திருப்பரங்குன்றம்[மலைமீதுள்ள தர்காவில் கிடா வெட்டுதல் & அசைவம் உண்ணுதல்] பிரச்சினையைத்[கீழே உள்ள முகவரியை*ச் சொடுக்கி முழு விவரமும் அறியலாம்] தீர்க்கும் வழியறியாமல் திகைத்து நிற்கிறது தமிழ்நாடு அரசு; தீர்ப்பதும் எளிதல்ல.
இரு மதத்தவர்களும் மலை மீது கோயில்களைக் கட்டித்[ஒரு சாரார் ஆடுகளையும் கோழிகளையும் சித்திரவதை செய்து கொன்று வயிறு முட்டத் தின்று ஜீரணித்துச் சுகம் காண்பது உட்பட > அல்லாவே அனுமதிக்கிறார் என்னும் கதை வேறு] தத்தம் கடவுள்களை வழிபட்டு/வழிபடச் செய்து இவர்களும் இவர்களைச் சார்ந்தவர்களும் இந்நாள்வரை பெற்ற பலன்கள் எவை? ஆதாரபூர்வமான பதிலைச் சொன்னவர்கள் இல்லை[கொலைகளா, தற்கொலைகளா, வன்புணர்வுகளா, இயற்கைச் சீற்றங்களா இவற்றில் எவையெல்லாம் கடவுள்களால் தடுக்கப்பட்டன, அல்லது குறைக்கப்பட்டன?
உயிர்களைப் பலி கொடுப்பதோடு, “முருகன் சொன்னார்[+கடவுள்கள்], அல்லா சொன்னார் என்று பிதற்றி, இந்த மத வெறியர்கள் பக்தர்களைத் தற்கொலை[கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்தல்] போன்ற துர்மரணங்களுக்கு உட்படுத்திக்கொள்ளத் தூண்டுவார்களேயானால், எந்தவொரு அரசாங்கத்தாலும் இதைத் தடுக்க இயலாது[தேர்தலில் ஓட்டு கிடைக்காது என்னும் பயம்].
திருப்பரங்குன்றம் இயற்கையாய் அமைந்த[ஏறி நின்று இயற்கை அழகை ரசித்து இன்புறவும், மன நலம் பேணவும் உடல் நலம் பேணவும்[மருத்துவமனைகள்கூட உருவாக்கலாம்] பயன்படுகிற இடம்.
அங்கே மூடநம்பிக்கைகளை உருவாக்கும் கோயில்களைக் கட்டியது பெரும் தவறு. இதன் விளைவாக இந்து இஸ்லாம் மதத்தவரிடையே[பிற மதத்தவர்களுக்கு உள்ளேயும்தான்] கலகங்கள் உருவானதும் அவற்றால் பல்லாயிரம் உயிர்கள் பலியிடப்பட்டதும் வரலாற்றுச் சோகங்கள்.
எனவே, பெரியார் சொன்னதை இங்கு மீண்டும் பதிவு செய்கிறோம்.....