புதன், 24 ஜூன், 2026

“தொட்டால் விடமாட்டோம்”... முதல்வர் ஜோசப்! தொடுவது யார்? யாரெல்லாம்?

“மக்கள் பணத்தைத் தொடமாட்டோம், தொட்டால் விடமாட்டோம், தொட்டவர்களையும் சும்மா விடமாட்டோம்” -சட்டசபையில் கர்ஜித்தார் முதலமைச்சர் விஜய்[https://tamil.behindtalkies.com/tamil-nadu-assembly-session-updates-vijay-speech-dmk-walkout/amp/].கர்ஜிப்பது போதாது முதல்வரே, முன்பு[தி.மு.க. ஆட்சியில்]யாரேனும் தொட்டிருந்தால், தொட்டவர்களைச் சும்மா விடாதீர்; அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தடுப்பாரில்லை; பாராட்டுவார்கள்.

“தொட்டால் விடமாட்டோம்” என்கிறீரே ஜோசப், மக்கள் பணத்தை யாரால் தொடமுடியும்?

தமிழ்நாட்டை ஆள்பவர் நீர். மக்கள் பணத்தைக் கையாள்வது நீரும் உம்முடைய அமைச்சர்களும் உம்முடைய பிரிய அதிகாரிகளும்.

அதைக் கையாடல் செய்யும் வாய்ப்புள்ளவர்களும் நீரும் உம் சக அமைச்சர்களும் அதிகாரிகளும்தான்.

ஊழல் புரிந்தால் உம் மீதும் உம் ஆட்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதாக நீர் சொல்வது நம்பும்படியாகவா இருக்கிறது?

ஒரு மாநிலத்தையே ஆளுகிறவர் நீர். கொஞ்சமேனும் சிந்தித்துப் பேசுவது நல்லது... உமக்குத்தான்!