சனி, 12 செப்டம்பர், 2026

கொல்லும் மதவாதிகள்! மனிதம் வெல்க!!

தங்கள் பலவும் மனிதநேயத்தை வலியுறுத்துகின்றன. அவற்றைப் பின்பற்றுவதாகவும் பின்பற்றுமாறும் சொல்லும் மதவாதிகள், ஆதிக்க வெறியுடன் பிற மதத்தவரைத் தாக்கி அழித்ததோடு, தம் மதம் சார்ந்தவர்களையே கொன்று குவித்தார்கள் என்பது  வரலாறு. 

சில நிகழ்வுகள்:

*****இஸ்லாம்: கர்பலா போர் போன்ற ஆரம்பகால நிகழ்வுகள் ஷியாக்களின் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாகவும் துக்க நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.

ஈராக் போர்(2003-க்குப் பிறகு), சிரிய உள்நாட்டுப் போர் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மசூதிகள் மற்றும் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பாலான சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் குர்ஆன் மற்றும் அடிப்படை நம்பிக்கைகளில் ஒற்றுமையுடன் வாழ்ந்தாலும், அரசியல் காரணங்களால் தூண்டப்படும் தீவிரவாத மோதல்கள் இன்றும் மனித உயிர்களைப் பலியிட்டு வருகின்றன.

*****கிறிஸ்தவம்: செயிண்ட் பார்த்தலோமெவ் படுகொலை(St. Bartholomew's Day Massacre - 1572): பிரான்சில் கத்தோலிக்கப் படைகளுக்கும் பிராட்டஸ்டண்ட் பிரிவினரான ஹூகேனாட்களுக்கும்(Huguenots) இடையே நடந்த மோதலில், பாரிஸ் நகரில் மட்டும் ஆயிரக்கணக்கான பிராட்டஸ்டண்டுகள் படுகொலை செய்யப்பட்டனர். பிரான்ஸ் முழுவதும் பல வாரங்கள் நடந்த இந்த வன்முறையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பிரெஞ்சு மதப்போர்கள் (French Wars of Religion - 1562–1598): பிரான்சில் கத்தோலிக்கர்களுக்கும் பிராட்டஸ்டண்டுகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போர்களில் வன்முறை, பஞ்சம் மற்றும் நோய்கள் காரணமாக சுமார் 2 முதல் 4 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்.

முப்பது ஆண்டுப் போர்(Thirty Years' War - 1618–1648): ஜெர்மனி மற்றும் மத்திய ஐரோப்பாவில் கத்தோலிக்க நாடுகளுக்கும் பிராட்டஸ்டண்ட் நாடுகளுக்கும் இடையே நடந்த மிகக்கொடூரமான போர். இது ஐரோப்பிய வரலாற்றில் மிகப் பெரிய மனிதப்பேரிழிவை ஏற்படுத்தியது. போர்க்கள மரணங்கள் மற்றும் பட்டினி காரணமாக ஜெர்மனியின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு(சுமார் 4 முதல் 8 மில்லியன் மக்கள் வரை) பலியாகினர்.

*****இந்துமதம்: பண்டைய மற்றும் இடைக்கால இந்திய வரலாற்றில் இந்து அரசர்களுக்கு இடையேயான போர்கள் நிலப்பரப்பு விரிவாக்கம், அதிகாரம் மற்றும் வீண் பெருமைக்காக நடந்தன. இப்போர்களில் ஆயிரக்கணக்கான வீரர்களும் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். எனினும், அக்காலத்துப் போர்களில் நிகழ்ந்த உயிர்ச்சேதங்கள் நேரடிப் பதிவுகளாகவும் முழுமையானவையாகவும் இல்லை.

தவாதிகளுக்கும் அவர்களின் கடவுள்களுக்கும் சிந்திக்கும் அறிவு இல்லாமல்போனது ஒரு பொருட்டல்ல; மனிதம் போற்றி வாழவேண்டிய பெரும்பாலான மக்களுக்கும்[குறிப்பாகப் பக்தர்கள்] அது இல்லாமலிருப்பதுதான் பெரிதும் வருந்தத்தக்கதாகும்!