வியாழன், 3 ஜூலை, 2025

கைலாய மலை... சிவபெருமானின் இருப்பிடம் அல்ல; கட்டுக்கதைகளின் பிறப்பிடம்!!!

கைலாய மலை[6,638 மீட்டர் (21,778 அடி) உயரம்] எவரெஸ்ட் சிகரத்தைவிடவும் உயரம் குறைவு. ஆயினும் அதன் மீது ஏறி எவரும் சாதனை நிகழ்த்தியதில்லை.

அது சாத்தியமற்றது என்பதல்ல; ஏறவிடாமல் முட்டுக்கட்டை போட்டவர்கள் ஆன்மிகம் பரப்பும் அடிமுட்டாள்கள்.

கைலாய மலை என்பது வெறும் மலை அல்ல. அது புனிதமானது; சிவபெருமானின் தங்குமிடம்; பல மதங்களால் போற்றப்படும் ஆன்மீகச் சக்தியின் மையம். அது அண்டவெளியின் அச்சாக உள்ளது; பிரபஞ்சத்தின் மையமாக உள்ளது[இவற்றிற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை> ஆய்வு செய்ய அறிவியல் அறிஞர்களை இந்த மூடர்கள் அனுமதிக்கவே இல்லை என்பது அறியத்தக்கது] என்று பொய்க் கதைகளைச் சொல்லிச் சொல்லி ஆராய்ச்சியாளர்களை மேலே ஏறவிடாமல் தடுத்துவிட்டார்கள்.

சிகரத்தை ஏறுவது உலகின் ஆற்றலுக்கான சமநிலையைச் சீர்குலைக்கும் என்றும் புளுகியிருக்கிறார்கள் அறிவிலிகள்.

2001ஆம் ஆண்டு கைலாய மலையின் மீது ஏறுவதற்கு ஒரு ஸ்பானிஷ் பயணக் குழுவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இந்தியா, திபெத், நேபாளம் ஆகியவற்றைச் சார்ந்த ஆன்மீகத் தலைவர்களின்[ஆதிவாசிகளின்] எதிர்ப்பால் ஏறும் முயற்சி ரத்தானது.

மலையேறுபவர்கள் மர்ம நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்னும் பக்தக்கோடி[கேடிகள்]களின் கட்டுக்கதைகளும் தடைகளாய் அமைந்தன.

இது[இந்தியா] புண்ணியப் பூமியல்ல; பகுத்தறிவைக் கருவறுக்கும் காட்டுவாசிகளின் புகலிடம்!

* * * * *