'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Sunday, September 18, 2016

தமிழ்மணத்தின் கடமையும் தமிழ்ப்பதிவர் எதிர்வினையும்!

கீழ்வரும் குறிப்புகளைக் கவனமாகப் படித்து முடியுங்கள். பின்னர் தமிழர்களாகிய நீங்களே ஒரு தீர்மானத்தை முன்னெடுப்பீர்கள்.


*அரசியல் அறிவற்றவர்கள் என்று நீங்கள் அவர்களை குறிப்பிடுகிறீர்கள். சந்தர்ப்பவாதமும், காலை நக்குவதும்தான் அறிவு என்றால் கன்னட மக்கள் தமிழர்களோடு ஒப்பிட்டால் முட்டாள் கள் தான்.-https://naanmani.wordpress.com/2016/09/17/learn-from-revolt-kannadas/

* .....பினாத்தி திரியும் ஜெயமோகனை பெற்ற மண் இது.

* .....ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி உண்டு … &*$… தின்ற நாய்க்கு பேரு முத்து மாலையாம்.

* .....என்ன செய்வது.. கன்னடர்களின் சுயமரியாதைக்கான காவிரி போராட்டத்தை இந்திய நீதிமன்றமும், மத்திய அரசும், தமிழ் இன வெறியர்களும் கை கோர்த்து மூடுவதையும், அந்த குழியின் பிடி சாம்பலில் தனது வியாபாரத்தை துவக்க திருநீறு பாக்கெட் போட வரும் வேளாண் விஞ்ஞானி சுவாமிநாத மாமாவையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் முற்போக்காளர்களும் வருகிறீர்களே..கொஞ்சம் காதுகளை முன்பக்கமாக திருப்பி வையுங்கள். உங்களுக்கு மாத்திரம் முன்பக்க மடல் இருப்பதால்

*சுதந்திரம் பெற்ற பிறகும், முன்னர் அந்நியர் ஆட்சியின் கீழ் ஒரு பென்சன் மகாராசா சார்பில் அந்த அந்நியர்கள் நியமித்த ரெசிடெண்டான ஐசிஎஸ் அதிகாரியும், அந்நியர் ஆட்சியின் ஒரு மாகாணத்தின் ஐசிஎஸ அதிகாரியும் போட்ட ஒப்பந்த்தை மதிக்க கோரும் உங்களது அடிமை புத்தியை எந்த செருப்பால் அடிப்பது, இல்லை கன்னடத்து வெளக்குமாருதான் வேண்டுமா..-.- 

மேற்கண்டவை, https://naanmani.wordpress.com/2016/09/17/learn-from-revolt-kannadas/ லிருந்து எடுத்தவை.


https://naanmani.wordpress.com/2016/09/15/cavery-sorrow-of-canara-i/  முகவரியிலிருந்து....
***(காவிரி பிரச்சினையில் கன்னட மக்களின் பக்கம் நியாயம் இருக்க கூடும் என்பதை பரிசீலிக்க விரும்பாதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். மீறி படித்து மனம் புண்படும் என்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.)


 1. 1991 முதல் 2007 வரை நடைபெற்ற சட்ட போராட்டத்தில் தமிழக விவசாயிகளின் தரப்பில் நின்று அறிவியலுக்கு புறம்பான ஒரு சாட்சியை சொல்லி, அதனை தனது இமேஜின் மூலம் நம்ப வைத்த யோக்யன் எம்.எஸ். சுவாமிநாதன்
 2. *துரோகத்தின் மறுபெயராக தமிழகமும், தியாகத்தின் போராட்டத்தின் மறுபெயராக கன்னடமும் இருப்பதைப் புரிந்து கொள்வீர்கள். அதனால் தான் புகழ்பெற்ற கவிஞர் சீத்தாராமையாவை அவர்கள் முதல்வராக பெற்றிருக்கிறார்கள். நமக்கோ நல்லம நாயுடு புகழ் மைசூர் மகாராசாவின் தங்க ஒட்டியாணத்தை பரிசாக பெற்றவர்களின் பிள்ளைகள் பதவியில் இருக்கிறார்கள்.
 3. *சம காலத்தில் சரபோஜியின் காலை நக்கிக் குடித்துக் கொண்டிருந்த வாண்டையார்களும், மூப்பானார்களும் அரசின் பண்டக சாலைகளையும், வியாபாரிகளின் வணிக கிடங்குகளையும் சூறையாட மக்களை தூண்டிக் கொண்டிருந்தார்கள். அதுதான் மானமிகு தமிழகத்தின் நிலைமை.
 4. *ஆனால் திப்பு போன பிறகு அந்த இடங்களை மூப்பனார், வாண்டையார் போன்ற திருட்டு கும்பல் ஆட்டையை போட்டது தான் வரலாறு. 
 5. * சோழியன் குடுமியான சுவாமிநாதன் சும்மாவா வந்திருப்பான் சாட்சி சொல்ல.
 6. *இதோ திப்புவின் வாய்க்கால்களை தூர்வாரி விட்டார்கள் கன்னடத்து வீர மக்கள். இப்போது தடுப்பணை கட்டி விட்டார்கள் என புலம்புகிறார்கள் தமிழ் தேசிய வெறியர்கள்.
மேலே இடம்பெற்ற அனைத்துக் குறிப்புகளையும் நீங்கள் ஏற்கனவே படித்திருக்கக்கூடும். வண்ணம் சேர்க்கப்பட்ட இடங்களை[சில இடங்களில் சேர்க்க இயலவில்லை. நகல் எடுத்த பத்திகளையும் சீர் செய்ய இயலவில்லை] மீண்டும் ஒரு முறை படியுங்கள். இந்த அளவுக்கு நம்மை மிகக் கீழ்த்தரமாகச் சாடியிருக்கும் அந்த அயோக்கியன் யார் என்பதையும் யூகித்திருப்பீர்கள்
அவன்.....
‘நான் மணி’ என்னும் வலைப்பக்கத்தில் அண்மைக்காலமாக எழுதிக்கொண்டிருக்கும் ஒரு பொறுக்கி. அவன் எதையோ எழுதிவிட்டுப்போகட்டும்; நம்மவரை எத்தனை கீழ்த்தரமாகச் சித்திரிக்கிறான் என்பதுதான் நமக்குச் சினமூட்டுகிறது.
புகார் செய்து, எளிதில் அகற்ற இயலாத வகையில், முகநூலிலோ, ட்விட்டரிலோ, பிளாகரிலோ வெளியானவை அல்ல இவை. தமிழ் வளர்க்கும் நோக்கத்துடன் அமெரிக்கத் தமிழர்களால் நிர்வகிக்கப்படும் ‘தமிழ்மணம்’ திரட்டியில் வெளியானவை.
கன்னடனை மேம்படுத்தியும் தமிழனை இழிவுபடுத்தியும் ஒரு கன்னடன்[தமிழனாகவும் இருக்கக்கூடும். அவன்தான் இன மொழி வேறுபாடுகளைக் கடந்தவனாயிற்றே!] தமிழ் வளர்க்கும் நோக்குடன் அமெரிக்கத் தமிழர்களால் நிர்வகிக்கப்படும் தமிழ்மணத்தில் அண்மைக் காலமாக எழுதிக்கொண்டிருக்கிறான்.
இது, தமிழ்ப் பதிவர் கண்களிலும் தமிழ்மணம் வாசிக்கும் தமிழ் இன உணர்வாளர் கண்களிலும் படவில்லையா? பட்டும் பெருந்தன்மையுடன் அமைதி காக்கிறார்களா?
அது, என்னளவில் சாத்தியப்படவில்லை. இவனின் வலைப்பக்கத்தை அகற்ற வேண்டும் என்று தமிழ்மணம் நிர்வாகிகளுக்குப் புகார் அனுப்பினேன். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தமிழ் படித்த கன்னடர்கள்தான் தமிழ்மணத்தின் நிர்வாகிகளோ என்ற சந்தேகம் எனக்கு! இப்பதிவைப் படித்துவிட்டு என்னை அவன் இழிவுபடுத்தி எழுதினால், அதையும் தமிழ்மணம் வெளியிடக்கூடும்! அது நிகழ்ந்தால் எனக்குக் கவலையில்லை.
தமிழ்ப்பதிவர்களாகிய நண்பர்களே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? தமிழ்மணம் போலவே அமைதி காக்கப் போகிறீர்களா? அல்லது, அந்த அயோக்கியனின் வலைப்பக்கப் பதிவை நீக்கும்படி தமிழ்மணத்தை வற்புறுத்துவீர்களா?
அது உங்கள் விருப்பம். நான் மிகச் சாதாரணன். நான் சொல்லி நீங்கள் செயல்பட வேண்டாம்; பின்னூட்டமிடுதலும் கட்டாயமில்லை.

எவ்வகையிலேனும் நம்மவர் அனைவரும் தமிழ்மணத்தை வற்புறுத்தி, ‘நான் மணி’ என்ற அயோக்கியனின் வலைப்பக்கப் பதிவைத் த. ம.விலிருந்து அகற்றினால் போதும்.

நன்றி.
========================================================================================
நண்பர் வலிப்போக்கன், ‘கடவுளின் கடவுளையே புலம்ப வைத்த ..நான் மணி யார்???’http://valipokken.blogspot.com/2016/09/blog-post_18.html என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். நான் ‘புலம்பல்’ செய்திருப்பதாக நகையாடவும் செய்திருக்கிறார்.

அந்தப் பதிவுக்கான பின்னூட்டமாக, என் கருத்தை அப்பதிவில் பதிவு செய்திருக்கிறேன். ஒப்புதலுக்குப் பின்னர் அது வெளியிடப்படும் என்னும் குறிப்பு வெளியாகியுள்ளது.

அது வெளியிடப்படுமா இல்லையா என்பதை அறிய இயலாத நிலையில்......

அக்கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

வலிப்போக்கனின் பதிவுக்கான பின்னூட்டம்:

நண்பரே,

நான் உங்களைத் திட்ட வரவில்லை. இப்போதும் நல்ல நண்பராகத்தான் நினைக்கிறேன்.

என் பதிவின் நோக்கத்தைப் புறக்கணித்து, மறுப்பெழுதத் துப்பில்லைய்யா, இயலவில்லையா என்று கேட்கிறீர்கள்.

அவ்வாறே வைத்துக்கொள்ளுங்கள்.

என் பெயரைப் ‘பசி ராமசாமி’ என்று மறைமுகமாகச் சுட்டத் தேவையில்லை; நேரடியாகப் ‘பசி’பரமசிவம் என்றே குறிப்பிடுங்கள். விரும்பினால் தலைப்பைத் திருத்தலாம்.

தமிழ் இனம் இழிவுபடுத்தப்படக்கூடாது என்ற எண்ணத்தில்[நான் மணி ஒரு கன்னடர் என்னும் நம்பிக்கையில்] மட்டுமே எழுதப்பட்டது என் பதிவு என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். வேறு எந்தவொரு சார்பும் குழுத் தொடர்புகளும் எனக்கு இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பது என் நம்பிக்கை.

நீங்களும் தமிழின உணர்வு மிக்கவர் என்பதை உங்களின் பழைய பதிவுகளின் வாயிலாக உணர்ந்திருக்கிறேன். அத்தகைய நீங்களே என்னை எள்ளி நகையாடியிருப்பது எனக்கு வருத்தம்தான்.

உங்களுக்கும் ‘நான் மணி’க்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதை என்னால் உணர முடிகிறது.

சாதிக்க இயலாதபோது புலம்புவது என் இயல்புதான்.

உங்களின் இந்தப் பதிவின் மூலம், உங்களைப் போலவே ‘நான் மணி’யும் ஒரு தமிழரே என்பதை என்னால் உணர முடிகிறது.

ஆக, முனைப்புடன் செயல்படும் தமிழர்களை[இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது] எதிர்த்து நான் செயல்படுவதா? அது தேவையா?  தனித்து இயங்கும் என்னால் சாதிக்க இயலுமா?

நிச்சயம் இல்லை.

புலம்புவதைப் பழக்கமாகக் கொண்ட நான், இனியும் தமிழ் தமிழன் என்று புலம்புவதை நிறுத்திக்கொள்கிறேன். தமிழ்மணத்திற்கு வைத்த கோரிக்கை ஏற்கப்படும் என்பதிலும் 100% எனக்கு நம்பிக்கை இல்லை. பயனற்றுப் போகவிருக்கும் இப்பதிவை என்ன செய்வது என்பது குறித்தும் யோசிக்கிறேன்.

உங்கள் பதிவின் மூலம், எதைச் சாதிக்க நினைத்தீர்களோ அதைச் சாதித்துவிட்டதாக நினைத்து மகிழுங்கள். 

நன்றி...நன்றி வலிப்போக்கன்.7 comments :

 1. துரோகிகளின் பதிவுகளை யார் படிக்கிறார்கள் ?நீங்கள் சுட்டிக் காட்டப் போய்தான் பலருக்கும் தெரிய வருகிறது !நாய்கள் குரைப்பதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டியதுதான் !

  ReplyDelete
 2. துரோகிகள் எழுதும் பதிவுகள் துரோகத்தனமாவை என்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காடடி அம்பலப்படுத்தி தெளிய வைக்க வேண்டுகிறேன்..

  ReplyDelete
 3. பிளாகரிலிருந்து நீக்குவது மிகச் சிரமம். தமிழ்மணமாவது இதைச் செய்யலாமே என்பதுதான் என் எண்ணம்.

  நன்றி பகவான்ஜி.

  ReplyDelete
 4. வலிப்போக்கன்,

  ஆதாரங்களைத்தான் என் பதிவிலேயே இணைத்திருக்கிறேன்; முகவரிகளும் தந்திருக்கிறேன். பதிவுகளைப் படித்தால் முழுத் தெளிவு பெறலாம்.

  அந்த ஆள் முன்வைக்கும் கருத்துகளுக்கு நான் முக்கியத்துவம் தரவில்லை. அவற்றை மறுத்து எழுதப் பழைய வரலாற்றுக்குள் புக வேண்டும்.

  என்னுடைய இந்தப் பதிவின் நோக்கம் அவன் நம்மைப் பற்றித் தரக்குறைவாக எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டத்தான்.

  இவனைப் போன்றவர்கள் தென்பட்டால் அவர்களையும் நம்மவர் கவனத்திற்குக் கொண்டுவருவேன்.

  நன்றி நண்பரே.

  ReplyDelete
 5. சோதனைப் பின்னூட்டம்

  ?!?!?

  ReplyDelete
 6. Free speech in padi yaarukum ethai patriyum ezhudha urimai irukku.

  ReplyDelete
 7. நன்றி Anonymous.

  நன்றி Anonymous. ‘யாருக்கும்’ என்பதில் நானும் அடங்குகிறேன் என்பது என் நம்பிக்கை.

  ReplyDelete