகளோ பெருந்துயரங்களோ இல்லாமல் நாம் பெரும் இன்பங்களைச் ‘சிறு சிறு பேரின்பங்கள்’ என்று சொல்லி மனநிறைவு பெறலாம்.
எளிமையான கொஞ்சம் எடுத்துக்காட்டுகள்:
*சாலை ஓர மர நிழலில் நின்றுகொண்டு வாகனங்களில் பயணிக்கும் விதம் விதமான மனிதர்களையும், வினோதமான நிகழ்வுகளையும் வேடிக்கை பார்க்கலாம். சூழலைப் பொருத்து நாம் பெறுவது இன்பமாகவோ பேரின்பமாகவோ அமையும்.
*காலையில் காபியோ தேநீரோ குடிக்கிற பழக்கம் இருப்பவர்கள், ‘மடக் மடக்’ என்று ஒரே மூச்சில் குவளையைக் காலி செய்யாமல், மெல்ல, மிக மெல்லச் சுவைத்தால் பெறுவது இன்பம்; அதிக நேரம் சுவைக்கும்போது அது பேரின்பமாக மாறுகிறது.
*பூங்காவுக்குச் சென்று[+கடற்கரை> இருந்தால்] தனிமையில் அமர்ந்து மனதுக்குப் பிடித்த பாடல்களை[திரைப்படப் பாடல்களோ பக்திப் பாடல்களோ] வாய்விட்டுப் பாடுவது இன்பம். மனம் ஒன்றிப் பாடினால் அது பேரின்பம் எனப்படும்.
*ஓவியங்கள் வரைவதும், கதைகளும் கவிதைகளும் எழுதுவதும் இன்பம். அவை பிறரால் பாராட்டப்படும்போது பெறுவது பேரின்பம்.
*மலைப் பிரதேசங்களுக்குச் சென்று[கொஞ்சம் பணச் செலவை பொருட்படுத்த வேண்டாம்> கோடிக்கணக்கில் செலவு செய்து இல்லறவாசி ஆகி, கணவனும் மனைவியும் மனம் ஒத்து வாழ்ந்தால்[மட்டுமே] பெறும் சிற்றின்பத்தை ஒப்பிடுக], ஆசை தீர இயற்கை அழகை ரசிப்பது பேரின்பம்.
*எதிர் வீட்டுக் குழந்தைகளின் அழகையும், அவை செய்யும் குறும்புத்தனங்களையும் பார்த்துப் பார்த்துச் சுகிப்பது பெரும்பேரின்பம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
*பணி நிமித்தம் எங்கெல்லாமோ அலைந்து திரிந்ததில் தாகம் அதிகரித்து, நம் பிரியத்திற்குரிய குளிர்பானத்தை வாங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக் குடித்தால், நீண்ட நேரம் சொர்க்கத்தில் உலவிவிட்டு வந்த அனுபவம் கிடைக்கும்.
*நான்கு பேர் சுற்றியிருக்கும்போது மறைவிடங்களில் அரிப்பு எடுத்தால், கட்டுப்படுத்த இயலாமல் கொஞ்சம் மறைவான இடத்திற்குச் சென்று, பொறுமையாகச் சொறிந்துகொள்வதும்கூட ஒரு வகைப் பேரின்பமே.
கொஞ்சம் யோசித்தால், ஆணோ பெண்ணோ, பிறிதொருவரைச் சார்ந்திராமல், இவ்வாறான பேரின்பங்களைப் பெறுவதற்கான வழிகள் நிறையவே தென்படும்.
இம்மாதிரியான இன்பங்களைத் துய்க்கப் பழகினால், இல்லற வாழ்க்கையில் பெறும் துயரங்கள் குறைந்து, ஓரளவுக்கேனும் மன நிறைவுடன் வாழ்வது சாத்தியமாகும்.
‘எல்லோரும் இவ்வாறான சிறு சிறு பேரின்பங்களை அனுபவிப்பது அதிகரித்தால், சிற்றின்ப[ஆண்-பெண் உடலுறவு] ஈடுபாடு குறையும்; காலப்போக்கில் மனித இனமே அழிந்துவிடும்’ என்று எவரும் கவலைப்பட வேண்டாம்.
கவலைப்பட வேண்டியவர் அனைத்தையும் படைத்தவர் என்று சொல்லப்படும் கடவுள் மட்டுமே! ஹி... ஹி... ஹி!!!
