வெள்ளி, 1 ஜனவரி, 2021

உடலுறவால் பரவாத கொரோனா!?!?!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான சமூக வாழ்க்கையில் தொடங்கி அந்தரங்க வாழ்க்கைவரை அனைத்திலும் கொரோனா அச்சம் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக, கொரோனா தீவிரமாக உள்ள இந்தக் காலக்கட்டத்தில் உடலுறவு கொள்வதுகூட கொரோனா பரவக் காரணமாக மாறிவிடலாம் என்ற அச்சம் உள்ளது.

ஆனால் இது உண்மையா, பொய்யா என்பது குறித்து மருத்துவர் அலெக்ஸ் ஜார்ஜ் மற்றும் பாலுறவுச் செய்திகள் தொடர்பான பத்திரிக்கையாளரும் பிபிசி ரேடியோ 1 தொகுப்பாளருமான அலிக்ஸ் ஃபாக்ஸ் ஆகியோர் இணைந்து வழங்கிய விளக்கங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

1.கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதா?

டாக்டர் அலெக்ஸ் ஜார்ஜ்: உடலுறவு கொள்ளக்கூடிய இணையுடன், ஒரே வீட்டில் நீங்கள் வாழ்ந்து வந்தால், அது எந்த வகையிலும் உங்கள் அந்தரங்க வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

ஆனால், உங்கள் இருவரில் ஒருவருக்குக் கொரோனா தொடர்பான அறிகுறிகள் தோன்றினால், நீங்கள் இருவரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். வீட்டிற்குள்ளேயே உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

2. புதிய நபர்களுடன் உடலுறவு கொள்வது பிரச்சனையை ஏற்படுத்துமா?

டாக்டர் அலெக்ஸ் ஜார்ஜ்: தற்போதைய சூழலில் புதிய இணையுடன் உடலுறவு கொள்வது பிரச்சனையை ஏற்படுத்தாது எனக் கூற முடியாது. ஏனெனில் அந்தப் புதிய துணைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், அவருடன் நெருக்கமாக இருக்கும்போது நீங்களும் அந்த வைரஸால் பாதிக்கப்படலாம்.

அலிக்ஸ் ஃபாக்ஸ்: எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாமல், இந்த வைரஸ் மனிதர்களின் உடலிற்குள் வாழும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே சாதாரண முத்தம்கூட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் கொரோனா பரவக் காரணமாக இருந்துவிடக்கூடும்.

மருத்துவர்களின் இந்தக் கணிப்பை[உடலுறவால் கொரோனா தொற்றும்] ஏறத்தாழ ஒட்டுமொத்த உலகமும் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு செவிலி[நர்ஸ்] தன் துணிச்சலான செயலால் பொய்யாக்கியிருக்கிறார் என்பது, நேற்றைய ஊடகச் செய்தியால் நாம் அறியும் அதிசயம் ஆகும். அச்செய்தி.....

#இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில்
உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.

அந்த நோயாளியிடம் ஒரு நர்சு அன்பாகப் பேசினார். சில நாட்களில் அவர் கொரோனா நோயாளியிடம் அதிக நெருக்கம் காட்டினார்.

அந்த நெருக்கம் விபரீதமாக மாறியது. நோயாளியைக் கட்டாயப்படுத்தி ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அந்த நர்சு கொரோனா நோயாளியிடம் தவறான உறவில் ஈடுபட்டார். அந்த நோயாளி வலைத்தளத்தில் இந்த விவரத்தை வெளியிட்டார்[கிறுக்கன்!?]. இது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் நடத்திய விசாரணையில் கொரோனா நோயாளியிடம் நர்சு தவறான பாலியல் தொடர்பில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அந்த நர்சும் தனிமைப்படுத்தப்பட்டார்.

ஆஸ்பத்திரி நிர்வாகம் அந்த நர்சைப் பணியல் இருந்து இடைநீக்கம் [சஸ்பெண்ட்] செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து நர்சுக்குக் கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் அவருக்குக் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. என்றாலும் தனிமைப்படுத்தப்பட்டார்.

மத்திய ஜகார்த்தா போலீசார் நர்சு மீதும் அவருடன் தொடர்பில் இருந்த கொரோனா நோயாளி மீதும் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இருவரையும் கைது செய்து இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

கொசுறுச் செய்தி:

உலகெங்கும் உள்ள விலைமகளிருக்கு உவப்பூட்டும் செய்தி இது. அவர்கள், இந்தோனேசியா செவிலிக்குச் சிரம் தாழ்த்திக் கரம் குவித்து வணங்கி நன்றி சொல்வார்கள். ஹி...ஹி...ஹி!!!

===============================================================

https://www.maalaimalar.com/news/topnews/2020/12/31142658/2212773/Tamil-news-Indonesian-Nurse-Suspended-for-Having-molestation.vpf