பக்கங்கள்

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

கடவுளே! இவையெல்லாமும் உன் திருவிளையாடல்தானா?!?!

பிறப்புறுப்பில் சிறுநீர் கழிப்பதுபோல் அல்லாமல், வலுக்கட்டாயமாக அதைத் தூண்டிவிட்டு இன்பம் பெற்றிட முயற்சிப்பதுதான் சுய இன்பம் ஆகும். இதனை  Masterbation என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். 

‘சுய இன்பத்தில் ஈடுபட்டு விந்துவை விரயம் செய்வதால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுவதோடு மனநிலையும் பாதிக்கப்படும்’ என்று நம் முன்னோர்கள் நம்பினார்கள். 

காக்கா வலிப்பு வரும்; மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்; பெண்களைப் பொருத்தவரை மாதவிலக்கு வலி கடுமையா இருக்கும்’ என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். இன்றோ.....

தத்தம் உடல் நலத்திற்கேற்ப சுய இன்பம் செய்வதால் நன்மை விளையுமே தவிர, தீமை ஏதும் விளைவதில்லை என்கிறார்கள் உடலியல் ஆய்வாளர்கள்[மாறுபட்ட கருத்துகள் உள்ளன]. 
இது குறித்து விவாதிப்பது இப்பதிவின் நோக்கமல்ல. இளம் வயது ஆண்களும் பெண்களும் சுய இன்பத்தில் ஈடுபடாமலிருக்க நம் முன்னோர்கள் கையாண்ட அதிர்ச்சியளிக்கும் வழிமுறைகளில் சிலவற்றைப் பதிவு செய்வது மட்டுமே.

அவை.....

*சிறு அறுவையின் மூலமாக, ஆணுறுப்பின் மேற்புறத் தோலுக்குள் மெல்லிய வெள்ளிக் கம்பியைச் செருகி வைத்தல். தொட்டால் பயங்கர வலி உண்டாகும். மூட்டை மூட்டையாய்க் காம இச்சையைச் சுமந்துகொண்டிருந்தாலும் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருப்பதைத் தவிர, பையன்களுக்கு வேறு வழி இல்லாமல் போனது.

*இளங்குமரிகளுக்கு, பெண்ணுறுப்பில் சூடு வைத்துக் காயப்படுத்துதல். புண் ஆறிவிட்டது தெரிந்தால், உறுப்பின் முக்கால் பாகத்தைத்[சிறுநீர் கழிப்பதில் இடைஞ்சல் ஏற்படாத வகையில்] தைத்துவிடுதல்.

*ஜட்டி வடிவில் பெல்ட் வடிவமைத்துப் பூட்டிவிடுதல். சாவி பெற்றோர் வசம். ஒன்னுக்கு ரெண்டுக்கான தேவைகளுக்கு இளசுகள் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.[facebook இல் Rahmath Rajkumar இது குறித்து எழுதியுள்ளார்].

குரங்கு, யானை, பூனை, நாய் என விலங்குகள் பலவற்றிற்கும் சுய இன்பப் பழக்கம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இப்பழக்கத்திற்கு மனிதகுலம் தொன்றுதொட்டு அடிமையாக இருந்துள்ளது என்பதை வரலாறு சொல்கிறது.

மணம் புரியாதவர்கள் என்றில்லை, மணமானவர்களிலும் துணையுடனான உடலுறவில் போதிய திருப்தி பெறாதவர்கள் இப்பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை.

வயது முதிர்ந்த கிழங்களும் விதிவிலக்கல்ல.

விதிவிலக்குகளும் இருக்கக்கூடும். 

எது எவ்வாறாயினும் நான் சொல்ல நினைப்பது.....

“இதுவாயினும் வேறு எதுவாயினும் அளவோடு இருத்தலே நன்று!”
==========================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக