எனது படம்
திணிப்பின் மூலம் நாட்டுப்பற்றை வளர்ப்பது சாத்தியமே அல்ல. ஆட்சியாளர்களின் நன்னடத்தை, ஒழுக்கம், மக்களுக்கு நன்மை பயப்பதான அவர்களின் செயல்பாடுகள் போன்றவையே ஒருவனை நாட்டுப்பற்று உள்ளவனாக ஆக்கும்; ஆகச் சிறந்த குடிமகனாக வாழச் செய்யும்!

வியாழன், 18 ஜூன், 2026

கடவுள்... படைப்பு... மசுரு... மண்ணாங்கட்டி!!!

யிருக்குயிராய் நேசித்தவளின் சடலத்தை மட்டுமல்ல, மலையளவு துயரத்தையும் சுமந்து செல்கிறான் அவன்.

அரவணைப்பில் 18 மாதச் சிசு.

செத்துப்போன அம்மாவின் கால்களை இறுகப் பற்றியபடி, கண்ணீர் சிந்தி அழுதுகொண்டிருக்கும் சிறுமி.

இவர்களைத் தேற்றுவார் யார்? அரவணைத்து ஆற்றுப்படுத்துவார் எவர்?

இது சற்று முன்னர் கண்களில் பட்ட ஒரு காட்சி[Quora].

காண்பதற்கு வாய்ப்பமையாத, நெஞ்சைச் சுடும் இதைப் போன்ற துன்பியல் நிகழ்வுகள் இன்னும் எத்தனை எத்தனையோ என்பதால், தினையளவு சுகமும் பனையளவு சோகமும் கலந்ததுதான் மனித வாழ்க்கை என்றாகிறது.

அள்ள அள்ளக் குறையாத சுகங்களை வாரி வாரி வழங்கியிருக்கிறார் கடவுள் என்கிறவர்கள் நம் அனுதாபத்திற்குரியவர்கள்!