எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

தொய்வில்லாமல் தொடரட்டும் தமிழுக்கான இந்த ‘வன்முறை’த் தொண்டு!

பெங்களூருவில் வாழ்பவர்களுக்குத் தெரியும், கன்னடத்தில் எழுதப்படாத கடைகளுக்கான பெயர்ப் பலகையே அங்கு இல்லை என்பது. இது கன்னடர்களின் மொழிப் பற்றுக்கான அழியாததும் அழுத்தமானதுமான அடையாளம்.

தமிழினப் பற்றுள்ளவர்கள் ஆட்சிபுரியும் தமிழ்நாட்டின் தலைநகரிலோ, பிற நகரங்களிலோ நிலைமை தலைகீழானது. தமிழ் இடம்பெறாத பெயர்ப் பலகைகள் ஆயிரக்கணக்கில்.

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உறைக்கும் வகையில், புதுச்சேரித் தமிழர்கள் தமிழ் இடம்பெறாத கடைகளின் பெயர்ப் பலகைகளை அடித்து நொறுக்கியிருப்பது  நம்மைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இது தற்காலிகமானதும் அளவில் மிகக் குறைவானதுமான மகிழ்ச்சிதான்.

புதுச்சேரித் தமிழர்கள் ஆற்றிய இந்த அதிரடித் தமிழ்ப்பணி தமிழ்நாடெங்கிலும் தொடருதல் வேண்டும் என்பது நம் ஆசை; அல்ல அல்ல, பேராசை.

புதுச்சேரித் தமிழர்களுக்கு நம் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.