மக்களின் வரிப்பணத்தில் முதலமைச்சர் சொகுசுப் பயணம் மேற்கொள்வதாகவும், மாநிலத்தில் விவசாயிகள் & மீனவர்கள் பிரச்சினைகள் இருக்கும்போது இதற்கு அவசியமில்லை என்றும் திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, லண்டன் பயணத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த எந்தத் தகவலோ, அல்லது தொழில்முனைவோர்களைச் சந்தித்த புகைப்படங்களோ இதுவரை வெளியாகவில்லை என்று சாடியுள்ளார்.
தமிழக பாஜக தரப்பில் நைனார் நாகேந்திரன், லண்டன் பயணத்திற்காகச் செலவிடப்படுவது அரசுப் பணம். ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இவற்றின் மூலம் அறியத்தக்கது என்னவென்றால்.....மக்கள் வரிப்பணத்தில் சொகுசுப் பயணம் மேற்கொள்ளவும், கூத்தாடி கூத்தாடிச்சியைச் சந்தித்துக் குதுக்களிக்கவும்[+கார் பந்தயத்தை வேடிக்கை பார்த்தல்]தான் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் மூலம் அத்துபடியாய் உணரத்தக்கது.....
தமிழன் எத்தனைப் புத்திசாலியாக இருந்தாலும் அவனுடய அத்தனைப் புத்திசாலித்தனமும், திரைப்படங்களில் கவர்ச்சி நடிகைகளுடன் கூத்தடித்த தன்னைப் பார்த்தாலே மழுங்கிவிடும் என்பது கூத்தாடி ஜோசப்பின் நம்பிக்கை.
இந்தக் கூத்தாடி மீதான மயக்கத்திலிருந்து எப்போது தமிழன்[குறிப்பாகத் தமிழச்சிகள்] மீண்டெழுவான் என்று ஏங்கிக் கிடப்பதே, சிந்திக்கத் தெரிந்த கொஞ்சம் தமிழர்களின் தலைவிதி!
