எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 5 ஜூலை, 2020

“ஐந்தறிவுக்கும் மேலானதொரு அறிவு இல்லை!” -விஞ்ஞானிகள்


என்னும் இத்தளம் கீழ்க்காணும் வகையில் தலைப்பிட்டு Posted on  ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இச்செய்தி, புதுமையானதாகவும், என்னை வியப்பில் ஆழ்த்துவதாகவும் உள்ளதால் உங்களுடன் பகிர்கிறேன்.

இச்செய்தி குறித்துத் தெளிவாகப் புரியும்படியானதொரு விளக்கம் தரப்படாதது மிகப் பெரியதொரு குறையாகும்.

இதுபற்றி நம் பதிவர்கள் எவரேனும் அறிந்திருப்பின், அதை ஒரு பதிவாக வெளியிட்டால் அது பெரிதும் நன்மை பயப்பதாக அமையும்.

#‘ஐம்புலன்களை தாண்டி ஆறாவது அறிவு என்று ஒன்றும் இல்லை | விஞ்ஞானிகள் திட்டவட்டமாக தெரிவிப்பு’

Posted on 

ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வு எனப்படும் ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லையென்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.