//பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின், தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா என்ற உயரிய விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. எத்தியோப்பிய பிரதமர் இந்த விருதை மோடிக்கு அளித்தார். இந்த விருது பெறும் முதல் உலகத் தலைவர் மோடியே ஆவார்//[மாலைமலர்].ஓட்டப் பந்தயத்திலோ பேச்சுப் போட்டியிலோ பதக்கம்[பரிசு] பெறும் ஒரு பதினைந்து வயதுப் பாலகனாக மாறியிருக்கிறார் நம் பிரதமர் மோடி. பரிசாகப் பெற்ற விருதைத் தூக்கிக் காட்டி, அதை ஆசை ஆசையாய்ப் படமெடுத்துக் காட்டியிருப்பதே அந்த மாற்றத்திற்கான அடையாளம்.
நம் மதிப்பிற்குரிய பிரதமரைப் போலவே, அவர் பெற்றதை இந்தியக் குடிமக்களாகிய நாம் அனைவரும் பெற்றப் பேறாகக் கருதிப் பெருமிதப்படுவோம்[விருது எதற்காக வழங்கப்பட்டது என்பது ஒரு பொருட்டல்ல].
தினம் தினம் ஒரு மில்லியன் ‘பார்வை’களைப் பெறும் முதல் தர[ஹி... ஹி... ஹி!!!] வலைப்பதிவாளனாகிய நான் நம்மவரின் இந்தப் படத்தைப் பகிர்ந்துகொண்டதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நீங்களும் பகிருங்கள்.
* * * * *
https://www.maalaimalar.com/news/world/prime-minister-modi-receives-ethiopias-highest-award-801690
